Saturday, March 29, 2014

மத்ச்யாசனம்



மீன் குளத்தில் உள்ள அழுக்கை எடுப்பது போல் இந்த ஆசனம் நம் உடலில் உள்ள அழுக்கை அகற்றிவிடும். அதனால் இது முன் ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. செய்முறை: பத்மாசனம் போட்டு மல்லாந்து படுக்கவும். கைகளை பின்னால் ஊன்றி முதுகைத்தூக்கி வில் போல வளைத்து தலையை
பின்னால் வளைத்து பிறகு கைகளை எடுத்து கால் கட்டை விரலை பிடிக்க வேண்டும். 5முதல் 15 வினாடி வரை இந்த ஆசனம் செய்யலாம். பலன்கள்: இந்த மத்ச்யாசனம் செய்வதால் நாளமில்லா சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். அதனால் நமக்கு எப்போதும் புத்துணர்ச்சி கிடைக்கும். இருமல், மார் சளி, நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும்

இதமான மனதுக்கு எண்ணெய் குளியல்

தீபாவளிக்கு மட்டுமே நினைவுக்கு வருகிற விஷயமாக மாறி விட்டது எண்ணெய் குளியல். ‘தலை வலி வரும்… ஜலதோஷம் பிடிக்கும்… முகமெல்லாம் எண்ணெய் வழியும்… தலைமுடியை அலசறது கஷ்டம்…” – இப்படி எண்ணெய் குளியலைத் தவிர்க்க இன்றைய தலைமுறையினருக்கு எத்தனையோ காரணங்கள். ”எண்ணெய் குளியலைத் தவிர்க்க எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஏன் தவிர்க்கக்கூடாதுங்கிறதுக்கு ஒரே ஒரு காரணம்தான்… கூந்தலுக்கும் உடலுக்கும் மனதுக்கும் அது தரும் ஆரோக்கியம்” என்கிறார் அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி. எண்ணெய் குளியல் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் பிடிக்காதவர்களுக்கும் கூட, அதைப் பழக்கப்படுத்தவும், பிடிக்கச் செய்யவும் ஆலோசனைகள் சொல்கிறார் அவர்! எண்ணெய் குளியலில் ஏகப்பட்ட வகைகள்
உள்ளன. யாருக்கு, என்ன தேவை என்பதைப் பொறுத்து அந்தக் குளியலும் வேறுபடும். அதன்படி… சளி பிடிக்காமலிருக்கச் செய்யும் குளியல் கால் லிட்டர் நல்லெண்ணெயில் 50 கிராம் ஓமம் போட்டுக் காய்ச்சி, வடிகட்டி வைக்கவும். தலைக்குக் குளிப்பதற்கு முன், இந்த எண்ணெயை வெதுவெதுப்பாக்கி, தலையில் தடவி, மசாஜ் செய்து வெந்நீரில் குளிக்கவும். தலை குளித்தால் உடனே ஜலதோஷம் பிடித்துக் கொள்பவர்களுக்கும், தும்மல் போடுவோருக்கும் இந்த வகையான எண்ணெய் குளியல் ஏற்றது. குளிர்ச்சியைக் கிளப்பாது. தலைமுடியை நன்கு கண்டிஷன் செய்வதோடு, முடியையும் அழகாக வைக்கும். வாசனை தரும் குளியல் சம்பங்கி, மருக்கொழுந்து, தவனம், செண்பகப்பூ, பன்னீர் ரோஜா மற்றும் வெட்டிவேர் ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து, எல்லாம் மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் கொதிக்கக் கூடாது. ஓசை அடங்கியதும், அடுப்பை அணைத்து, ஒரு நாள் அப்படியே ஊற விடவும். மறுநாள் தேவையான எண்ணெயை வடிகட்டி எடுத்து லேசாக சூடாக்கி, தலையில் தடவிக் குளிக்கவும். அடுத்த முறை தலைக்குக் குளிக்கிற வரை கூந்தல் நல்ல நறுமணத்துடன் இருக்கும். கூந்தலில் இருந்து வந்து கொண்டே இருக்கும் மெல்லிய நறுமணமானது உங்களுக்கு புத்துணர்வையும் மன அமைதியையும் கொடுப்பதை உணர்வீர்கள். வறண்ட கூந்தலை மிருதுவாக்கும் குளியல் அரை கப் ஆலிவ் ஆயிலில், உதிர்த்த புதிய பன்னீர் ரோஜா இதழ்கள் ஒரு கப் சேர்த்துக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். இந்தக் குளியலின் மூலம் கூந்தலின் பளபளப்பு கூடும். கருப்பான கூந்தலாக இருந்தால் இன்னும் அடர் கருமையுடனும், பிரவுன் நிற கூந்தலாக இருந்தால் அழகிய பிரவுன் நிறத்துடனும் மாறும். குளிர்ச்சியைக் கொடுக்கும் குளியல் பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் தலா கால் கப் எடுத்து, அதில் 1 டீஸ்பூன் கல் உப்பு போட்டுக் காய்ச்சவும். இந்த எண்ணெயை தலை நிறைய சொதசொதவென தடவவும். இந்தக் குளியலின் மூலம் கண்களும் உடலும் குளிர்ச்சியடையும். ஒற்றைத் தலைவலி வராது. மன அழுத்தமும் படபடப்பும் நீங்கி, மன அமைதி கிடைக்கும். வாரத்தில் 2 நாட்கள் இப்படிக் குளிக்கலாம். இதம் தரும் இயற்கைப் பொடி எண்ணெய் குளியல் எடுக்கும் போது ஷாம்பு உபயோகிக்காமல், இயற்கையான முறையில் தயாரித்த பொடியை உபயோகித்து தலையை அலசுவதே சரியானது. அந்தப் பொடியையும் அவரவர் தேவை மற்றும் கூந்தலின் தன்மைக்கேற்ப தயாரித்து வைத்துக் கொள்ளலாம். கால் கிலோ பூந்திக் கொட்டையை விதை நீக்கி, கால் கிலோ வெந்தயம் சேர்த்து அரைத்து சலித்துக் கொள்ளவும். எண்ணெய் குளியல் எடுக்கும் போது, இந்தப் பொடியில் 2 டீஸ்பூன் எடுத்து சிறிது தயிர் மற்றும் வெந்நீர் கலந்து பேக் மாதிரி தலையில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து அலசலாம். 200 கிராம் சீயக்காய், 100 கிராம் பச்சைப்பயறு, 100 கிராம் கடலைப்பருப்பு, டீ தூள் 100 கிராம் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, சலித்துக் கொள்ளவும். தனித்தனியே அரைத்தும் கலந்து கொள்ளலாம். 3 டீஸ்பூன் பொடியை வெந்நீரில் கரைத்து, தலையில் எண்ணெய் இருக்கும் போதே தடவி, அலசலாம். இதிலுள்ள டீ தூள் முடியை மென்மையாக்கும். மற்ற பொருட்கள் கண்டிஷன் செய்யும். கடலைப்பருப்பு 50 கிராம், பச்சைப்பயறு 50 கிராம், துவரம் பருப்பு 50 கிராம், வெந்தயம் 50 கிராம், வெட்டிவேர் 50 கிராம், பூலாங்கிழங்கு 50 கிராம் – இவை எல்லாவற்றையும் நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும். இதை சின்னக் குழந்தைகளுக்குக் கூட தலைக்கும் உடம்புக்கும் தேய்த்துக் குளிப்பாட்டலாம். தினமுமே குளியலுக்கு உபயோகிக்கலாம். எண்ணெய் குளியல் எடுக்கும் போது… எண்ணெய் குளியல் எடுப்பதால் ஒருவருக்கு ஜலதோஷம் பிடிக்காது. அதை ஒரு முறையான பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தலைவலி இருப்பவர்கள், எண்ணெயில் நிறைய ஓமம் சேர்த்துக் காய்ச்சி உபயோகிக்கலாம். சைனஸ் அல்லது ஜலதோஷப் பிரச்னை இருந் தால், தலைக்குக் குளித்து முடித் ததும், ஈரம் போகத் துடைத்து, அகன்ற பற்கள் கொண்ட சீப்பால், சூடு கிளம்பும் அளவுக்கு நன்கு வாரி விட வேண்டும். எண்ணெய் குளியலே ஆகாது என்பவர்கள், சிறிதளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து, மேலே சொன்ன மூலிகைகளை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிப் போட்டு, அதன் சாரம் இறங்கியதும், அந்தத் தண்ணீரைத் தலை குளிக்க உபயோகிக்கலாம். எண்ணெய் குளியலை முறைப்படுத்திக் கொண்டால் மன அமைதி கிடைக்கும். உடல் குளிர்ச்சியடையும். கண்கள் குளுமை பெறும். பொடுகு நீங்கும். அதன் விளைவாக இள நரை வராமலிருக்கும். முன்னந்தலையில் வழுக்கை விழாது. எண்ணெய் குளியலுக்கு பொடியே சிறந்தது.ஆனாலும், ஷாம்புதான் வேண்டும் என நினைப்பவர்கள், பொடியுடன் சில துளிகள் ஷாம்புவையும் சேர்த்துக் குளிக்கலாம். சிலருக்கு சுருட்டை முடி இருக்கும். முடி சுருண்டு மேலே இழுத்துக் கொள்ளும். அடிக்கடி எண்ணெய் குளியல் எடுத்து வந்தால், முடி நீண்டு நன்கு வளரும். ஏசி அறையில் வேலை செய்பவர்களுக்கு எண்ணெய் குளியல் மிகமிக அவசியம். வாரம் இருமுறை அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூந்தல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

ரத்தப் புற்றுநோய் பயங்கரமானதா?

ரத்தப் புற்றுநோயை குணப்படுத்துவது எப்படி? இதற்கான சிகிச்சையை, எவ்வளவு நாட்கள் எடுக்க வேண்டும்?
ரத்தப் புற்றுநோய், எல்லா தரப்பினரையும் பாதிக்கக் கூடியது. சிறுவர்களுக்கு வரும் நோயை, கீமோதெரபி கொடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். பெரியவர்களுக்கு, (20 முதல், 50 வயது வரையுள்ளோர்) புற்றுநோயின் தன்மையைப் பொறுத்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கீமோதெரபி அல்லது எலும்பு மஜ்ஜை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
முதியோருக்கு, (55 முதல், 60 வயது) இந்நோய் வந்தால், 15 முதல், 20 சதவீதம்
பேருக்கு, ‘கீமோதெரபி’ மூலம் குணப்படுத்தலாம். ‘பல்லியேட்டிவ் ஹீதெரபி’ அல்லது ‘டிசீஸ் மாடிபிங் ஏஜென்ட்’ போன்ற மருந்துகளால், நோய் தன்மையை குறைத்து, வாழ்வை நீடிக்க இயலும். அதனால், முதியோருக்கு நோயின் தன்மை மற்றும் (கோ மார்பிடிட்டி) பிறநோய்களின் தன்மையைப் பொறுத்தும், சிகிச்சை நிர்ணயிக்கப்படுகிறது.
வயது அதிகமாக இருந்தாலும் கூட, கீமோதெரபி அல்லது எலும்பு மஜ்ஜை (உடல் வலுவாக இருந்தால்) மாற்று அறுவை சிகிச்சை மூலம், ஒரு சிலரை குணப்படுத்தலாம்.
பெரும்பாலும், 60 வயதிற்கு மேற்பட்டவருக்கு, கீமோதெரபி அல்லாத முறையிலோ அல்லது குறைந்த அளவு கீமோதெரபி மூலமோ, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ரத்தப்புற்று நோயின், தீவிர தன்மையை கண்டறிவது எவ்வாறு?
முன்னரே கூறியவாறு, கீமோதெரபி மட்டும் போதுமா அல்லது ஸ்டெம்செல் சிகிச்சை தேவையா என்பதை, கண்டறிய வேண்டும். இவ்வாறு கண்டறிந்து, ஓரிரு மாதங்களுக்குள் எந்த விதமான சிகிச்சை தேவைப்படும் என்பதை, முடிவு செய்ய வேண்டும்.
ஒரு, ‘டிரான்ஸ்பிளான்ட்’ மூலம், குணப்படுத்தக் கூடிய நோய்க்கு, வெறுமனே, கீமோதெரபி மட்டும் கொடுப்பதால் நேரமும், பணமும்தான் விரயமாகிறது. இதனால், கண்டிப்பாக நோயின் தீவிர தன்மையை முன்னரே கண்டறிவது முக்கியம்.
இது, எவ்வாறு அறியப்படுகிறது என்றால், அவருக்கு பண்ணப்படும் குரோமோசோம் மற்றும் மூலக்கூறு டெஸ்ட் மூலம், நோய் தன்மை அறியப்படுகிறது.
பின், அது, கீமோதெரபியால் குணப்படுத்த கூடிய நோயா அல்லது டிரான்ஸ்பிளான்டால் குணப்படுத்த கூடிய நோயா என்று அறியப்படுகிறது.
மேலும், நோய்க்கு சிகிச்சை அளிக்கும் போது, அந்த நோய், எவ்வளவு வேகமாக குறைகிறது என்பதை, அறியும் வாய்ப்பு உள்ளது. இதற்கு, எம்.ஆர்.டி., (மினிமல் ரெசிடுயல் டிசீஸ்) என்று பெயர். எம்.ஆர்.டி., பரிசோதனை முறை, இந்தியாவிலேயே ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது நோயின் தன்மையை பொறுத்து தான், சிகிச்சை எவ்வளவு நாள் பெற வேண்டும் என்பது உள்ளது. பெரும்பாலும், ஏ.எல்.எல்., – ஏ.எம்.எல்., என, இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
அதற்குள், சிறு பிரிவுகளும் உண்டு. ஏ.எல்.எல்., என்பது, முதல் நான்கு வாரங்கள், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்.
அதன்பிறகு, வெளிநோயாளியாகவே சிகிச்சை மேற்கொள்ளலாம். ஏ.எம்.எல்., என்ற நோய்க்கு, பெரும்பாலும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

கோடையை குளிர்ச்சியாக்கலாம்!

கோடையை எப்படி சமாளிப்பது’ என்பது குறித்து, இப்போதே எல்லாரும் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். வீடுகளில் குளிர்சாதன வசதி செய்யலாம் என வசதி படைத்தோரும், வீட்டிற்கு முன்னால் தென்னை ஓலை வேயலாம் என, சாதாரண மக்களும் தம் சக்திக்கு ஏற்ப, கோடையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளை துவங்கி விட்டனர்.
இன்னும் சிலரோ, மலை வாசஸ்தலங்களுக்கு செல்ல திட்டமிட்டிருப்பர். கோடைக்காலம் என்பது இயற்கையின் கொடையே. இக்காலத்தில் தான், மண்ணில் உள்ள கிருமிகள் அழிகின்றன. இதனால், விளை நிலங்களில் பயிராகும் பயிர்கள், நோய் தாக்குதலிலிருந்து விடுபட்டு, உற்பத்தி அதிகரிக்கின்றன.
கோடையை, குளிர்ச்சியாகக் கழிக்க, இதோ, "ஜில்’லுன்னு சில டிப்ஸ்:

* கோடைக் காலத்தில் அதிகாலை, 5:00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. பெண்கள், வெயில் வரும்முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடலாம்.
* உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிவதுடன், அந்த ஆடைகளில், வெண்மை நிறம் கலந்திருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் "பளிச்’ வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும் என்பதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.
* வெயிலின் தாக்கத்தால், உடலில்இருந்து அதிகளவு வியர்வை வெளியேறுவதால், உடலின் நீர்ச் சத்து குறைந்துவிடும். அதனால், அதிக நீர் அருந்துவதுடன், இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது. இது, நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாவதை தடுக்கும்.
* வெயிலில் அலைந்து வந்தவுடன், நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும், பத்து நிமிடம் கழித்தே, நீர் அருந்த வேண்டும். அந்த நீர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக்கூடாது. ஏனெனில், இந்த நீர் ஜலதோஷம், தலைவலியை ஏற்படுத்தும். மண்பானையில் வைத்த தண்ணீரோ அல்லது சாதாரண நீரோ போதுமானது.
* அதிக நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும்.
* இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து, உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.
* ஆரஞ்சு, சாத்துக்குடி, கிர்ணி, எலுமிச்சை பழச்சாறு, பதநீர் சாப்பிடலாம். தர்பூசணி சாப்பிடலாம்.
* குடிநீரை கொதிக்க வைக்கும்போது, அதில் சீரகம் கலந்து கொதிக்க வைத்து, ஆறியபின் அருந்தலாம். தினமும், மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தினால் தான், உடல் சூடு குறைந்து, சமநிலைப்படும்.
* மதிய வேளையில், மோரில் நீர் கலந்து, அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது.
* கோடைக் காலத்தில், காலை உணவாக, தோசை, பூரி, பரோட்டாவை தவிர்த்து, இட்லி அல்லது கேழ்வரகு, கம்பு கஞ்சி செய்து சாப்பிடலாம்.
* மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த, பரங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
* தினமும் இரு முறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும்போதும், வெயிலில் இருந்து திரும்பிய உடன் குளிக்கக் கூடாது.
* வெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி அணிந்து கொள்ளலாம்.
* வாரம் இரு முறை, எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
* கோடை வெப்பத்தின் போது, அதிக நேரம், குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல் அலைந்து திரிந்து, வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் செல்வதும் நல்லதல்ல.
* சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்கவும். கை கால்களுக்கு எண்ணெய் பூசிக் கொள்ளவும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* படுக்கையறை காற்றோட்டமானதாக இருக்கட்டும். பருத்தியினால் தயாரிக்கப் பட்ட விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது.
* வெளியே செல்லும் போது கறுப்பு நிற குடைகளை தவிர்த்து, வெளிர் நிற குடைகளை பயன்படுத்தலாம். ஏனெனில், வெளிர் நிற குடைகள், சூரிய வெப்பத்தை உள்வாங்காது.

தியானம் என்றால் என்ன?



பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தின் படி தியானம் ஏழாவது உறுப்பு ஆகிறது. அலையும் மனதை ஒருமுகப்படுத்துவது தியானம் ஆகும்.. தியானத்தை ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடின்றி செய்து பயன்அடையலாம். தியானத்தின் பலன்கள் மனஅமைதி கிடைக்கும். படபடப்பு குறையும் நினைவாற்றல் அதிகரிக்கும். நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும். வேலை செய்யும் ஆற்றல்
அதிகமாகும். ரத்த அழுத்தம் குறையும். ஆஸ்துமா குணமாகும். அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் ஆயுள் அதிகரிக்கும். தியானம் செய்முறை தியானத்தின் நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுல் ஆகும். அதற்கு மனம் ஒரு கருவியாக பயன்படுகிறது. தியானத்தில் 2 நிலைகள் உள்ளன. 1. நம் மனதில் ஏதாவது ஒரு உருவத்தை குறித்தோ அல்லது ஒரு கருத்தை குறித்தோ தொடர்ந்து சிந்தனை செய்வது. மனதில் இருந்து எல்லாவிதமான எண்ணங்களையும் அகற்றிவிடுதல். முதல் நிலையில் ஏதாவது ஒரு பொருளின் மீது அல்லது குரு புகட்டிய ஒரு மந்திரத்தை உச்சரிக்க தொடங்குகிறோம். அப்போது நமக்கு ஒரு புதுமையான அனுபவம் உண்டாகும். இதுவரை நம் மனதில் புதைந்து உறங்கி கிடந்த நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும். நமக்கு இது சிக்கலாக கூட இருக்கும். அதற்கும் வழி இருக்கிறது. நாம் உச்சரிக்கும் மந்திரத்தை அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் பாவத்துடன் நம்மை அதில் பிணைத்து கொண்டால், நாம் தியான நிலையை அடையமுடியும். மற்ற நினைவுகள் மறந்து போகும். இரண்டாம் நிலையில், எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல், அமைதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொள்ளவேண்டும். கால் முதல் தலை வரை எல்லா உறுப்புகளும் ஓய்வில் இருக்க வேண்டும். காதுகள் திறந்திருந்தால், வெளிச்சத்தங்கள் இடையூறு செய்யும். மனதிலிருந்தும் பல எண்ணங்கள் எழும். நாம் அதை பொருட்படுத்த தேவையில்லை. வேடிக்கை பார்ப்பவரை போல நாம் ஒதுங்கி நிற்க வேண்டும். அப்போது நம் காதுகள் திறந்திருந்தாலும் எவ்வித இடர்பாடுகளும் இருக்காது. தியானம் செய்தவன் மூலம் நம்மை நாம் உணர முடியும்.

துரித உணவுகள் துரிதமாக கேடு விளைவிக்குமா?

Instant food tamil_Page_1
Instant food tamil_Page_2
Instant food tamil_Page_3


இதய ஆரோக்கியம் மிக அவசியம்

இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ! இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோன்னு சொல்லி  இதயத்தை பாதுகாக்க பாடல்களே வந்தாச்சு. இதயம் மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.. 24 மணிநேரமும் உறங்காமல்  இயங்குவதால் தான் நம்மால் நிம்மதியாக உறங்கி மீண்டும் எழுந்து அன்றாட பணிகளை நாம் செய்து முடிக்கிறோம்.. 
நமக்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை பற்றி நாம் கண்டுகொள்வதே இல்லை. காரணமே இல்லாமல்  துன்பப்பட்டு இதயத்திற்கு பாரத்தை தருகிறோம். இவ்வாறு துன்பங்களை சேர்பதனால் மாரடைப்பு, இதயநோய் போன்றவை ஏற்படுகிறது. இதயத்தை  பாதுகாக்க தடையாக இருக்கும் மன அழுத்தம், வேண்டாத உணவுகள், புகை பிடித்தல் போன்றவற்றை நீக்கி நல்ல முறையில் இதயத்தை பாதுகாக்க  வேண்டும்.
மனஅழுத்தம்
உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற 
பிரச்னை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலான நோய்களின் நிவாரணியே  மௌனம், தியானம், நிதானம் தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். இன்றைய பணிசூழலில் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட  முக்கிய காரணமாகிறது. எனவே எந்த செயலையும் அழுத்தமின்றி செய்ய பழகிகொள்ள வேண்டும். அவ்வாறு பழகிக்கொண்டாலே இதயத்தில்  அழுத்தமோ, டென்ஷனோ ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
முறையற்ற உணவுப் பழக்கம்
முறையற்ற உணவு பழக்கம் உள்ளவர்கள் உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல்  தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும். இதயத்தை காக்க மற்ற உணவு வகைகளைவிட,  புரோட்டீன் வகை உணவுகள் இதயத்துக்கு இதம் தருகின்றன. புரோட்டீன் இதயத்துக்கு நண்பன். முட்டையில் பி விட்டமின் இருக்கிறது. மீன்  உணவுகளில் ஒமேகா3 , பேட்டி ஆசிட் இருக்கிறது. தோல் நீக்கிய சிக்கன் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் இதயத்துக்கு தேவையான  புரோட்டினைத் தந்து காக்கும். பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணை இவைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. பட்டானி, பீர்க்கன்காய், வால்நட்  முதலியன இதயத்தை காக்கும் உணவுகள்..
சீரான ரத்த ஓட்டம்

இதயநோய்கள், மாரடைப்பு இவை வருவதற்கு முதல்காரணமாக இருப்பவை ரத்த ஓட்டத்தின் அளவைப் பொறுத்தே அமைகிறது. இந்த ரத்த  ஓட்டத்தை சீர்படுத்த தேவையான ஊட்டச்சத்து, வைட்டமின் இ, சி, போன்றவை இதயத்திற்கு வலுசேர்க்கின்றன. ஒவ்வொருவரும் ஒரு நாளில்  காய்கறி அல்லது பழங்களின் ஜூஸ் குடிப்பதை வாடிக்கையாக கொள்ள வேண்டும். வெள்ளைப்பூண்டு கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் சக்தி  கொண்டிருப்பதால் பூண்டை உணவில் சேர்த்து வந்தால் இதயநோய்களை தவிர்க்கலாம்.

புகைப்பதை நிறுத்துங்கள்
24 மணி நேரமும் ஓய்வே எடுக்காமல் நம்மை பாதுகாக்கும் இதயத்தினை பாதுகாக்க நினைத்தால் புகைப்பதை நிறுத்துங்கள். ஏனெனில் இதயத்தின்  முக்கிய எதிரி புகைதான். எனவே புகையை விட்டொழியுங்கள். புகையிலை சேர்ந்த எந்தப்பொருளையும் பயன்படுத்தாதீர்கள். அது வெற்றிலைபாக்கு  போடும் பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ எந்த போதை பழக்கமாக இருந்தாலும் இப்போதே விட்டுவிடுங்கள்.
சிரித்து மகிழுங்கள்

எப்போதும் சிடுசிடு என்று டென்ஷனாக இருக்காமல் சந்தோஷமாக இருங்கள். நம்முடைய இதயத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்

குழந்தைகள் முன், பெற்றோர் சண்டை போடுவது, ‘படி… படி…’ என, நெருக்கடி கொடுப்பது, அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். தினமும், விதவிதமான சிப்ஸ், சாக்லெட் கொடுப்பதும் உடல் நலனை பாதிக்கும்
1. பள்ளி செல்ல குழந்தைகள் அடம் பிடிப்பது ஏன்? அதைத் தடுக்க என்ன செய்வது?
குழந்தைகள் பழகிய இடத்தை விட்டு (வீடு), புதிய இடத்திற்கு (பள்ளி) செல்லும் போது. மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், அழுதல், அடம் பிடித்தல், பொருட்களை உடைத்தல், படுக்கையில் – தூக்கத்தில் சிறுநீர் கழித்தல், அலறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர். வற்புறுத்தி, அடித்து பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
பள்ளிக்கு கிளப்புவதில், அவசரம் காட்டாமல் குழந்தை விருப்பப்படி, விளையாட்டுடன் தயார் செய்ய வேண்டும். அன்பாக பேசி, அவர்களின் பயத்தை போக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் தான், இந்த பிரச்னை இருக்கும் என்பதால், சின்ன சின்ன பரிசு, இனிப்பு போன்றவை கொடுத்து, பயத்தைப் போக்கி, ஊக்கப்படுத்தலாம்.
2. குழந்தைகள், மூட்டை போல், புத்தக பை சுமந்து செல்வது, உடல் நலத்தை பாதிக்கும் தானே?
அதில் என்ன சந்தேகம்? இன்று, குழந்தைகள் பொதி சுமப்பது போல், புத்தகப் பை சுமந்து செல்கின்றனர். பார்க்கவே பாவமாக இருக்கிறது. எந்த பள்ளியிலும், எல்லா புத்தகம், நோட்டுக்களை சுமந்து வர வேண்டும் என, கட்டாயப்படுத்துவதில்லை. அன்றைய தினத்திற்கான பாடப் புத்தகத்தை மட்டும், எடுத்துச் செல்ல வேண்டும். இதுகுறித்து, புரிதலை பெற்றோரிடம், பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலான வீடுகளிலும், அப்பா – அம்மா இருவரும் வேலைக்குச் செல்வதும், ஒரு பிரச்னை. புத்தகப்பை சுமந்து செல்வதால், எளிதில் சோர்வு ஏற்பட்டு, பக்க விளைவுகள் வரும்; முதுகு தண்டு பாதிப்பு, கூன் வரவும் வாய்ப்புள்ளது.
3. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, எந்த மாதிரியான நோய்கள் வரும்?
தற்போது, பெரும்பாலான பள்ளிகள், குளிர்விக்கப்பட்ட அறைகளாக உள்ளன. இதன் காரணமாக, ஒரு குழந்தைக்கு கண் வலி, காய்ச்சல், தோல் வியாதிகள் வந்தால், அது, மற்றவர்களுக்கும் எளிதில் பரவும் வாய்ப்புள்ளது. ‘விடுப்பு கிடையாது; பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும்’ என, கெடுபிடிகள் விதிக்கக் கூடாது. ஆரம்ப நிலையில் கண்டறிந்து, விடுப்பு கொடுத்து, உடல் சீரானதும் பள்ளிக்கு வரச் செய்ய வேண்டும்.
4. படிக்கும் வயதில் விளையாட்டு அவசியமா என, திட்டுகின்றனரே… விளையாட்டு அவசியமில்லையா?
விளையாட்டு மிக அவசியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், மனதும் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க, சத்தான உணவுடன், விளையாட்டும் அவசியம். இன்று, வீடுகளில், ‘டிவி’ பார்த்து, ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடுவது, ‘வீடியோ கேம்ஸ்’ கம்ப்யூட்டரில் மூழ்குவதுதான் விளையாட்டு என்ற நிலை உள்ளது. வீட்டின் வெளிப்புற பகுதிகளில், மற்ற சிறார்களுடன் விளையாட, அனுமதிக்க வேண்டும். கிரிக்கெட், புட் பால், ஓடி விளையாடுதல், சைக்கிள் ஓட்டுதல் நலம். விளையாடுதல் உடல் உற்சாகம் பெறுவதோடு, புத்தி கூர்மையையும் உருவாகும்.
5. அதிக மதிப்பெண் பெற வேண்டும் என, பெற்றோர் நெருக்கடி கொடுப்பது சரியான நடைமுறையா?
குழந்தைகள் படிப்பதற்கு, ஆரம்ப நிலையில் இருந்தே ஊக்கப்படுத்தினால் போதும்; நல்ல மதிப்பெண் கிடைக்கும். தேர்வு நேரம் வந்ததும், படி படி என, பெற்றோரும், ஆசிரியர்களும் நெருக்கடி தருகின்றனர். அவ்வாறு செய்வது கூடாது. இதனால், மன அழுத்தம் அதிகரிக்கும்; எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கி விடும். எப்போதும், புத்தகமும், கையுமாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. இடையில், விளையாட்டு, உடற்பயிற்சி செய்யலாம்.
6. தினமும் சிப்ஸ், நூடுல்ஸ் கேட்டு, குழந்தைகள் அடம்பிடிக்கின்றனர்; அதை தொடர்ந்து கொடுப்பது சரியா?
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ‘ஸ்நாக்ஸ்’ டப்பாக்களில், விதவிதமான, ‘சிப்ஸ்’ கொடுத்து அனுப்புகின்றனர். இது ஆபத்தானது. சிப்ஸ்களில் ‘அசினமோட்டோ’ என்ற, வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்று வலி வரும். அதுபோன்று, நூடுல்ஸ், பிசா, பர்கர் என, உணவு பழக்கத்தில் மாற்றம் நல்லதல்ல; பாட்டில்களில் அடைத்து வரும் குளிர்பானங்கள் கொடுப்பதும் தவறு. குழந்தைகளுக்கு ‘பிரஸ் ஜூஸ்’ தரலாம்.
7. சிறு வயதிலேயே, ‘டயட்’ உணவு முறை சிறந்தது தானே? எதிர்கால நோய்களை, தடுக்க முடியும் அல்லவா?
மிகத் தவறான தகவல். சர்க்கரை நோயாளிகள் உள்ள வீடுகளில், சப்பாத்தி, ஓட்ஸ் கஞ்சி உணவாக இருக்கும். இரவில், குழந்தைகளுக்கு அதைக் கொடுத்து, உணவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக் கூடாது. வயிறு நிறைய உணவு கொடுப்பது அவசியம். நடுத்தர வயதில் பலவிதமான பாதிப்புகள் வரும் என்று கருதி, சிறு வயதிலேயே, உணவுக்கட்டுப்பாட்டுடன் இருப்பது, ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். அவ்வாறு செய்வது, விளையாட்டான விஷயம் அல்ல. குழந்தை பருவத்தில், சிறு வயதில் சீர்விகித உணவு அவசியம். கேழ்வரகு, கோதுமை உணவுகள், கீரை, மீன், முட்டை, இறைச்சி, பால் அன்றாடம் கொடுப்பது நல்லது.
8. தினமும் சாக்லெட் சாப்பிடுவது சரியா? அவசரம் என, காலையில் சாப்பிடாமல் குழந்தைகள் பள்ளி செல்கின்றனரே?
தினமும் சாக்லெட் சாப்பிடுவது நல்லதல்ல. கலோரி அதிகம் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும். சாக்லெட் சாப்பிட்டு, அப்படியே படுத்து விடுவர். இதனால் பல்சொத்தை வர வாய்ப்பு உள்ளதால், உறங்குவதற்கு முன், பல் துலக்குவது நல்லது. விளையாடி விட்டு வரும் குழந்தைகள், சரியாக கை கழுவாமல் சாப்பிட வாய்ப்புள்ளது; அவர்கள் குளித்த பின், சாப்பிட அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுக்கு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, குடல் புழு நீக்கும் மருந்து கொடுத்தல்; உரிய காலத்தில் தடுப்பூசிகளும் போட வேண்டும். அவசரம் என, காலையில் சாப்பிடாமல் குழந்தைகள் செல்வதால், கவனக்குறைவு ஏற்படும்; அல்சர் வர வாய்ப்புள்ளது. கவனமுடன் இருக்க வேண்டும்.

9. குழந்தைகள் முன் சண்டை போடுதல், இரவில் குழந்தைகளை தனியாக தூங்க வைத்தல் போன்றவை, சரியான நடைமுறைகளா?
பெரும்பாலான வீடுகளில், குழந்தைகள் முன், பெற்றோர் சண்டை போடுவது; நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்துவது, வழக்கமாக நடந்து வருகிறது. குழந்தைகள் முன், எந்த நிலையிலும் பெற்றோர் சண்டை போடக்கூடாது; அது, பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பதாக அமையும். பிரச்னைகளை, குழந்தைகள் இல்லாத போதோ, தூங்கிய பின்போ பேசி தீர்வு பெறலாம். இரவு நேரத்தில், குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்கக் கூடாது. அவர்கள் மனதில் பயம் உருவாகும். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை வேண்டுமானால், தனியாக படுக்க வைக்கலாம். மொத்தத்தில், குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் அலட்சியம் காட்டக் கூடாது. 

ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையை இயற்கையான முறையில் தடுக்க சில வழிகள்!!!

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு கோளாறு ஆகும். எலும்பின் அடர்த்தி மற்றும் பருமன் ஆகியவற்றில் சுரப்பிகளின் மாறுதல்களால் ஏற்படும் கோளாறுகளாகும். இதனால் எலும்பு முறிவு மற்றும் எலும்பு மூட்டுக்களில் வலி ஆகியவை ஏற்படுகின்றன. கால்சியம் சீரமைப்பு முறையை பெண்களிடத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்களிடத்தில் டெஸ்டோஸ்டிரான் ஆகியவை செய்கின்றன. பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த 10 உணவுகள்!!! இந்த சீரமைக்கும் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை 60 வயது ஆன
பெண்களுக்கும், 70 வயது ஆன ஆண்களுக்கும் குறையத் துவங்குகின்றது. ஆகையால் வயதானவர்கள் இத்தகைய நோய்க்கு பெருமளவு ஆளாகின்றார்கள். இதை சரி செய்வதற்காக பல சுரப்பிகளின் மாத்திரைகள் கிடைக்கின்றன. இதை கொண்டு எலும்புகளில் ஏற்படும் இக்குறைபாட்டை இயற்கையாக நீக்கலாம். அதிலும் உணவு முறைகளை சரியாக கடைப்பிடிக்கும் போது, இத்தகைய குறைகளை குறைக்க முடியும். அதுவும் கீழ் வரும் பகுதியில் உள்ள ஊட்டச்சத்துகளை தினசரி உட்கொண்டால் ஆஸ்டியோபோரோசிஸை தடுக்க முடியும்.
கால்சியம் இது உடலின் செயல்களை சீராக அமைக்க உதவுகின்றது. நமக்கு தேவையான அளவு கால்சியத்தை தினசரி எடுத்துக் கொள்ளாவிட்டால் நமது உடல் எங்கு அதிகம் கால்சியம் உள்ளதோ அந்த இடத்திலிருந்து கால்சியத்தை எடுத்துக் கொள்கின்றது. இதனால் எலும்புகளின் சக்தி குறைந்து, அவை உடையும் தன்மைக்கு வந்து விடுகின்றன. இப்படி இருந்தால் நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு கால்சியத்தை உண்ணவேண்டும்? ஒரு நாளைக்கு ஏறக்குறைய 1000 – 2000 மில்லி கிராம் வரையிலும் கால்சியம் தேவைப்படுகின்றது. இதை நாம் தயிர், பால், சோயா, சோயா பால், டோஃபு, கெட்டித்தயிர், குறைந்த கொழுப்புள்ள ஐஸ் கிரீம், வெள்ளை பீன்ஸ், சைனீஸ் கோஸ், கேல், கொலார்டு கிரீன்ஸ், ப்ராக்கோலி, பாதாம் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் இது அதிகம் உள்ளது. வைட்டமின் டி வைட்டமின் டி இல்லாமல் கால்சியத்தை உண்பது உபயோகமில்லாமல் போய்விடும். கால்சியத்தை உடல் ஏற்றுக் கொள்வதற்கு வைட்டமின் டி தேவைப்படுகின்றது. மனித உடல் ஏற்கனவே சூரிய வெளிச்சத்திலிருந்து உடம்பில் சேகரிக்கப்பட்ட முன்னோடிகளிடமிருந்து வைட்டமின் டி தயார் செய்யப்படுகின்றது. அதிக அளவு சூரிய ஒளியில் வெளிப்படுத்துவது உடம்பிற்கு கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல் புற்றுநோயை தூண்டுவதாகவும் உள்ளது. ஆகையால் இதை நாம் உணவாக எடுத்துக் கொண்டு ஈடு செய்ய முடியும். சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் முட்டை மஞ்சள் கரு ஆகியவற்றில் வைட்டமின் டி அதிகளவில் உள்ளது. தினசரி உடற்பயிற்சி எடை தூக்குதல் மற்றும் சக்தியை ஏற்றும் பயிற்சி ஆகியவைகளை கலந்து செய்வது உடம்பில் உள்ள எலும்புகளை வலுவடையச் செய்யும். ஓடுவதும், டென்னிஸ், யோகா, நீச்சல், நடை, பூப்பந்து, கால்பந்து, பில்லேட்ஸ் ஆகியவைகளை பயின்று உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் எலும்புகளும் உறுதிப்படுகின்றன.
மது அருந்துவதை குறைத்தல்
மது அருந்துவது உடம்பில் ஆல்கஹால் அளவை அதிகப்படுத்தி எலும்புகளை நாசம் செய்கின்றது. இது கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை உடல் ஈர்த்துக் கொள்ள விடாமல் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் பாரா தைராய்டு சுரப்பியை அதிகரித்து கால்சியம் மற்றும் வைட்டமின் டி-யை உடைக்கின்றது. அதுமட்டுமல்லாமல் கார்டிசோல் என்று கூறப்படும் கால்சியம் சேகரிக்க உதவும் சுரப்பியை குறைவாக சுரக்கச் செய்கின்றது. எலும்புகளை உருவாக்கும் அணுக்களான ஓட்டியோபிளாஸ்ட்களை உருவாக விடாமல் தடுக்கின்றது. ஆகையால் மது அருந்துவதை 2-3 அவுன்ஸ் குறைத்துக் கொள்வது ஆஸ்டியோபோரோசிஸை இயற்கையாக தடுக்கும் என்பதில் ஐயமில்லை.
புகைப் பிடிப்பதை நிறுத்துதல்
புகையிலை மற்றும் புகைப் பிடிப்பதால் எலும்பு அடர்த்தியை குறைக்கின்றது. இதனால் எலும்பு முறிவு அதிகரித்து அது ஆறுவதற்கு நீண்ட காலம் எடுக்கின்றது. இதற்கான சரியான காரணத்தை இன்னும் கண்டறிய முடியவில்லை. ஆனால் எவ்வளவு புகை பிடிக்கின்றோமோ அவ்வளவு அளவிற்கு அதிகமாக எலும்பின் உறுதித்தன்மையும் குறைகின்றது. இதனால் வயதான காலத்தில் எலும்பு முறிவு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படுகின்றது. புகைப் பிடிக்காதவர்களுக்கும், பிடிப்பவர்களுக்கும் இடையே என்ன உடல் சம்மந்த வேறுபாடு இருந்ததென்பதை ஆராய்ந்ததில் இவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் குறைவாக சுரப்பதை கண்டறிய முடிந்தது.

முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!



பொதுவாக உடலில் இரத்தணுக்கள் குறைவாக இருந்தால், இரத்த சோகை ஏற்படும். இத்தகைய இரத்த சோகையானது ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. இரத்த சோகை குழந்தைகளுக்கு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவிழந்து, சருமம், சுவாசப் பாதை, செரிமான மண்டலம் போன்றவற்றில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் இரத்த சோகை இருந்தால் மாதவிடாய் சுழற்சியானது சீராக நடைபெறாமல் போகும். குறிப்பாக பெண்கள் இந்நிலையில் கருத்தரித்தால், வயிற்றில் வளரும் குழந்தையானது ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறக்aகும். ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு
குறைவாக இருந்தால், அதனை இயற்கை முறையில் அதிகரிக்க முருங்கைக்கீரையை சாப்பிடுங்கள். இதில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கும் இரும்புச்சத்து மட்டுமின்றி, கால்சியம், வைட்டமின் ஏ, சி போன்றவையும் உள்ளது. சரி, இப்போது முருங்கைக்கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போமா!!! தெளிவான பார்வை முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், பார்வை பிரச்சனை உள்ளவர்கள் அதை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை கிடைக்கும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் முருங்கைக்கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம். இதயத்திற்கு நல்லது முருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக ஆண்கள் முருங்கைக்கீரையை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அவர்களை எளிதில் தாக்கும் மாரடைப்பு மற்றும் இதர இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கும். புற்றுநோய் முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும். எலும்பு மற்றும் பற்களுக்கு சிறந்தது முருங்கைக்கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலுவினை அதிகரிக்கும். இரத்த சோகை முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அது இரத்த அணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபட உதவுகிறது. வெப்பத்தை தணிக்கும் முருங்கைக்கீரையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடல் வெப்பமானது குறையும். தாய்ப்பால் சுரப்பு பிரசவம் முடிந்த பெண்கள் தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க, முருங்கைக்கீரையை சாப்பிடுவது நல்லது. பிரசவத்திற்கு பின் சிறந்தது பெண்களுக்கு பிரசவத்தின் போது இரத்தம் அதிகம் வெளியேறும். ஆகவே பிரசவத்திற்கு பின் அவர்களின் உடலில் இரத்தத்தின் அளவானது அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைக்கீரையை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட வேண்டும். ஞாபக திறன் அதிகரிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர வைத்து, பொடி செய்து, பின் அந்த பொடியை பாலில் சேர்த்து கலந்து குடிக்க கொடுக்க வேண்டும். இதனால் கண்கள் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும். ஆண்களுக்கு நல்லது முருங்கைக்கீரையை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், ஆண்மை அதிகரிப்பதுடன், விந்தணுவானது கெட்டிப்படும். சிறுநீரக செயல்பாடு வாரம் இரண்டு முறை முருங்கைக்கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீரக மண்டலம் சீராக செயல்பட்டு, சிறுநீர் அதிகமாக வெளியேறி, உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்.

செம்பருத்தி இலைகளில் உள்ள உடல்நல நன்மைகள்!!!



செம்பருத்தி என்ற பூச்செடி, உலகத்தில் உள்ள வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல வட்டாரங்களில் அதிகமாக காணப்படும். இதனை "மார்ஷ் மாலோ" என்றும் அழைக்கின்றனர். செம்பருத்தி இலைகள் என்பது நம் இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். பல ஆண்டு காலமாக பலவித சிகிச்சைக்காக இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் உலகத்தில் உள்ள பலரும் செம்பருத்தி இலைகளை சூடான அல்லது குளிர்ந்த தேநீரிலும் கலந்து குடிக்கின்றனர். இது நம் உடலுக்கு மிகவும் நல்லதாக விளங்குகிறது. செம்பருத்தி இலைகளில் இன்னும் பல உடல்நல நன்மைகள்
அடங்கியுள்ளது. இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது. மேலும் உணவிற்கு நிறத்தை சேர்க்கும் பொருளாகவும் இது சந்தையில் விற்கப்படுகிறது. நாம் ஏற்கனவே சொன்னது போல் செம்பருத்தி இலைகளால் செய்யப்படும் தேநீர் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதனை உலகத்தில் உள்ள பல நாடுகளாலும் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்து வருகிறது. இப்போது செம்பருத்தி இலைகளில் உள்ள உடல்நல நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!
புற்றுநோயை எதிர்த்து போராடும் செம்பருத்தி இலைகள்
புற்று நோயை எதிர்த்து போராடுவதால், முக்கியமான உடல்நல பயனாக இது பார்க்கப்படுகிறது. அதற்கு இந்த இலைகளை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதன் இலைகளை கொண்டு பேஸ்ட் செய்து புற்று நோயால் ஏற்பட்ட புண்களின் மீதும் தடவலாம். சளி மற்றும் இருமலை குணமாக்கும் செம்பருத்தி இலையில் வைட்டமின் சி வளமையாக உள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க இது பெரிதும் உதவுதால், இதுவும் அதன் முக்கிய உடல்நல பயனாக உள்ளது. ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செம்பருத்தி இலை உங்கள் ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் காய்ச்சல் போன்ற வெப்பத்தை தணிக்கவும் இது பெரிதும் உதவுகிறது. மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மெட்டபாலிச வீதத்தை அதிகரித்து உடலில் உள்ள நீர்ம சமநிலையை மேம்படுத்த செம்பருத்தி இலைகள் பெரிதும் உதவுவதால், இதுவும் ஒரு முக்கிய உடலநல பயனாக கருதப்படுகிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, உடலிலுள்ள தட்பவெப்ப நிலையை மேம்படுத்த உதவுவது செம்பருத்தி இலையின் மற்றொரு உடல்நல பயனாகும்.
சிறுநீரக பிரச்சனைகளை போக்கும்
செம்பருத்தி இலை கலந்த தேநீர் நம் உடலுக்கு மிகவும் நன்மையானது. செம்பருத்தி இலையால் கிடைக்கும் ஊட்டச்சத்து பயன்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் தேநீரை பருகுவதற்கு முன்பாக, அது இரசாயன முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதா, பதப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா, நல்ல தரத்துடன் பதப்படுத்தப்பட்டதா போன்றவைகளை கவனமாக இருங்கள். சிறுநீரக பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை உள்ள நோயாளிகள் செம்பருத்தி இலை கலந்த தேநீரை பருகலாம். சிறுநீரக தொற்றுக்களை சரி செய்து, இரத்த கொதிப்பை குறைக்கவும் இது உதவும்.
உடல் எடையைக் குறைக்கும்
செம்பருத்தி இலைகளை சீரான முறையில் மென்று வந்தால், முக்கியமாக மாதவிடாய் காலத்தில் பெண்கள், அந்நேரத்தில் ஏற்படும் வழியை போக்கும். மேலும் செரிமானத்திற்கு உதவி புரிந்து உடல் எடையையும் குறைக்கச் செய்யும்.

வாழை இலையில் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

oaytz3328
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

Saturday, March 22, 2014

கலோரியை எரிக்க கயறு பயிற்சி! உடற்பயிற்சி!

கலோரியை எரிக்க கயறு பயிற்சி!
இன்றளவில், நம்மிடம் இருந்து தொலைந்துபோன ஒரு விளையாட்டு மற்றும் நாம் செய்ய மறந்த ஓர் உடற்பயிற்சி. அதுதான் இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பாத 'ஸ்கிப்பிங்’ என்னும் கயறு பயிற்சி. 

இரண்டு கைகளிலும் கயற்றைப் பிடித்துக் கொண்டு தாண்டித் தாண்டிக் குதித்த காலம்மலையேறிப்போய், ஜிம்மில் ஓடாத எந்திரத்தின் மீது ஒரே இடத்தில் நின்றபடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.நம்மில் பலர் மறந்துபோன விளையாட்டாக இருந்தாலும்கூட, அதன் நன்மைகள் நம்மை மலைக்க வைப்பதாக இருக்கும் என்கிறார், திருச்சியில் ஃபிட்னெஸ் ஹெவனைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் பிரவீன்.

'ஜாகிங், ரன்னிங், சைக்கிளிங்கைவிட அற்புதமான விளையாட்டு ஸ்கிப்பிங்.  விளையாட்டு மட்டுமல்ல; சிறந்த உடற்பயிற்சியும்கூட. அந்தக் காலத்தில் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகச் செய்ததை, இன்றைக்கு உடலுக்கு ஆரோக்கியமானது என்று தெரிந்தும்கூட பலரும் செய்யத் தயங்குகின்றனர். ஸ்கிப்பிங் விளையாடுவதற்கான ஆர்வமும் குறைந்துகொண்டே போகிறது.
ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்தால், 1,300 கலோரிகள் வரை எரிக்க முடியும். ஸ்கிப்பிங் செய்வதால், நம் உடலில் உள்ள தசை, எலும்புப் பகுதிகள், கை கால்கள் என முழு உடலுமே வேலை செய்கிறது. இதனால், நம் உடலில் உள்ள ரத்த நாளங்களின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்க உதவுகிறது. நம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டுபோகும் ஒரு செயலாக ஸ்கிப்பிங் பயன்படுகிறது.

ஸ்கிப்பிங் பயிற்சியின்போது நாம் குதிப்பதால், இடுப்புப் பகுதி வலுவடைகிறது. தொப்பை மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைகிறது. உடலின் வளைந்துகொடுக்கும் தன்மையும் அதிகரிக்கிறது. இதயத்துக்கு மிகவும் ஏற்ற பயிற்சி. ஸ்கிப்பிங் செய்யும்போது, 70 சதவிகித உடலின் கீழ்ப் பகுதிகளும், 30 சதவிகிதம் இடுப்புக்கு மேல் உள்ள பகுதிகளும் வேலை செய்கின்றன. கால், குதிகால் மற்றும் கணுக்கால் பகுதிகள் வலுவடைகின்றன.

தோப்புக்கரணம் மற்றும் ஸ்கிப்பிங் செய்யும்போது மட்டும்தான் இரண்டு கைளும், கால்களும் ஒரே நேரத்தில் வேலை செய்கின்றன. இதனால், உடல் மட்டுமல்லாமல் மூளையிலும்கூட உடற்பயிற்சியின் தாக்கம் ஏற்பட்டு, ஞாபக சக்தி அதிகரிக்கும்.

