Sunday, November 24, 2013

கர்ப்பிணிகளுக்கும்…


கருத்தரித்த நிலையில், சில பெண்களுக்கு சர்க்கரை இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. கருவுற்ற நிலையில் மட்டும் சர்க்கரை நோய் தாக்குவதேன்? அது குழந்தையை பாதிக்குமா? குழந்தை பெற்ற பின்பு அது தாய்க்கு தொடரும் அபாயம் உள்ளதா?

இதற்குப் பெயர் கர்ப்பகால நீரிழிவு என்பதாகும். கர்ப்பகாலத்தில், உடலில் நிகழும் ஹார்மோன் மாறுபாடுகளாலே சர்க்கரை நோய் வருகிறது. 
கர்ப்பிணிப் பெண்ணின் பெற்றோருக்கு சர்க்கரை இருப்பின், மரபு ரீதியாக அவருக்கும் சர்க்கரை பாதித்து, அது கர்ப்பகாலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரை பாதித்த கர்ப்பிணிகளின் உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது குழந்தையைப் பாதிக்கும். 
மேலும், கருச்சிதைவு மற்றும் குழந்தையின் உடலில் பிறவி ஒழுங்கின்மையை ஏற்படுத்தலாம். பொதுவாக, இவ்வகை கர்ப்பகாலத்தில் வளரும் சர்க்கரை, குழந்தை பெற்ற பின் தாய்க்கு சரியாகிவிடும். ஆனால், குழந்தை பெற்ற பின், 5 — 10 ஆண்டுகளில், அந்த தாய்க்கு திரும்பவும் நீரிழிவு வருவதற்கு, 50 – 70 சதவீதம் வாய்ப்புண்டு. 
எனவே, ஆரோக்கியமான உணவு திட்டத்தின் மூலமும் முறையான குழந்தை பெற்ற பின்பு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை சரியாகப் பேணுவதன் மூலமும் நீரிழிவுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். குழந்தை பெற்ற பின், 4 – 6 வாரத்திலும், பின்பு ஒவ்வோர் ஆண்டும் சர்க்கரைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கண்களை பாதுகாப்பது எப்படி?


தொழில்நுட்ப வளர்ச்சியும், விஞ்ஞானமும் போட்டி போடும் காலம் இது. அந்த வகையில், இந்த நூற்றாண்டின், மிகப் பெரிய கண்டுபிடிப்பு கம்ப்யூட்டர். இன்றைய தினத்தில், மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கைக்கு இணையாக, கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரும் பெருகி விட்டனர். 
கம்ப்யூட்டரை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில், கம்ப்யூட்டரில் இருந்து வெளிப்படும் கதிர்களிடம் இருந்து, கண்களை பாதுகாத்துக் கொள்வதும் மிக அவசியம். தொடர்ச்சியாக கம்ப்யூட்டரை பயன்படுத்துவோர் சந்திக்கும், முதல் பிரச்னை பார்வைக் கோளாறு.
தலைவலி, மந்தமான பார்வை, ஒளியை காணும் போது கண் கூசுதல், கண் சிகப்பு அடிக்கடி ஏற்படுதல், கண்வலி, கழுத்து மற்றும் பின் முதுகுவலி, நிறங்கள் மங்கலாக தெரிதல், கண் உலர்ந்து காணப்படுதல், அதோடு கண் எரிச்சல் போன்றவை, கண்களுக்குண்டான பிரச்னைகளை உறுதிப்படுத்தும். இந்த பிரச்னைகளுக்கு, "கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ என்று பெயர். 
கம்ப்யூட்டர் பயன்படுத்தும், 80 சதவீதம் பேருக்கு இந்த, "கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ வர வாய்ப்பு உள்ளது. 
நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளின் நிழலும், கண்ணின் பின்புறம் உள்ள, விழித்திரையில் குவிகிறது. கம்ப்யூட்டரில் உள்ள, "பிக்ஸலை’ தொடர்ந்து பார்ப்பதால், இந்த குவிதலில், பிரச்னை ஏற்படுகிறது. கண்ணில் உள்ள ஈரப்பதத்தையும், கண்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், கண்ணீர் பாதுகாக்கிறது. தொடர்ந்து கம்ப்யூட்டரை பார்ப்பதால், கண் சிமிட்டல் குறைந்து, கண் எரிச்சல் மற்றும் கண்கள் உலர்ந்து போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால், புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை பார்க்கும்போது, அதன் தெளிவான தன்மையால், இந்த பிரச்னை வருவதில்லை. 
கம்ப்யூட்டர் பாதிப்பால் ஏற்படும் தலைவலியை, எப்படி தெரிந்து கொள்வது? 
பெரும்பாலும் தலைவலி, தலையின் முன் அல்லது பின்பக்கமாகவும். சில நேரம் ஒரு பக்கத் தலைவலியாகவும் வரலாம். குறிப்பிட்ட நேரம் ஓய்வு எடுத்தால், இது சரியாகி விடும். சிறு வயதிலேயே கம்ப்யூட்டரை உபயோகிக்கும் குழந்தைகளுக்கு, கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. 
கண்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? 
கம்ப்யூட்டரை, கண் பார்வையில் இருந்து, 20 முதல் 26 இன்சுகள் தள்ளியிருக்கிற மாதிரி, அமைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் கம்ப்யூட்டர்கள் இருக்கும் அறைகள், ஏர் கண்டிஷன் செய்யப்படுவதால், "ஏசி’யில் இருந்து வரும் காற்று, கண்ணுக்கு நேராகபடும்படி உட்காரக் கூடாது. 
கம்ப்யூட்டர் இருக்கும் அறையில், வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்வதுடன், "பளீர்’ என்ற வெளிச்சமோ, மங்கலான வெளிச்சமோ இல்லாமல், மிதமான வெளிச்சமாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பணியின் போது, ஒவ்வொரு, 20 நிமிடத்துக்கு ஒரு முறையும், திரையில் இருந்து, கண்களை அகற்றி, 20 மீட்டர் தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பொருளை, 20 வினாடிகள் பார்க்க வேண்டும். இப்படி செய்யும்போது, கண்களுக்கு இயல்பான பாதுகாப்பு கிடைக்கும். 
கம்ப்யூட்டரால், கண்கள் உலரும் பாதிப்பு ஏற்பட்டால், கண் டாக்டர் அறிவுரைப்படி, "லூப்ரிகேட்டிங் ட்ராப்ஸ்’ பயன்படுத்தலாம். 
தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் பயன்படுத்தி, கண் சிமிட்டல் குறைந்து போனவர்கள், அடிக்கடி சிமிட்டலை தொடர வேண்டும். அதோடு, கண்களை மூடி, வட்டச் சுழற்சி முறையில், ஒரு முறை சுழற்றி, மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின், கண்களை திறந்து, மூச்சை மெதுவாக விட வேண்டும். கம்ப்யூட்டர் அத்தியாவசியம் என்றான பின், அதனால், கண்ணுக்கு ஏற்படும் பிரச்னைகளை, இந்த விதத்தில் சரி செய்து கொள்ள முடியும்.

Thursday, November 21, 2013

சர்க்கரை நோயாளிகளின் எதிரி மைதா மாவு’ சர்க்கரை நோய் சந்தேகம்

சர்க்கரை நோய் பரம்பரை வியாதியா? 
ஆம். பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு 80 சதவீதம் உண்டு. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தால் 50 சதவீத வாய்ப்பு உண்டு. பெற்றோருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்ட வயதில் இருந்து 5 முதல் 10 ஆண்டுகள் முன்பாகவே குழந்தைகளுக்கு வந்து விடுகிறது. 
சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன? 
அதிக சிறுநீர்ப் போக்கு. அதிக தாகம் மற்றும் பசி. மூன்று மாதங்களில் முன்பு இருந்த எடையில் இருந்து 10 சதவீதம் வரை, உடல் எடை இழப்பு. ஆறாத புண், அதிக தூக்கம், பாத எரிச்சல். அத்துடன் கை, கால் குடைச்சல், இடுப்பு வலி, நெஞ்சுவலி, பல்வலி, பல்வேர் வீக்கம், பல்லில் ரத்தக்கசிவு, தலைவலி, வலிப்பு நோய், தோள்பட்டை வலி, ஆண் உறுப்பில் தோல் வெடிப்பு, வெள்ளைப்படுதல், படர்தாமரை, அதிக வியர்வை, குதிங்காலில் வலி, முழங்கை வலி, காது நரம்பு பாதிப்பு ஆகியவை ஏற்படும்.
சர்க்கரை நோயை கண்டறிவது எப்படி? 
எட்டு மணி நேரம், சாப்பிடாமல் வெறும் வயிற்றில் எடுக்கப்படும் போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 126 மி.கி., க்கு குறைவாக இருக்க வேண்டும். 82.5 கிராம் "குளுக்கோன் டி’ யை, 300 மி.லி., அளவு தண்ணீரில் கலந்து குடித்து, 2 மணி நேரத்திற்குப்பின் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவு, 200 மி.கி.,க்கு குறைவாக இருக்க வேண்டும். 
சாதாரணமான நேரத்தில் பரிசோதிக்கும்போது, சர்க்கரையின் அளவு 180 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும். "ஏ 1 சி’ எனப்படும் பரிசோதனையின் அளவு, 6.5 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். இவற்றில், ஏதாவது 2 மட்டும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றுடன், அதிக சிறுநீர் போக்கு, தாகம், பசி, 10 சதவீதத்திற்கும் மேலான எடை இழப்பு ஏற்படுவதன் மூலம் அறியலாம். 
சர்க்கரை நோயாளிகளுக்கு மைதா மாவு கூடாது என்கிறார்களே, ஏன்? 
மைதா மாவு, கோதுமையில் இருந்து பெறப்படுகிறது. கோதுமையில் உள்ள நார்ச்சத்து முழுவதும், இயந்திரத்தால் நீக்கப்பட்டு, மாவுச் சத்து மட்டுமே உள்ளது. இதனால், மைதா உணவு வகைகளை சாப்பிட்ட உடன், மிகவேகமாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்கிறது. இந்த வேகத்திற்கு, "இன்சுலின்’ ஊசியோ அல்லது மாத்திரையோ ஈடுகொடுக்க முடிவதில்லை. மைதா வகைகளை தவிர்ப்பது நல்லது. மைதாவில் உள்ள "மைக்ரோகிராம்’ அளவு, கெமிக்கல் சர்க்கரை வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது. 

