Friday, April 26, 2013

பல் நோய்கள் குறைய

ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.

அறிகுறிகள்:
  • பல் ஆட்டம்.
  • ஈறுகளின் தேய்மானம்.
  • பல்கூச்சம்.
  • வாய்நாற்றம்.
தேவையான பொருட்கள்:
  1. ஆலமரப்பட்டை.
  2. சர்க்கரை.
செய்முறை:
ஆலமரப்படையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.

கருவேலம் பட்டை, கிராம்பு, மென்தால் ஆகியவற்றை இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும்.
அறிகுறிகள்:
  • பல்வலி.
தேவையான பொருட்கள்:
  1. கருவேலம் பட்டை.
  2. கிராம்பு.
  3. மென்தால்
செய்முறை:
கருவேலம் பட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து அதில் 30 கிராம் எடுத்து அதனுடன் 6 கிராம் கிராம்பு, மென்தால் சேர்த்து உரலில் போட்டு இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும்.

பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.
அறிகுறிகள்:
  • பல் வலி
தேவையான பொருள்கள்:
  1. மிளகுத்தூள்.
  2. கிராம்பு எண்ணெய்.
செய்முறை:
பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.

முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறித்து நன்றாக கடித்து சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையும்.
அறிகுறிகள்:
  • பல் வலி.
தேவையான பொருள்கள்:
  1. முந்திரி இலை.
செய்முறை:
முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறித்து நன்றாக கடித்து சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையும்.

பல் வலி ஏற்படும் போது பற்களின் மீது தேனை தடவி விட்டு உமிழ்நீர் பெருகி வாயிலிருந்து வெளியேற செய்து வந்தால் பல் வலி குறையும். பல்லில் ஓட்டை அல்லது புழு வெட்டு இருந்தால் தேனை பல்லில் படும்படி நிரப்பி வாய் கொப்பளித்து வந்தால் கிருமிகள் குறையும்.
அறிகுறிகள்:
  • பல் வலி.
  • பல்லில் துவாரம்.
தேவையான பொருள்கள்:
  1. தேன்.
செய்முறை:
பல் வலி ஏற்படும் போது பற்களின் மீது தேனை தடவி விட்டு உமிழ்நீர் பெருகி வாயிலிருந்து வெளியேற செய்து வந்தால் பல் வலி குறையும். பல்லில் ஓட்டை அல்லது புழு வெட்டு இருந்தால் தேனை பல்லில் படும்படி நிரப்பி வாய் கொப்பளித்து வந்தால் கிருமிகள் குறையும்.

கடுகு எண்ணெய் எடுத்து சிறிது உப்பு சேர்த்து வெளிப்புறமாக தாடைகளில் தடவி நன்கு தேய்த்து வந்தால் பல் வலி குறையும். தாடைகள் மற்றும் பல் ஈறுகள் பலம் பெறும்.
அறிகுறிகள்:
  • பல் வலி.
  • பலவீனமான ஈறுகள்.
தேவையான பொருள்கள்:
  1. கடுகு எண்ணெய்.
  2. உப்பு.
செய்முறை:
கடுகு எண்ணெய் எடுத்து சிறிது உப்பு சேர்த்து வெளிப்புறமாக தாடைகளில் தடவி நன்கு தேய்த்து வந்தால் பல் வலி குறையும். தாடைகள் மற்றும் பல் ஈறுகள் பலம் பெறும்.

கொள்ளுக்காய் வேளை செடி வேரை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும்.
அறிகுறிகள்:
  • பல்வலி.
தேவையான பொருட்கள்:
  1. கொள்ளுக்காய் வேளை வேர்
செய்முறை:
கொள்ளுக்காய் வேளை செடி வேரை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும்.

கிராம்பு மற்றும் வேப்ப மரப்பட்டைகளை நீரிலிட்டு நன்றாக காய்ச்சி ஆற வைத்து இந்த நீரை வாயில் சிறிது நேரம் வைத்து பிறகு கொப்பளித்து வந்தால் பல் வலி குறையும்.
அறிகுறிகள்:
  • பல் வலி.
தேவையான பொருள்கள்:
  1. கிராம்பு.
  2. வேப்ப மரப்பட்டை.
செய்முறை:
6 கிராம்பு மற்றும் வேப்ப மரப்பட்டைகளை நீரிலிட்டு நன்றாக காய்ச்சி ஆற வைத்து இந்த நீரை வாயில் சிறிது நேரம் வைத்து பிறகு கொப்பளித்து வந்தால் பல் வலி குறையும்.

பனங்கிழங்கை குப்பைமேனிச்சாற்றில் அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி உபயோக்கித்து வர பல்வலி குறையும்.
அறிகுறிகள் :
  • பல்வலி.
  • பற்களில் கிருமிகள்.
தேவையான பொருட்கள்:
  1. பனைக்கிழங்கு.
  2. குப்பைமேனி.
  3. நல்லெண்ணெய்.
செய்முறை :
பனங்கிழங்கை குப்பைமேனிச்சாற்றில் அரைத்து நல்லெண்ணெய் யில் காய்ச்சி பல்வலி உள்ள பாகத்தில் துளி துளியாய் விட்டு வர பல்வலி குறையும்.

