Monday, September 30, 2013

மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை!

மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை!
Photo: மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை!

பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது. 

அறிகுறிகள்:
சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.
அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.
கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.
வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.
வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.
15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.
ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.
சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.
செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.
சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.
மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.
அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.
நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம்.
பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை:
சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.

தவிர்க்க வேண்டியவை:
அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்.

கற்ப மூலிகை வெற்றிலை..!

கற்ப மூலிகை வெற்றிலை..!
Photo: கற்ப மூலிகை வெற்றிலை..!

நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் கற்ப மூலிகை.

கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

வெற்றிலை தொன்றுதொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.

வெற்றிலையை உபயோகிக்கும் முறை:

வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

நுரையீரல் பலப்பட:

வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

வயிற்றுவலி நீங்க:

2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மாந்தம் குறையும்.

சர்க்கரையின் அளவு கட்டுப்பட:

வெற்றிலை – 4

வேப்பிலை – ஒரு கைப்பிடி

அருகம் புல் – ஒரு கைப்பிடி

சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

விஷக்கடி குணமாக:

உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.

இருமல் குறைய:

வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.

அஜீரணக் கோளாறு அகல:

வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர் களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

தோல் வியாதிக்கு:

100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.

தலைவலி நீங்க:

வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.

தீப்புண் ஆற:

தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

பிற உபயோகங்கள்:

வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.
தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறை அருந்தியும், கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும். புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு. வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…ஹெல்த் ஸ்பெஷல்,

Photo: இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? 

இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.

மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.

இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.

விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்

பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்..!

Photo: பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்..!

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு 
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு 
5.கரு நாகம் 
6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து"சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும். 

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.

Saturday, September 28, 2013

பல்வலிக்கு முதலுதவி

திடீரென பல்வலி வந்தால், டாக்டரிடம் செல்லும் முன், வீட்டில் இருந்தபடி முதலுதவியாக என்னென்ன செய்யலாம்? 
பொதுவாக உடலில் பல இடங்களில் வலி வந்தால் மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும். ஆனால் பல்வலி உண்டாக காரணம் சொத்தை மற்றும் ஈறுநோயை உண்டாக்கும் கிருமிகள்தான். இவை பற்களில் உள்ள நரம்புகளை அழுத்துவதால்தான் வலி வருகிறது. இதற்கு காரணமான கிருமிகளை அகற்றி, பல்லை அடைத்தல் அல்லது வேர் சிகிச்சை செய்தால்தான் வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். சில நேரங்களில் உடனடியாக மருத்துவரிடம் செல்ல முடியாத போது, நீங்கள் காய்ச்சல் தலைவலிக்கு சாப்பிடும் மாத்திரையை சாப்பிடலாம். இவற்றை மருத்துவரின் கண்காணிப்பின்றி அடிக்கடி சாப்பிடக் கூடாது. வீட்டில் கிராம்பு இருந்தால் அதை வலி ஏற்படும் இடத்தில் வைக்கலாம். ஒரு சில மணி நேரங்களில் வலி குறையும். வாய்ப்புண்ணால் ஏற்படும் வலி வேறுவகையானது. இதற்கு மருந்து தேவை இல்லை. வீட்டில் உள்ள நெய் அல்லது வெண்ணெய் தடவலாம். 
வாய்ப்புண் ஒருவாரத்திற்கு மேல் சரியாகவில்லையென்றால் அல்லது வலி அதிகம் இருந்தால் டாக்டரிடம் காட்ட வேண்டும். ஈறுகளில் வீக்கம் இருந்தால் கிருமி நாசினி கலந்த "மவுத்வாஷ்' உபயோகிக்கலாம். கூட ஈறுகளை அழுத்தமாக தேய்த்து விட வேண்டும். ஒரு சில நாட்களுக்கு இதை செய்தால் ஈறுகளில் வீக்கமும், வலியும் குறையும். இப்பிரச்னைகள் அனைத்துக்கும் அதற்கான உரிய சிகிச்சை செய்யாதவரை வலி முழுமையாக நிற்காது. இவற்றை முதலுதவி போல செய்து விட்டு, பின் உரிய நேரத்தில் மருத்துவரிடம் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். 
என் தாய் வயது 57. அவருக்கு எலும்பு நோயான "ஆஸ்டியோபோரோசிஸ்' உள்ளது. அதற்கு மாத்திரை எடுக்கிறார். இதனால் பல் சிகிச்சை செய்வதில் பிரச்னை வருமா? 
நாற்பது வயதுக்கு மேற்பட்டோருக்கு குறிப்பாக பெண்களுக்கு எலும்புகளில் பிரச்னை வருவது பொதுவானது. இதற்கு சத்தான சாப்பாடு அல்லது வைட்டமின் மாத்திரை ஆகியவற்றை சாப்பிடுவர். ஆனால் ஒருசிலருக்கு "ஆஸ்டியோபோரோசிஸ்' என்ற நோய் மூலம் எலும்புகள் மிக பலவீனமாகி விடும். இதனை ஒருவகை மாத்திரைகளைக் கொண்டு சரிசெய்வர். 
இந்த குறிப்பிட்டவகை மாத்திரைகள் எலும்பு பலம்பெற உதவினாலும், பல் சிகிச்சையில் சில சிக்கல்களை உண்டாக்கும். "இம்ப்ளான்ட்' வைப்பது, பல் எடுப்பது போன்ற சிகிச்சைகளை செய்யும் போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு எலும்பில் ஏற்படும் புண் ஆற மற்றவர்களைவிட அதிக நாட்களாகும். சரியான இடைவெளியில் கண்காணித்து தகுந்த வழிகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் தாடை எலும்பில் புண் ஆறாமல் கிருமிகள் பெருகி எலும்பினை அரித்துவிடும். 
இவர்களுக்கு ஈறுநோய் வருவதையும் நேரத்தில் சிகிச்சை செய்ய வேண்டும். ஈறில் இருந்து அதனை சுற்றியுள்ள எலும்புக்கு பரவிவிட்டால் சிகிச்சை செய்வது கடினமாகி விடும். இந்நிலையில் உள்ளவர்களுக்கென பிரத்யேக சிகிச்சை முறைகள் உள்ளன. இதன் மூலம் இவர்களுக்கான சிகிச்சைகள் அனைத்தையும் சரியான முறையில் செய்யலாம். எலும்பு நோய்க்கு மாத்திரை சாப்பிடுவோர், கண்டிப்பாக ஆறு மாதங்களில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை பற்களை சோதனை செய்ய வேண்டும். 