சர்க்கரை நோயாளிகள் எந்த வகை பழங்களை சாப்பிடலாம்?
 
ஆப்பிள், மாதுளை, பப்பாளி, கொய்யா, ஆரஞ்சு, தர்ப்பூசணி, பேரிக்காய், நாவல்பழம், அத்திப்பழம் போன்றவைகளை சாப்பிடலாம். அதேசமயம் பழச்சாறு குடித்தால், அது உடனே உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துவதால், தவிர்க்க வேண்டும். 
சர்க்கரை நோயாளிகள் நிலக்கடலை, முந்திரி வகைகளை (நட்ஸ்) பயன்படுத்தலாமா? 
செரிமானத்தை தாமதப்படுத்துவதன் மூலம், சாப்பிட்ட உடனேயே அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை (30-50 சதவீதம்), அவை குறைக்கின்றன. மேலும், இதில் உள்ள ஆர்ஜினின், இருதயத்திற்கு ஊறு விளைவிக்கும் சி.ஆர்.பி., அளவை குறைக்கிறது. எனவே, அவற்றை பயன்படுத்தலாம். வாரத்தில் 3 நாட்கள், ஒரு கைப்பிடி அளவு வேகவைத்த வேர்க்கடலை, முந்திரி, பாதாம் பருப்பு பயன்படுத்தலாம். 
காபி, டீ- இவற்றில் எது சிறந்தது? 
காபி சிறந்தது. டீ விரும்புவோர் எலுமிச்சை டீ அல்லது கிரீன் டி குடிக்கலாம். காலையில் ஒரு கப் காபி, மாலையில் ஒரு கப் டீ, பால் அளவை குறைத்து, எலுமிச்சை சேர்த்து குடிக்கலாம். இவை மாரடைப்பு வருவதை தவிர்க்கிறது. 
"ஓட்ஸ்’ சாப்பிடுவது எந்தளவு பலனை தரும்? 
"ஓட்ஸ்’ என்பது அரிசியைப் போல ஒரு தானியமே. ஆனால், அரிசியைப் போல இல்லாமல் கஞ்சி, களி மட்டும் தயாரிக்க முடியும். இவை விரைவில் செரிமானம் ஆகிவிடுவதால் சீக்கிரமே பசியெடுக்கும். எனவே மறுபடியும் சாப்பிட வேண்டியிருப்பதால் சர்க்கரையின் அளவு மேலும் அதிகரிக்கும். ஆனால், "ஓட்ஸை’ சிறிது கெட்டியாக செய்து காலை உணவாக சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகளின் எதிரி மைதா மாவு’ சர்க்கரை நோய் சந்தேகம்

சர்க்கரை நோய் பரம்பரை வியாதியா? 
ஆம். பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு 80 சதவீதம் உண்டு. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தால் 50 சதவீத வாய்ப்பு உண்டு. பெற்றோருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்ட வயதில் இருந்து 5 முதல் 10 ஆண்டுகள் முன்பாகவே குழந்தைகளுக்கு வந்து விடுகிறது. 
சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன? 
அதிக சிறுநீர்ப் போக்கு. அதிக தாகம் மற்றும் பசி. மூன்று மாதங்களில் முன்பு இருந்த எடையில் இருந்து 10 சதவீதம் வரை, உடல் எடை இழப்பு. ஆறாத புண், அதிக தூக்கம், பாத எரிச்சல். அத்துடன் கை, கால் குடைச்சல், இடுப்பு வலி, நெஞ்சுவலி, பல்வலி, பல்வேர் வீக்கம், பல்லில் ரத்தக்கசிவு, தலைவலி, வலிப்பு நோய், தோள்பட்டை வலி, ஆண் உறுப்பில் தோல் வெடிப்பு, வெள்ளைப்படுதல், படர்தாமரை, அதிக வியர்வை, குதிங்காலில் வலி, முழங்கை வலி, காது நரம்பு பாதிப்பு ஆகியவை ஏற்படும்.
சர்க்கரை நோயை கண்டறிவது எப்படி? 
எட்டு மணி நேரம், சாப்பிடாமல் வெறும் வயிற்றில் எடுக்கப்படும் போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 126 மி.கி., க்கு குறைவாக இருக்க வேண்டும். 82.5 கிராம் "குளுக்கோன் டி’ யை, 300 மி.லி., அளவு தண்ணீரில் கலந்து குடித்து, 2 மணி நேரத்திற்குப்பின் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவு, 200 மி.கி.,க்கு குறைவாக இருக்க வேண்டும். 
சாதாரணமான நேரத்தில் பரிசோதிக்கும்போது, சர்க்கரையின் அளவு 180 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும். "ஏ 1 சி’ எனப்படும் பரிசோதனையின் அளவு, 6.5 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். இவற்றில், ஏதாவது 2 மட்டும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றுடன், அதிக சிறுநீர் போக்கு, தாகம், பசி, 10 சதவீதத்திற்கும் மேலான எடை இழப்பு ஏற்படுவதன் மூலம் அறியலாம். 
சர்க்கரை நோயாளிகளுக்கு மைதா மாவு கூடாது என்கிறார்களே, ஏன்? 
மைதா மாவு, கோதுமையில் இருந்து பெறப்படுகிறது. கோதுமையில் உள்ள நார்ச்சத்து முழுவதும், இயந்திரத்தால் நீக்கப்பட்டு, மாவுச் சத்து மட்டுமே உள்ளது. இதனால், மைதா உணவு வகைகளை சாப்பிட்ட உடன், மிகவேகமாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்கிறது. இந்த வேகத்திற்கு, "இன்சுலின்’ ஊசியோ அல்லது மாத்திரையோ ஈடுகொடுக்க முடிவதில்லை. மைதா வகைகளை தவிர்ப்பது நல்லது. மைதாவில் உள்ள "மைக்ரோகிராம்’ அளவு, கெமிக்கல் சர்க்கரை வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது. 

சர்க்கரை நோயாளிகள் எந்த வகை பழங்களை சாப்பிடலாம்?
 
ஆப்பிள், மாதுளை, பப்பாளி, கொய்யா, ஆரஞ்சு, தர்ப்பூசணி, பேரிக்காய், நாவல்பழம், அத்திப்பழம் போன்றவைகளை சாப்பிடலாம். அதேசமயம் பழச்சாறு குடித்தால், அது உடனே உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துவதால், தவிர்க்க வேண்டும். 
சர்க்கரை நோயாளிகள் நிலக்கடலை, முந்திரி வகைகளை (நட்ஸ்) பயன்படுத்தலாமா? 
செரிமானத்தை தாமதப்படுத்துவதன் மூலம், சாப்பிட்ட உடனேயே அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை (30-50 சதவீதம்), அவை குறைக்கின்றன. மேலும், இதில் உள்ள ஆர்ஜினின், இருதயத்திற்கு ஊறு விளைவிக்கும் சி.ஆர்.பி., அளவை குறைக்கிறது. எனவே, அவற்றை பயன்படுத்தலாம். வாரத்தில் 3 நாட்கள், ஒரு கைப்பிடி அளவு வேகவைத்த வேர்க்கடலை, முந்திரி, பாதாம் பருப்பு பயன்படுத்தலாம். 
காபி, டீ- இவற்றில் எது சிறந்தது? 
காபி சிறந்தது. டீ விரும்புவோர் எலுமிச்சை டீ அல்லது கிரீன் டி குடிக்கலாம். காலையில் ஒரு கப் காபி, மாலையில் ஒரு கப் டீ, பால் அளவை குறைத்து, எலுமிச்சை சேர்த்து குடிக்கலாம். இவை மாரடைப்பு வருவதை தவிர்க்கிறது. 
"ஓட்ஸ்’ சாப்பிடுவது எந்தளவு பலனை தரும்? 
"ஓட்ஸ்’ என்பது அரிசியைப் போல ஒரு தானியமே. ஆனால், அரிசியைப் போல இல்லாமல் கஞ்சி, களி மட்டும் தயாரிக்க முடியும். இவை விரைவில் செரிமானம் ஆகிவிடுவதால் சீக்கிரமே பசியெடுக்கும். எனவே மறுபடியும் சாப்பிட வேண்டியிருப்பதால் சர்க்கரையின் அளவு மேலும் அதிகரிக்கும். ஆனால், "ஓட்ஸை’ சிறிது கெட்டியாக செய்து காலை உணவாக சாப்பிடலாம்.

அரிசியை முற்றிலுமாக தவிர்ப்பது ஆரோக்கியமானதா?

ஓட்ஸ் மற்றும் கோதுமை கூட, பட்டை தீட்டப்பட்டிருந்தால் அதன் மூலம் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். எதைச் சாப்பிடுவதென்றாலும், அது சிவப்பு அரிசி, ஓட்ஸ் தவிடு நீக்கப்படாத முழு தானியமாக இருப்பது நல்லது 
1. மரபு ரீதியாக மற்றும் உணவுமுறை மூலமாக நீரிழிவு நோய் வருவதாகக் கூறப்படுகிறது. இதில் எதன் மூலமாக இந்நோய் அதிகம் வருகிறது?

ஒரு மனிதனின் வாழ்க்கைமுறையும், அவனது சுற்றுப் புறமும் இரண்டாம் நிலை நீரிழிவு நோயில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவன் தனது பெற்றோரின் மரபணு 
மூலமாக பெறுவதை விடவும், அவர்களிடமிருந்து வாழ்க்கைமுறை பாடத்தை அதிகமாகக் கற்றுக் கொள்கிறான். அவர்களது ஊட்டச்சத்துகளற்ற தவறான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளற்ற வாழ்க்கைமுறை, அவனிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. 
எனவே, பெற்றோர் நல் உதாரணமாய் இருந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கொண்டிருந்தால், அவர்களது சந்ததியும் நீரிழிவு நோய் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கிய வாழ்வு வாழும். 
2. ஆங்கில மருத்துவம் போலவே அக்குபஞ்சர் போன்ற முறைகளையும், நீரிழிவு பிரச்னைக்காக மக்கள் நாடும் நிலை உள்ளது. இது சரியானதா? 
அக்குபஞ்சர் முறையில் நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் இதற்கு, மேலும் அறிவியல் சான்றுகள் தேவைப்படுகின்றன. அக்குபஞ்சர் முறையில் நரம்பு தொடர்பான வலிகள், நாள்பட்ட வலிகள் போன்றவைக்கு தீர்வு கிடைக்கலாம். 
3. இரண்டாம் நிலை நீரிழிவு என்பது என்ன? அது எப்படி வருகிறது? 
இரண்டாம் நிலை நீரிழிவு நோயாளிகளின் உடலில் இன்சுலின் சுரப்பு குறிப்பிட்ட அளவில் இருக்கும். ஆனால், அந்த இன்சுலினும் சரியாக வேலை செய்யும் என்று சொல்ல முடியாது. இவ்வகையான இரண்டாம் நிலை நீரிழிவு பெரியவர்களுக்கே வருகிறது. அத்துடன் ஒபீசிட்டி எனப்படும் அதிக எடை உள்ளவர்களையும் அதிகம் தாக்குகிறது. டயட், உடற்பயிற்சி மற்றும் வாய் வழியாக மருந்துகள் உட்கொள்வதன் மூலம் இவ்வகை நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். 
4. ஜுவினைல் டயாபடீஸ் எனப்படும் குழந்தைப் பருவத்தில் வரும் சர்க்கரைத் தாக்கு தற்போது எந்நிலையில் உள்ளது? 
ஜுவினைல் டயாபட்டீஸ் தற்போது டைப் 1 டயாபட்டீஸ் அல்லது இன்சுலின் சார்ந்த டயாபட்டீஸ் எனப்படுகிறது. பெரும்பாலும், 20 வயதுக்கு உட்பட்டோரே பாதிக்கப் 
பட்டாலும் எந்த வயதினரும் இவ்வகை நீரிழிவால் பாதிக்கப்படலாம். 
5. காஸ்டஸ் பிக்டஸ் என்னும் மூலிகைச் செடியின் இலைகளை, தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் போதும் இன்சுலின் ஊசி போடும் தேவையிருக்காது என சொல்கிறார்களே? இது உண்மையானதா? 
இதற்கு எந்த சான்றுகளும் இல்லை. 
6. மஞ்சள் காமாலை, அம்மை, போலியோ போன்றவற்றுக்கு தடுப்பு மருந்துகளை குழந்தைப் பருவத்திலேயே கொடுப்பது போல் நீரிழிவுக்கும் தடுப்பு மருந்துகள் வந்துள்ளனவா? அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றனவா? 
இன்றைய நிலை வரை நீரிழிவு நோய்க்கு எந்த தடுப்பு மருந்துகளும் இல்லை. 
7. பச்சரிசியை விட புழுங்கல் அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது என்கிறார்களே?
முன்பெல்லாம் கைக்குத்தல் அரிசி உணவைத்தான் உண்டு வந்தார்கள். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், பச்சரிசியோ அரை வேக்காட்டு புழுங்கல் அரிசியோ எதுவானாலும் இன்று பாலிஷ் செய்யப்பட்டே கிடைக்கிறது. இந்த பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் அதிலுள்ள நார்ச்சத்து மட்டுமில்லாமல் அதில் உள்ள அனைத்து சத்துக்களும் நீக்கப்பட்டு விடுகின்றன. 
இத்தகைய அரிசியால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. எங்களது ‘மோகன்’ஸ் டயாபட்டீஸ் சென்டரில் உடலில் சர்க்கரையை அதிகரிக்காத புதிய வகையான ஸ்பெஷல் பிரவுன் அரிசி மற்றும் வெள்ளை அரிசி உருவாக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த அரிசி எங்களது நிறுவனத்தில் கிடைக்கும். 
8. ‘குறைவாகச் சாப்பிடுங்கள்; கூடுதலாக வேலை செய்யுங்கள்’ என்ற கூற்று முற்றிலும் மாறி உடல் உழைப்பு குறைந்து வரும் நிலையில், சர்க்கரை நோய் வராமல் தடுக்க, பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள் யாது? 
குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடாது. அதிகமான காய்கறிகளுடன் கூடிய மிதமான கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட உணவு வகைகளே, சர்க்கரை வராமல் தடுக்கும். 
நீரிழிவு நோயாளிகளுக்கும் இதுவே ஏற்றது. இந்தநோயாளிகளுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் இருந்தால், சில வகைப் பழங்களையும் சாப்பிடலாம். சத்துக்கள் நிறைந்த உணவுப்பழக்கத்தால் நீரிழிவு மட்டுமல்லாமல், ‘ஹைபர்டென்ஷன்’ எனப்படும் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு சேர்தல், வளர்சிதை மாற்றம் மற்றும் உடல்பருமன் போன்றவற்றிலிருந்து தப்பலாம். 
9. ‘கேட்ஜெட்டுகளும் குழந்தைகளும்’ என்ற இன்றைய நிலையில், விளையாட்டு, நடனம் போன்ற உடல் உழைப்பு குழந்தைகளுக்கும் குறைந்து வருகிறது. இந்நிலையில், அவர்களுக்கான உணவு முறையில் மாற்றம் அவசியமா? 
‘டிவி’ பார்த்தல், மொபைல் போன் மற்றும் ஐபாட்களில் விளையாடுவது உள்ளிட்ட அனைத்து கேட்ஜெட்டுகளால் குழந்தைகள் அதிக எடை மற்றும் ஓபிசிட்டியால் பாதிக்கப்படுகின்றனர். 
பெரும்பாலான குழந்தைகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ‘ஜங்க் புட்’களை அதிகம் சாப்பிடுவதாலும், செயற்கை இனிப்புகளாலான பானங்கள், சிப்ஸ், பீட்சா, பர்கர் போன்றவற்றை அதிகம் உண்பதால் சிக்கல் உண்டாகிறது. 
வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை மட்டுமே உண்டு, வெளிஅரங்க விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தாலே நோய் அண்டாது. 
10. இன்றைய இளம்பெண்கள் ‘ஜீரோ சைஸ்’ மோகத்தில் உடலை வருத்திக் கொள்வது நல்ல விஷயமா? உண்மையில் ‘ஜீரோ சைஸ்’ ஆரோக்கியமானதா? 
‘ஜீரோ சைஸ்’ என்பது ஒல்லியான (ஸ்லிம் பிகர்) உடல்வாகை பேணுவதுதான். இது ஆரோக்கியமான அணுகுமுறையல்ல என்பது பலருக்கும் தெரிவதில்லை. முறையான பயிற்சியாளரின் ஆலோசனையின் பேரிலும், சரியான உணவு முறையாலும் ஒல்லியான உடல்வாகைப் பெற முயற்சிக்கலாம். 
11. பலரும் இன்று ஓட்ஸ், கோதுமை சப்பாத்தி என, மாறி வருகிறார்கள். இப்படி அரிசியை முற்றிலுமாகத் தவிர்ப்பது ஆரோக்கியமானதா? 
ஓட்ஸ் மற்றும் கோதுமை கூட பட்டை தீட்டப்பட்டுஇருந்தால் அதன் மூலம் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். எதைச் சாப்பிடுவதென்றாலும், அது சிவப்பு அரிசி, முழு கோதுமை ரொட்டி அல்லது ஓட்ஸ் தவிடு நீக்கப்படாத முழு தானியமாக இருப்பது நல்லது. 
12. கலோரிகளைக் கூட்டும் விருந்து என்பது, எப்போதாவது என்பது போய், இப்போது ‘வீக் எண்ட் பார்ட்டிகள்’ இளைஞர்களிடையே அதிகரித்து வருகின்றனவே? இதனால் பாதிப்பு உண்டா? 
ஆம். கண்டிப்பாக இத்தகைய வீக் எண்ட் விருந்துகளால் சிக்கல்தான். இவை, சர்க்கரை அளவை உயர்த்த தவறுவதில்லை. 
காரணம், இத்தகைய பார்ட்டிகளில் நொறுக்கு தீனிகளான சிப்ஸ், நாக்கோஸ் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்படும் ஸ்டார்ட்டர் வகை உணவுப் பண்டங்களே அதிகம் பரிமாறப்படுகின்றன. 
இதுவே, ஆரோக்கியமான, சத்தான உணவு வகைகளைக் கொண்ட சாலட்டுகள், முழு தானியங்கள், பாதாம், முந்திரி போன்ற புரதம் நிறைந்த உணவுகள் கொண்ட பார்ட்டிகள் என்றால் ஆரோக்கியமானதும் கூட. கொழுப்பும் குறையும். முன் சொன்ன முறையே என்றாலும் எப்போதாவது ஒரு முறையென்றால் சரி… வாராவாரம் என்றால் அது கூடாததுதான். 
‘சுகர் ப்ரீ’யா? உஷார்! 
சர்க்கரைக்கு மாற்றாக உபயோகிக்கப்படும், ‘சுகர் ப்ரீ’ எனப்படும் ‘அஸ்பார்டேம்’ஆல் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படலாம் என்ற கருத்து உள்ளது. ஆனால், சுகர் ப்ரீ சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம், ஸ்வீட்டுகளை பிரபல கடைகளில் விற்கிறார்களே? இது சரியானதா? 
சுகர் ப்ரீ பொருட்களை, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கண்டிப்பாகக் கொடுக்க கூடாது. இந்த சுகர் ப்ரீ பொருட்களில் கலோரிகள் அதிகம் உள்ளதால், மற்றவர்கள் கூட இதனை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. பெரும்பாலான உணவுப் பண்டங்களில், சாதாரண சர்க்கரைக்கு பதிலாக புருக்டோஸ் உபயோகிக்கப்படுகிறது. 
சர்க்கரை அளவு கட்டுப்படாத நிலையில் உள்ளவர்கள், புருக்டோஸ் கொண்ட தின்பண்டங்களை எடுத்துக் கொள்வதால் சர்க்கரை அளவு மேலும் கூடிப்போகிறது. இத்தகைய சுகர் ப்ரீ பொருட்கள் விலை, மிக அதிகமானதும் கூட.

இரத்த அழுத்தத்தை சீரகமே சரி பண்ணிடுமாம்! கை மருந்துகள்!!

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.  அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.   திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்! ஹெல்த் ஸ்பெஷல்!!

சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். 

ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 

சர்க்கரை நோய் இல்லையென்றாலும் சரி அல்லது சர்க்கரையின் அளவு எல்லையில் இருந்தாலும் சரி அல்லது பரம்பரை வியாதி என்றாலும் சரி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதோடு தவிர்க்கவும் செய்யலாம். 

இந்தியர்களுக்கு அதற்கான உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும். இப்போது சர்க்கரை நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகளை பற்றி பார்ப்போம்.

1.வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும். 

2.தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் 

3.பாதாம்: தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும். 

4.தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள் ளவும். 

5.பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது. 

6.காய்கறிகள்: அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். 

7.பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது. 

8.ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும். 

9.பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது. 

10.உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். 

11.முக்கியமான உணவுகள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும். 

12.இயற்கை இனிப்பு: சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம். 

13.தண்ணீர் மற்றும் மதுபானம்: நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச்சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். 

14.அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும். 

15.உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும். 

மேற்காணும் உணவுப் பழக்கத்தை தொடர்ந்து கையாண்டு வந்தாலே சர்க்கரை நோயின் பிடியில் இருந்து 100 சதவீதம் தப்பலாம். சர்க்கரை நோய் கண்டவர்கள் தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்து முறையான சிகிச்சையினை டாக்டரிடம் மட்டுமே எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது. சர்க்கரை நோயற்ற வாழ்வை பெற முயன்ற அளவு முயற்சிப்போம்.

முதுகுவலியை போக்கும் பயிற்சி-உடற்பயிற்சி!


கம்ப்யூட்டரில் வெகு நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு முதுகு வலி பிரச்சனை இருக்கும். மேலும் தொடர்ச்சியாக இருசக்கர வாகனம் ஒட்டுபவர்களும் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். முதுகு வலி அதிகம் பெண்களையே தாக்குகிறது. முதுகுவலியை போக்கும் பயிற்சி

முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே சொல்லப்பட்டுள்ள இந்த எளிய உடற்பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் முதுகு வலி பிரச்சனை இருக்காது. மேலும் தினமும் தொடர்ந்து செய்து வந்தால் 1 மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். 

சிசேரியம் செய்த பெண்களுக்கு முதுகு வலி இருக்கும். இவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சியை தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. 

பயிற்சி செய்முறை : 

முதலில் விரிப்பில் நேராக கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளை தோள்பட்டைக்கு இணையாக நீட்டவும். இப்போது கால்களை முட்டி வரை மடக்கவும். பின்னர் கால்களை மட்டும் வலது பக்கமாக தரையில் படும்படி சாய்க்கவும் (படத்தில் உள்ளபடி). 

இந்த நிலையில் கைகளையோ, உடலையோ திருப்பக்கூடாது. இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் கால்களை மாற்றி இடது பக்கமாக செய்யவும்.  ஆரம்பத்தில் கால்கள் தரையை தொடுவது கஷ்டமாக இருக்கும். 

நன்கு பழகிய பின்னர் படத்தில் உள்ளது போல் செய்ய வரும். இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 25 முறை செய்யலாம். இந்த பயிற்சியை காலையில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

சப்போட்டா பழம் - பழங்களின் பயன்கள்,


சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது. நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.

  1. 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.
  2. சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.
  3. ஒல்லியாக தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக இருக்கும். அவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற சப்போட்டா பழம் மிகுந்த உதவிபுரிகிறது. தோல் நீக்கியா சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடன் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக பூசி குளிக்கவும். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்கி, பூசினாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
  4. கன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிருக்கிறதா? கொழு, கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும். காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம் மின்னும்.
  5. ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளித்து வர அவை வறட்சி நீங்கி மென்மையாக மிளிரும். சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை கரைக்கிறது. இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வயிற்றெரிச்சல், மலச்சிக்கல், மூலநோய்க்கு சிறந்த தீர்வாகிறது.
தூக்கம் தரும் சப்போட்டா ஜூஸ்
  1. இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸ் குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் நம்மை தாலாட்டும். பனைவெல்லம், சுக்கு, சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகியம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.
பித்தம் குணமாகும்
  1. சப்போட்டா பழ ஜூசு டன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். இது பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மயக்கத்தை போக்குகிறது. சப்போட்டா பழத்துடன் உரு டீஸ்பூன் சீரகம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.

முடி கொட்டுவது கட்டுப்படும்
  1. கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? கவலைவேண்டாம். உங்களுக்கு கைகொடுக்கிறது ‘சப்போட்டா கொட்டை தைலம்’. ஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். பின்னர் ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்த தைலத்தை சிறிதளவு பஞ்சில் நனைத்து படிப்படியாக தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும். சீயக்காய், கடலைமாவு தேய்த்து குளிக்க ஒரு மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்.
  2. நாம் சாப்பிடும் நூறு கிராம் சப்போட்டாப் பழத்தில் கீழ்க்கண்ட அளவு சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மி.கி, இரும்புச் சத்து 2.0 மி.கி, தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரைபோஃபிளோவின் 0.03 மி.கி, நியாசின் 0.02 மி.கி, வைட்டமின் சி 6.1 மி.கி.சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை.
  3. இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.
  4. சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது.தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.
  5. ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும்.மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து.பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு.
  6. சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து.சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

வயிற்றுப்புண்ணை விரட்டும் சீதாப்பழம்! பழங்களின் பயன்கள்!!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ஏனோ இந்தப் பழமொழி, பெரும்பாலும் பழங்களுக்குப் பொருந்தாது போலும். அதனால்தான், பலாப்பழம், சீதாப்பழம் இரண்டையும் சாப்பிடுவதை மக்கள் தவிர்க்கின்றனர்.  ''அனைவரும் வெறுத்து ஒதுக்கும் சீதாப்பழத்தில், அபார சுவையும் அருமையான சத்தும் இருக்கிறது'' என்கிறார் திண்டுக்கல் சித்த மருத்துவர் ஆர்.எம்.அழகர்சாமி.   
'' 'அனோனோ டுமாஸ்ஸா’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், நார்ச் சத்து போன்ற சத்துக்கள் அதிகம். குளுக்கோஸ், சுக்ரோஸின் அளவும் இதில் அதிகமாக இருப்பதால் சுவையும் இனிப்பாக இருக்கும்.  
ரத்த விருத்திக்கும், ரத்தசோகைக்கும் இது நல்லதொரு மருந்தாகும்.  இதயநோய் வராமல் தடுக்க உதவும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் துணைபுரியும். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கும் முடி வளர்ச்சியைத் தூண்டுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.  
சளித் தொல்லையைப் போக்கும். சிறுவர்களுக்கு ஏற்படும் பல்வலியைக்   குணப்படுத்தும். பற்களை வலுப்படுத்தும். சோர்வுடன் இருக்கும் குழந்தைகளுக்கு, சீதாப்பழத்தை தினமும் கொடுக்கலாம். நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.  
இதில் உள்ள தாமிரச் சத்து, குடலுக்கு மிகவும் நல்லது. காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு பழம் சாப்பிட்டுவர, அமிலத்தன்மையைச் சரிசெய்யும். வயிற்றில் புண்கள் வராமலும் தடுக்கும். மூட்டுகளில் உண்டாகும் அமிலங்களை வெளியேற்றுவதால், வாதநோய், மூட்டுவலி, கீல்வாதநோய்களைப் போக்கும்.
சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும்.  சருமத்தை அழகாக்கும். தோலுக்கும் முகத்துக்கும் பளபளப்பைக் கொடுக்கும்.  
இதில் உள்ள மெக்னீசியம், உடலில் நீர்ச் சத்தை தக்கவைக்கும்.  
பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்புச்செயல்களில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம்.  
சீதாப்பழத்தைச் சாப்பிட்ட பிறகு தோல், விதைகளைத் தூக்கி எறியாதீர்கள்.  விதையை அரைத்து, பாசிப்பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்துவந்தால், பேன், பொடுகு நீங்கும். கூந்தல் மிருதுவாகும்.  
பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு நிவாரணி. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். இந்த மரத்தின் பட்டைகள், நீரிழிவு நோய்க்கும் இதன் இலைகள் நோய்த்தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
சீதாப்பழம் உடலுக்குக்  குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் வெப்பநிலை சற்று உயர்ந்தவுடன் சாப்பிடலாம்.  
எல்லா வயதினரும் உண்ணக்கூடியது. குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது'' என்கிறார்.
உ.சிவராமன்,
படங்கள்: வீ.சிவக்குமார்
 சீதாமணப்பாகு செய்வது எப்படி?
வெல்லம் அல்லது கருப்பட்டியைப் பதமாகக் காய்ச்சி, சீதாப்பழத்தின் விதைகளை நீக்கி, சதைப்பகுதியை காய்ச்சிய கருப்பட்டியில் போட்டு, நீர் அளவு வற்றும் வரை மீண்டும் காய்ச்சவேண்டும். பிறகு ஆறவைத்து பாட்டிலில் அடைக்கலாம்.
ஆறு மாதங்கள் வரை இந்த சிரப்பை மிதமான வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், நாள்பட்ட சளி, இருமல் தொடர்பான பிரச்னைகள் தீரும்.