ஸ்கிப்பிங் பண்ணும்போது ரெண்டு கையையும் சுழற்றுவதால்,  கைகளில் உள்ள தசைப்பகுதிகள், மணிக்கட்டு போன்றவை வலிமை பெறும். ஜாகிங், உடற்பயிற்சி செய்யும்போது கழுத்துவலி, மூட்டுவலி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால், ஸ்கிப்பிங் செய்யும்போது இதுபோன்ற வலிகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

நடைப்பயிற்சியைப் போன்று இதற்கும் பெரிய செலவு கிடையாது. ஒரு சின்னக் கயறு இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம்' என்கிறார் பிரவீன்.

 ஸ்கிப்பிங் பண்ணுங்க!
 10 நிமிடம் ஸ்கிப்பிங் செய்வது, 30 நிமிடம் ஜாகிங் செய்வதற்குச் சமம்.
 ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடம் ஸ்கிப்பிங் செய்தால், உடலை ஃபிட்-ஆக வைத்துக்கொள்ள முடியும்.
 தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்ததும் 30 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.
 ஜாகிங்கைவிட ஸ்கிப்பிங்கில் அதிகப்படியான கொழுப்பு எரிக்கப்படுகிறது.
 குழந்தைகள் அனைவரும் தவறாமல் வீட்டிலேயே செய்ய வேண்டிய ஓர் எளிமையான பயிற்சி. குழந்தைகள் நன்கு உயரமாக வளரவும் இந்தப் பயிற்சி உதவுகிறது.

 எப்போது செய்யவேண்டும்?
 இதற்கென குறிப்பிட்ட நேரம் தேவையில்லை. எப்போது  வேண்டுமானாலும் செய்யலாம்.காலையில் செய்வதால், சுத்தமான காற்றும் இயற்கையான சூழலும் டென்ஷன் இல்லாத அமைதியும் உடலுக்கு இன்னும் ஆரோக்கியத்தைத் தரும்.

 யாரெல்லாம் செய்யக் கூடாது?
 பெரியவர்கள், மூட்டு வலி மற்றும் முழங்கால் பிரச்னை உள்ளவர்கள், கயறைத் தாண்டிக் குதிக்க முடியாது என்பதால், அவர்கள் இதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
 கர்ப்பிணிகள் செய்யவே கூடாது.
 வயதான பெண்கள் மற்றும் தொப்பையுள்ள பெண்கள் ஸ்கிப்பிங் செய்யும்போது கவனம் தேவை.
 பெண்கள் தாண்டிக் குதிக்கும்போது, கர்ப்பப்பை கீழே இறங்குவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பு மிகமிகக் குறைவாகவே இருந்தாலும்கூட மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.

 எதைச் சாப்பிடலாம்? எதைத் தவிர்க்கலாம்?
 ஸ்கிப்பிங் விளையாடும்போது, வெறும் வயிற்றுடன் இல்லாமல் ஏதாவது சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டும்.
 வயிறு நிறையச் சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட உடனே ஸ்கிப்பிங் செய்யக் கூடாது.
 குளுகோஸ் அதிகம் உள்ள வாழைப்பழம், மாவுச்சத்து குறைவாக உள்ள கோதுமை பிரெட் இதில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.
 டாக்டரின் ஆலோசனைப்படி கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு உள்ள உணவுப் பொருள்களை சரிவிகித்தில் சாப்பிடலாம்.

Saturday, March 8, 2014

சோத்துக் கற்றாழை சாற்றினால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள்!!!


பச்சை தாவரமான சோத்து கற்றாழையின் பயன்கள் பெருமளவில் உள்ளன. தோலில் ஏற்படும் வெடிப்பு, எரிச்சல், தோல் அலர்ஜி போன்றவற்றிற்கு சோத்து கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. சோத்துக் கற்றாழை சாற்றில், உடலுக்கு தேவையான அதிக அளவிலான தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் அடங்கி உள்ளன. இந்த அளவிற்கு சோத்து கற்றாழை ஆரோக்கியமானதாக உள்ளதால், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அதை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுப்போன்று வேறு: கற்றாழை
ஜெல்லின் அழகு நன்மைகள்! மேலும் சோத்து கற்றாழை சாற்றில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது. உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் சோத்துக் கற்றாழை சாற்றில் அதிக அளவில் உள்ளன. உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் உள்ள பாதிப்புகளை சரிசெய்து புனரமைப்பதற்கு, சோத்துக் கற்றாழை சாற்றில் உள்ள சத்துக்கள் துணை புரிகின்றன. வெளிப்புற காரணிகளுக்கு ஏற்றவாறு, உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தியை சோத்துக் கற்றாழை சாறு அளிக்கிறது. உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்களை உடலுக்கு அளித்து, அவற்றை உடலில் தேக்கி வைக்க சோத்துக் கற்றாழை சாறு பயன்படுகிறது. கூந்தலைப் பராமரிக்க கற்றாழையை யூஸ் பண்ணுங்க… சோத்துக் கற்றாழை சாற்றில் பல விதமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கி உள்ளன. இந்த கட்டுரையில் சில முக்கியமான நன்மைகள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. போதை நீக்கியாக பயன்படும் சாறு சோத்துக் கற்றாழை சாறு ஒரு சிறந்த போதை நீக்கியாக பயன்படுகிறது. நமது உடலானது நச்சுத்தன்மையை சேர்த்து வைக்கும். அத்தகைய நச்சுத்தன்மை தோல் திசுக்களில் பாதிப்பு, உடலின் இயக்கத்திற்கு ஊறு விளைவித்தல், உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துதல் போன்ற தீமைகளை ஏற்படுத்துகிறது. சுற்றுப்புற மாசு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, துரித உணவு, போதை வஸ்துக்களான ஆல்கஹால் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பழக்கவழக்கங்களே நச்சுத்தன்மையை உருவாக்கும் ஏஜென்ட்டுகளாக உள்ளன. சோத்துக் கற்றாழை சாற்றில் உள்ள தாதுக்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் சத்துக்கள் போன்றவை நச்சுத்தன்மையை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது. எடைக் குறைப்பில் இதன் பங்கு தினமும் ஒரு டம்ளர் சோத்துக் கற்றாழை சாற்றை குடித்து வந்தால், அது எடை குறைப்பிற்கு உதவும். மேலும் உடல் எடையை அதே அளவில் பராமரிக்கவும் இது உதவுகிறது. இது வயிற்றையும்,செரிமான பாதையையும் சுத்தம் செய்கிறது. மேலும் உடலில் உள்ள உடல் எடைக்கு காரணமான, தேவையற்ற பொருட்களை நீக்கி உடல் எடையைக் குறைக்கிறது. சோத்துக் கற்றாழை சாறு, உடலில் கொழுப்பு சேர்வதை குறைக்கும் சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது. இந்த சாறு பசியோடு போராடி, உணவு உட்கொள்ளும் அளவைக் குறைக்கிறது. இவ்வாறாக சோத்து க்கற்றாழை, உடல் எடை க்குறைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பற்களின் ஆரோக்கியம் சோத்துக் கற்றாழை சாறு, நுண்ணுயிர்களை எதிர்க்கும் திறனாக செயல்பட்டு ஈறுகளையும், பற்களையும் சுத்தம் செய்கிறது. மேலும் சோத்துக் கற்றாழை சாறு, மவுத் ப்ரஷ்னராக செயல்பட்டு, வாயில் துர்நாற்றம் உருவாவதை தடை செய்கிறது. சோத்துக் கற்றாழை சாறு, வாய் அல்சர் மற்றும் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்றவற்றை சரி செய்கிறது. இவ்வாறாக சோத்துக் கற்றாழை சாறு, பற்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து நல்ல ஆரோக்கியத்தை வழங்குகிறது. ஆற்றல் உயர்த்தி சோத்துக் கற்றாழை சாற்றை தினமும் எடுத்துக் கொண்டால், அது சிறந்த ஆற்றலை வழங்கும் ட்ரிங்க் ஆக அமையும். ஏனெனில் இந்த சாற்றில் அடங்கி உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துக்கள் போன்றவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. சோத்துக் கற்றாழை சாற்றை தினமும் எடுத்துக் கொண்டால், அது உடலின் வேலைகளை மேம்படுத்தி, உறுப்புகளின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இவ்வாறாக சோத்துக் கற்றாழை உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த சாற்றில் அதிக அளவிலான சத்துக்கள் அடங்கி உள்ளதால், உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கி, எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. ஆரோக்கியமான தோல் மற்றும் தலை முடி சோத்துக் கற்றாழை சாறு, தோலில் உள்ள செல்களின் பாதிப்புகளை ச ரிசெய்து தோலை பளபளப்பாகவும், அழகாகவும் மாற்றுகிறது. சோத்துக் கற்றாழை சாற்றில் உள்ள சத்துக்கள், தோலின் பாதிப்புகளை சரி செய்வதோடு புனரமைக்கவும் பயன்படுகிறது. சோத்துக் கற்றாழை சாற்றை வழக்கமாக எடுத்துக் கொண்டால், முதிர்ந்த தோற்றத்திற்கான அறிகுறிகளை குறைத்து தோலை இளமையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. இது போலவே தலை முடிக்கும் உதவுகிறது. இந்த சாறு, தலைமுடியில் உள்ள மயிர்த்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. தலைமுடியின் கட்டமைப்பையும் கூட்டுகிறது. இவை அனைத்துமே சோத்துக் கற்றாழையின் சில நன்மைகள்.

Friday, March 7, 2014

மாரடைப்பு வந்தால் ஆபரேஷன் தான் தீர்வா?


மாரடைப்பு வந்து விட்டால், அறுவைச் சிகிச்சை தான் தீர்வு என்பது, சரியான நடைமுறை அல்ல. மருந்து, மாத்திரைகளால், 80 சதவீதம் குணப்படுத்தி விட முடியும். இதய வால்வை மாற்றினாலும், திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். வாழ்நாள் முழுவதும், மாத்திரை சாப்பிட வேண்டிய நிலையும் வராது.
1. மாரடைப்பு என்றால் என்ன; ஏன் ஏற்படுகிறது?
கொழுப்பு அதிகரிப்பு, மது, புகை பழக்கம் காரணமாக இதயம் வீக்கம் அடைந்து, அதன் செயல்பாடு குறைவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. ரத்தக் குழாயில் உள்ள மெல்லிய படலம், மிருதுவான தன்மையுடன் இருக்கும். அது, கொழுப்பு படிந்து, தடிமனாவதால் ரத்தம் உறையும். இதனால் ரத்தக் குழாய் முழுவதும் மூடுவதால், மாரடைப்பு ஏற்படுகிறது.
2. மாரடைப்பு வந்தால், அறுவைச் சிகிச்சை செய்வது தான் தீர்வா?