நீரிழிவும் மலட்டுதன்மையும்

Diabetes is only nominally cake. But giving it all imcaikal bitterness. From head to foot without leaving preventing conception for the   All-affecting diabetes.
பெயரளவில் மட்டுமே இனிப்பைக்கொண்டது நீரிழிவு நோய். ஆனால் அது கொடுக்கிற இம்சைகள் அனைத்தும் கசப்பு. தலை முதல் கால் வரை  சகலத்தையும் பாதிக்கிற நீரிழிவு கருத்தரிப்பைத் தடுப்பதையும் விட்டு வைப்பதில்லை. தவறான உணவுப்பழக்கம். உடற்பயிற்சி இல்லாதது என  மாறிப்போன வாழ்க்கை முறைகளால் இப்போது இளம் வயதிலே நீரிழிவு தாக்குகிறது. நீரிழிவுக்கும் மலட்டுத் தன்மைக்குமான நெருங்கிய தொடர்பு  பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி.
குடும்ப பின்னணில நீரிழிவு இருந்தா அந்த வழில வர்றவங்களுக்கும் அது பாதிக்க வாய்ப்புகள் அதிகம். அது தவிர நிறைய பெண்களுக்கு இப்ப  'பிசிஓடினு'  சொல்லற சினைப்பை நீர்கட்டி பிரச்சனை இருக்கு. அதன் விளைவா உடம்பு முழுக்க முடி வளர்றது. எடை அதிகரிப்பு, மாதவிலக்கு சுழற்சி  தள்ளிப்போறதுனு அடுக்கடுக்கான பிரச்சனைகளை சந்திப்பாங்க. இவங்களுக்கு தைராய்டு கோளாறும் வரலாம்.
தைராய்டு ஹார்மோன், சினைப்பைகள் லேர்ந்து சுரக்கிற எஃப்.எஸ்.ஹெச், நீரிழிவுக்கு காரணமான இன்சுலின்...இதெல்லாம் ஒன்றோடு ஒன்று  தொடர்புடையது. இந்த ஹார்மோன்கள் சுரக்கிறதுல ஏற்ற இறக்கம் வரும்போது அதன் விளைவா சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீரிழிவு வரலாம். நீரிழிவு  இருக்கிற பெண்கள் கருத்தரிக்கிறதே கஷ்டம். அப்படியே கருத்தரிச்சாலும் அது கலையவும் கரு சரியாக உருவாகாமல் போகவும் அபாயங்கள் அதிகம்.  சில பெண்களுக்கு கர்ப்பகாலத்துல நீரிழிவு வரும்.
பிரசவமானதும் அது தானா போயிடும். ஆனால் தாமதமாக கருத்தரிக்கிற, உடல் பருமன் அதிகமுள்ள, பிசிஓடி பிரச்சனையோட உள்ள பெண்களுக்கு  கர்ப்ப காலம் முடிஞ்சதும் நீழிரிவு நிரந்தரமா உடம்புல தங்கலாம். நீரிழிவோட கருத்தரிக்கிறப்ப அது அம்மாவை மட்டுமல்ல குழந்தையையும் சேர்த்தே  பாதிக்கும். பிரசவத்துக்கு பிறகு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.  
ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். உடம்பு ஊதின மாதிரி குண்டா இருக்கும். முறையற்ற மாதவிலக்கு உடம்பெல்லாம் முடி வளர்ச்சி தாறுமாறா  எகிறும் உடற்பருமன். இதெல்லாம் இருக்கிற பெண்கள் கர்ப்பம் தரிக்கிறதுக்கு முன்னாடியே ஸ்கேன் மூலமா பிசிஓடி பிரச்சனை இருக்கானு  தெரிஞ்சுக்கிறது நல்லது. எடைக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமா இதையெல்லாம் சரி செய்தாலே நீரிழிவு ஆபத்திலிருந்து  தப்பிக்கலாம் என்கிறார் மகேஸ்வரி.

Friday, September 27, 2013

தேவையற்ற முடிகளை நீக்குதல் --- அழகு குறிப்புகள்

தேவையற்ற முடிகளை நீக்குதல்

முகத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற முடிகளை நீக்க விரும்பினால், இம்முறையைச் செய்துபாருங்கள். ஒரு கிண்ணத்தில், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை, சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை ஒரு கரண்டி கொண்டு நன்றாக அடித்துக் கலக்கிப் பசை போலாக்குங்கள். பின் இதனை அப்படியே ஒரு மைக்ரோவேவ் ஓவனில் மூன்று நிமிடங்கள் வைத்து சூடு செய்யுங்கள்.

பிறகு வெளியே எடுத்து, கை சூடு தாங்கும் பதத்தில் வந்ததும், அதனை முகத்தில் முடி வளர்ந்துள்ள பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். குறிப்பாக முடியானது எந்த திசையை நோக்கி வளர்ந்துள்ளனவோ, அந்தத் திசைகளில் தடவ வேண்டியது முக்கியம்.

இப்போது ஒரு சுத்தமான பருத்தியால் ஆன துணி ஒன்றை எடுத்துக் கொண்டு, முகத்தில் இக்கலவை தடவிய பகுதியின் மேல் போர்த்தி அழுத்தி எதிர்த்திசையில் இழுங்கள்.

இப்போது முகத்தில் உள்ள முடிகள் வேரோடு அகற்றப்பட்டுவிடும். இதனால் முகத்தில் நீண்ட காலத்திற்கு முடிகள் வளராமல், முகம் வழவழப்புடன் திகழும்.

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள் - உணவே மருந்து

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.

ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.

அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.

பார்லி :

தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.

கத்திரிக்காய் :

கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.

மீன் :

மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.

ஆப்பிள் :

ஆப்பிள்களில் வைட்டமின் `சி' மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.

நட்ஸ் :

நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

டீ :

அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

வெங்காயம் :

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஓட்ஸ் :

ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.

முழு தானியங்கள் :

முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

பசலைக் கீரை :

பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

சோயா பொருட்கள் :

சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.

பூண்டு :

பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.

வெண்டைக்காய் :

கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

ரெட் ஒயின் :

ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

சாக்லெட் :

சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.

பீன்ஸ் :

அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லா விட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.

மிளகாய் :

மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.

மார்கரைன் :

இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.

அவகேடோ :

இதுவரை அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத் திருக்கிறோம்.

ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.

இடுப்பு மற்றும் வயிற்றுக்கான எளிய பயிற்சி --- உடற்பயிற்சி

இடுப்பு மற்றும் வயிற்றுக்கான எளிய பயிற்சி

வீட்டில் இருக்கும் பெண்கள் உடல் எடை அதிகரிப்பால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் உடற்பயிற்சி இல்லாதது, அதிக நேரம் தூங்குவது, அதிக அளவில் சாப்பிடுவது போன்றவை தான். இதனால் இடுப்பு, வயிற்றில் அதிகப்படியான சதை போடுவதை காணலாம். இந்த பிரச்சனை தீர எளிய உடற்பயிற்சி உள்ளது.

அதற்கு முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். டம்ப்பெல்ஸ் ( dumbbells ) எடுத்து கொள்ளவும். ஆரம்பத்தில் குறைந்த எடையுள்ள டம்ப்பெல்ஸ் ( dumbbells ) பயன்படுத்தவும். டம்ப்பெல்ஸ் இல்லாதவர்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பியும் பயன்படுத்தலாம்.

விரிப்பில் சிறிது இடைவெளி விட்டு நேராக நின்று கொண்டு வலது கையால் டம்ப்பெல்ஸ் பிடித்து கொண்டு வலது தோள்பட்டையில் வைக்கவும். இடது கை கீழே இருக்க வேண்டும். பின்னர் வலது காலை இரண்டடி முன்வைத்து முட்டி வரை மடக்கி, இடது காலை பின்புறமாக பின்புறமாக நீட்டி முன்கால் பாதம் தரையில் ஊன்றி ( படத்தில் உள்ளபடி) நிற்கவும்.

இந்த நிலையில் சிலவிநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். அடுத்து கால்களை மாற்றி இடது பக்கம் செய்யவும். இது தான் ஒரு செட். இந்த பயிற்சியை தொடர்ந்து 20 முதல் 30 எண்ணிக்கையில் செய்யவும்.இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள சதை படிப்படியாக குறைவதை பார்க்கலாம்.உடலில் உள்ள கலோரிகள் குறைய இந்த பயிற்சி மிகவும் சிறந்தது.

நாடிசுத்தி - ஆசனம்

நாடிசுத்தி

செய்யும் முறை:-

முதலில் விரிப்பில் பத்மாசனத்தில் அமரவேண்டும். பத்மாசனம் சரியாக வராதவர்கள் வஜ்ராசனத்தில் அமரலாம். இடது பக்க நாசித்துளையை இடதுகைக் கட்டைவிரலால் மூடிக்கொண்டு, வலதுபக்க நாசித்துளை வழியே முதலில் உள்ளேயிருக்கின்ற காற்றை (கொஞ்சமாக இருந்தாலும்) சுத்தமாக வெளியேற்ற வேண்டும்.

வலது நாசித்துளை வழியே காற்றை வேகமாகவும் இல்லாமல், ரொம்ப மெதுவாகவும் இல்லாமல் ஒரு நிதானமான கதியில் காற்றை உள்ளே இழுக்கவேண்டும்.

நுரையீரல் காற்றால் நிறைந்ததும், இடதுகை நடுவிரலாலோ அல்லது ஆள்காட்டி விரலாலோ வலதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு, இடதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வேண்டும்.

இப்போது இடதுபக்க நாசித்துளை வழியே காற்றை நுரையீரல் நிரம்புமளவுக்கு இழுத்துக்கொண்டு, இடதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு வலதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வெண்டும்.

இது ஒருசுற்று நாடிசத்தி ஆகும். இவ்வாறு குறைந்தது பத்துச் சுற்றுக்கள் முதல் இருபது சுற்றுக்கள் வரை செய்யலாம். பயிற்சியாளர் விரும்பினால் மேலும் பத்துச் சுற்றுக்கள் கூடுதலாகவும் செய்யலாம்.

பயன்கள்:-

நாடிசுத்தி செய்கின்றபோது நன்கு ஆழ்ந்து காற்றை இழுத்து நுரையீரல்களை நிரப்புவதால், நமது நுரையீரல்களிலுள்ள அறுபது கோடிக் காற்றைகளும் விரிந்து காற்றால் நிறைகின்றன. இதுவரை காற்றில்லாமல் சுருங்கிக்கிடந்த நுரையீரல்களில் காற்றுப் புகுந்து, நிறைந்து அங்கே தேங்கிக்கிடந்த சளி, மாசு போன்றவற்றை வெளியேற்றுகிறது.

பெருமளவில் கிடைத்த பிராணவாயு முழுமையாக இரத்தத்தில் கலக்கும் பொழுது இரத்த அணுக்களெல்லாம் புதிய உற்சாகம் பெறுகின்றன. இதனால் இரத்தம் அதிவேகமாகத் தூய்மையடைகிறது. நுரையீரல்கள் வளமும், வலிமையும் பெறுகின்றன. நாடிகள் சீர்ப்படுகின்றன. மூளைக்கு வேண்டிய ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கின்றது.

தலைவலி சளித்தொல்லைகள், காய்ச்சல் போன்ற உபாதைகள் வராது. முகம் பொலிவு பெற்று விளங்கும். மூக்கில் சதை வளருதல், சைனஸ் போன்ற நாசித் தொல்லைகள் அகலுகின்றன.

காசநோய் வராது. காசநோய்க் கிருமிகளை நாடிசுத்தியினால் கிடைக்கும் ஆக்சிஜன் உடனடியாகக் கொன்று அழிக்கும். ஆஸ்த்மா என்ற கொடிய நோயை அழிக்கின்ற அரக்கன் என்று நாடிசுத்தியைக் குறிப்பிடலாம். அவ்வளவு அற்புதமான பயிற்சி இது.

கறிவேப்பிலை

ணவுல கறிவேப்பிலையைச் சேர்க்கறதே... வெறும் வாசனைக்காகத்தான்னு ரொம்ப பேர் நினைக்கறாங்க. ஆனா, இந்த கறிவேப்பிலை அற்புதமான மூலிகை. அது, உடம்புக்கு வலுவூட்டும்ங்கிறது பலபேருக்கு தெரியாத விஷயம். தலையில தேய்க்கக்கூடிய எண்ணெய், தைலம் மாதிரியான திரவப் பொருட்கள்ல கத்தாழை, அவுரி சேர்ப்பாங்க. இதுகூட, கறிவேப்பிலையும் அரைச்சு சேர்த்து வெச்சுக்கலாம். இப்படி சேர்க்கப்பட்ட எண்ணெய்/தைலத்தை தேய்ச்சுக்கிட்டா... நல்ல பலன் கிடைக்கும். இந்த எண்ணெய், முடிக்கு நல்ல பலம் கொடுக்குறதோட... முடி நல்லா வளரவும், முடி உதிராம இருக்கவும் செய்யும்.
தினமும் 2 ஈர்க்கு கறிவேப்பிலையை காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா பித்தம் அதி கரிக்கிறதால வரக்கூடிய இளநரை மாறும். இதை தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டாத்தான் பலன் கிடைக்கும். சர்க்கரை நோயாளிங்க இதேபோல சாப்பிட்டு வந்தா நோய் கட்டுக்குள்ள வரும்.
ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை, 2 டம்ளர் தண்ணி விட்டு, அரை டம்ளரா ஆகுறவரை நல்லா கொதிக்க வெச்சு குடிச்சா... மலச்சிக்கல் இல்லாம இருக்கலாம். கறிவேப்பிலையை துவையல் செஞ்சு சாப்பிட்டு வந்தா... வாந்தி, பேதி, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல்னு வயிறு சம்பந்தமான நோய்கள் சரியாகும். சுக்கு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை எல்லாம் சம அளவு எடுத்து, பொன் வறுவலா வறுத்து பொடியாக்குங்க. ஒரு உருண்டை சாதத்துல, அரை டீஸ்பூன் அளவுக்கு இந்தப் பொடியைப் போட்டு, நெய் விட்டு சாப்பிட்டா... ஜீரண உறுப்புகள் எல்லாம் வலுவாகும்.
வேப்பிலை மாதிரி, கறிவேப்பிலையையும் மஞ்சள் சேர்த்து அரைச்சி பூசிட்டு வந்தா... முகப்பரு, தேமல் மட்டுமில்ல, மற்ற தோல்நோய்களும் சரியாகும்.
கடுமையான காய்ச்சலால கஷ்டப்படுறவங்களுக்கு இந்த கறிவேப்பிலை கைகொடுக்கும். கறிவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்துக்கோங்க. கூடவே துளசி ஒரு கைப்பிடி, ஆடாதொடை இலை ஒண்ணு, வேம்பு ஒரு ஈர்க்கு, ஒரு டீஸ்பூன் சீரகம் இதையெல்லாம் ஒண்ணா போட்டு, 4 டம்ளர் தண்ணி விட்டு 2 டம்ளராகுற வரை கொதிக்க வையுங்க. இதை 2 மணி நேரத்துக்கு ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் குடிச்சுட்டு வந்தா... எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் சரியாயிரும். காய்ச்சல் இருந்தா 2, 3 நாள் வரை இதை குடிச்சா... நிச்சயம் பலன் கிடைக்கும்.

Sunday, September 22, 2013

சர்க்கரை நோய்க்கு வீட்டில் இருக்கு மருந்து

சர்க்கரை நோய்க்கு வீட்டில் இருக்கு மருந்து

Normal headache, cough vantale costs to wipe your wallet. What to do if   you have diabetes, do not worry about that.
சாதாரண தலைவலி, இருமல் வந்தாலே பர்ஸ்சை துடைத்து போடும் அளவுக்கு செலவாகிறது. இதில் சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்வது என  கவலைப்பட வேண்டாம். இன்சுலின் செடி சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இன்சுலின் செடியை வீட்டிலே வளர்த்து அவற்றை  நாம் சர்க்கரைநோய்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செடியின் இலை உடலுக்கு தேவையான அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள்  இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2ம் நிலை சர்க்கரை  நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம்.
இந்த இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய,அமெரிக்கவிஞ்ஞானிகள்.  ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.  இந்தச்செடி கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. இந்த இன்சுலின் செடியின் இலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள்  குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக்  முறையிலும் தான் தயாரிக்கப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு  பிடிக்கவில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக்  கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது. பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ்  தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடையலாம்..

Thursday, September 19, 2013

ஊர்த்துவ ப்ரஸ்ரித பாதாசனம்

ஊர்த்துவ ப்ரஸ்ரித பாதாசனம்
செய்முறை :

விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்னர் கால்களை முட்டி வரை மடக்கி  முட்டியை இரு உள்ளங்கைகளாலும் பிடித்துக்கொள்ளவும். இரு முட்டிகளுக்கு இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். இந்த நிலையிலிருந்து, மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கால்களையும் நேராக மேல்புறம் நீட்டவும்.

கைகள் முட்டிகளைப் பிடித்தபடி இருக்கும். மூச்சை வெளியேவிட்டபடி அபானாசன நிலைக்கு கால்களை மடக்கி வரவும். இவ்வாறு ஆறு முறை செய்யவும்.

பலன்கள்:  முட்டியைச் சுற்றியுள்ள இறுகிய தசைகள் மற்றும் கணுக்கால் இறுக்கம் குறைந்து நெகிழ்வுத்தன்மை அடையும். வலி நீங்கும். கெண்டை சதைகளும் நன்கு செயல்படும்.

Tuesday, September 17, 2013

கொழுப்பை குறைத்தால், இதய வலியை தவிர்க்கலாம்!

E_1378618658
இதய நோய் குறித்த போதுமான விவரங்கள், தகவல்கள் அறியாமல் இருப்பவர்கள், தேவையற்ற பயத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகி, அறுவை சிகிச்சை வரை சென்று விடுகின்றனர். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே, இதய நோயிலிருந்து மீண்டு விடலாம் என்பதை, அனைவரும் உணர வேண்டும்.
இதய அடைப்பு நோய்க்கு, பைபாஸ், ஆஞ்சியோபிளாஸ்டி போன்றவற்றை மேற்கொள்வது சரியல்ல என்கிறார், ஒரு மருத்துவர். அதற்கு என்ன காரணம் என்றும், இதய நோய் வராமல் தடுப்பது எப்படி என்றும் அவர் விளக்குகிறார். அது தொடர்பான கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும்:
* நம் உடலை, எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. இயற்கையின் அற்புதப் படைப்பு அது. கம்ப்யூட்டர், பிரிஜ், "டிவி' போன்றவற்றை, மனிதனால் உருவாக்க முடியும். ஆனால், செடி, பூ, காய், கனி ஆகியவற்றை, மனிதனால் உருவாக்க முடியாது; அவை, கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவை. கம்ப்யூட்டரில் பழுது ஏற்பட்டாலோ, அது உடைந்து விட்டாலோ, நம்மால் சரி செய்ய முடியும்.
ஆனால், ஒரு பழம், மரத்திலிருந்து பறிக்கப்பட்ட பின், அதை மீண்டும், மரத்தோடு சேர்த்து வைக்க முடியுமா? முடியாது. இயற்கையைத் தொந்தரவு செய்வது நல்லதல்ல; அது, கேட்டை விளைவிக்கும். அது போல், கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதை தொந்தரவு செய்வது நல்லதல்ல. இயற்கையாக உருவான உபாதை, இயற்கையாகவே சரியாக அனுமதிக்க வேண்டும்.
* உடலை ஊடுருவிப் பார்க்கும் சிகிச்சை முறையை விட, உபாதைக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதை சரி செய்வதே சிறந்தது. ஒரு பிரச்னை உருவானால், அதை இடைமறித்துச் செல்வது தவறு. பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து, காரணத்தைச் சரி செய்ய வேண்டும். மனிதன் கண்டுபிடித்த, கருவிகள் செய்வதை விட, நம் உடல், தானாகவே, தன் பிரச்னைகளைச் சரி செய்து கொள்ளும். ஒரு மெர்சிடெஸ் பென்ஸ் காரின் பெயின்டை சுரண்டுங்கள்; உங்கள் உடலையும் கீறிக் கொள்ளுங்கள்.
பென்ஸ் கார் தானாக தன் கீறலை சரி செய்து கொள்ளாது; ஆனால், உடல் செய்து கொள்ளும். எனவே, இதயத்தில் அடைப்பு இருந்தால், அதை இயற்கை முறையில் நீக்க வேண்டுமே தவிர, உடலில் அறுத்து சிகிச்சை மேற்கொள்வது நல்லதல்ல.
* காரணம் அறிந்து கொண்டால் நோயை தவிர்க்கலாம். இதய நோய் இருப்பது கண்டறியப்பட்ட பின், அது குறித்து பயமோ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை. இதற்காகச் செய்யப்படும் ஆஞ்சியோபிளாஸ்டியோ, பைபாஸ் சிகிச்சையோ, இந்த பயத்தை முதலீட்டாகக் கொண்டே செய்யப்படுபவை. இதய அடைப்பு என்றால் என்ன, இது ஏன் ஏற்படுகிறது, இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை, அறிந்து கொண்டால், நோயைத் தவிர்த்து விடலாம்.
இதய நோய் குறித்த போதுமான விவரங்கள், தகவல்கள் அறியாமல் இருப்பவர்கள், தேவையற்ற பயத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகி, அறுவை சிகிச்சை வரை சென்று விடுகின்றனர். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே, இதய நோயிலிருந்து மீண்டு விடலாம் என்பதை, அனைவரும் உணர வேண்டும்.
* இதய நோய் என்றால் என்ன?
இதய தசைக்கு, ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் கொழுப்பு படிந்து, ரத்தம் செல்வது தாமதமானாலோ, முற்றிலும் தடைபட்டாலோ, அடைபட்ட இடத்தைத் தாண்டி உள்ள தசைகள் இறந்து போகும் நிலைக்குத் தள்ளப்படும். அந்த சமயத்தில் தான், மார்பில் கடுமையான வலி, உடல் முழுதும் வியர்த்தல், மூச்சு உள்ளிழுக்க முடியாமல், திணறல் ஆகியவை ஏற்படும். நடக்கும்போதோ, ஓடும்போதோ இது போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்தியாவில், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள, 80 சதவீதத்தினர், இத்தகைய பாதிப்புகளையே சந்திக்கின்றனர். மீதமுள்ளவர்கள் தான், இதய தமனியிலேயே குறைபாடு, ஓட்டை ஆகியவற்றால் பாதிப்படைகின்றனர்.
* நெஞ்சு வலி எவ்வாறு ஏற்படுகிறது?
இதய தசைகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில், 100 சதவீத அடைப்பு ஏற்படும்போது தான், இதய வலி ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், இது, எந்த முன் அறிகுறியையும் காட்டாமல், திடீரெனவே ஏற்படுகிறது. இதய தசைகளுக்கான குழாயில் கொழுப்பு படியும்போது, நாளடைவில், அதன் மீது மெல்லிய சவ்வு உருவாகும். இந்த இடத்தில் மேலும், மேலும் கொழுப்பு சேரும்போது, ஒரு நாள், சவ்வு கிழிந்து, ரசாயனம் வெளியேறும். இது இரண்டே நிமிடங்களில், அந்த இடத்தை,
முழுவதுமாக அடைத்து விடும். அந்த நேரத்தில் தான், குழாயில் ரத்த ஓட்டம் முழுதும் தடைபடுகிறது. அப்போது, நெஞ்சு வலி ஏற்படுகிறது. ரத்தம் கிடைக்காத நிலையில், இதய தசை இறக்க நேரிடுகிறது. அடைப்பு ஏற்பட்ட பாதை, பெரிதாக இருந்தால், மனித உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடுகிறது. இந்தியாவில், 40 முதல் 50 லட்சம் மக்கள் வரை, ஆண்டுதோறும், இத்தகைய இதய நோயால் இறக்கின்றனர்.
* நெஞ்சு வலி ஏற்பட காரணம் என்ன?
ரத்தக் குழாயில் சேரும் கொழுப்பு மீது, மெல்லிய சவ்வு உருவாகிறது. இது, "இன்டிமா' என்ற மருத்துவப் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த சவ்வின் தடிமனைப் பொறுத்தே, அது கிழியும் அல்லது வெடிக்கும் நாள் நிர்ணயிக்கப்படுகிறது.
சிலருக்கு, 50 சதவீத அடைப்பு ஏற்பட்டாலே, சவ்வு கிழியும்; சிலருக்கு, 100 சதவீத அடைப்பு ஏற்பட்டு, சவ்வு புஷ்டியான நிலைக்குத் தள்ளப்படும்போது வெடிக்கிறது. அதனால் தான், உடலில் கொழுப்பு சேரக் கூடாது என்று கூறப்படுகிறது.
* நெஞ்சு வலி ஏற்படாமல் தவிர்க்க முடியுமா?
அடைப்பு மேலும் ஏற்படாமல் தவிர்த்தால், நெஞ்சு வலியையும் தவிர்க்கலாம். கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு என்ற இரு விதக் கொழுப்புகள் தான், ரத்த நாளங்களில் படிகின்றன. ஒருவருக்கு, ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில், 130 மிலி கிராம் அளவில் கொலஸ்ட்ராலும், 100 மிலி கிராம் டிரைகிளிசரைடும் இருக்கலாம். அதற்கு மேலான அளவில் இவை இருந்தால், கொழுப்பு படிமானம் அதிகரிக்கும்.
* நெஞ்சு வலி ஏற்படுகிறது என்பதை, நோயாளி எப்போது உணர முடியும்?
இதய தசைகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்கள், இதயத்திற்குத் தேவையான ரத்தத்தை விட, 70 முதல் 80 சதவீதம் அதிகமாகவே ரத்தத்தை எடுத்துக் கொள்கின்றன. ஆனால், இதயம் இயங்க, 30 சதவீத ரத்தமே போதும். அதிகப்படியான, 70 சதவீத ரத்த சப்ளையில் குறைபாடு ஏற்படும்போது தான், நோயாளி, தனக்கு நெஞ்சு வலி ஏற்படுவதை உணர முடியும்.
ரத்த குழாய்கள் முழுதுமாய் அடைக்க, 30 முதல் 40 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், சிலருக்கு, 15 ஆண்டுகளிலேயே தெரிந்து விடுகிறது. 80 சதவீத அடைப்பு உள்ளவர்களுக்கு ஏற்படும் வலி, "ஆஞ்ஜைனா' என்றழைக்கப்படுகிறது. நெஞ்சின் இடது புறத்தில் வலி அல்லது பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். ஓய்வு எடுத்தால், சரியாகி விடும்.
சிலருக்கு வலி இல்லாமல், மூச்சுத் திணறல், மூச்சு விட முடியாமை, நடு மார்பில் எரிச்சல் ஆகியவை உருவாகலாம். 100 சதவீத அடைப்பு ஏற்பட்டு, சவ்வு கிழிந்த நிலைக்குத் தள்ளப்படுவோர், கடுமையான வலியை உணருவர். அதிகமாய் வியர்த்து, உயிர் பிரியும் நிலை ஏற்பட்டு விடும்.
டாக்டர் பிமலர் சாஜர்,
சாஓல் மருத்துவமனை, சென்னை.
 