வால் மிளகு, இந்துப்பு ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக இடித்து சலித்து அந்த பொடியை தினமும் பல் தேய்ப்பதற்கு பயன்படுத்தி வந்தால் பல் வலி மற்றும் பல் அசைவு குறையும்.
அறிகுறிகள்:
  • பல் வலி.
  • பல் அசைவு.
தேவையான பொருள்கள்:
  1. வால் மிளகு.
  2. இந்துப்பு.
செய்முறை:
10 கிராம் வால் மிளகு, 8 கிராம் இந்துப்பு ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக இடித்து சலித்து அந்த பொடியை தினமும் பல் தேய்ப்பதற்கு பயன்படுத்தி வந்தால் பல் வலி மற்றும் பல் அசைவு குறையும்.

நந்தியாவட்டை வேரை  வாயில் போட்டு மென்று  துப்பினால் பல்வலி குறையும்.

அறிகுறிகள்:
  • பல்வலி.
தேவையான பொருட்கள்:
  1. நந்தியாவட்டை வேர்.
செய்முறை:
நந்தியாவட்டை வேரை  சுத்தம் செய்து அதை  வாயில் போட்டு மென்று துப்பி வந்தால் பல்வலி குறையும்.

நீர்முள்ளி விதை, வசம்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் விட்டு  எட்டில் ஒரு பங்காக சுண்டக் காய்ச்சி  காலை, மாலை  என இரு வேளை மூன்று நாட்கள் வாய்  கொப்பளித்து வந்தால் பல்வலி, பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் ஆட்டம்  ஆகியவைகள் குறையும்.

அறிகுறிகள்:
  • பல்வலி.
  • பல் கூச்சம்.
  • பல் ஆட்டம்.
  • ஈறு வீக்கம்.
தேவையான பொருட்கள்:
  1. நீர்முள்ளி விதை.
  2. வசம்பு.
செய்முறை:
நீர்முள்ளி விதை, வசம்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் விட்டு  எட்டில் ஒரு பங்காக சுண்டக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை மூன்று நாட்கள் வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி, பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் ஆட்டம் ஆகியவைகள் குறையும்.

தான்றிக்காயை நன்றாக சுட்டு அதன் மேல் தோலை எடுத்து நன்கு பொடி செய்து சர்க்கரை கலந்து காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல் வலி மற்றும் பல் ஈறுகளில் வலி ஆகியவை குறையும்.
அறிகுறிகள்:
  • பல் வலி.
  • பல் ஈறுகளில் வலி.
தேவையான பொருள்கள்:
  1. தான்றிக்காய்.
  2. சர்க்கரை.
செய்முறை:
தான்றிக்காயை நன்றாக சுட்டு அதன் மேல் தோலை எடுத்து நன்கு பொடி செய்து சர்க்கரை கலந்து காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல் வலி மற்றும் பல் ஈறுகளில் வலி ஆகியவை குறையும்.

மகிழம் இலைகளை எடுத்து கஷாயம் செய்து அதை வைத்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி போன்ற பல் சம்பந்தமான நோய்கள் குறையும்.
அறிகுறிகள்:
  • பல் வலி.
  • பல் ஈறுகளில் இரத்தம் வருதல்.
தேவையான பொருட்கள்:
  1. மகிழம் இலை.
செய்முறை:
மகிழம் இலைகளை எடுத்து கஷாயம் செய்து அதை வைத்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி போன்ற பல் சம்பந்தமான நோய்கள் குறையும்.

அடிவயிறு சதை குறைய

சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி அரைத்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறையும்.
அறிகுறிகள்:
  • அடிவயிற்றில் அதிக‌ சதை.
தேவையான பொருட்கள்:
  1. சின்ன வெங்காயம்.
  2. பசுநெய்.
  3. பனங்கற்கண்டு.
செய்முறை:
சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறையும்.

பருத்த வயிற்றைக் குறைக்க

சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் பருத்த வயிறு குறையும்.

அறிகுறிகள்:
  1. சோர்வாக இருத்தல்.
  2. நடக்க இயலாமை.
  3. உடல் எடை கூடுதல்.
தேவையானப் பொருள்கள்:
  1. சுரைக்காய்.
செய்முறை:
சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் பருத்த வயிறு குறையும்.

இஞ்சிச் சாறை  கொதிக்க வைத்து அதே அளவு  தேன் ஊற்றி  தினசரி   உணவுக்குப் பின் சாப்பிட்டு வரவும்

அறிகுறிகள்:
  1. உடல் எடை கூடுதல்.
  2. நடக்க இயலாமை.
தேவையானப் பொருள்கள்:
  1. இஞ்சி.
  2. தேன்.
செய்முறை:
இஞ்சிச் சாறை  கொதிக்க வைத்து அதே அளவு  தேன் ஊற்றி ஆற வைத்து தினசரி காலையிலும், மாலையிலும் உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் பருத்த வயிற்றைக் குறைக்கலாம்.