நிச்சயமாக அப்படி ஒரு நிலை இல்லை. புட்டபர்த்தி சத்யசாய் மருத்துவமனையில், உலகம் முழுவதும் உயர்நிலையில் உள்ள, 120 டாக்டர்கள் பங்கேற்ற மாநாடு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அதில், இதுபற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில், மாரடைப்பு ஏற்படுவோரில், 80 சதவீதம் பேருக்கு, உடனடியாக, ‘ஆஞ்சியோ பிளாஸ்டிக்’ என்ற அறுவைச் சிகிச்சை தேவையில்லை என, உறுதிபடுத்தப்பட்டது. தனியார் மருத்துவமனையில் நுழைந்தாலே, ‘மாரடைப்பு வந்து விட்டதா, உடனே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் உயிர் போய்விடும்’ என, ஒரு பயத்தை ஏற்படுத்துகின்றனர். இது சரியான நடைமுறை அல்ல. டாக்டர்கள், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். 
3. மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்தி விட முடியுமா?
பாதிப்புள்ளோருக்கு மாரடைப்புக்கான காரணம், பாதிப்பின் தன்மை குறித்து கண்டறிய வேண்டும். இ.சி.ஜி., மற்றும் எக்கோ பரிசோதனைகள் செய்து, தேவைக்கேற்ப, மருந்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இரண்டு மாதங்கள் தொடர் சிகிச்சை அளித்தால், குணப்படுத்தி விட முடியும். அப்படியும் சரியாகவில்லை என்ற பட்சத்தில் தான், நாம் அறுவைச் சிகிச்சை என்ற நிலைக்கு செல்ல வேண்டும். மாரடைப்பால் பாதித்தோரில், 20 சதவீதம் பேருக்கு தான் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
4. ‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்றால் என்ன? அதற்கான நவீன சிகிச்சை என்ன?
இதயத்தின் மூன்று ரத்தக் குழாய்களும் அடைக்கப்பட்டு, மயக்க நிலை ஏற்பட்டால், ‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்று பெயர். பாதிப்பின் தன்மை அதிகம். இதற்கு, ஐ.ஏ.பி.பி., (இண்டிரா அயோதிக் பலுான் பம்ப்) சிகிச்சை அளிக்கப்படுகிறது. நரம்பு வழியாக, ஒரு பலுானை, மகா தமனியின் இடது பக்கம் செலுத்தி, ‘ஹீலியம்’ என்ற வாயுவை, அந்த பலுானில் செலுத்தி, இயந்திரத்தில் இணைத்து விடுவர். அந்த இயந்திரம் பலுானை சுருங்கி, விரிவடையச் செய்து, இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும். இதனால், இதயம் ஓய்வெடுப்பதால், அது நலம் பெற்று, மீண்டும் சீராக இயங்க முடியும். இந்த அதிநவீன சிகிச்சையால் மட்டுமே, மிகப்பெரிய மாரடைப்பில் இருந்து, ஒருவரை காப்பாற்ற முடியும். இந்த வசதி, ஒரு சில மருத்துவமனைகளில் தான் உள்ளது. அதிலும், தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் மிகக் குறைவே.
5. மாரடைப்பு வராமல் இருக்க, என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்ய வேண்டும்?
மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டும். அதற்கு யோகா, தியானம் நல்ல பலன் தரும். எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால், இறைச்சி வகைகளை சாப்பிடுவதை கைவிட வேண்டும். உடற்பயிற்சி செய்வதும் அவசியம். ‘நான் அதிகாலையிலேயே வேலைக்குச் சென்று விடுவேன்; உடற்பயிற்சிக்கு எல்லாம் நேரம் கிடையாது’ என, பலர் கூறுகின்றனர். அப்படிப்பட்டவர்கள், இரவு, 9 மணிக்கு கூட உடற்பயிற்சி செய்யலாம். குறைந்த பட்சம், 45 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம். அவ்வாறு செய்வதால், மாரடைப்பு பிரச்னை வர வாய்ப்பில்லை.
6. நடுத்தர வயதினருக்கு எளிமையான மருத்துவ முறை என்ன?
தினமும் பல் விளக்கியதும், ஐந்து பூண்டு பற்களை நன்றாக வறுத்து, (எண்ணெய் சேர்க்காமல்) வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின் டீ, டிபன் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால், கொழுப்பு சேராமல் தடுப்பதோடு, உடல் எடையும் குறையும் என்பதால், பெரிய சிக்கல் ஏதும் வராது.
7. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், உடலுக்கு தீங்கு விளைவிக்காது தானே?
அப்படியெல்லாம் உறுதியாக கூற முடியாது. அதிலும், ‘டிரை கிளிசரேட்’ என்ற, கொழுப்பு உள்ளது. மாரடைப்பு பாதிப்பு உள்ளோர், முடிந்த அளவு, உணவில் எண்ணெய் சேர்ப்பதை குறைக்க வேண்டும். சாலையோரங்களிலும், கண்ட கண்ட இடங்களிலும் விற்கும் உணவுப் பண்டங்களை வாங்கி சாப்பிடுவதை, கைவிட வேண்டும். ஒரே எண்ணெயை திரும்பத் திரும்ப பயன்படுத்துவதால், அதன் வாயிலாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
8. இதய வால்வு மாற்றம் செய்த பெண்கள், திருமணம் செய்து கொள்ளவோ, குழந்தை பெற்றுக் கொள்ளவோ கூடாது என்கின்றனரே… அது உண்மை தானா?
தொண்டையில் வலி, முட்டுக்காலில் வீக்கம், கை மூட்டுகள் வீக்கம் ஏற்பட்டு, வலியுடன் கூடிய காய்ச்சல் (ரூமாட்டிக் காய்ச்சல்) வரும். இதற்கு, இதய வால்வு பாதிப்பு தான் காரணம். இதை, ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை பெற்றால், முற்றிலும் குணப்படுத்த முடியும். அப்படி இல்லை என்றால், இதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி வரும்.
ரத்தம் உறையாமல் இருக்க, ‘அசிட்டோன்’ என்ற மாத்திரை, வால்வு மாற்றம் செய்வோர், வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும். பிளாஸ்டிக் மாற்றம் செய்வோருக்கு, சாப்பிடும் மாத்திரைகளால் சிக்கல் வரும் என்பதால், குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
9. நவீன சிகிச்சை முறையில், வேறு வழியில்லை இல்லையா?
நிச்சயம் உண்டு. திருமண வயது, குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களுக்கு, வால்வு மாற்றும் போது, பிளாஸ்டிக் வால்வை தவிர்த்து, ‘பெரிமவுண்ட்’ எனப்படும், திசு வால்வு பொருத்திக் கொள்ளலாம். இதற்கு, 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அப்படி செய்வோர், வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டியதில்லை என்பதால், திருமணம் செய்து கொள்வதிலும், குழந்தை பெற்றுக் கொள்வதிலும், எந்த சிக்கலும் வராது. இது, நவீன சிகிச்சை. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே செய்யப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை வராது. பொதுவாக அளவான சாப்பாடு, தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு, அதோடு, சரியான துாக்கமும் இருந்தால், எந்த சிக்கலும் இன்றி நிம்மதியாக வாழ முடியும்.
டாக்டர் கே.எஸ்.கணேசன்,
இதய துளைவழி அறுவைச் சிகிச்சை நிபுணர்,
சென்னை அரசு பொது மருத்துவமனை.

எப்போதும் ஃபிட்டாக இருக்க வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்…


ஒரு மனிதனுக்கு பெரிய சொத்தே ஆரோக்கியமான உடல் தான். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதனால் ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் ஓடியாடி வேலை பார்க்க முடியும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நம்மில் பலரும் உடலை வருத்திக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அதன் விளைவாக சின்ன வயதிலேயே பல உடல் நல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். கட்டமைப்பான உடல்
என்பது ஆரோக்கியத்தை குறிக்கும். கட்டமைப்பான உடலைப் பெற, உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் சேர்ந்து செயல்பட வேண்டும். மற்றொரு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது உடற்பயிற்சி. கட்டமைப்பான உடலுக்கு மனதும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. எப்போதும் மாடிப்படிகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் வியக்கத்தக்க உடல்நல நன்மைகள்!! உடலை கட்டுக்கோப்புடன் வைத்து நீண்ட நாள் வாழ்வதற்கு நாங்கள் சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி இதில் அடக்கம். உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள வல்லுனர்கள் கூறும் வீட்டு சிகிச்சைகள் இதோ: சருமத்திற்கு வயதேறாமல் இருக்க கடல் உணவுகள் மீன்களை வாரம் மூன்று முறை உட்கொண்டால், சரும சுருக்கம் மற்றும் தொய்வை 30 சதவீதம் வரை குறைக்கும். அதற்கு காரணம் கடல் உணவுகளில் வளமையான அளவில் புரதம், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது கொலாஜனுக்கு புத்துணர்வு கொடுத்து தசைகளை வளுவளுவென வைத்திருக்கும். சால்மன் மீன்களில் அஸ்டாக்சன்தின் என்ற ஆண்டி-ஆக்சிடன்ட் உள்ளது. இது உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும். மன அழுத்தத்தை நீக்க க்ரீன் டீ க்ரீன் டீயில் உள்ள கூட்டுப்பொருட்கள், இரத்த சர்க்கரையை எரிப்பொருளாக உங்கள் மூளை பயன்படுத்த உதவும். மேலும் ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் ஹார்மோனான என்டோர்பின் உற்பத்தியையும் இது ஊக்குவிக்கும். அதனால் அடுத்த முறை ஆற்றல் திறன் குறையும் போது, ஒரு கப் க்ரீன் டீயை பருகுங்கள். திடமான இதயத்திற்கு வால்நட் தினமும் 5-6 வால்நட்களை உண்ணுமாறு இதய மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது நெஞ்சு வலி ஏற்படும் இடர்பாட்டை பாதியாக குறைக்கிறதாம். ஆயுளையும் 3 வருடங்களுக்கு அதிகரிக்கிறதாம். இந்த மொறுமொறு நட்ஸில், இதயத்தை குணமாக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் வளமையாக உள்ளது. நல்ல நினைவாற்றலுக்கு மஞ்சள் உங்கள் உணவுகளில் மஞ்சளை சேர்த்துக் கொண்டால், உங்கள் நினைவாற்றல் குறைந்தது 30 சதவீதமாவது அதிகரிக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் மஞ்சளில் உள்ள கர்குமின். இது மூளைக்கு புத்துணர்வை உண்டாக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாகும். சுவாசப்பயிற்சியால் மன அழுத்தத்தை நீக்குங்கள் வயிறு மூலமாக சுவாசித்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை நீக்குங்கள். 6 எண்ணும் வரை உங்கள் மூக்கின் வழியாக மெதுவாவும் ஆழமாகவும் மூச்சை உள்ளிழுக்கவும். அப்படி செய்யும் போது வயிற்று பகுதி அமைதி பெற்று விரிவடையும். 4 எண்ணும் வரை அப்படியே இருந்து, பின் வாயின் வழியாக மெதுவாக மூச்சை வெளியேற்றவும். 7 எண்ணும் வரை இதனை செய்யவும். நன்றாக உணரும் வரை இதனை தொடர்ந்து செய்யுங்கள். தூக்கத்தை கொண்டு வலிகளை குறையுங்கள் உங்களுக்கு அடிக்கடி தலைவலி, முதுகு வலி, மூட்டு வலி அல்லது இதர வலிகள் ஏற்படுகிறதா? கவலையை விடுங்கள், போய் தூக்குங்கள். நன்றாக தூங்கினால், ஒரு மாதத்தில், உங்கள் அசௌகரியங்கள் அனைத்தும் பாதியாக குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது. தூக்கம் உங்கள் வளர்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கும். அதனால் அது அழற்சியை குறைத்து, பாதிப்படைந்த திசுக்களை வேகமாக ஆற வைக்கும். இரத்த கொதிப்பை கட்டுப்படுத்த லவங்கப்பட்டை ஆராய்ச்சியாளர்களின் படி, உங்கள் உணவில் தினமும் 1/2 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்துக் கொண்டால், அது உங்கள் இரத்த அழுத்தத்தை 29% அல்லது அதற்கு மேலாகவும் கட்டுப்படுத்தும். உங்கள் சிறு குடலில் கார்ப் உறிஞ்சுவதை குறைக்கும். காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணமயமான காய்கறிகளை அதிகமாக உட்கொண்டால் வியாதிகளில் இருந்து அது நம்மை பாதுகாக்கும். கேரட், மிளகு மற்றும் வெண்டைக்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதிக வண்ணம் இருந்தால் அதிக நன்மை. காயின் நிறமி சுவாச குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் கிருமிகளால் உள்ளே நுழைய முடியாது. மேலும் நோய் எதிர்ப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். கிருமிகளை கொல்வதற்கு தேன் பாய்ஸ்சுரைஸ் செய்யப்படாத தேனில் இயற்கையான ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் குணப்படுத்தும் என்சைம்ஸ் அடங்கியுள்ளது. அதனால் நோய்வாய்பட்டிருக்கும் போது, அதனை உட்கொண்டால், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே குணமாகும். சைனஸ் பிரச்சனை மற்றும் அனைத்து வகையான சளி பிரச்சனைகளை உண்டாக்கும் கிருமிகளையும் இது கொள்ளும்.

வால்நட் எண்ணெயின் வியக்கத்தக்க அழகு நன்மைகள்!


ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ள ஒரு பொருளாக விளங்குகிறது வால்நட். காலம் காலமாக அதனை நட்ஸ் வகையாக மக்கள் உட்கொண்டு வருகின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னிலிருந்து, வால்நட் எண்ணெயால் உங்கள் சருமம், தலைமுடி மற்றும் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகளை கண்டு, பயன்படுத்தி வருகிறோம். சில காலங்களுக்கு முன்பிருந்தே, அதன் பயன்பாட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ள அது அனைத்து மக்களுக்கும்
பல பயன்களை அளித்து வருகிறது. குறிப்பாக அழகை பராமரிக்க வால்நட் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக சரும பிரச்சனைகள் மற்றும் கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் உதவியாக உள்ளது. இதுப்போன்று வேறு: ஆலிவ் எண்ணெயின் அற்புதமான அழகு நன்மைகள்!!! ஆகவே இப்போது வால்நட் எண்ணெயால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கப் போகிறோம். அதன் நன்மைகளை பற்றி அறிந்து கொள்ள மேலும் படியுங்கள். வறட்சியைத் தடுக்கும் தினமும் இரவில் வால்நட் எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் வறட்சியானது நீங்கி, சருமம் பொலிவோடு அழகாக இருக்கும். சரும சுருக்கத்தை எதிர்க்கும் வால்நட் எண்ணெய் தோலின் சுருக்கத்தை நீக்குகிறது. இது எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது.இதை தொடர்ந்து தடவி வந்தால், இது உங்களுக்கு நல்ல வழியில் உதவி, குறித்த காலத்துக்குள் தோல் சுருக்கத்தை மறைய செய்கிறது. சரும தொற்றுக்கான தீர்வு நாம் அனைவருமே பூஞ்சைகளின் தாக்கத்தை அனுபவித்திருப்போம். அது நம்மை நிலை குலையச் செய்யும். இது போன்ற தொற்றுகளுக்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும். பூஞ்சைகளின் தொற்றுக்கு வால்நட் எண்ணெய் மிகவும் நல்லது. தோல் தடிப்பு மற்றும் அலர்ஜிக்கு வைத்தியம் சொரியாசிஸ் என்ற இந்த அலர்ஜி நோயால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டு திகிலடைந்திருப்போம். ஆனால் இதை வால்நட் எண்ணெய் மிக அழகாக குணப்படுத்தும். அதற்கு இதை சாதாரணமாக குளிக்கும் போது குளிக்கும் நீரில் சேர்த்து பயன்படுத்தலாம். கருவளையத்தை போக்கும் தற்போது அனைவரும் சந்திக்கும் அழகு பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையத்தை போக்க, டீ பேக்குகளை வைப்போம். இருப்பினும் எந்த பலனும் கிடைக்காதவர்கள், வால்நட் எண்ணெயைக் கொண்டு கண்களை மசாஜ் செய்து வர உடனே கருவளையம் நீங்கும். சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். இது முதுமையை எதிர்த்து போரிடுகிறது. மேலும் இது சருமத்திற்கும் மிகவும் நல்லது. முடி கொட்டுதலை தடுக்கிறது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, தலை வாரும் போது, அதிக எண்ணிக்கையிலான முடி கொட்டுதலை விரும்ப மாட்டார்கள். முடி கொட்டுதல் ஒரு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் வால் நட் எண்ணெய், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலத்தின் உதவியால், முடி கொட்டுதலை நிறுத்துகிறது. இந்த கொழுப்பு அமிலம், செல்களின் பாதிப்பைத் தடுக்கிறது. பொடுகை தடுக்கிறது வால்நட் எண்ணெய் பொடுகை அழிப்பதிலும், சிறந்து விளங்குகிறது. இது தலை சருமத்தை சுத்தப்படுத்தி, அதில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. இதை வழக்கமாக தினமும் உபயோகித்தால் நல்ல தீர்வை பெற முடியும். இது தலை சருமத்திலுள்ள தோலடுக்குகளை சுத்தப்படுத்தி, பொடுகை வர விடாமல் தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்தும் வால்நட் எண்ணெயில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் அது தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்தும். அணுக்களின் புத்துயிர்ப்புக்கு பொட்டாசியம் பெரிதும் உதவுவதால், அது முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

நீங்கள் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?


‘செய் அல்லது செத்து மடி’ என்னும் அளவிற்கு நம் தலைக்கு மேல் பிரச்சனைகள் உட்கார்ந்திருக்கும் சூழல்களை நாம் எதிர்கொள்ளாத நாட்கள் இருப்பதில்லை. ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் போது நாம் செய்யக் கூடிய விஷம் அதை சமாளிப்பதோ அல்லது அந்த இடத்தை விட்டு நழுவி ஓடி விடுவதோ தான். வேகமான வாழ்க்கை முறைகளால் நாம் அனைவரும் மன அழுத்தத்தை அனுபவிப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால் பிரச்சனைகள் நம்மைவிட்டு போவதில்லை. இவை மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. இதை சிலர் மறைத்து வாழ்கின்றனர். மற்றும் சிலர் அதை மேற்கொண்டு அதிலும் ஆக்கப்பூர்வமாக வாழ முற்படுவர். இதுப்போன்று வேறு: மன அழுத்தத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவுகள்!!! ‘மற்றவர்களிடம் நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்’ என்று
நீங்கள் பதில் அளிக்கும் போது உங்களின் மன அழுத்தத்தின் நிலையை அறிந்து கொள்ளுங்கள். அதற்கான காரணங்களையும் அறிய முற்படுங்கள். மன அழுத்தம் உடல் நலத்தை பாதிக்கும் முன் இதற்கான முயற்சிகளை செய்வது சிறந்தது. அந்த வகையில் உங்களுக்கு மன அழுத்தம் உள்ளதா, இல்லையா என்பதை அறிய கீழ்கண்ட 10 அறிகுறிகளை கவனிக்கலாம்! எடை அதிகரித்தல் ஆம்! அதிகமாக எடையை ஏற்றிக்கொள்வது உங்களுக்கு பிடிக்காது தான். அப்படி என்றால் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ முயற்சியுங்கள். அதிக அளவு மன அழுத்தம் தேவைக்கு அதிகமான கொழுப்பை உடம்பில் சேர வைக்கிறது. நீங்கள் ஒல்லியாக இருந்தாலும் குண்டாக இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும். மற்றும் பலர் மிகுந்த மன அழுத்தத்தின் போது அதிகம் சாப்பிட தூண்டப்படுவார்கள். இதனால் அதிக கலோரிகள் உடலில் சேருகிறது. தசை பிடிப்பு மன அழுத்தத்தின் போது சுரக்கும் ஹார்மோன்கள் உங்களது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றன. இதனால் இதய துடிப்பு அதிகரித்து தசைகளை இறுகி விடுகின்றன. அது மட்டுமில்லாமல் வேலையில் அதிக பதற்றம் இருந்தாலும் மன அழுத்தத்தினால் தசைகளின் வலி மேலும் அதிகரிக்கும். வயிற்று வலி வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் உணர்வதும், மிகுந்த உற்சாகம் மற்றும் நரம்பு தளர்ச்சி ஆகியவைகளும் மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகளாகும். வயிற்றுக்கும் மூளைக்கும் நிறைய சம்மந்தம் உள்ளது என்று ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. ஹார்வார்ட் மருத்துவ பள்ளியின் அறிக்கையின் படி காஸ்டிரோ-இன்டஸ்டைன் தொடர்புடைய பிரச்சனைகளான மலச் சிக்கல், வயிற்று எரிச்சல் மற்றும் அமிலத்தன்மை ஆகியவை மன அழுத்தத்தினால் மேலும் அதிகரிக்க கூடும். முடி உதிர்தல் நெடுங்காலமாக இருக்கும் மன அழுத்தம் ஆன்டிரோஜின்களை அதிகமாக சுரக்கச் செய்கின்றது. இவை சுரப்பிகளின் முடி வேர்களில் தலையிட்டு தற்காலிக முடி உதிர்வை ஏற்படுத்துகின்றன. இவை 3-6 மாதங்களுக்கு நீடிக்கலாம். நல்ல உணவு முறைகளை மேற்கொண்டு ஓய்வு எடுத்து இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்கலாம். மறதி தினமும் செய்ய வேண்டிய வேலைகளில் நம் நினைவுப் பேழையிலிருந்து தவறும் போது மன அழுத்தம் அங்கே உள்ளது என்பதை உணரலாம். இத்தகைய மன உளைச்சலில், மிகுந்த அழுத்தத்துடன் இருக்கும் போது கார்டிசால் என்ற ஹார்மோன்கள் அதிகளவு வெளியாகின்றன. மூளையின் பின்புறத்தில் உள்ள மேட்டுப் பகுதி ஹிப்போகாம்பஸ் நினைவாற்றலை கட்டுப்படுத்தும் பாகமாகும். மன அழுத்தம் ஏற்படும் போது சுரக்கும் ஹார்மோன் இந்த பகுதியின் செயல்பாட்டை மங்கச் செய்கின்றது. இதனால் மூளையின் நினைவுகள் பாதிக்கப் படுகின்றன. மன அழுத்தத்தின் காரணத்தை அறிந்து அதை சரி செய்தால் உங்களது நினைவுகள் திரும்ப கிடைக்கும். மூளையை எப்படி நிதானத்திற்கு கொண்டு வருவது என்பதை குறித்து நன்கு படித்து அறிந்து கொள்ளுங்கள். மாதவிடாய் கோளாறுகள் பெண்களுக்கு வரும் மன அழுத்தம் ஹார்மோன்களை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. முக்கியமாக பிட்யூட்டரி சுரப்பியை கட்டுப்படுத்தி அதன் மூலம் கருப்பை, அட்ரீனல் மற்றும் தைராய்ட் சுரப்பிகளை இந்த ஹார்மோன்கள் சரியாக வேலை செய்ய விடுவதில்லை. இதனால் பெண்களின் வழக்கமான மாத விடாய் காலம் மாறுபடவும் அல்லது இது தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. கண் இமை துடித்தல் கண் இமை வேகமாக துடித்தால் அதை மன அழுத்தத்தின் ஒரு அறிகுறி என்று சொல்லலாம். இதற்கான உண்மையான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. அடுத்த முறை இப்படி ஆகும் போது கண்களை மூடி மனதில் உள்ள எண்ணங்களை எல்லாம் தவிர்த்து, ஒருமுறை ஆழ்ந்து மூச்சை இழுத்து ஓய்வெடுங்கள். இதை சில முறைகள் செய்தால் கண் இமை துடிப்பது தானாக நின்று விடும். இதை செய்யும் போது நல்ல நிதானமும் கிடைக்கும். பருக்கள் நீடித்த காலமாக இருக்கும் மன அழுத்தம் நமது உடலை முழுதும் பாதிக்கின்றது. உங்கள் சருமமும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிக அளவு ஆன்டிரோஜன்கள் சுரக்கும் போது இத்தகைய சருமக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அது மட்டுமல்லாமல் உடல் சீராகும் நேரமும் இதனால் அதிகரிக்கிறது. இது நீங்கள் நல்ல ஓய்வெடுக்கும் போது தான் பருக்களும் நீங்க வாய்ப்புகள் கிட்டும். இவ்வாறு பருக்கள் வருவதற்கான காரணங்கள் குறித்து நாங்கள் தயாரரித்துள்ள மெகா கைடை பார்த்து, அதற்கான சிகிச்கைள், மருந்தகள் மற்றும் வீட்டிலேயே நிவாரணம் பெறும் வழிகளை அறிந்து கொள்ளுங்கள்.

எப்போதும் மாடிப்படிகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் வியக்கத்தக்க உடல்நல நன்மைகள்


இப்போதெல்லாம் லிஃப்ட்டுகள் வேலை செய்யவில்லை என்றால் மட்டுமே அனைவரும் படிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் லிஃப்ட்களுக்கு பதிலாக படிகளை பயன்படுத்தினால் தான் நேர்மறையான பல பயன்களை நாம் பெறுகின்றோம். அனைத்து வகையான பயிற்சியை விட, இது மிகவும் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது. ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல், டென்னிஸ் மற்றும் இதர பயிற்சிகளில் எவ்வளவு நேரம் செலவிட்டாலும், உடலில் உள்ள கலோரிகளை எரிக்கவும் இதயத்தை திடப்படுத்தவும் படி ஏறுவது தான் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரியப்படுத்தியுள்ளது. அதனால் படி ஏற தொடங்கி அதன் பயனை பெற்றிடுவோம். வண்டியை ஓரங்கட்டிட்டு, நடராஜா சர்வீஸூக்கு மாறினா… உடம்புக்கு எவ்வளவு நன்மை தெரியுமா!!! இதயம் மற்றும்
நுரையீரலுக்கு நல்லது படி ஏறுதல் உங்களை பல விதத்தில் காக்கும். உதாரணத்திற்கு உங்கள் இதயம் மற்றும் நுரையீரலை பாதுகாப்பாக வைத்திடும். திடமான நுரையீரல், அதிக அளவிலான ஆக்சிஜனை உள்ளிழுக்க உதவும். அதே போல் திடமான இதயம், ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை தசை நார்களுக்கு வேகமாக எடுத்துச் செல்ல உதவும். அதனால் நீங்களும் நன்றாக உணர்வீர்கள். உடல் எடை குறையும் படி ஏறுவதால் உடல் எடை குறைந்து, உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படும். எளிய உடற்பயிற்சி படி ஏறுதல் என்பது செலவில்லாமல் செய்யக்கூடிய உடற்பயிற்சியாகும். இதனை செய்வதற்கு பயிற்சியாளர் கட்டணம், கருவிகள் வாங்குதல், என்று பணம் செலவிட தேவையில்லை. படிகள் உள்ளவரை இந்த பயிற்சியை நீங்கள் செய்து கொண்டே இருக்கலாம். ஆயுளை அதிகரிக்கும் படிகள் ஏறுவதால் உங்கள் ஆயுள் அதிகரிக்கும். அதே போல் உங்கள் தசைகள் திடமாகி வலுவடையும். அதனால் காயங்கள் ஏற்படும் இடர்பாடும் குறையும். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்க்கையின் தரத்தை பாதிக்கும் பல விதமான நோய்கள் ஏற்படும் இடர்பாட்டை குறைக்கும். கால்களை வலுவாக்கும் உங்கள் கால்கள் மற்றும் பின்புறத்தின் தசைகளின் திடத்தை மேம்படுத்தும். மன அழுத்தத்தை தடுக்கும் தினமும் மாடிப்படிகளைப் பயன்படுத்தினால், மன அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கலாம். நல்ல தூக்கம் தினமும் படிகளை பயன்படுத்தும் போது, இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம். கர்ப்பிணிகளுக்கான சிறப்பான உடற்பயிற்சி மாடிப்படிகளை ஏறுவது, மருத்துவரின் அறிவுரையுடன் கர்ப்பிணி பெண்களுக்கான சிறந்த உடற்பயிற்சி என்றும் கூறலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை ஊக்குவித்து, டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் தீவிரமான பிற நோய்கள் ஏற்படும் இடர்பாட்டை குறைக்கும். நேரம் மிச்சம் லிஃப்ட்களில் போவதை தவிர்த்து விட்டு, படிகளை பயன்படுத்தினால், அது உடல்நலத்திற்கு நல்லது மட்டுமல்லாது சில நேரங்களில், உங்கள் நேரத்தை சேமித்து, ஆற்றல் திறன் பயன்பாட்டையும் குறைக்கும். குறிப்பாக கூட்டம் அதிகமாக நேரத்தில் லிஃப்ட்களை பயன்படுத்தினால் உங்கள் தளத்திற்கு வர நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். மாறாக படியை பயன்படுத்தினால் வேகமாக வந்து சேரலாம்.

அழகைத் தரும் கண்களில் ஏற்படும் அரிப்புகளை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்!!!



நம்மில் பலருக்கு ஒரு கட்டத்தில் கண்களில் அரிப்புகள் ஏற்படுவதுண்டு. இது ஒரு பொதுவான பிரச்சனையே. சுற்றுச்சூழல் மாசு, தூசி மற்றும் அழுக்குகளின் தாக்கம், கண் தொற்றுக்கள் மற்றும் அலர்ஜிகள் போன்ற நிலைகளால் இது மிகவும் மோசமான நிலையை அடையும். கண்கள் மற்றும் அதனை சுற்றி ஏற்படும் இந்த அரிப்பு, நம்மை உடனே சொறிவதற்கு தூண்டும். ஆனால் அப்படி செய்யும் போது அவை மீண்டும் மீண்டும் வரவே செய்யும். கண் எரிச்சல் அதிகமாக இருக்கா? இத ட்ரை பண்ணுங்க… ஆனால் கண் ஏற்படும் அரிப்புகளில் இருந்து உடனடி நிவாரணம் பெற சில வீட்டு வைத்தியங்கள் இருக்கிறது. வீட்டிலேயே
இருக்கும் அவ்வகை பொருட்களை கொண்டு, கண் அரிப்புக்களை குணப்படுத்த முயற்சி செய்து பாருங்களேன். சுவாரஸ்யமான ஒன்று: கண்கள் எதுக்கு அடிக்கடி துடிக்குதுன்னு தெரியுமா? குளிர்ந்த ஒத்தடம் கண் அரிப்புகளில் இருந்து உடனடி நிவாரணம் பெற குளிர்ந்த ஒத்தட சிகிச்சை முறையை பின்பற்றலாம். ஒரு பருத்து துணியை மிகவும் குளிர்ச்சியான நீரில் நனைத்து கண்களின் மீதும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் மீதும் ஒத்தடம் கொடுங்கள். மாற்று வழியாக, சீமைச்சாமந்தி தேநீர் பைகளை கூட குளிர்ந்த ஒத்தடத்திற்கு பயன்படுத்தலாம். அப்படி செய்யும் போது கண் அரிப்புகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக சீமைச்சாமந்தி தேநீர் பைகளை வாங்கி அதனை குளிர்சாதன பெட்டியில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு வைத்திடுங்கள். பின் அதனை கண்களின் மீது 5-10 நிமிடங்கள் வரை வைத்திடுங்கள். இதனை தினமும் 3-4 முறை செய்து வந்தால் வேகமான நிவாரணி கிடைக்கும். அதுமட்டுமின்றி, கண்களும் பொலிவோடு இருக்கும். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் என்பது இயற்கையான குளிர்ச்சி பொருளாகும். அதன் உறுத்தல் நீக்கி குணங்கள் எரிச்சல் மற்றும் உறுத்தல்களை ஆற்றும். கண் அதைப்பு, சிவப்பாகுதல், வீங்குதல் மற்றும் அழற்சிகள் போன்றவைகளால் ஏற்படும் கண் அரிப்பை நீக்கவும் இந்த குணங்கள் உதவுகிறது. ஒரு வெள்ளரிக்காயை எடுத்து, அதை நீரில் நன்றாக கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கிய பின், 10-15 நிமிடங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து விடவும். பின் அதனை வ்பெலியில் எடுத்து கண்களின் மீது வைத்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் 4-5 முறை செய்தால் நல்ல பயனை அடையலாம். ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டர் என்பது உங்கள் அழகை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கண்களின் அரிப்புக்கும் நல்ல நிவாரணியாக விளங்கும். ரோஸ் வாட்டரில் கண்களை தினமும் இரண்டு முறையாவது அலசுங்கள். இல்லையென்றால் ரோஸ் வாட்டரை பாதிக்கப்பட்ட கண்களில் நேரடியாக ஊற்றினாலும் உடனடி நிவாரணி கிடைக்கும். குளிர்ந்த பால் சமயலறையில் இருக்கும் குளிர்ந்த பாலை கொண்டும் கண் அரிப்புகளை நீக்கலாம். அதற்கு ஒரு பஞ்சு உருண்டையை குளிர்ந்த பாலில் நனைத்து, அதனை கண்களை சுற்றி ஒத்தி எடுக்கவும். பஞ்சு உருண்டையை கண்களின் மீது வைத்தால், குளிர்ந்த ஒத்தடம் போலும் அது செயல்படும். தினமும் காலை, மாலை என இருமுறை இதனை முயற்சி செய்யுங்கள். காய்கறி சாறு கண்களில் ஏற்பட்டுள்ள அரிப்புகளை நீக்க சுலபமான வீட்டு சிகிச்சைகளில் ஒன்றாக விளங்குகிறது பச்சை காய்கறி சாறு. முக்கியமாக கேரட் மற்றும் கீரை சாறுகள் சிறப்பாக செயல்படும். 2 கேரட்டை அரைத்து அதன் சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். எரிச்சலுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை அதனை இரண்டு அல்லது அதற்கு மேலான முறையிலும் குடியுங்கள். உருளைக்கிழங்கு கண்களில் ஏற்படும் அரிப்புகளை நீக்க உருளைக்கிழங்குகளையும் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய் சிகிச்சையை போலவே, உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி அதனை 1-2 மணிநேரத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைத்திடுங்கள். இனி இந்த துண்டுகளை கண்களின் மீது வைத்து 10-15 நிமிடம் வரை ஓய்வாக இருங்கள். சோத்துக் கற்றாழை கண்கள் பிரச்சனையை தீர்க்கும் எளிய சிகிச்சைகளில் ஒன்றாக விளங்குகிறது சோத்துக் கற்றாழை. சோத்துக் கற்றாழை ஜூஸை தயார் செய்து அதனை தேன் மற்றும் எல்டெர்பெர்ரி மலர் தேநீருடன் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கொண்டு தினமும் இரண்டு முறை கண்களை கழுவுங்கள்.

Sunday, March 2, 2014

நீரும்... ஆரோக்கிய வாழ்வும்...! ஹெல்த் ஸ்பெஷல்!!


நீர் இன்றி அமையாது உலகு. நம் அன்றாட வாழ்வில் குளிப்பது, துவைப்பது, சமைப்பது என நீரின் அவசியம் என்ன என்பது நமக்குத் தெரியும். ஆனால், நம் ஆரோக்கியமான வாழ்வுக்கு நீரின் அவசியம் பற்றிய விழிப்பு உணர்வு போதுமான அளவு இல்லை. 'ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்?' என்ற ஒரு கேள்விக்குக் கூட நம்மில் பலராலும் எளிதில் பதில் சொல்ல முடியாது. தனி மனித ஆரோக்கியத்தில் தண்ணீர், எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி சிறுநீரகவில் மருத்துவர் சேகரிடம் கேட்டோம்.

'நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் நீரைச் சார்ந்தே உள்ளன. நம் உடலில் 60 சதவிகிதம் நீர்தான் உள்ளது. உடலில் நீரின் அளவு மாறுபடும்போது, அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் 85 சதவிகிதம் நீர்தான் உள்ளது. அதனால்தான் உணவைக் காட்டிலும் நீர் மிகவும் அவசியமானது என்கிறோம். 

சுவாசம், வியர்வை, சிறுநீர், செரிமானம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளால் நீர் இழப்பு ஏற்படுகிறது. இதைச் சரிக்கட்ட, இந்தச் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க, அன்றாடம் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். நீர்ச் சத்து அதிகம் உள்ள காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவு செரிமானம் ஆக, செரிமானத்தில் இருந்து ஊட்டச் சத்துக்கள் கிரகிக்க, உடலின் வெப்பநிலையைத் தக்கவைக்க, சீரான ரத்த ஓட்டம் இருக்க, செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவு சென்று சேர, திசுக்களில் உருவாக்கப்படும் நச்சுக்களை வெளியேற்ற என நீரின் பயன்பாடு நீண்டுகொண்டே செல்லும். 

உடலில் போதுமான நீர்ச் சத்து இல்லை என்றால், ஏற்படக்கூடிய மிக மோசமான பிரச்னை, டிஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு. நீரிழப்பால், மூட்டு, வயிறு, முதுகுப் பகுதியில் வலி என உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பை உண்டாக்கி, மனநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். சரியான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளவில்லை எனில், அது நம்முடைய உடலின் முழு இயக்கத்தையும் பாதிக்கும்.
ஒவ்வொருவரின் உடல் உழைப்பைப் பொருத்து, நீரின் தேவை அமையும். ஆரோக்கியமான வாழ்வுக்கும், அன்றைய தினத்தை நல்லபடியாகக் கடப்பதற்கும் ஒரு நாளைக்கு, இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. 

நாம் வசிக்கும் பகுதி வெப்ப மண்டலம் என்பதால், இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் (எட்டு கிளாஸ்) தண்ணீர் என்பது கட்டாயம். போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறோமா என்பதை, சிறுநீரின் நிறத்தைக் கொண்டே முடிவு செய்துவிடலாம். 

சற்று மங்கலான வெள்ளை நிறத்தில் சிறுநீர் இருந்தால், போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறோம் என்று அர்த்தம். 

மஞ்சள் நிறத்தில், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், நாற்றத்துடன் இருந்தால், இன்னும் அதிக அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.

நீர்ச் சத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?
காலையில் எழுந்ததும், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், தூங்கச் செல்வதற்கு முன்பும் தண்ணீர் அருந்த வேண்டும்.

 உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன்பு, செய்து முடித்த பிறகு தண்ணீர் அருந்த வேண்டும்.

தாகம் எடுக்கிறதோ, இல்லையோ, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

 சாப்பிடுவதற்கு முன்பு, பயணத்தின்போது தண்ணீர் குடிக்க வேண்டும்.
 தொடர்ந்து தண்ணீர் குடிக்கப் பிடிக்கவில்லை என்றால், தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறுவிட்டு அருந்தலாம். புத்துணர்வு கிடைக்கும். 

நீர்ச் சத்து நிறைந்த காய்கனிகள்
 வெள்ளரிக்காயில், 96 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது. சுரைக்காய், முள்ளங்கி, செலரியில் 95 சதவிகிதமும், தக்காளியில் 94 சதவிகிதம், முட்டைக்கோஸில் 93 சதவிகிதம், காலிஃபிளவர், சிவப்பு கோஸ், கீரையில் 92 சதவிகிதமும் நீர்ச் சத்து உள்ளது.

 தர்பூசணி, ஸ்ட்ராபெரி பழங்களில் 92 சதவிகிதமும், திராட்சையில் 91 சதவிகிதம், அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் 88 சதவிகிதமும், ஆப்பிளில் 84 சதவிகிதம், வாழையில் 74 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது.

பச்சைக் காய்கறி, பழங்களை ஒரு நாளைக்கு ஐந்து கப் வீதம் எடுத்துக்கொள்ளலாம். இது புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும். உடலில் நீர்ச் சத்தை நிலைத்திருக்கச் செய்யும்.