Monday, September 16, 2013

வீட்டு வைத்தியம் -- கை மருந்துகள்,

அருமருந்தான அருகம் புல்....
இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும்.
பல் ஈறு நோய்களுக்கு.....
எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும். நல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.
எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீ­ர் சமஅளவு கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும். எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.5 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும். நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சைப் பழத்தில் துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.
கருத்தரிக்க உதவும்...
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50லிருந்து 100 கிராம் வரை எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
உதடு வெடிப்புக்கு...   
  
சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும். 
 
கட்டி கரைய....
கடுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும் தண்ணி விட்டு அரைச்சு குழம்பு போல ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வா.. கட்டி தானாக் கரைஞ்சிடும்.

தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும். குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்­ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும். குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும். அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்.

குங்குமப் பூவில் போலி நிறைய உண்டு. தேங்காய் துருவலில் வண்ணச்சாயத்தை ஏற்றி, காய வைத்து சிறிது 'saffron' essence கலந்து விற்கிறார்கள். அவை மலிவாக கிடைக்கும். தரமான குங்குமப்பூ ஒரு கிராம் விலை சுமார் ரூ. 500 இருக்கும். உண்மையான குங்குமப்பூவைத் தேர்வு செய்து வாங்கிப் பயனடையுங்கள்!

நோய் எதிர்ப்பு சக்திக்கு......
கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ' அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், இந்த கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.
முதுமை தோற்றத்தைக் கட்டுப்படுத்தும். கண்பார்வை கூர்மையடையும். பல் நோய்கள் வராமல் தடுக்கும். கீரையுடன் பருப்பு மட்டும் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. பல கொடிய வியாதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங்கண்ணிக் கீரையாகும்.
உடற்சூட்டுக்கு.........
வெந்தயம் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உடற் சூடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். மோரில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் விட்டு சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணிந்து விடும். ஒவ்வொரு நாளும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தூளாக்கியோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள சர்க்கரையினளவு கட்டுப்படுத்தப்படும்.
குறிப்பாக நீரிழிவு நோயுள்ளவர்கள் வெறும் வயிற்றில் இந்த வெந்தயத்தை தண்ணீ­ரில் ஊறவைத்து காலையில் பருகி வர நல்ல மாற்றம் கிட்டும். பொதுவாக பாலூட்டும் தாய்மாருக்கு பால் நன்றாக சுரக்க வறுத்த வெந்தயத்தை இடித்துக் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் வயிற்றுப் போக்கு இருப்பின் அதற்கும் வெந்தயம் சிறந்த மருந்து. பெண்களுக்கு மாதவிடாயின் போது வெந்தயம் கொடுத்தால் நன்மை பயக்கும். இவற்றோடு காய்ச்சல், சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கும் நிவாரணியாகக் காணப்படுகின்றது இந்த வெந்தயம். மேலும் தலைக்கு வைக்கும் எண்ணெய்க்குள் வறுத்தோ அல்லது சாதாரணமாகவோ வெந்தயத்தை போட்டுவைத்துக் கொண்டால் அது நல்ல குளிர்ச்சியைத் தரும். மொத்தத்தில் வெந்தயம் என்பது நன்மை தரும் பொருளாகக் காணப்படுகின்றது.
பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. தலை முடி கொட்டுவதை நிறுத்த, வெந்தயத்தை தண்­ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போல அரைத்து, தலையில் தேய்த்து, அரைமணி நேரம ஊற வைத்து குளிக்க வேண்டும்.
ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு.....!
கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர். அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில.......

  * குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.
* கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.
* பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.
* பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.
* பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.
தெரிந்துகொள்வோமா....
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.
* வாழைப்பழங்களில் சோடியம், கால்ஷியம், பொட்டாஷியம் போன்ற பலவகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் இருதய அழுத்தம் ஏறாமல் சீராக நடைபெற்று வரும்.
* தேங்காய் பயன்படுத்தும் உணவுகளில் கூடிய வரை தேங்காயைக் குறைத்துக் கொண்டு, டோஃபு எனப்படுகிற சோயா பனீரை சேர்க்கலாம். கொழுப்புச் சத்து அதிகமுள்ளவர்களுக்கும், இதயப் பாதிப்பு உள்ளவர்களுக்கும், எடை குறைக்க நினைப்போருக்கும் ஏற்றது இந்த டோஃபு.
* லவங்கப்பட்டை சேர்த்துக் கொதிக்க வைத்த தண்­ணீரை பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு, தினம் ஒரு முறை வாய் கொப்பளிக்கலாம். இயற்கையான மவுத் வாஷான இது, வாய் நாற்றத்தைக் தவிர்க்கும்.
* குழந்தைக்கு மார்பிள் சளி கட்டிக்கொண்டால், வெற்றிலையில் தேங்காய் எண்ணையைத் தடவி விளக்கில் சூடுபடுத்தி இளம் சூட்டில் மார்பில் பற்றுப்போடலாம். சளி கரைஞ்சிடும். சில குழந்தைகளுக்கு தலையில் சூடு இருக்கும். இதுக்கு குங்குமப்பூவை அரைச்சு பத்துப் போடலாம்.
* தினம் ஒரு கேரட்டை பச்சையாக கடிச்சி சாப்பிட்டால் வாத நோய் ஏற்படற வாய்ப்பு 68 சதவீதம் தவிர்க்கப்படுகிறது.
* வேலைக்கு போற பெண்கள் சிலர் அவசரத்துல சாப்பிடக்கூட மாட்டார்கள்... அந்த மாதியான பெண்கள் காபி குடிக்கிற டம்ளர்ல ஒரு டம்ளர் கேப்பைக்கூழ் குடிச்சிட்டுப்போகலாம். பசி அடங்குவதோடு உடம்புக்கு சத்தையும் தரக்கூடியது கேப்பைகூல்.
பித்தவெடிப்பு மறைய
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
தொண்டை வலிக்கு
பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.
இருமல் தொல்லைக்கு
தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும். 
இருமல் சளிக்கு
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய
மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும். 
பேன் தொல்லை நீங்க
வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும். 
மேனி பளபளப்பு பெற
ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது. 
கரும்புள்ளி மறைய
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
தொண்டை கரகரப்பு நீங்க
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
கருத்தரிக்க உதவும்
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
இருமல் சளி குணமாக
சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

