Sunday, March 2, 2014

முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!!! முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம். வீட்டில் முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்? சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும். என்ன நன்மை? * முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். * கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும். * ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும். * மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும். * பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம். * ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும். ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

'பொதுவாக உடல் பருமனை, குழந்தையின் உயரம் மற்றும் எடையைவைத்தே கூற முடியும். ஒவ்வொரு வயதுக்கும் ஒரு வளர்ச்சி அட்டவணை உண்டு. எனவே அதை முதலில் கணக்கில்கொள்ள வேண்டும். 

தவறான உணவுப்பழக்கங்கள் மற்றும் உடல் உழைப்புக் குறைவு போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படுகிறது. உணவைப் பொறுத்தவரை, கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட் போன்றவற்றை முழுவதுமாக நிறுத்த வேண்டும். குளிர் பானங்கள், கடைகளில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை முடிந்த அளவு தவிர்த்துவிட வேண்டும்.

மாறாக பச்சைக் காய்கறிகள், பழங்கள், குறிப்பாக ஆரஞ்சு போன்ற நார்ச் சத்துள்ள பழங்கள், சாலட் வகைகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவுக்கு முன்பே பழம், காய்கறிகளை உட்கொண்டு, பிறகு உணவை எடுத்துக்கொள்வது இன்னும் சிறந்தது. அரிசி உணவைக் குறைத்து, கோதுமையை அதிகமாகச் சேர்க்க வேண்டும். 

அசைவத்தில் மட்டனைத் தவிர்க்க வேண்டும். சிக்கன், மீன் போன்றவற்றைக்கூட, குழம்பில் சேர்க்கலாம். ஆனால், எண்ணெயில் பொரிக்கக் கூடாது. உருளைக்கிழங்கு, முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டும். கொழுப்பு எதில் இருந்தாலும் அதை அறவே தவிர்க்க வேண்டும். பாக்கெட்டுகளில் விற்கும் சிப்ஸ்தான் இந்தப் பிரச்னைக்கு முதல் எதிரி. எனவே, அதை வாங்கிக் கொடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
இந்த வயதில் ஜிம் உடற்பயிற்சி தேவையற்றது. அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுக்களில் தினமும் ஓரிரு மணிநேரம் விளையாட விட்டாலே போதும். கலோரிகள் எரிக்கப்படும். 

தினமும் காலை அல்லது மாலை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம். பள்ளிகள், கடைகளுக்கு நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ அனுப்பலாம். 

முக்கியமாக, கணினி முன் விளையாடுவது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து டிவி பார்ப்பது போன்றவற்றை முடிந்தவரை தடுக்க வேண்டும்.

வேறு ஏதேனும் நோய்களின் அறிகுறியாக அல்லது மரபணு ரீதியான காரணங்களால்கூட, திடீர் மற்றும் நீண்ட கால உடல் பருமன் வரலாம். அதற்கு, கண்காணிப்புடன் கூடிய ஆலோசனை தேவை. 

ஒரு நல்ல மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் சென்று, உடல் பருமனுக்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது.

No comments: