தர்பூசணி பீட்ரூட் ஜீஸ்

- தர்பூசணி

- எலுமிச்சம் பழம்

- பீட்ரூட்
தேவையான பொருட்கள்:
- தர்பூசணித் துண்டுகள் – 2 கப்
- பீட்ரூட் துருவல் – 1 கப்
- எலுமிச்சம் பழம் – 1
- ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
- தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை:
- எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவேண்டும். பீட்ருட்டை துருவி அதை லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். தர்பூசணித் துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கவேண்டும். வதக்கிய பீட்ரூட் துருவலுடன் விதை நீக்கிய தர்பூசணி துண்டுகளையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். இந்த கலவையை வடிகட்டி அதனுடன் ஏலக்காய் பொடியும் தேனும் கலந்துக் கொள்ளவேண்டும்.
- இப்பொழுது சுவையான சத்தான தர்பூசணி பீட்ரூட் ஜீஸ் ரெடி.
மருத்துவ பயன்கள்:
- தர்பூசணி தாகம், உடல் சூடு ஆகியவற்றை குறையச் செய்யும்.
- பீட்ரூட் இரத்த சோகையை குணப்படுத்தும்.
- பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
- எலுமிச்சை பழச்சாறு மஞ்சள் காமாலை, கண்நோய் மற்றும் ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
- எலுமிச்சை சாறை உணவில் தினமும் சேர்த்து வந்தால் முகத்திற்கு நல்லது.
No comments:
Post a Comment