சோர்வைப் போக்கும் சுண்டைக்காய்! வைத்திய அம்மணியும் சொல்வடை வாசம்பாவும்

''தீபாவளி முடிஞ்சு ரெண்டு   வாரம் ஆயிடுச்சு. இன்னும் வீடே நெய்ல மணக்குதே...' என உள்ளே நுழைந்தாள் வாசம்பா.
 ''இருக்காதா பின்னே... நீ வர்றப்ப குடுக்கலாம்னு வெச்சிருந்தேன். இந்தா சாப்பிட்டுப் பாரு...' பலகாரத் தட்டை வாசம்பாவிடம் நீட்டினாள் அம்மணி.
'முறுக்கு, காரச்சேவு, மணப்பாகு, மனோகரம்னு... தூள் கிளப்பிட்ட போ. ஓமப்பொடில ஓமத்தோட வாசனை மூக்கைத் துளைக்குது. மிக்சர் லேசாக் கசந்தாலும், அருமையா இருக்கே... அப்படி என்ன சேர்த்த?''
''மிக்சர்ல பூந்தி, ஓமப்பொடி, பொரி, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை... கூடவே சுண்டைக்காயை நெய்ல வறுத்துப் பொடிச்சு சேர்த்திருக்கேன். வயித்துக்கு ரொம்ப நல்லது. இன்னிக்கு எந்தப் பண்டிகைன்னாலும், உடனே கடையில பலகாரங்களை வாங்கிடறாங்க. எண்ணெய், பருப்புனு எல்லாமே கலப்படமா இருக்கிறதால, அது வயித்துக்குச் சேராமப் போயிருது. அதான், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, துளசி, பிரண்டை, ஓமம், சுண்டைக்காய்னு முடிஞ்சவரைக்கும் மருத்துவப் பொருட்களை எல்லாம் சேர்த்து, பக்குவமாப் பலகாரம் செஞ்சேன்.''
'' 'வைத்தியன் கொடுத்தா மருந்து,  இல்லேன்னா அது வெறும் மண்ணு’. ஸ்வீட்டை சத்தானதா மாத்தற வித்தை  தெரிஞ்ச நீ சரியான மருத்துவச்சி. சரி சுண்டைக்காயைப் பத்திக் கொஞ்சம் சொல்லேன்.''
''மலைக்காடுகள்ல தானா வளர்றது, 'மலைச்சுண்டைக்காய்’. இதுலதான் வத்தல் செய்வோம். வீட்டுக் கொல்லைப்புறத்துல வளர்றது, நாட்டுச் சுண்டைக்காய். தெனமும் சமையல்ல இதைச் சேர்த்துக்கலாம். உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுத்து, எப்பவும் ஆரோக்கியமா வைக்கிற குணம் சுண்டைக்காய்க்கு உண்டு.
எண்ணெயில் உளுத்தம்பருப்பு, வரமிளகாய் சேர்த்து வறுத்து,  பச்சைச் சுண்டைக்காயைப் போட்டு புளி, உப்பு சேர்த்து தொக்கு செய்யலாம். பயத்தம்பருப்புக் கூட்டும் செஞ்சு சாப்பிடலாம். சோர்வைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தமாக்கும்.''
''வயித்துக்கு ரொம்பவே நல்லதோ...?''
''ஆமாம் வாசம்பா. வயித்துல கிருமி  இருந்தா, வாரம் மூணு நாள் சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தா கிருமி, மூலக் கிருமி எல்லாமே சரியாயிரும். மலச்சிக்கல், அஜீரணம், குடல்புண்கூட சரியாயிரும். வயித்தோட உட்புறச் சுவர் பலமாகிறதுக்கு சுண்டைக்காய்தான் நல்ல மருந்து.
முத்தின சுண்டைக்காயை நசுக்கி மோர்ல ஊறவெச்சு, வெயில்ல காயவெச்சு, திரும்பவும் அதே மோர்ல போட்டு, காயவைக்கணும். சுண்டைக்காய் காய்ஞ்சதும் எடுத்துப் பத்திரப்படுத்திக்கணும். தெனமும் எண்ணெயில் சுண்டைக்காயை வறுத்து, சூடான சாதத்துல கொஞ்சம் நெய் சேர்த்துச் சாப்பிடும்போது தொட்டுக்கலாம். குழம்பும் செய்யலாம். மார்புல சளி கட்டாது. குடல் கசடுகளை எல்லாம் நீக்கிடும். சர்க்கரை நோயாளிங்களுக்கு வர்ற கை கால் நடுக்கம், சோர்வு, மயக்கம், வயித்துப் பொருமல் எல்லாமே சரியா போயிரும்.''
''சுண்டை வத்தல் செய்ய ஆசைதான். மழைக்காலத்துல எங்க காயவைக்கிறது?''
''நாட்டு மருந்துக்கடையில உப்பு சேர்த்து, சேர்க்காம சுண்டை வத்தல் விக்குது. அதை வாங்கிக்கவேண்டியதுதான் வாசம்பா. மூச்சுவிட முடியாமக் கஷ்டப்படுறவங்களுக்கு அடிக்கடி சுண்டைக்காயை உணவுல சேர்த்துக்கலாம். சுண்டைக்காயை சூரணம் மாதிரி செஞ்சும் வெச்சுக்கலாம். எப்பல்லாம் வயிறு பிரச்னை பண்ணுதோ, அப்பல்லாம் இந்தச் சூரணத்தை, சுண்டைக்காய் அளவு எடுத்து நீர்ல கரைச்சுக் குடிக்கலாம். சுண்டைக்காயோட மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செஞ்சு சின்னப் பிள்ளைங்களுக்குக் கொடுத்திட்டு வந்தா, அடிக்கடி வர்ற ஆசனவாய் எரிச்சல், அரிப்பைக்கூட சரியாக்கிரும். ஆனா, சிலருக்கு சுண்டைக்காயும் ஒத்துக்காமப் போகலாம். அவங்க உடல்வாகுக்கு ஏத்த மாதிரி அளவோடதான் சாப்பிடணும்.''
' 'மிகினும் குறையினும் நோய் செய்யும்’னு திருக்குறளே சொல்லி இருக்கு. எதையுமே அளவோடு சாப்பிட்டா ஆபத்தே இல்லை.''
''கபக்கட்டு, இருமல், தொண்டைக்கட்டு, தலைசுத்தல், வாந்தி, மயக்கம் இருந்தா, பச்சைச் சுண்டைக்காயை ரெண்டா நறுக்கி, அதோட சின்னவெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து நல்லா கொதிக்கவெச்சு இறக்கி, சூப் செஞ்சு குடிக்கலாம். சிறுநீரைப் பெருக்கும். வாய் கசப்புக்குக்கூட நல்லது!''
''கசக்குற சுண்டைக்காய் வாய் கசப்பையே போக்குதே... ஆச்சர்யம்தான் அம்மணி.'
'மழை பெய்ய ஆரம்பிச்சிடுச்சு... சூடா இஞ்சி டீ போட்டுத் தாரேன்...'' அடுக்களைக்குள் அம்மணி நுழைய, அட... ஆமாங்க... அடுத்து இஞ்சிதான்!

நோ டென்ஷன்! இனி இல்லை மன அழுத்தம்!


'இந்த விஷயத்தை எப்படிச் சமாளிக்கப்போறேன்னு தெரியலையே?’ என்கிற நினைப்புதான் மன அழுத்தத்தின் ஆரம்பம். ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து மீள்வதற்குள், அடுத்தடுத்த பிரச்னைகள் வந்து சுமையாக இறங்கும்போது, 'ஸ்ட்ரெஸ்’ என்கிற மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இப்படி, தொடர்ந்து மன அழுத்தம் நேரும்போது, உடல் சார்ந்த பல்வேறு நோய்கள் நம்மை வாட்டி எடுக்கத் தொடங்கிவிடும்.  
 வேலைக்காக... குடும்பத்தையோ, குடும்பத்துக்காக... வேலையையோ விட்டுக்கொடுக்கவும் முடியாமல், பிரச்னைகளை எதிர்கொள்ளவும் தெரியாமல் மனதைக் குழப்பிக்கொள்பவர்களே இன்று அதிகம். இந்த ரீதியில் பார்த்தால், மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகளிடம்கூட மன அழுத்தம் புகுந்துவிட்டது என்பதுதான் வேதனை.  
மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருக்கத் தெரிந்துகொண்டால், ஆரோக்கியமாக வாழ முடியும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நுட்பம் இயற்கையாகவே வந்துவிடாது. அவற்றை நாம் கற்று நம் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப அமைத்துக்கொண்டால் மன அழுத்தத்தை வெல்லலாம்.
'வா‌ய்‌ ‌வி‌ட்டுச் ‌சி‌ரி‌த்தா‌ல், நோ‌ய் ‌வி‌ட்டு‌ப் போகும்’ எ‌ன்ற பழமொ‌ழி, மன அழு‌த்த‌த்‌துக்கு மிகச் சரியாகப் பொரு‌ந்து‌ம். மன அழுத்தம் என்றால் என்ன? அது ஏற்படுத்தும் பாதிப்புகள்,  அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றி மனநல மருத்துவர்கள் பி.ஆர்.ராஜேஷ் குமார், ஆவுடையப்பன், பொது மருத்துவர் நாகராஜன் ஆகியோர் இங்கே  பகிர்ந்துகொள்கின்றனர்.  
  இனி, எல்லாம் சுகமே! வாழ்த்துக்கள்!
மன அழுத்தம்:
தாவது ஒரு காரணம், உங்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையோ உங்களின்  திறமைக்கு ஒரு சவாலையோ ஏற்படுத்தும்போது, உணரப்படும் விரும்பத்தகாத உணர்வை, 'மன அழுத்தம்’ (ஸ்ட்ரெஸ்) என்று கூறலாம். இது கோபம், பயம், இயலாமை, கவலை, வெறுப்பு, அமைதியின்மை, கவனமின்மை என எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.
ஆபத்து ஏற்படும்போது நம் உடம்பு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் முயற்சியாகவும் மன அழுத்தம் இருக்கிறது.
நமக்கு ஆபத்து நேரப்போகிறது என்று நாம் உணரும்போது (அது உண்மையாகவோ அல்லது நம்முடைய கற்பனையாகவோ இருக்கலாம்) அதை எதிர்கொள்ள, நம் உடலே சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
அந்தப் பிரச்னையை எதிர்த்துப் போராடுவதற்கும் தப்பிப்பதற்கும் நம்மைத் தயார்படுத்தும்.
மன அழுத்தம் ஏற்படும்போது நம் நரம்பு மண்டலம், அட்ரினல் மற்றும் கார்டிசோல்  ஹார்மோன்களை அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. ரத்தத்தில் கலக்கும் இந்த ஹார்மோன்கள், உடல் முழுவதும் பாய்ந்து அவசரநிலையை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்துகிறது. இதனால், இதயம் வேகமாகத் துடிக்கும். தசைகள் கடினம் அடையும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சுவாசம் வேகமாகும். நம் அனைத்துப் புலன்களும் பிரச்னையைக் கூர்ந்து கவனிக்கும். இந்த உடல்ரீதியான மாற்றம், நம்முடைய பலத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும். எதிர்வினை புரியும் நேரத்தை விரைவுபடுத்தும். பிரச்னையை நாம் எதிர்க்கவும்  தப்பிக்கவும்  இவை உதவுகின்றன.
இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை உடலின் சமநிலையைப் பாதிக்கும்போது, அதுவே அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது. மன அழுத்தத்தின்போது இதயம் வேகமாகச் செயல்படத் தூண்டப்படுகிறது. இந்தக் கூடுதல் சுமை, இதயத்தில் பிரச்னையை ஏற்படுத்திவிடுகிறது.
மன அழுத்தத்தின் காரணங்கள்:
சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள், ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.
மன அழுத்தம்- மன விரக்தி, மாற்றம், முரண்பாடுகள், நிர்பந்தம் ஆகியவற்றால் ஏற்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மனவிரக்தி:
ர் இலக்கை அடைய, பலமுறை முயன்றும் அது தோல்வியில் முடியும்போது, 'மனவிரக்தி’ ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் நாம் யதார்த்தம் இல்லாத இலக்குகளையும், எதிர்பார்ப்புகளையும், ஒப்பீடுகளையும் மனதில் வைத்து விரக்தியடைகிறோம். உதாரணத்துக்கு, சுமாராகப் படிக்கக்கூடிய ஒரு மாணவனை, அவனது பெற்றோர், அதிகப் பணம் செலவழித்து பிரபலமான ஒரு பள்ளியில் சேர்க்கின்றனர். மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் அவன் முதலாவதாக வருவான் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தால், விரக்திதான் மிஞ்சும். அதேபோல சிலர், ஒரே நாளில் பல வேலைகளைச் சேர்த்து வைத்துக்கொள்வார்கள். வரிசையாக, பல பணிகளைச் செய்ய கால நிர்ணயம் செய்வார்கள். ஆனால், பணிகளைக் குறித்த நேரத்தில் செயல்படுத்தமுடியாமல் விரக்தி அடைவார்கள்.
மாற்றம்:
மைதியான நதியில் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் படகைப்போன்றது நம் வாழ்க்கை. இதில், திடீரென ஏற்படும் மாற்றங்கள் நம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றன. சில சமயங்களில் இந்த மாற்றங்கள், நம் பொறுமைக்கும், சிக்கலைச் சமாளிக்கும் திறமைக்கும் சவாலாக இருக்கும். இந்தத் திடீர் மாற்றம்- திருமணம், பதவி உயர்வு, மகப்பேறு, பண வரவு போன்ற சந்தோஷமான நிகழ்வாகவோ... குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணம், விபத்து, தொழில் நஷ்டம், வேலை இழப்பு போன்ற துயரமான நிகழ்வாகவோ இருக்கலாம்.
முரண்பாடுகள்:
ன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் முரண்பாடுகள் கணக்கில் அடங்காதவை. காலையில் எழுந்தது முதல், இரவு உறங்கச் செல்வது வரை முரண்பாடுகளுடனேயே போராட வேண்டியுள்ளது. இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட ஆசைகள், விருப்பங்கள் ஒரே நேரத்தில் வெளிப்படும்போது, அங்கு முரண்பாடு ஏற்படும். உதாரணத்துக்கு, காலையில் எழுந்திருக்க வேண்டிய கட்டாயமும் கண்ணைக் கட்டும் ஆனந்தத் தூக்கமும் ஒன்றுடன் ஒன்று போட்டிபோடும்போது எதைச் செய்வது என முடிவெடுக்க முடியாமல் முரண்பாட்டுக்கு ஆளாகிறோம்.
நிர்பந்தம்:
 ன அழுத்தத்துக்கான அடுத்த காரணம், நிர்பந்தம். உலகில் எல்லோரும் ஏதாவது ஒரு நிர்பந்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது.  நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சில காரியங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயம் நேரும். நமக்குத் தேவையே இல்லாமல் சமூக அந்தஸ்துக்காக ஆடம்பர வீடு கட்டுகிறோம், கார் வைத்துக்கொள்கிறோம். இதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையால், மன உளைச்சலுக்கு ஆளாவோம். இதேபோல சமூக அந்தஸ்து, பதவி இவற்றால் நம்மால் சுதந்திரமாகவும், மனதுக்குப் பிடித்தவாறு வாழவும் பலரால் முடிவது இல்லை. 
மன அழுத்தம் ஏற்படுத்தும் உடல்ரீதியான பாதிப்புகள்:
''மன அழுத்தம் ஏற்படும்போது அது உங்கள் நரம்பு மண்டலம், மூளை, இதயம், ரத்த ஓட்டம், சிறுநீரகம், இனப்பெருக்க மண்டலம் என பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கிறது.''
சுவாச மண்டலம்
ன அழுத்தம் அதிகரிக்கும்போது மூச்சை அதிக அளவில் உள் இழுத்து வெளியேவிடச் செய்யும். இது சிலருக்கு படபடப்பு, மாரடைப்பை ஏற்படுத்தலாம்.
இதயச் செயல்பாடு
திடீரென ஏற்படும் மன அழுத்தமானது இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதிக அளவில் ரத்தம் பம்ப் செய்யப்படும்போது ரத்தக் குழாய்கள், இதய தசைகள் அதிக அளவில் வேலை செய்கின்றன. தொடர்ந்து இப்படி நடக்கும்போது, ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படும், மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
செரிமான மண்டலம்
ன அழுத்தம் அதிகரிக்கும்போது, அதிக அளவிலோ குறைவாகவோ சாப்பிடத் தோன்றும். மேலும், மது, புகைப்பழக்கம் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் வாந்தி, வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம். இரைப்பையின் செரிமானம்  பாதிக்கப்படும். இதனால் ஊட்டச்சத்து தரும் பலனும் பாதிக்கப்படும்.
இனப்பெருக்க மண்டலம்
ன அழுத்தத்தின்போது அதிக அளவில் சுரக்கப்படும் கார்டிசோல் மற்றும் அட்ரினல் ஹார்மோன்கள் இனப்பெருக்க மண்டலத்தின் வழக்கமான பணிகளைப் பாதிக்கின்றன. நீண்ட நாள் மன அழுத்தத்துக்கு ஆளானவர்களுக்கு டெஸ்டோடிரான் ஹார்மோன் மற்றும் விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆண்மைக் குறைபாடு ஏற்படலாம். பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டி, சரியான கால இடைவெளியில் மாதவிலக்கு வராமை போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.  உடல் உறவு மீதான ஈடுபாட்டையும் மன அழுத்தம் குறைக்கும். இதனால் கணவன் - மனைவி இடையே தேவையில்லாத சண்டை சச்சரவுகள் தோன்றும்.
இனி இல்லை மன அழுத்தம்:
உளவியல்ரீதியான முரண்பாடுகளில் மூன்று வகை உள்ளன
1பிடித்த இரண்டு விஷயங்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பது. மாணவன் ஒருவருக்கு மருத்துவம், பொறியியல் என இரண்டும் கிடைக்கும்போது, எதைத் தேர்வுசெய்வது என்பதில் முரண்பாடு இருக்கும். இரண்டுமே பிடித்திருக்கிறது. ஆனால், ஏதாவது ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றபோது மன அழுத்தம் வரும்.
2பிடிக்காத இரண்டு விஷயங்களில் கண்டிப்பாக ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது முரண்பாடு உருவாகும். உதாரணத்துக்கு, ஒருவருக்கு வயிற்றுவலி வந்து, 'அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்’ என்று டாக்டர் கூறும்போது முரண்பாடு தோன்றும். ஏனெனில், அவருக்கு வயிற்றுவலியையும் சகித்துக்கொள்ள முடியாது; அதற்குச் செய்யப்பட உள்ள அறுவைசிகிச்சையையும் ஏற்க மனம் வராது. ஆனால், இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மன அழுத்தம் வரும்.
3ஒரு விஷயத்தில் சாதக பாதக அம்சங்கள் இரண்டுமே இருக்கும்போது அதைச் செய்வதில் முரண்பாடு ஏற்படும். உதாரணத்துக்கு, தனது ஒரே மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக, தொலைதூரத்தில் உள்ள ஒரு சிறந்த கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைக்கலாம் என்று எண்ணுகிற நேரத்தில், மகனைப் பிரிய வேண்டுமே என்ற வருத்தம் வாட்டி எடுக்கும். மகனின் எதிர்காலமா அல்லது மகனின் பிரிவா என்பதில் முடிவெடுக்க முடியாமல் முரண்பாடு ஏற்படும்.
இந்த மூன்று வகைகளும் மன அழுத்தத்துக்கு வழிவகுப்பவை.
மனஅழுத்தம்கெட்டதா?
பொதுவாக மன அழுத்தம் உள்ளவர் என்றால் எப்போதும் எதிர்மறையான சிந்தனை கொண்டவர், எந்த ஒரு வேலையை முடிக்கவும் நீண்ட நேரம் எடுத்துக்கொள்பவர், சிடுமூஞ்சி என்பதுபோன்ற எண்ணம் இருக்கும். அதனால் மன அழுத்தம் என்றாலே தவறானது என்ற கருத்து உள்ளது. இதுவே தவறு. சிலருக்கு மேல்படிப்பு படிக்க வேண்டும், பதவி உயர்வு பெற வேண்டும், திருமணம் நிகழ்ச்சி, சொந்த வீடு வாங்க விரும்புவது போன்ற நல்ல நோக்கத்துக்காகவும் மன அழுத்தம் ஏற்படலாம்.
மன அழுத்தத்தின் வகைகள்:
ற்காலிகமானது, நீண்ட காலம் இருப்பது என மன அழுத்தத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.
வேலைக்கு நேர்முகத் தேர்வு செல்லும்போது, பரீட்சை எழுதச் செல்லும்போது என எப்போது வேண்டுமானாலும் மன அழுத்தம் ஏற்படலாம். இவை எல்லாம் தற்காலிகமானவை. இதனால் பெரிய அளவில் பிரச்னை இருக்காது.
நீண்ட காலம் மன அழுத்தம் இருப்பதை, தனிப்பட்ட பிரச்னை, சமூகம் அல்லது சுற்றுப்புறச்சூழல் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
தனிப்பட்ட பிரச்னை:
தய நோய், சர்க்கரை நோய் போன்ற உடல் நலப் பிரச்னைகள்.
அவமரியாதை, செய்த தவறை நினைத்து வருந்துவது போன்ற உணர்வுபூர்வமான பிரச்னை, நண்பர்கள் இல்லாதது, பிரச்னை என்று வரும்போது உதவுவதற்கு யாரும் இல்லாதது, உறவு ரீதியான பிரச்னை, பெற்றோர், வாழ்க்கைத்துணை, பிள்ளைகள், நண்பர்களின் திடீர் மரணம், வாழ்க்கைமுறை மாற்றங்கள், பிள்ளைகள் தங்கள் பேச்சைக் கேட்காததால், பெற்றோருக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் போன்றவை. இவை நீண்ட காலம் இருக்கக்கூடியவை.
சமூகப் பிரச்னை:
பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் பார்க்கும் வேலைதான், மன அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. தவிர அரசியல், மதம், சாதி போன்ற தனிப்பட்ட வாழ்க்கை முறை தொடர்பான நம்பிக்கைகள், வாக்குவாதங்கள் போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள்:
ம் எண்ணத்தில் ஏற்படும் மாற்றங்கள், உணர்வில் ஏற்படும் மாற்றங்கள், உடல் ரீதியான மாற்றங்கள், நடத்தை மாற்றங்கள் என மன அழுத்தத்தின் அறிகுறிகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.  
1. எண்ணத்தில் ஏற்படும் மாற்றங்கள்
நினைவாற்றல் பிரச்னை, கவனச் சிதறல், தவறாக மதிப்பிடுதல், எதையும் எதிர்மறையாகப் பார்ப்பது, கவலை.
2.  உணர்வில் ஏற்படும் மாற்றங்கள்
சோகமான மனநிலை, எரிச்சல், முன்கோபம், எதிர்ப்பு, அமைதியாக முடியாத நிலை, தனித்திருக்கும் உணர்வு, மகிழ்ச்சியற்ற மனநிலை.
3. உடல் ரீதியான மாற்றங்கள்
லி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், நெஞ்சு வலி, அதிவேக இதயத்துடிப்பு, பாலியல் உணர்வு இன்மை.
4. நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள்
திகம் சாப்பிடுதல், சாப்பிட விருப்பமின்மை,  தூக்கம் அல்லது தூக்கமின்மை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டு இருத்தல், பொறுப்புகளைத் தட்டிக்கழித்தல், மது, சிகரெட்  போதைப்பொருட்கள் பயன்படுத்துதல், எப்போதும் 'உதறல்’ மனப்பான்மை.
மன அழுத்தம் ஏற்படும்போது என்ன நடக்கிறது?
த்த அழுத்தம் அதிகரித்து, மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும். செரிமான மண்டலத்தின் பணிகள் குறையும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகள் குறையும். தசைகளில் அழுத்தம் ஏற்படும். தூக்கம் தடைபடும்.
மன அழுத்தம் ஏற்படும்போது செய்யும் தவறான விஜயங்கள்:
ன அழுத்தத்தை எதிர்கொள்கிறேன் பேர்வழி என்று நாம் செய்யும் காரியங்கள் உடல் நலத்துக்கே வேட்டு வைத்துவிடும்.  மன அழுத்தத்தைச் சமாளிக்க பலர் செய்யும் காரியங்கள், எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடக் கூடியவை.
பொதுவாக மன அழுத்தம் ஏற்படும்போது எல்லோரும் செய்யக்கூடியவை:
சிகரெட் புகைப்பது, அதிக அளவில் மது அருந்துவது, அதிக அளவில் சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது
நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் உடனான உறவைத் துண்டிப்பது, தூக்கம் வேண்டி மருந்து மாத்திரை, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது,
அதிக அளவில் தூங்குவது, மற்றவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவது,  வன்முறைச் செயல்களில் இறங்குவது.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள் 1
தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்ப்போம்
ல்லா மன அழுத்தங்களையும் தவிர்க்க முடியாது. அதேபோல எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் இருப்பதும் நல்லது அல்ல. இருப்பினும் மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய சில விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
'நோ’ சொல்லிப் பழகுங்கள்
ற்றவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக, அனைத்தையும் செய்யவேண்டியது இல்லை. உங்களின் திறன், வரையறை எவ்வளவு என்பதை முதலில் தெரிந்துகொண்டு அதில் உறுதியாக இருங்கள். பொதுவாழ்வோ, தனிப்பட்ட வாழ்வோ எதுவாக இருந்தாலும் உங்களால் முடியாத விஷயங்களில் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம். இதனால், குறிப்பிட்ட காலத்தில், வாக்களித்த விஷயத்தைச் செய்ய முடியாமல் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியும். கூடுதல் பொறுப்பு சுமத்தப்படும்போது, உங்கள் திறன் மற்றும் எல்லையை உணர்ந்து நாசூக்காக அதைத் தவிர்த்துவிடுங்கள்.
உங்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கும் நபர்களைத் தவிர்த்திடுங்கள்.
தொடர்ந்து குறிப்பிட்ட நபரால், உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்றால், முடிந்தவரை அவரைத் தவிர்த்துவிடுங்கள். அவர் உங்கள் குடும்பத்தில் ஒருவர், உயர் அதிகாரி எனவே அவர்களைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில், அவர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
சுற்றுப்புறச்சூழலை உங்கள் வசப்படுத்துங்கள்.
போக்குவரத்து நெரிசல் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தினால், அலுவலகத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகச் சென்றுவிடுங்கள். அல்லது போக்குவரத்து நெரிசல் குறைந்த சாலையைப் பயன்படுத்துங்கள். இரவு செய்தி கேட்கும்போது பதற்றம் ஏற்படுகிறது என்றால், டி.வி.யை அணைத்துவிடுங்கள். இதுபோன்று சுற்றுப்புறச்சூழ்நிலையை நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும்போது, மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.
செய்யக்கூடியது, செய்யக் கூடாதவை பற்றிய அட்டவணை தயார்செய்யுங்கள்
ங்களின் தினசரி வாழ்க்கையின் நடவடிக்கைகள், பொறுப்புகள், செய்யவேண்டிய வேலைகள் பற்றிய அட்டவணையை முன்கூட்டியே தயார் செய்துகொள்ளுங்கள். இதில் அதிகப்படியான நடவடிக்கைகள் இருந்தால் அதில், 'எது மிகவும் அவசியமானது’, 'எது செய்யவில்லை என்றாலும் பிரச்னை இல்லை’ என்பதைக் கண்டறியுங்கள். தேவையற்றது என்று நீங்கள் நினைப்பவற்றுக்கு அட்டவணையில் கடைசி இடம் கொடுங்கள், அல்லது அவற்றை நீக்கிவிடுங்கள்.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள் 2
உங்கள் நிலைமையை மாற்றுங்கள்
ன அழுத்தம் ஏற்படும்போது நிகழ்பவற்றைத் தவிர்க்க முடியாது, ஆனால் அவற்றை மாற்றியமைக்க முயற்சிக்கலாம். மன அழுத்த நேரங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பட்டியலிட்டு, அவற்றை எப்படி மாற்றியமைக்கலாம் என்பதைப்பற்றிப் பார்க்கலாம்.
மன அழுத்தத்தை அடக்கிவைக்காமல், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
ங்கள் மீது அக்கறைகொண்டவர்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் பற்றி வெளிப்படையாகவும் அதேநேரத்தில் மரியாதையான முறையிலும் வெளிப்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை வெளியில் கொட்டாவிடில், மனதை அது அழுத்திக்கொண்டே இருக்கும். இதனால், எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது நிம்மதி பிறக்கும்.
சமரசத்துக்குத் தயாராக இருங்கள்
ருவரிடம், 'உங்கள் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று கூறுகிறோம் என்றால், அதேபோல நம்மை மாற்றிக்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும். இருவரும் சிறிதளவாவது வளைந்துகொடுத்துச்செல்லத் தயாராக இருந்தீர்கள் என்றால், மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியான மனநிலையைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
உறுதியாக இருங்கள்
பிரச்னையை தைரியமாக எதிர்கொண்டு, அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் காணுங்கள். தேர்வுக்குத் தயாராகிவருகிறோம்... அந்த நேரத்தில் முக்கிய உறவினர், நெருங்கிய நண்பர் வருகிறார் என்றால், அவர்களிடம், ''ஐந்து நிமிடங்கள்தான் என்னால் பேச முடியும்'' என்று தைரியமாகச் சொல்லுங்கள்.
சிறப்பான நேர மேலாண்மை
மிக மோசமான நேர மேலாண்மைதான் அதிக அளவிலான மன அழுத்தத்துக்குக் காரணமாகிறது. குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை அந்த நேரத்தைத் தாண்டியும் செய்ய முடியவில்லை என்றால், மன அழுத்தம் அதிகரிக்கத்தான் செய்யும். எனவே, முன்கூட்டியே திட்டமிட்டு வேலை செய்யுங்கள். வேலையை இழுத்தடிக்காதீர்கள். இதனால் மன அழுத்தம் உங்கள் கட்டுக்குள்ளேயே இருக்கும்.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள் 3
 மன அழுத்தத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஏற்றபடி மாறிவிடுங்கள்.
ங்களால் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய விஷங்களை மாற்றியமைக்க முடியவில்லை என்றால், அதற்கு ஏற்றபடி உங்களை மாற்றிக்கொள்வதும் அதையே நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதும் ஒரு வழிதான்.
பிரச்னைகளை மாற்றியமையுங்கள்.
ன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை நேர்மறையான கண்ணோட்டத்துக்கு மாற்றிவிடுங்கள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூழல், ஒலிபெருக்கிச் சத்தம் இவற்றை நினைத்து எரிச்சல்படாமல், அந்த நேரத்தில் மனதுக்குப் பிடித்த பாடல் கேட்பது, போன்று சூழ்நிலையை  மாற்றிக்கொள்ளுங்கள்.
எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்.
நீண்ட காலக் கண்ணோட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மன அழுத்தம் எந்த அளவுக்கு முக்கியமானது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இந்தப் பிரச்னை ஒரு மாதத்தில் சரியாகக்கூடியதா? ஒரு வருடத்தில் சரியாகக் கூடியதா? இதுபற்றிக் கவலைப்படுவது உண்மையில் நியாயமானதுதானா என்று உங்களை நீங்களே கேளுங்கள். பதில் இல்லை என்று வருமேயானால், உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை வேறு நல்ல விஷயத்துக்குச் செலவிடுங்கள்.
தர நிர்ணயத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. இது தவிர்க்கக்கூடிய மன அழுத்தமாகும். உங்களுக்கோ, மற்றவர்களுக்கோ ஏதேனும் ஓர் அளவுகோலை நிர்ணயித்துவிட்டு, அதை அப்படியே எதிர்பார்க்காதீர்கள். ஓரளவுக்கு நியாயமான தர அளவுகளை நிர்ணயுங்கள். 'இதுவே போதுமானது’ என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள்  4
உங்களால் மாற்ற முடியாத விஜயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ன அழுத்தத்துக்கான சில காரணிகளைத் தவிர்க்க முடியாது. நமக்கு நெருக்கமானவர்களின் மரணம், மிக மோசமான நோய்கள், நாடு தழுவிய அளவிலான பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றை நம்மால் தடுக்க, தவிர்க்க முடியாது. இந்த மாதிரியான சூழ்நிலைகளில், இந்த விஷயங்களை ஏற்றுக்கொள்வதுதான் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க ஒரே வழி. இது மிகவும் கடினமான விஷயம்தான். ஆனால், நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் நம்மால் மாற்ற முடியாத ஒரு விஷயத்தை நினைத்து வருந்திக்கொண்டிருப்பதைவிட, அதை ஏற்றுக்கொள்வது மிகவும் எளிதானது.
 
கட்டுப்படுத்த முடியாதவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள்
ம் வாழ்வில் பல்வேறு விஷயங்கள் நம் கட்டுப்பாட்டை மீறியது. குறிப்பாக மற்றவர்களின் நடவடிக்கைகள்.
மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
ல்ல நம்பிக்கைக்குரிய நண்பர், மனநல மருத்துவரிடம் சென்று உங்கள் பிரச்னைகள் பற்றி மனம்விட்டுப் பேசுங்கள். இதனால் மன அழுத்தச் சூழ்நிலையை மாற்றியமைக்க முடியாவிட்டாலும், மனதில் உள்ள சுமை குறையும்.
மன்னிக்கப் பழகுங்கள்
குற்றம் குறைகள் நிறைந்த உலகில், தவறுகள் செய்யும் மக்கள் மத்தியில்தான் நாம் வாழ்கிறோம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். தவறு செய்கிறார்கள் என்றாலும் அவர்களை மன்னித்து உங்கள் வழியில் நடைபோடுங்கள். இது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள்  5
கேளிக்கை மற்றும் ஓய்வுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்
ன்னதான் மன அழுத்தம் இருந்தாலும் ஓய்வு மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடும்போது அவை மறைந்துவிடும். அன்றாட வாழ்வில் கேளிக்கை மற்றும் ஓய்வுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குபவர்களுக்கு, வாழ்வில் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்வது மிகவும் எளிதாக இருக்கும்.
செல்லப்பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள்
ன்பை அள்ளித்தந்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவை செல்லப்பிராணிகள். அதனுடன் பழகுவது உங்கள் உடல் மற்றும் மன நலத்துக்கும் ஆரோக்கியம் அளிக்கும். நாய்  பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் ஒரு நிமிடம் நேரத்தைச் செலவிடுவதும்கூட செரடோனின், ப்ரோலாக்டின் மற்றும் ஆக்சிடோசின் போன்ற நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச்செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஹார்மோன்கள் மன அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன்களைத் தாக்கி அவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது. மனப்பதற்றம் குறைகிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்பாடு மேம்படுகிறது.
உங்களை மகிழ்விக்கும் விஜயங்களுக்குச் சிறிது நேரத்தைச் செலவிடுங்கள்
மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, இசைக்கருவியை வாசிப்பது போன்ற உங்களுக்கு அமைதி மற்றும் ஆசுவாசம் அளிக்கும் விஷயங்களுக்கு நேரத்தைச் செலவிடுங்கள். எப்போதும் நகைச்சுவை உணர்வோடு இருங்கள். மனம்விட்டுச் சிரிப்பது பல்வேறு வகைகளில் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள்  6
ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மாறுங்கள்
ன அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் உங்கள் உடல் நலத்தை மேம்படுத்திக்கொள்வது, மனஅழுத்தம் இன்றி வாழ வழிவகுக்கும்.
உடற்பயிற்சி செய்யுங்கள்
ன அழுத்தத்தில் இருந்து காக்கும் முக்கியப் பணியை உடற்பயிற்சி செய்கிறது. எனவே, தினமும் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யுங்கள். நேரமில்லையெனில், வாரத்துக்கு மூன்று முறையாவது செய்யலாம். குழுவாக இணைந்து செய்யக்கூடிய ஏரோபிக்ஸ் நடனம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள். அது மன அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும்.
யோகா, தியானம் பழகுங்கள்:
தினமும் கண்களை மூடி 15 முதல் 30 நிமிடங்களுக்கு மூச்சை ஆழமாக இழுத்துவிட்டபடி தியானம் செய்யுங்கள். அது மனதை அமைதிப்படுத்தும். இதேபோன்று உடலை ஓய்வுபெறச் செய்யும் பல்வேறு யோகப் பயிற்சிகளை, பயிற்சியாளரிடம் முறையாகக் கற்றுக்கொண்டு, மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.
ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுங்கள்
ங்கள் உடலுக்கு எது ஆரோக்கியமானதோ அந்த உணவைத் தேர்ந்தெடுங்கள்.  சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள். இது உங்கள் உடலில் போதுமான அளவு ஆற்றல் இருக்க அவசியம்.
வீட்டு வேலைகளில் ஆர்வம் காட்டுங்கள்
ன அழுத்தம் ஏற்படும் நேரத்தில் வீட்டு வேலைகளைச் செய்யுங்கள். அது தினசரி செய்யும் வேலையாக இருந்தாலும்கூட, அவற்றை வித்தியாசமான முறையில் செய்யுங்கள். மனதை மயக்கும் இசையைக் கேட்டபடி வேலை செய்யுங்கள். இதனால் கலோரிகள் எரிக்கப்படுவதுடன், வேலை முடிவில் மன அழுத்தமும் ஓட்டம் பிடித்திருக்கும்.
பழச்சாறு வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சுப் பழச்சாறு பருகுவது மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. வைட்டமின் சி, மன அழுத்தத்துக்குக் காரணமான கார்டிசோல் ஹார்மோனைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆரஞ்சு, திராட்சை, ஸ்டிராபெர்ரி போன்ற வைட்டமின் சி நிறைவாக உள்ள பழங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கும் பலம் சேர்க்கும்.
மது, சிகரெட் மற்றும் போதைப்பொருட்களைத் தவிர்த்திடுங்கள்
ன அழுத்தம் அதிகரிக்கும்போது பலரும் நாடுவது மது மற்றும் சிகரெட்டைத்தான். இது மன அழுத்தத்தில் இருந்து எளிதில் விடுவிப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் இது தற்காலிகமானது. தவிர வேறு பல பிரச்னைகளுக்கும் அது வழிவகுத்துவிடும். முகமூடி அணிந்துகொண்டால் பிரச்னை மறைந்துவிடாது. எனவே, தெளிவான மனநிலையுடன் பிரச்னையை எதிர்கொள்ளுங்கள். பிரச்னை முற்றிலும் விலகும்.
போதுமான தூக்கம்
ரு நாளைக்குக் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். தினமும் குறித்த நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள். சரியான தூக்கம் இல்லை என்றால் சோர்வு, அசதி ஏற்பட்டு அன்றைய தினம் முழுவதும் எரிச்சலுடனே இருக்கும்.