பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது.
- பப்பாளி
- பப்பாளி
- பப்பாளி
மருத்துவக் குணங்கள்:
- பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
- பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
- பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
- நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
- பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
- பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
- பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
- பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
- பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
- பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
- பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
- பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
- ஈரல், கல்லீரல், மண்ணீரல், வீக்கம் குறைகின்றது.
- மாதவிடாய் பிரச்சனைகள் குறையும்.
- வயிற்றுவலி, வயிற்று உளைச்சல்,மலச்சிக்கல், இரத்த சோ கை ஆகியவற்றை சரிசெய்யும்.
- இளமையை மீட்டு மேனியைப் பளபளப்பாக்கும் பப்பாளிச்சாறு புற்று நோய்க்கு நல்ல நிவாரணம் தரும்.
- சிறுநீரகப்பணிகள் மேம்பட்டு கல் அடைப்பை நீக்கும்.
- ஆஸ்துமா, சளி, இருமல் தொ ல்லை விலகும்.
- நீரழிவு உள்ளவர்கள் தோலுடன் அருந்தலாம்.
- தாய்ப்பால் உணவாகவும் பரிந்துரைக்கலாம்.
No comments:
Post a Comment