கொய்யாப்பழத்தில் சத்து உள்ளது என்பதுபோல் அதன் இலையிலும் மருத்துவத்தன்மை உள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியாது.  வயிற்றுப்போக்கை நிறுத்துவதில் ஆற்றல் படைத்தது கொய்யா இலை என்றால் அது மிகையல்ல........
* கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்­ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
* சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
* குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
* காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
* வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றை அருந்தினால் பித்த மயக்கம், வாந்தி, கண்ணோய், இரத்த சோகையால் ஏற்பட்ட சோர்வு முதலியவை நீங்கும். உடலுக்கு புத்துணர்வை தரும். நன்கு பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும். எலுமிச்சம் சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் மனநோய், மன அழுத்தம் நீங்கும். உடலில் தேய்த்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட சில வியாதிகள் குணமடையும். நகச்சுற்றுக்கு இதன் சாறே சிறந்த மருந்து. யானைக்கால் வியாதி, கண்ணோய், காதுவலிக்கும் எலுமிச்சை சாறு சிறந்த மருந்து.
இஞ்சி சாறு:
நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என்றார்கள். இம்மூன்றையும் தினமும் உட்கொண்டால் நோய் என்பதே நம்மை நெருங்காது.
இஞ்சியை சாறு எடுத்து சிறிதளவு தினமும் அருந்தினால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி, குடல்நோய், பித்த மயக்கம், போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உற்ற மருந்தாகும். மேலும் தொண்டைப்புண், குரல் கம்மல், இவைகளைக் குணப்படுத்தும்.
கரிசலாங்கண்ணிச் சாறு:
கரிசலாங்கண்ணிச் சாறு ஜலதோஷம், காய்ச்சல், உடல்வலி, விஷக்கடி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். இதன் சாறை காலையில் அருந்துவது நல்லது. அல்லது மதிய உணவுக்குப்பின் சூப் செய்து அருந்தலாம்.
பொன்னாங்கண்ணிச் சாறு:
பொன்னாங்கண்ணி பல வகையான தைல வர்க்கத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பொன்னாங்கண்ணி கீரையை சூப் செய்து காலை மாலை இருவேளை என 15 நாட்களுக்கு அருந்தி வந்தால் கண் நோய்கள் ஏதும் அண்டாது. உடலின் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.
தூதுவளைச் சாறு:
வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைப்புண், அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள் தூதுவளைச் சாறு அருந்தி வந்தால் சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
அருகம்புல் சாறு:
அருகம்புல் சாறானது இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் உடலுக்கும் புத்துணர்வை கொடுக்கிறது. உடலில் தேங்கியுள்ள அசுத்த நீர் அனைத்தையும் வெளியேற்றுகிறது.
தண்­ணீர் விட்டான் கிழங்கு சாறு:
தண்ணீ­ர் விட்டான் கிழங்கின் சாறை எடுத்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சூட்டை தணித்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலைத் தடுக்கும். தாது புஷ்டியை கொடுக்கும்.
பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
வெள்ளைப் பூண்டு சாறு:
வெள்ளைப் பூண்டு சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டால் காது மந்தம் குறையும். உள்நாக்கில் தடவினால் உள்நாக்கு வளர்ச்சி (டான்சில்) குறையும். மேலும் சிறிது அருந்தினால் இருமல், சுவாசம் அடைப்பு, மலக்கிருமிகள் நீங்கும். உடலின் மேல் சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளிலும் தடவலாம்.
வெற்றிலைச் சாறு:
வாத பித்த கபத்தினை அதனதன் நிலையில் சமப்படுத்த வெற்றிலைச் சாறு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காணாக்கடிகளுக்கு இதன் சாறு சிறந்த மருந்து. அஜீரணத்தைப் போக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.
வேலிப்பருத்தி சாறு:
சுவாசம், காச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். கருப்பையிலுண்டாகும் பக்க சூலைக்கு இதன் சாறு தேன் கலந்து கொடுத்தால் பக்க சூலை நீங்கும். கை கால் வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவலாம்.

குரல் மாற்றத்தை சரிசெய்ய:
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிகொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.
தொண்டைப் புண் ஆற:
வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். அல்லது கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும்.
தொண்டை நோய்:
மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேனும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.
தொண்டை கரகரப்பு குணமாக:
சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். அல்லது பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.
தொண்டைக் கட்டு குணமாக:
மாவிலை, பச்சை இலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டைக்கட்டு குணமாகும். அல்லது மாவிலையை தேன் விட்டு வதக்கி நீரில் கலந்து அருந்த தொண்டைக்கட்டு, குரல் கமறல் தீரும். 
தொண்டை சதை வளர்ச்சி குறைய:
வில்வ இலை சாறு, துளசி இலை சாறு 100 வீதம் எடுத்து நல்லெண்ணை 500 மில்லியில் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி பாட்டிலில் வைக்கவும். தினசரி ஒரு கரண்டி எண்ணை எடுத்து வாயில் விட்டு சில நிமிஷங்கள் வாய் முழுவதும் ஒதுக்கி பின் கொப்பளிக்கவும். 10 தினங்கள் கொப்பளிக்க குணம் தெரியும்.
தொண்டை சதை குணமாக:
புளியையும், உப்பையும் சமஅளவு எடுத்து மைய அரைத்து நாக்கில் தடவிவர குணமாகும். அல்லது துளசி தைலத்தை அரைத் தேக்கரண்டி வாயிலிட்டு தொண்டை வரை கொப்பளித்து வர குணம் தெரியும்.
ஈறுகளில் ரத்தக்கசிவு குணமாக:
இலந்தை மரத்தின் கொழுந்துகளை பறித்து நீரில் காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து அந்நீரை வாய் கொப்பளிக்க ஈறுகளில் வரும் இரத்தக்கசிவு நிற்கு

இலந்தைப்பழம்:
சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும்
இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வைட்டமின் 'ஏ' சத்தும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் பெறவும் இலந்தைப்பழம் உதவிபுரிகிறது. இது உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். அடிக்கடி வாந்தி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.
களாப்பழம்:
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். களாக்காயாக இருக்கும்போது ஊறுகாய் போட பயன்படுகிறது. இது புளிப்புச் சுவையுடன் காணப்படும்.
நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு உண்டு. உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும். உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்துகிறது. உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.
ஆல்பக்கோடா பழம்:
தமிழ் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் 'ஏ', 'பி' உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.
காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலைவலியை குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக குணமடையும்.
வேப்பம்பழம்:
வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும்.
வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். இது பித்தத்தை தணிக்கும். சொரி, சிரங்கு மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தும்.
பழம் உதிரும் சீசனில் நன்றாக கனிந்த பழங்களை சேகரித்து அதை நீர் விட்டு கழுவி தோலையும், கொட்டையும் எடுத்துவிட்டு சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும். எந்த அளவிற்கு பழச்சாறு இருக்கிறதோ அந்த அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். பாகுபதம் வந்த சமயம் இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றிவைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும். பித்தம் தொடர்பான நோய் தீரும்.