குளிர்ச்சி தரும் கனி. உலகம் முழுவதற்கும் பொதுவான கனி. கிருமி நாசினி. கடல் பயணத்தில் மிகவும் அவசியமான கனி. கடல் உப்பினால் உருக்குலைந்தவர்களை வாழ்விக்கும்.கடல் உப்பிற்கு பரிகாரம் தரும் கனி எலுமிச்சையே. மலேரியா, காலரா, டைப்பாய்டு போன்ற பிணிகளை அழிப்பதில் எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது.
- எலுமிச்சைப்பழம்
- எலுமிச்சைப்பழம்
- எலுமிச்சைப்பழம்
எலுமிச்சைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
- நீர்=85%
- மாவுப்பொருள்=11%
- புரதம்=1.0%
- கொழுப்பு=0.9%
- கால்சியம்=0.07%
- பாஸ்பரஸ்=0.03%
- நார்ச்சத்து=1.8%
- இரும்புச்சத்து=23 யூனிட்
- வைட்டமின் C=39 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் எலுமிச்சைப் பழச்சாறில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
- உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.
- வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது.
- உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெறலாம். சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும்.
- கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி பெறும். கனிகளில் மதியூக மந்திரி குணத்தை உடையது எலுமிச்சை.
- குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சம் பழம்.பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய்களை குணப்படுத்தும், வாய் நாற்றத்தைப் போக்கும், சர்ம நோய்களைக் குணப்படுத்தும், டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சக்காமாலையை நீக்கும், வீக்கத்தை குறைக்கும், வாயுவை அகற்றும், பசியை உண்டாக்கும், விரல் சுற்றிக்கு உதவும், யானைக்கால் வியாதியை குணப்படுத்தும்.
- அணுகுண்டு சோதனை நடத்துவதால் நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்தில் உள்ளது.
- தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும்.
- புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தைத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.
- விளையாட்டு, ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சப் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ சாப்பிட்டால் உடனடி தெம்பு ஏற்படும்.
- உண்ணாவிரம் இருந்து முடிப்போர் மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறு அருந்திவிட்டு உணவு உண்டால் அஜீரணப் பிரச்சனைகள் நேர்வதைத் தடுக்கலாம்.
குறிப்பு:
No comments:
Post a Comment