Wednesday, April 24, 2013

அத்திப் பழ ஜூஸ்


தேவையான பொருட்கள்:
  1. உலர்ந்த அத்திப்பழம் – 4
  2. எலுமிச்சை பழச்சாறு – 1
  3. புதினா இலை – 4
  4. மிளகு பொடி – 2 சிட்டிகை
  5. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
  • உலர்ந்த அத்திப்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து நன்கு அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவேண்டும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அத்திப்பழச் சாறுடன் எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகு பொடி ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து அதனுடன் புதினா இலையைத் தூவி சாப்பிடலாம். இப்பொழுது சுவையான சத்தான அத்திப்பழச்சாறு தயார்.
மருத்துவக் குணங்கள்:
  1. அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலை சுறுசுறுப்படைய செய்கிறது.
  2. கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற செய்து ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளை குறைய செய்கிறது. அத்திப்பழத்தை சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயை வரவிடாமல் தடுக்கிறது.
  3. அத்திப்பழத்தை சாப்பிடுவதால் வாய்நாற்றம்  குறைய செய்கிறது. தலை முடி நீளமாக வளரச் செய்கிறது.
  4. அத்திப்பழம் தினசரி இரண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் உடல் வளர்ச்சி அடைந்து பருமனைடயும். மலச்சிக்கலை குறையச் செய்யும்.

No comments: