Sunday, October 27, 2013

உப‌யோக‌முள்ள‌‌ இய‌ற்கை வைத்திய குறிப்புகள்!!!

அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு 50 கிராம் ஓமத்தை ஒரு சட்டியில் வறுத்து அதை முறத்தில் கொட்டித் தேய்க்க உமி நீங்கிச் சுத்தமாகும். அதைப் புடைத்து அம்மியில் வைத்து அத்துடன் அதே அளவு பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்து அதில் சிறிதளவு காலை மாலை இரு வேளை வீதம் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர வயிறு குணமாகும். உப்புசமும் நீங்கும்.

முருங்கை இலையை உப்புச் சேர்த்து லேசாக நசுக்கி கசக்கிப் பிழிந்து வரும் சாற்றில் இரண்டு ஸ்பூன் சாப்பிட உடனே வயிற்றுவலி ந“ங்கும்.

வெந்தயத்தை ஓர் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்து தயிரில் சேர்த்துச் சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.

சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 10 கிராம், பனை வெல்லம் 5 கிராம் இவற்றில் சுக்கைத் தோல் நீக்கிவிட்டு பின் மற்ற சரக்குகளையும் தூளாக்கி அத்துடன் பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக் காலையில் சிறிதளவு உள்ளுக்கு அருந்தி வர அஜீரண சம்பந்த வயிற்றுவலி குணமாகும்.

குழந்தை வயிற்று வலியால் துடித்தால் வசம்பு சுட்ட சாம்பலுடன் சிறிது தேன் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி விடுவதோடு, வசம்பு சுட்டகரியைச் சிறிது நீர்விட்டு குழைத்து வயிற்றில் கனமான பற்று போட்டுவந்தால் குணமாகும்.

வயிற்றுக் கடுப்பு அதிகமாக இருக்குமானால் தொட்டால் சிணுங்கி செடியின் இலையை அரைத்து சுண்டைக்காயளவு தயிரில் கலந்து சாப்பிட குணமாகும்.

சிறிது பெருங்காயத்தை பொரித்து நீர் மோரில் சேர்த்து அத்துடன் கறி மஞ்சள் தூளில் ஒரு சிட்டிகை போட்டு கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் வாயு சம்பந்த வயிற்றுவலி நீங்கும்.

இஞ்சிச்சாறுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, கல் உப்பைப் பொடித்துச் சேர்த்துக் குடித்தால், செரிமானக் கோளாறு சட்டென சரியாகும்.

கால் ஆணி சரியாக ஒரு எளிய வைத்தியம்:

தக்காளியை இரண்டாக வெட்டி, அதன் சதைப் பகுதியை ஆணியின் மேல் வைத்து, மீதி அரை தக்காளியால் அதை மூடி, ஒரு துணியால் கட்டிக் கொண்டு தூங்கவும். கூடவே ஓமத்தை பொடி செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து, 1 டீஸ்பூன் அளவு இரவில் சாப்பிடவும். 1 வாரம் இரண்டையும் செய்து வர, கால் ஆணி குணமாகும்.

மணத்தக்காளி வாய் புண்ணுக்கு நல்லது எனத் தெரியும். மணத்தக்காளிக் கீரையை காரமில்லாமல் பச்சைப் பருப்புடன் சேர்த்து சமைத்தோ, கீரையை லேசாக வதக்கி, வதக்கிய மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தோ சாப்பிட, நீண்ட நாள் இருமலால் உண்டான தொண்டைப் புண்ணும், ரணமும் ஆறும்.

இஞ்சியைக் கழுவி, தோல் நீக்கி சின்னத் துண்டுகளாக வெட்டவும். சுத்தமான தேனில் அதை நான்கைந்து நாட்கள் ஊற வைக்கவும். தினம் இதில் ஒரு துண்டு சாப்பிட்டு வர, சருமச் சுருக்கங்கள் நீங்கி, இளமை ஊஞ்சலாடும்.

முட்டைக்கோஸை மிக்சியில் போட்டு, தண்ணீர் விடாமல் பொடியாகும்படி சுற்றவும். அத்துடன் கொஞ்சம் உப்பும் மிளகுத்தூளும் கலந்து, கொஞ்சம், கொஞ்சமாகச் சாப்பிட, எப்படிப்பட்ட கபமும் காணாமல் போகும். முட்டைக்கோஸ் வேக வைத்த தண்ணீரை வெதுவெதுப்பாகக் குடிப்பதும் பலன் தரும்.

திடீரென காது வலிக்கிறதா? பூண்டை உரித்து, ஒரு மெல்லிய துணியில் சுற்றி, வலிக்கிற காதுக்குள் 1 மணி நேரம் வைத்திருக்கவும். 2-3 நாட்களுக்கு அப்படிச் செய்தால், காது வலி சரியாகும். சீழ் வடிவதும் நிற்கும்.

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

* கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

* சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

* பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

* எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

* நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

* சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

* நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்

பித்தக் கோளாறுகள் அகல..... உணவே மருந்து!!!!

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்! பழங்களின் பயன்கள்!!


Photo: குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்!

சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்....

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.

சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்....

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.

முடி வளர சித்த மருத்துவம்..!


Photo: முடி வளர சித்த மருத்துவம்..!

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

 

தலை முடி வளர இயற்கை மருத்துவங்கள்:-
முடி உதிர்வதை தடுக்க
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். 
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். 
 
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
முடி கருப்பாக

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
நரை போக்க

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
முடி வளர்வதற்கு

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

வாயில் ஊறும் உமிழ்நீர்--உபயோகமான தகவல்கள்,



Photo: எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். 

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.

உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.

புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.

அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.

உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.

1. பரோடிட் சுரப்பி
2. சப்மாண்டிபுலர் சுரப்பி
3. சப்லிங்குவல் சுரப்பி

பரோடிட் சுரப்பி

இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.

சப்மாண்டிபுலர் சுரப்பி

இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.

சப்லிங்குவில் சுரப்பி

கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.
உமிழ்நீரின் தன்மைகள்

உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..

உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது. 

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.

நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.

உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.

உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.

பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.

உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும்.
சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.

மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.

ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே துப்புவார்கள்.

உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப் படுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீராகும்எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.

உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.

புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.

அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.

உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.

1. பரோடிட் சுரப்பி
2. சப்மாண்டிபுலர் சுரப்பி
3. சப்லிங்குவல் சுரப்பி

பரோடிட் சுரப்பி

இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.

சப்மாண்டிபுலர் சுரப்பி

இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.

சப்லிங்குவில் சுரப்பி

கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.
உமிழ்நீரின் தன்மைகள்

உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..

உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.

நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.

உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.

உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.

பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.

உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும்.
சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.

மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.

ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே துப்புவார்கள்.

உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப் படுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீராகும்

கல்லீரல் கோளாறு குணமாக!!இய‌ற்கை வைத்தியம்!!!


சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி 
வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் 
பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.

இல்லத்து நிவாரணிகள்!!வீட்டுக்குறிப்புக்கள்!!!

நம் சமையலறையில் இருக்கும் பொருள்களைக்கொண்டும் வெளியில் கிடைக்கும் சில எளிமையானப் பொருள்களைக்கொண்டும் அன்றாடம் நமக்கு ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளைத் தீர்க்க முடிகிறது. சின்னச் சின்ன சங்கடங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. அந்த மாதிரியான சிறு சிறு வீட்டுக்குறிப்புக்கள் இதோ!


1..பலகாரம் செய்யும்போது எண்ணெய் வைக்கும் வேளையில் இஞ்சி சிறிது, சிறிது வாழைப்பட்டைத்துண்டு இவற்றை நசுக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்துப்போட்டு பிறகு பலகாரம் செய்தால் அதிக எண்ணெய் குடிக்காது. பலகாரத்திலும் எண்ணெய் வாசம் வராது.


2.  வாழைத்தண்டின் மேல் பட்டையை நீக்கி தண்ணீர் நிறைந்த மெல்லிய பிளாஸ்டிக் பை ஒன்றில் முக்கி முடிச்சிட்டு வைத்தால் 15 நாட்களானாலும் கெடாது.


3.  சீதாப்பழ விதைகளை வெய்யிலில் காய வைத்து அரிசி, பருப்பு டப்பாக்களில் போட்டால் பூச்சி, புழுக்கள் அண்டாது.

4.  மல்லியை முளைக்க வைக்க, ஒரு சமமான பலகையால் இலேசாக அழுத்தி எடுத்தால் போதும். முழுதாய்ப் போட்டால் முளைக்காது.

5.  அவசரமாக இட்லி மாவு புளிக்க மாவை ஹாட்பாக்ஸில் ஊற்றி வைக்கவும்.


6.  மோர் புளிக்காதிருக்க சிறிது வெண்ணெய் உருட்டி அதில் போட்டு வைத்தால் மோர் புளிக்காது.


7.  உபயோகித்த முட்டை ஒட்டை ஆங்காங்கே போட்டு வைத்தால் பல்லி வீட்டை விட்டு ஓடி விடும்.


8..மழைக்காலங்களில் தீப்பெட்டிகளில் ஏழெட்டு அரிசி மணிகளைப்போட்டு வைத்தால் தீக்குச்சிகள் நமுத்துப்போகாது.

9. ஒரு கைப்பிடி பொரியை பொடித்து சேர்த்தால் ரவா உப்புமாவு மிகவும் சுவையாக இருக்கும்.

பயன்மிக்க சித்த மருத்துவக் குறிப்புகள்

ஆண்மைக் குறைவு நீங்க : 

தினசரி இரவு படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரத்திற்கு முன் ஒரு மாதுளம் பழம் முழுவதும் சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க : 


அடிக்கடி மாம்பழத்தைச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்
.
கருவுற்றிருக்கும் தாய்ய்ய்ய்மார்களுக்கு :


 கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழத்தைச் சாப்பிட்டு வர, பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

மலச்சிக்கல் தீர :


 மலச்சிக்கலில் சிரமப்படுவோர் இரவில் மாம்பழத்தைச் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் சரியாகும்.

பற்களும் ஈறுகளும் உறுதியடைய : 


நெல்லிக்கனியைப் பற்களிளால் நன்றாக மென்று தின்று வர பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.

இரத்த கொதிப்பு குணமாக : 


இரத்த கொதிப்பு நோய் கொண்டவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வர, இரத்தக் கொதிப்பு நோய் குணமாகும்.

சுப்த வஜ்ராசனம்

சுப்த என்றால் மல்லாந்து படுத்தல், பரியங்காசனம் என்று கூறுவர். செய்முறை : வஜ்ராசனத்தில் உட்காரவும், பாதங்களில் பின்பக்கம் உட்கார்ந்திருக்க முழங்கைகளின் உதவியால் பின்னால் தாங்கிக் கொண்டு பின்புறம் வளையவும். அப்படியே பின்புறம் தரையில் படுக்கவும். இந்த நிலையில் தலைக்குப் பின்புறம் கைகளை மடக்கி வைக்கவும். பின்னர் முதுகெலும்பை முடிந்த அளவு வளைக்கவும். பலன்கள் : இடுப்பு, தொடை பகுதியில் உள்ள தசைகளைக் குறைக்கும். குறிப்பு : 1. கால்களை அகட்ட முடியாதவர்கள் அப்படியே பின்னால் வளைத்து உள்ளங்கைகளை பின்புறம் தரையில் ஊன்றி செய்து வரவும். 2. சில மாத பயிற்சிக்கு பிறகு கால்களை அகட்டி தரையில் அமர்ந்து பின்னால் படுத்து கை முட்டிகளை தரையில் ஊன்றி செய்து வரவும். பாதி நிலை ஆசனமாகும். 3. மூட்டு வலி அதிகமுள்ளவர்கள் இவ்வாசனத்தை செய்யக்கூடாது.

Friday, October 25, 2013

பொடுகை விரட்ட வேப்பம்பூ--அழகு குறிப்புகள்.,

பொடுகை விரட்ட வேப்பம்பூ 

காய்ந்த வேப்பம்பூவில் [உப்பு கலக்காத வேப்பம்பூ] 50 கிராம் -  அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

உடல் அழகு - முகம் பளபளப்பாக இருக்க

*சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி பத்து நிமிடம் உலரவிட்டு பின் கழுவினால் முடி உதிர்ந்து விடும்.

முக அழகு 


*முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
*உடம்பில் தழும்புகள் இருந்தால் அந்த இடத்தில அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்..    
*தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.  

கூந்தல் பராமரிப்பு - முடி உதிர்வது நிற்க


முடி வளர
*வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.
*கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.
*வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது நிற்கு

இரத்தத்தை சுத்திகரிக்கும் காளான்

mashrom
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த  அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான,  உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம். உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு  பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல்  இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு  கட்டுப்படுகிறது.
இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக  உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம்,  உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.
இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால்  இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம்  கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து  447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு  வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக்குணப்படுத்துகிறது.  தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில்  கண்டுபிடித்துள்ளனர்.

Tuesday, October 22, 2013

இளம் வயதினரையும் தாக்குது மார்பக புற்றுநோய்

ரம்ப நிலையில் கண்டறிந்து, சிகிச்சை அளித்தால், முற்றிலும் குணப்படுத்த முடியும். நோய் முற்றிய நிலையில், குணப்படுத்துவது கடினம். இது ஆண்களையும் பாதிக்கும் 
1. ஆண்டுதோறும், ஆகஸ்ட் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் ஏன்? 
மார்பக புற்றுநோய், உலகளவில், பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில், முதன்மையான இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் உலக அளவில், 14 மில்லியன் பெண்களும், 
இந்தியாவில், 1.15 லட்சம் பெண்களும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுக்கு, 72 ஆயிரத்து 500 பெண்களும், இந்திய அளவில், 53 ஆயிரத்து 500 பேரும், மார்பக புற்றுநோயால் இறக்கின்றனர். அதாவது, 73 சதவீதம். இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம். எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு இருக்கும் அளவுக்கு, மார்பக புற்றுநோய்க்கு விழிப்புணர்வு இல்லை. எனவே, அதற்கான அவசியம் ஏற்பட்டு உள்ளது. 
2. மார்பக புற்றுநோய் வர காரணம் என்ன? 
குடும்பத்தில், முன்னோரில், ஏதேனும் ஒரு நபர், மார்பக புற்றுநோயால் பாதிப்பட்டிருத்தல், குழந்தை பேரின்மை இல்லாத நிலை, 12 வயதுக்கு முன் மாதவிடாய் தொடங்குதல், 54 வயதிற்கு பிறகும் மாதவிடாய் நிற்காதது, மரபணு மாற்றங்கள், கதிர்வீச்சுக்கு உட்படுதல் போன்றவற்றால், மார்பக புற்றுநோய் பாதிப்பு வருகிறது. 
3. எந்த வயதில் இந்த நோய் பாதிக்கும்? ஆண்களையும் பாதிக்குமா? 
பொதுவாக, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு வரும். தற்போது, இளம் வயது பெண்களுக்கு, குறிப்பாக, 30 வயதிலேயே பாதிப்பு வருகிறது. ஆண்களுக்கு வராது என்று கூற முடியாது. ஒரு சதவீத ஆண்களுக்கு, இந்த நோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. 
4. நோய்க்கான அறிகுறிகள் என்ன? பாதிப்பை உணர முடியுமா? 
ஆரம்ப நிலையில், மார்பக புற்றுநோய், எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை. ஆனால், நோய் வளர வளர, மார்பகத்தின் தோற்றம் மாறுபடுவதும், தொடுதலின்போது வித்தியாசத்தையும் உணர முடியும். தாக்கம் அதிகரிக்கும்போது, மார்பகம், அக்குள் களில் வீக்கம் ஏற்படுதல், மார்பின் மேலுள்ள தோலில் ஏற்படும் மாற்றங்கள், காம்புகளில் ரத்தத்துடன் கூடிய திரவம் கசிதல், சாதாரண திரவம் வெளியேறுதல், மார்பு காம்புகள் உட்புறமாக திரும்பிக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். 
5. எந்த மாதிரி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன? 
மார்பக புற்றுநோய் கட்டிகளை, அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றலாம், கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. புற்று நோயை மருந்துகள் மூலம் குணப்படுத்தும் முறையே கீமோதெரபி எனப்படுகிறது. அறுவைச் சிகிச்சைக்குப் பின், 21 நாட்களுக்கு ஒருமுறை, 6 முதல் 8 தவணைகளில், கீமோதெரபி தரப்படும். 
6. மார்பக புற்றுநோயை, முற்றிலும் குணப்படுத்த முடியுமா? 
ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சிகிச்சை அளித்தால், முற்றிலும் குணப்படுத்த முடியும். நோய் முற்றிய நிலையில், குணப்படுத்துவது கடினம். 
7. கீமோ தெரபியால் பக்க விளைவுகள் அதிகம் எனக் கூறப்படுகிறதே? 
கீமோ தெரபியின்போது, வாந்தி, முடி உதிர்தல், அசதி மற்றும் ரத்த அணுக்கள் குறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். வாந்தி, அசதி போன்றவை, ஓரிரு நாட்களில் நின்றுவிடும். கீமோ தெரபி முடிந்ததும், முடி உதிர்வதும் நின்றுவிடும். யாரும் பயப்பட வேண்டாம்; முடியை விட உயிர் முக்கியம். 
8. தற்காத்துக் கொள்ள என்ன வழி? 
ஆண்டுதோறும் உடல் நல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்தம் சம்பந்தமான உறவினருக்கு, மார்பக புற்று நோய் இருந்தால், தொடர் மருத்துவ பரிசோதனை அவசியம்.குடும்பத்தில், பலருக்கு புற்றுநோய் இருந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள், எச்சரிக்கையுடன் டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். 
மாதவிடாய் அதிகப்படியாக போனால் அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். கொழுப்பு சத்துள்ள உணவைத் தவிர்ப்பதோடு, உடல் பருமனையும் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, மன அழுத்தத்தில் சிக்கிவிடக் கூடாது. அதற்கேற்ப, வேலைகளை திட்டமிடுதல், எளிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தியானம், எளிய உடற்பயிற்சிகள் செய்வதும் நல்லது. 
டாக்டர் கே.கலைச்செல்வி, 
புற்றுநோய் மருந்தியல் துறைத் தலைவர், 
சென்னை அரசு பொது மருத்துவமனை.
 
செய்ய வேண்டிய பரிசோதனைகள்? 
சுய பரிசோதனை இதன்படி, 20 வயதுக்குட்பட்ட பெண்கள், மாதம் ஒரு முறை, தங்கள் மார்பகங்களை தாங்களே, கையால் அழுத்திப் பார்த்து, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே சொன்னது போல், ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், உடனே டாக்டரை அணுகி, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 
மேமோகிராம் மார்பக திசுக்களை ஆராய, மார்பகத்தை, எக்ஸ்-ரே, ஸ்கேன் மூலம் பரிசோதிப்பதே, மேமோகிராம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம், ஆரம்ப நிலை 
மார்பக புற்றுநோயை கண்டறிய முடியும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை, மேமோகிராம் பரிசோதனை செய்வது அவசியம்.
நன்றி-தினமலர்

அழகைக் கெடுக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்க உதவும் சில எண்ணெய்கள்!!!

அழகைக் கெடுக்கும் விஷயம் என்று வரும் போது, அதில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் உடலின் வயிறு, தொடை, பேக் போன்ற இடங்களில் தான் பெரும்பாலும் வரும். சில சமயங்களில் சிலருக்கு மார்பகங்களில் கூட வரும். இந்த ஸ்ட்ரெட்ச் மார்க் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் கருத்தரித்தல், உடல் எடை அதிகரித்தல், ஜிம் சென்று பயிற்சி செய்தல் போன்ற காரணங்களால், சருமமானது திடீரென்று விரிந்து சுருங்கும் போது, தழும்புகளாக மாறுகின்றன. ஆகவே இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குளை போக்குவதற்கு பல க்ரீம் மற்றும் ஜெல் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் இவை எந்த ஒரு பலனையும் தருவதில்லை. அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு முயற்சித்தால், நிச்சயம் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்கலாம். அதிலும் இயற்கை எண்ணெய்கள் கொண்டு தினமும் மசாஜ் செய்து வருவதன் மூலம், விரைவில் சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைய வைக்கலாம். அதுமட்டுமின்றி, சருமத்தில் வறட்சி ஏற்படுவதையும் தடுக்க முடியும்.
இப்போது உடலில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்கப் பயன்படும் சில எண்ணெய்களைக் கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை முயற்சி செய்து பார்த்து, அதன் நன்மையைப் பெறுங்கள். ரோஸ்மேரி ஆயிலை பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தினமும் ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி, 15-20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், தழும்பானது மறைய ஆரம்பிக்கும். தற்போது அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஆலிவ் ஆயிலைக் கொண்டு, மசாஜ் செய்து வந்தாலும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்கலாம். மேலும் இதனால் சருமம் நன்கு ஈரப்பசையுடன் வறட்சியடையாமல் இருக்கும். பாதாம் எண்ணெயில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் ஒன்று தான் ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்குவது. அதற்கு பாதாம் எண்ணெயை, ஆலிவ் ஆயில் மற்றும் கோதுமை எண்ணெயுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் மசாஜ் செய்து கொண்டு படுக்க வேண்டும். இதனால் நாளடைவில் தழும்புகள் மறைந்துவிடும். கோதுமை எண்ணெயுடன், சிறிது ரோஸ் எண்ணெய் சேர்த்து கலந்து, மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த எண்ணெய் கலவையைக் கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும். மற்றொரு சிறப்பான ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்கும் எண்ணெய் என்று பார்த்தால், அது லாவெண்டர் எண்ணெயுடன், ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்வது தான். 3 டீஸ்பூன் ஜிஜோபா ஆயில், 10 துளிகள் பச்சௌலி ஆயில் (patchouli oil) மற்றும் 5 துளிகள் லாவெண்டர் எண்ணெய் போன்றவற்றை கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். ஆப்ரிக்காட் எண்ணெய் சரும சுருக்கத்தைப் போக்குவதோடு, ஸ்ட்ரெட்ச் மார்க்குகளையும் போக்கும். சமையலில் பயன்படுத்தும் நல்லெண்ணெய் கொண்டு, சருமத்தை மசாஜ் செய்து வந்தாலும், ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறையச் செய்யலாம்.

Saturday, October 19, 2013

கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை எளிதில் போக்க சில டிப்ஸ்…



கண்ணைச் சுற்றிலும் உண்டாகும் கருப்பான வட்டங்களைத் தான் கருவளையங்கள் என்று சொல்கின்றனர். இந்த கருவளையங்கள் என்பது இல்லத்தரசிகள் மத்தியில் மட்டும் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனை இல்லை. மேலும் மிக தீவிரமான வேலை அட்டவணைகளை கொண்டவர்களுக்கும் மற்றும் ஒழுங்கற்ற தூக்கத்தைக் கொண்டவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் ஒன்றும் மிகப்பெரிய பிரச்சனை இல்லை. இருப்பினும், இந்த நிலையில் ஒருவரை மிக வயதானவரான தோற்றத்தில் பார்க்க முடியும். எவ்வளவு தான் சந்தையில், மூப்படைதலுக்கு எதிரான சருமத்தை வெளுக்க வைக்கும் க்ரீம்கள் பெறக்கூடியதாக இருந்தாலும், இன்றைய காலக்கட்டத்தில், கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் ஃபேஷன் உலகத்தில் ஒரு பெரும் குற்றமாகக் கொண்டு, அதற்குண்டான சிகிச்சையில் ஈடுப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆகவே கோரமாகக் காணப்படும் கருவளையங்களை நீக்குவதற்காக உதவும் சில இயற்கை வீட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பயன்படுத்தி, கருவளையங்களை போக்கி, அழகாக திகழுங்கள். உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி, பின்பு அதனை அரைத்து, அதில் உள்ள சாற்றினை இரண்டு பஞ்சுருண்டைகளால் நனைத்து கண்களின் மேல் வைத்து, 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து, பின் கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் கருவளையங்கள் அகலும். தக்காளி மற்றும் எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை கண்களை சுற்றியுள்ள கருவளையங்களின் மீது தடவ வேண்டும். 4-5 பாதாம் பருப்புகளை எடுத்துக் கொண்டு, அதனை பால் சேர்த்து அரைத்து விழுது தயார் செய்து, பின்பு அந்த பேஸ்டை கருவளையம் உள்ள பகுதியில் தடவி 10-15 நிமிடங்கள் விட்டுவிடவும். இது கண்களை சுற்றியுள்ள சருமத்தின் கருமை நிறத்தினைக் குறைக்கும். சிறிது மஞ்சள் தூளை எடுத்து, அதில் அன்னாசி பழச்சாற்றில் கலந்து கண்களை சுற்றியுள்ள கருவளையங்களின் மீது தொடர்ந்து தடவுவதால், அது கருமை நிறத்தினைக் குறைக்கின்றது. ஒவ்வொரு இரவும், உறங்குவதற்கு முன்பு கண்களைச் சுற்றி வைட்டமின் ஈ மற்றும் சி கொண்ட க்ரீமைத் தடவி தூங்கினால், கருவளையங்களில் இருந்து விடுபடலாம். கொஞ்சம் புதினா இலைகளைக் கசக்கி, கண்களை சுற்றியுள்ள கருவளையங்களின் மீது தடவவும். இது போன்று செய்வதால், சோர்வாக இருக்கும் கண்களுக்கு ஒரு குளிர்ச்சியை தந்து புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது . ஒரு டம்ளர் தக்காளி ஜூஸில், சிறிது புதினா இலைகள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து குடிக்கவும். இது போன்று ஒரு நாளைக்கு இருமுறை குடிப்பதுவும் இன்னொரு மருந்தாகும். வெள்ளரிக்காய் துண்டுகளை வட்டமாக வெட்டி, அதனை கண்களுக்கு 10-15 நிமிடம் வைத்து உட்கார்ந்தால், கண்களில் உள்ள கருவளையங்கள் நீங்குவதோடு, கண்களையும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 2 சீமைச்சாமந்தியின் டீ பேக்கை சூடான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை குளிர்ந்த நீரில் அலசி, அந்த டீ பேக்கை கண்களின் மீது 20 நிமிடம் வைத்தால், கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் கருவளையம் மறைந்துவிடும்.

"கரு கரு’ கூந்தலுக்கு, காய் கறி வைத்தியம்!



கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் உண்டா… கூந்தல் நீளமா, அடர்த்தியா, கருமையா வளர, தவம் கிடக்கும் பெண்களுக்காகவே இந்த கட்டுரை: 
* வைட்டமின், ‘பி’ குறைவினால், விரைவில் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஊட்டசத்துமிக்க உணவே, இக்குறைபாட்டை நீக்கும். 
* நெல்லிக்காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து, அந்த விழுதைத் தலையில் பூசி, ஊற வைத்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், கண் எரிச்சலையும் போக்கும். 
* அழுகின தேங்காயை தூக்கி எறியாமல், அதனுடன், சிறிது சுடுநீர் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற வைக்கவும். பிறகு நன்றாக, ‘மசாஜ்’ செய்தால், மயிர்க்கால்கள் வலுப்பெறும். 
* இரண்டு ஸ்பூன் வினிகருடன், கடலைமாவைக் குழைத்து, கால் மணி நேரம் ஊறவைக்கவும். இதை, மயிர் கால்களில் படும்படி பூசி, அரைமணி நேரம் கழித்து அலசினால், பொடுகு தொல்லை போய் விடும். 
* உங்களுக்கென்று தனியாக சீப்பு வைத்துக் கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளை தவிர்க்கவும். 
* தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பால் பிழியவும். இதை இரும்பு கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயை, தலையில் தடவி ஊறியபின், சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும். 
* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால், மயிர்க்கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு, முடி வளர்வதும் தூண்டப்படுகிறது. 
* நேரமில்லை என்பவர்கள், சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக் குளிக்கலாம். 
* விளக்கெண்ணையை போல உடலுக்கு குளிர்ச்சி தருவது வேறு எதுவும் இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, இலேசாக சுடவைத்து, மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்த சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது. 
* தலையில், ஆங்காங்கே சிறு பொட்டல் இருந்தால், சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால், மீண்டும் முடி வளரும். 
* தலை முடிக்கு, போஷாக்குத் தரும் ஷாம்பூவை, வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப் பயறு அரைப் பங்கு, புங்கங்காய் கைப்பிடி அளவு எடுத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ரசாயனப் பொருட்கள் இல்லாத இந்தப் பொடி, எந்த வித தீங்கும் ஏற்படுத்தாது. 
* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். இதற்கு, கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து, பொடி செய்து, பசும்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் குணம் தெரியும். 
* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்த தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாக வளரும். 
* வெயிலில் அலைந்து, வேலை செய்வோர், தினமும் உச்சந்தலையில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், கண்ணுக்குக் குளிர்ச்சி; முடியும் உதிராது. 
* தலைக்கு சீயக்காய்த் தூள் தேய்க்கும் போது, சீயக்காயுடன் தண்ணீருக்கு பதில், மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். 
முடி பளபளப்பாக இருக்க… 
வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு கப் அளந்து எடுத்து, அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது, யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்த சாறுடன், தேங்காய் எண்ணெய் கலந்து, மயிர் கால்களில் படும்படி நன்றாக, "மசாஜ்’ செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால், முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.

குக்கும்பர் ( வெள்ளரி ) – மிகவும் பயனுள்ள அதிசயித்தக்க தகவல்கள் – சுப்ஹானல்லாஹ்




குக்கும்பர் ( வெள்ளரி ) – மிகவும் பயனுள்ள அதிசயித்தக்க தகவல்கள் – சுப்ஹானல்லாஹ்
---------------------------------------------------------------------
நபி (ஸல்) அவர்கள் குக்கும்பருடன் ஈத்த பழத்தையும் சேர்த்து சாப்பிட்டார்கள் .. ஆதாரம் : முஸ்லிம் 5072 & திர்மிதி 
----------------------------------------------------------------------

1. நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும்.

2. உடலைக் குளிரவைக்கும்.

3. இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் மிகுதி.

4. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் இப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.

5. வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. எனவே செரிமானம் தீவிரமாகும். பசி அதிகரிக்கும்.

6. மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும்.

7. உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும்.

8. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

9. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி.மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.

10. சிறுநீரகக் கோளாறு களைச் சரி செய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்து கிறது.

11. பித்தம், பித்தநீர், பித்த சம்பந்தமான தலை சுற்று, பித்த வாந்தி இவைகளை குணப்படுத்தும்

12. சமீபத்திய ஆய்வுகளின் படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது

13. வயிறு நிறைய உணவு உண்ட பின் ஓரிரு வெள்ளரிக்காய் துண்டுகளை உண்ண வயிற்றுப் பொருமல் நீங்கும்.

14. வெள்ளரிச்சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம் பெறும்.

15. வெள்ளரிச்சாறுடன் பால் கலந்து முகத்தில் தேய்த்து, ஊறிய பின் கழுவி வர முகம் பளபளப்பு அழகு பெறும்.

16. வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து, அடிவயிற்றில் பூச நீர்க்கடுப்பு நீங்கி, நீர் எளிதில் பிரியும்.

17. வெள்ளரிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட வயிற்று நோய், தொண்டை நோய்கள் தீரும்.

18. இளநீருடன் வெள்ளரித் துண்டுகளை கலந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

19. வெள்ளரி இலைகளை நீரிலிட்டு காய்த்து வடிகட்டி, இளநீரில் கலந்து மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் சாப்பிட வயிற்றுப் போக்குத் தீரும்.

20. வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி முகத்தில் வைக்க முகம் குளிர்ச்சி பெறும். தோல் சுருக்கம் நீங்கும்.

21. தயிர் அல்லது மோரில் வெள்ளரிக்காயை வெட்டிப் போட்டு சாப்பிட தாகம் தீரும். அஜீரணம் நீங்கும்.

22. வெள்ளரிக்காய் துண்டுகளோடு தக்காளி, காரட், பீட்ரூட் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகு சேர்த்து சாலட் போல் சாப்பிட உடலுக்கு மிக நன்மை கிடைக்கும்.

23. வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி, உப்பு மிளகாய்த் தூள் சேர்த்து சாப்பிட வயிற்றுக்கோளாறுகள் மாறும்.

24. வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியபின் கழுவி வர, கோடை வெயிலால் ஏற்பட்ட முகச் சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.

25. வெள்ளரிக்காயைத் தொடர்ந்து உண்டு வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். நரம்புகள் வலுப்பெறும். மஞ்சள் காமாலை குணமாகும்

26. சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.

27. வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தால் கருவளையம் மறையும்.

28. உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.

29. கண் பொங்குதல், உடல் சூடு, மலக்கட்டு, தீர்க்கும் உயர்ந்த உணவு கடல் உப்பை உடலில் குறைக்கும் உணவு.

30. சீறுநீரக எரிச்சல், கல் அடைப்பு, மூலச்சூடு, மூலவியாதிகள் ஒரு வாரத்தில் சரியாகும்.

31.உடல் பருமன், உடல் தொப்பை, மூட்டுப் பிணிகள், வலிமைகளை குறைத்திடும் இரத்த அழுத்தம்.

32. நீரிழிவு நோயாளிகளுக்கு அவசிய உணவுச் சாறு
நீரிழிவு பிணியாளர்களின் மருந்துகளைக் குறைப்பதில் வெள்ளரிச்சாறு விடிவெள்ளியாய் இருக்கிறது

33. முகத்தில் என்னை வழிவதை தடுக்க
----------------------------------------------------
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழி வதை தடுக்கலாம் . வெள்ளரிச் சாற்றுடன், பால்பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக_காணப்படும் இதைதொடர்ந்து ஒருமாத காலமாவது பின்பற்றவேண்டும்.

-----------------------------------------------------------------------
ஒரு முக்கிய குறிப்பு :

நுரையீரல் கோளாறுகள், கபம் & இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.
-----------------------------------------------------------------
The following health benefits have been cited as reasons why cucumbers should be included in a person's diet

Cucumbers Keep the Body Hydrated

Cucumbers are 90% water, which means eating one is as refreshing as a glass of water. Eating cucumbers, especially in the hot summer months, will keep the body hydrated.

Sunburn Relief

Cucumbers can also refresh topically. Slices of cucumber will help soothe and relieve sunburns.

Toxin Eliminator

With 90% water content, cucumbers can help flush out toxins from the body. In fact, regular eating of cucumbers will help dissolve and flush out even kidney stones.

Packed with Vitamins

Cucumbers are rich in most essential vitamins that the body needs. They contain vitamin A, vitamin B and vitamin C, which strengthens the immune system and gives the body more energy and a youthful glow. Consuming a power-combo juice of cucumber, spinach and carrot a day will boost a person's immune system to fight common viruses like colds and flu. Make sure to include the skin, as it contains 12% of the recommended daily allowance for vitamin C.

Beautiful Skin

Spas always include cucumbers because they are rich in magnesium, potassium and silicon.

Good for Weight Watchers

Cucumbers are low in calories and high in water, making them ideal for those who want to lose a few pounds. They are also high in fiber that aids digestion and can be a cure for constipation. They can be used in soups and salads, or alone as a healthy, crunchy snack.

Revitalizes Eyes

Ladies with cucumber slices over their eyes are a common sight in magazines and movies, but it really works. Aside from the water content, cucumbers have anti-inflammatory properties that help with the swelling.

Anti-Cancer Food

Cucumbers have lariciresinol, secoisolariciresinol, and pinoresinol. These have been found to prevent certain types of cancer, such as breast, uterine, ovarian and prostate cancer.

Controls Cholesterol, Blood Pressure, and Blood Sugar Levels

Cucumbers contain a hormone that is needed for the pancreas's production of insulin, the hormone which diabetic patients usually lack. Cucumbers also contain sterols that lower blood cholesterol. As for regulating blood pressure, the cucumber's abundance in fiber, magnesium and potassium all work effectively for that. In fact, cucumbers are effective in those who experience either high blood pressure or low blood pressure.

Oral Help

The juice of a cucumber heals and soothes the gums. The phytochemicals also help eliminate bad breath. Try placing a slice of cucumber on the roof of the mouth and pressing it there using the tongue for about a minute.

Healthy Hair and Nails

Cucumber also contains silica, which is known to make hair and nails shiny and strong. Aside from that, cucumber also contains sulfur, which promotes hair growth.

Good for the Joints

The silica in cucumber also helps repair and strengthen connective tissue, making it good for joints and for treating arthritis. Especially when coupled with carrots, cucumber can also treat gout by lowering the blood's uric acid level.

Good for Hangovers

For those expecting a massive hangover, a few cucumber slices eaten before bedtime can help relieve that morning headache. The B vitamins, electrolytes and sugar in cucumbers replenish those that were depleted, thus helping to tone down hangovers.

Kidney Health

As cucumbers help in lowering the blood's uric acid, cucumbers help in keeping the kidneys healthy too.

இதன் பயன்கள் இது மட்டுமல்ல ... இதோ படியுங்கள் எப்படியெல்லாம் நமது அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுகிறது என......

We never thought that CUCUMBER can do so much!

The Amazing Cucumber

This information was in The New York Times several weeks ago as part of their "Spotlight on the Home" series that highlighted creative and fanciful ways to solve common problems.

1. Cucumbers contain most of the vitamins you need every day, just one cucumber contains Vitamin B1, Vitamin B2, Vitamin B3, Vitamin B5, Vitamin B6, Folic Acid, Vitamin C, Calcium, Iron, Magnesium, Phosphorus, Potassium and Zinc.

2. Feeling tired in the afternoon put down the caffeinated soda and pick up a cucumber. Cucumbers are a good source of B Vitamins and Carbohydrates that can provide that quick pick-me-up that can last for hours.

3. Tired of your bathroom mirror fogging up after a shower? Try rubbing a cucumber slice along the mirror, it will eliminate the fog and provide a soothing, spa-like fragrance.

4. Are grubs and slugs ruining your planting beds? Place a few slices in a small pie tin and your garden will be free of pests all season long. The chemicals in the cucumber react with the aluminum to give off a scent undetectable to humans but drive garden pests crazy and make them flee the area.

5. Looking for a fast and easy way to remove cellulite before going out or to the pool? Try rubbing a slice or two of cucumbers along your problem area for a few minutes, the photo chemical in the cucumber cause the collagen in your skin to tighten, firming up the outer layer and reducing the visibility of cellulite. Works great on wrinkles too!!!

6. Want to avoid a hangover or terrible headache? Eat a few cucumber slices before going to bed and wake up refreshed and headache free. Cucumbers contain enough sugar, B vitamins and electrolytes to replenish essential nutrients the body lost, keeping everything in equilibrium, avoiding both a hangover and headache!!

7. Looking to fight off that afternoon or evening snacking binge? Cucumbers have been used for centuries and often used by European trappers, traders and explores for quick meals to thwart off starvation.
8. Have an important meeting or job interview and you realize that you don't have enough time to polish your shoes? Rub a freshly cut cucumber over the shoe, its chemicals will provide a quick and durable shine that not only looks great but also repels water.

9. Out of WD 40 and need to fix a squeaky hinge? Take a cucumber slice and rub it along the problematic hinge, and voila, the squeak is gone!

10. Stressed out and don't have time for massage, facial or visit to the spa? Cut up an entire cucumber and place it in a boiling pot of water, the chemicals and nutrients from the cucumber with react with the boiling water and be released in the steam, creating a soothing, relaxing aroma that has been shown the reduce stress in new mothers and college students during final exams.

11. Just finish a business lunch and realize you don't have gum or mints? Take a slice of cucumber and press it to the roof of your mouth with your tongue for 30 seconds to eliminate bad breath, the photochemical will kill the bacteria in your mouth responsible for causing bad breath.

12. Looking for a 'green' way to clean your faucets, sinks or stainless steel? Take a slice of cucumber and rub it on the surface you want to clean, not only will it remove years of tarnish and bring back the shine, but is won't leave streaks and won't harm you fingers or fingernails while you clean.

13. Using a pen and made a mistake? Take the outside of the cucumber and slowly use it to erase the pen writing, also works great on crayons and markers that the kids have used to decorate the walls!!

நபி (ஸல்) அவர்கள் குக்கும்பருடன் ஈத்த பழத்தையும் சேர்த்து சாப்பிட்டார்கள் .. ஆதாரம் முஸ்லிம் 5072 & திர்மிதி

Prophet Muhammad was seen eating cucumber with fresh dates. Muslim #5072

In his work on Prophetic Medicine, the great scholar Ibn al-Qayyim mentioned the health benefits of cucumbers. He quoted the Prophetic Hadith relating that the Messenger of Allah (Sallallaahu alayhi Wasallam) used to eat qiththa (cucumber) with rutab (fresh dates). [Tirmidhi At'ima 37]

Ibn al-Qayyim said the cucumber has the following health benefits:

1. Quenches thirst
2. Calms an inflamed stomach
3. Beneficial for pains of the bladder
4. Its seeds are diuretic

Special Note : He also said that cucumbers should be eaten with something like dates, raisins or honey, as these will rectify its negative effects on the stomach.

Pass this along to everybody you know who is looking for better and safer ways to solve life's everyday problems

பீட்ரூட் - மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் பல்வேறு சுவாரஸ்ய நல்ல தகவல்கள்





பீட்ரூட் - மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது
மற்றும் பல்வேறு சுவாரஸ்ய நல்ல தகவல்கள் 
************************************************** 
லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்தன. தினசரி 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைந்து போனது ஆய்வில் தெரிய வந்த
து.

பதினைந்து பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் உயர்ரத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பலருக்கும் ரத்தஅழுத்தம் சராசரி அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்தன. இவர்கள் பீட்ரூட் சாற்றை குடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு பற்றி மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவித்துள்ளது.

ரத்த நாளங்கள் விரிவடையும்

பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்கிறது. இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வலிகளை குறைக்கிறது.

அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்கிறது. அதேபோல் நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.

நைட்ரேட் சத்தை சேமிக்கிறது.

மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்தை தாவரங்கள் ஒவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே இந்த பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது, அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.

பக்கவிளைவுகள் அற்ற பீட்ரூட்

இவ்வளவு குறைவான நைட்ரேட், உயர் இரத்த அழுத்தத்தில் இவ்வளவு பெரிய நல்ல பலனை அளிக்கும் என்பது தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் அம்ரிதா அலுவாலியா. எனவே நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஒருவரின் உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்பது நோயாளிகளுக்கும் எளிதில் கடைபிடிக்கக்கூடிய, பக்கவிளைவுகளற்ற சிகிச்சைமுறையாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் அவர்.

அதேசமயம், நைட்ரேட் அதிகம் உள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் நாள்பட்ட உயர் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு மேலதிக ஆய்வுகள் செய்யவேண்டியது அவசியம் என்றும் அம்ரிதா அலுவாலியா தெரிவித்தார். அந்த ஆய்வின் முடிவுகளுக்காக காத்திருக்காமல், பச்சைக் காய்கறிகளை அதிகம் உண்பது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மைதான் என்கிறார் அவர்.
அதேசமயம், பீட்ரூட் சாற்றை குடிப்பவர்களின் சிறுநீர் இளஞ்சிகப்பு நிறமாக மாறும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
எனவே சிறுநீரின் நிறத்தை பற்றி கவலைப்படாதவர்கள், பீட்ரூட் சாற்றை குடித்து தங்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க முயலலாம் என்பது இந்த ஆய்வாளர்களின் யோசனை.

தினமும் இரண்டு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்தால், ரத்த அழுத்தம் குறையும் எனவும், இதனால் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் எனவும் ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால், உடலுக்கு ஏற்படும் நன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதுபற்றி, லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழக பேராசிரியர் அம்ரிதா அலுவாலியா கூறியதாவது : ஒருவர், தினமும் இரண்டு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. இதை குடிப்போருக்கு, ரத்த அழுத்தம் கணிசமான அளவு குறையும். பீட்ரூட் ஜூஸ் குடிக்கும் போது, பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட், சுத்திகரிப்பில் ஈடுபடுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் சிறிது குறைகிறது. பழங்களும், பச்சைக் காய்கறிகளும் வயிற்றில் சென்று அடையும் மாற்றம் குறித்த ஆய்வில், இந்த உண்மை தெரிந்தது. எனவே பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இதய நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என அம்ரிதா அலுவாலியா கூறினார்.

இனிப்புச் சுவையுடைய அடர்ந்த சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட்டை அப்படியே சாப்பிடலாம். ஏனெனில் அந்த அளவில் இதன் சுவையானது கேரட்டைப் போன்றே சூப்பராக இருக்கும். அத்தகைய பீட்ரூட் நிறைய நன்மைகளை உள்ளக்கியுள்ளது. அதில் அனைவருக்கும் தெரிந்தது, பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது தான். ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேக வைத்தோ அல்லது சாலட் போன்றோ சாப்பிடலாம். இப்போது பீட்ரூட்டை சாப்பிட்டால், என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று பார்ப்போமா!!!


அல்சர்

அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும்.

சிறுநீரக சுத்திகரிப்பு

பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும்.

மூலநோய்

மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும்.
கல்லீரல் கோளாறு
கல்லீரல் கோளாறுகளுக்கும்பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

இரத்த சோகை

பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

புற்றுநோய்

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

கொலஸ்ட்ரால்
நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

செரிமான பிரச்சனை

செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட் ஜூஸை குடித்தால், செரிமானப் பிரச்சனை நீங்கும்.

சிவப்பணுக்கள் அதிகரிக்கும்

பீட்ரூட்டை, எலுமிச்சை சாற்றில் நனைத்து பச்சையாக சாப்பிட்டால், இரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

மறதி

பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்தால், மூளையில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முதுமை மறதி (Dementia) மற்றும் ஞாபக மறதியை (Alzheimer) தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சரும அரிப்பு

சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும்.

தீப்புண்

கையை தீயில் சுட்டுக் கொண்டால், அப்போது பீட்ரூட் சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் சீக்கிரம் குணமாகும்.

பொடுகு

பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், வினிகரை பீட்ரூட் வேக வைத்த நீரில் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகைப் போக்கிவிடலாம்.

பீட்ருட்டின் வரலாறு:

தெற்கு ஐரோப்பாவில் தன்னிச்சையாக வளர்ந்து கிடந்தது. முதலில் இதன் இலைகளை மட்டும் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் பீட்ரூட் கிழங்கை எடுத்துத் தலைவலிக்கும் பல்வலிக்கும் மருந்தாகப் பயன்படுத்தினார்கள். நியூசிலாந்தில் வேரை மட்டும் சாப்பிட்டார்கள். முதலில் பீட்ரூட் உருளை வடிவத்திலும் சற்று நீண்ட ஓவல் வடிவத்திலும் ஆழ்ந்த சிவப்பு நிறத்திலும் தங்க வண்ணத்திலும் இருந்தது. பதினாறாம் நூற்றாண்டில் மக்கள் இதைச் சாப்பிட ஆரம்பித்தனர். 200 ஆண்டுகள் கழித்துத்தான் இது பிரபலமாகியது. பீட்ரூட்டின் விசேஷம் அதன் இனிப்பு. எல்லா காய்கறிகளையும்விட அதிக சர்க்கரை இதில் உள்ளது.

1750-ல் ஐரோப்பாவில் ஏற்பட்ட சண்டையின் போது இங்கிலாந்து ஐரோப்பிய துணை கண்டங்களுக்கு கரும்பு அனுப்ப மறுத்து விட்டது. இதனால் அந்த நாடுகளில் சர்க்கரை தட்டுப்பாடு வந்தது. நெப்போலியனும் பிரெஷ்யா நாட்டு மன்னனும் சேர்ந்து அதிகப்படியான பீட்ரூட்டை உற்பத்தி செய்து அதிலிருந்து சர்க்கரை எடுக்கும் முயற்சியைச் செயல்படுத்தினார்கள். உலகளவில் எவ்வளவு கரும்பு உற்பத்தி செய்கிறார்களோ, அதே அளவு ஐரோப்பாவிலும் 1900-ல் உற்பத்தி செய்யப்பட்டு சர்க்கரை தயாரிக்கப்பட்டது.

வாங்குவது எப்படி?

நல்ல கருஞ்சிவப்பு வண்ணத்தில் தோல் மிருதுவாக, உருண்டையாக, அதன்மேல் வெடிப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும். பீட்ரூட் வாங்கும் போது இலைகளோடு வாங்குங்கள். இதில் நிறைய சத்துகள் உள்ளன. கீரையாக சமைத்து சாப்பிடலாம். 2 இன்ச் விட்டம் அளவுள்ள காயை வாங்குங்கள். பெரியதாக இருந்தால் முற்றல் அதிகம் இருக்கும். இலைகளை சாப்பிட வேண்டுமானால் இளசாக கரும்பச்சை வண்ணத்தில் இருக்கவேண்டும். பீட்ரூட் விளையும்போது ஒரு கிழங்குக்கும் அடுத்த கிழங்குக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகப்படுத்துவதற்காக இடையில் இருக்கும் ஒரு பிஞ்சு பீட்ரூட்டைப் பிடுங்கிவிடுவார்கள். இந்த பீட்ரூட் சாப்பிட பயங்கர ருசியாக இருக்கும்.

பாதுகாப்பது:

ஃப்ரெஷ்ஷாக இருக்கக் கொஞ்சமாக அவ்வவ்போது வாங்க வேண்டும். சமைக்கும் போது தான் நறுக்க வேண்டும். முன்பே நறுக்கி வைத்தால் சாயம் வடியும். காலையில் சமைக்க இரவில் தண்ணீர் தெளித்து வைத்தால் பசுமையாக இருக்கும். வாங்கியதும் இலைகளை தனியே பிரித்து வைக்கவும். உடனே கழுவாமல் இலையையும், காயையும் தனித்தனி பையில் போட்டு வைக்கவும். இலைகளை ஒன்றிரண்டு நாளில் சமைத்து விடவும். ஆனால் காயை பிளாஸ்டிக் பையில் போட்டால் இரண்டு வாரங்கள் கூட இருக்கும். அமெரிக்காவில் டின்னில் அடைத்த பீட்ரூட்தான் பிரபலம்.

சமைப்பது எப்படி?

பீட்ரூட்டின்மேல் காம்பைக் கொஞ்சமாக வெட்டி, நன்றாக கழுவி தோலை நறுக்காமல் சமைக்க வேண்டும். பெரிய துண்டுகளாக போட்டால் சத்து வீணாகாது. ஆவியில் வேகவைப்பதும் சிறந்தது. இதைப் பச்சையாகவோ, வேக வைத்தோபயன்படுத்தும்போது வினிகர் அல்லது எலுமிச்சை ஜுஸ் தடவினால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

உணவுச்சத்து:

பீட்ரூட்டில் நிறைய உணவுச் சத்துகள் உண்டு. விட்டமின் சி, பொட்டாசியம்,ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச் சத்து இதில் அதிகம் உள்ளன. பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் உண்டோ, அத்தனையும் அதன் இலைகளிலும் இருப்பதுதான் இதன் விசேஷம். இலைகளை பொடியாக நறுக்க வேண்டாம். அதிலிருக்கும் விட்டமின் சி அழிந்துவிடும். வேகும் போது மூடி போட்டு வேகவிட வேண்டாம். ஏனெனில், இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் ஆவியாக வெளியேற வேண்டும். அப்போது இலைகளிலுள்ள அதிகமான சுண்ணாம்புச் சத்தை உடல்கிரகிப்பதைத் தடுக்க முடியும்.

ஒரு கப் நறுக்கிய பீட்ரூட்டில் உள்ள உணவுச் சத்து:
கலோரி 44, மாவுச்சத்து 10 கிராம், புரதம் ஒரு கிராம், நார்ச்சத்து 5 கிராம், விட்டமின் சி 11 மில்லி கிராம், சோடியம் 72 மி.கி, ஃபோலாசின் 93 மைக்ரோ கிராம்.

மருத்துவப் பலன்கள்:

பீட்ரூட்டில் இருக்கும் முக்கியமான தன்மை இதில் கொழுப்புச் சத்து கிடையாது. இதை ஒரு காலத்தில் ஐரோப்பாவில் புற்றுநோய்த் தடுப்பாக பயன்படுத்தினார்கள். இதன் சிவப்பு வண்ணத்தில் (பீட்டா கரோட்டின்) புற்றுநோய் தடுப்புத் தன்மை சேர்ந்திருப்பதால்புற்றுநோயுடன் போராடும் சக்தி உள்ளது. மேலும் பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. இதே சிவப்பு நிறத்தில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின் இருப்பதால், பெண்களின் உடல்நலத்துக்கு மிகச் சிறந்தது. முக்கியமாக கருத்தரிக்கும் பெண்களுக்கு தேவையான சத்துகள் நிறைய இருக்கின்றன.

சமையல் வகைகள்:

பீட்ரூட் சூப்: தேவையான பொருள்கள்: சின்ன பீட்ரூட் 2, சிவப்பு முட்டைக்கோஸ் 1 கப், வெங்காயம் 1, புளிப்பு ஆப்பிள் 1, ஆலிவ் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், தக்காளி சாஸ் 2 டேபிள் ஸ்பூன், காரட், உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீர் அல்லது சிக்கன்வேகவைத்த தண்ணீர் 1 கப், தயிர் 100 கிராம்.

செய்முறை: எண்ணெயை சுடவைத்து வெங்காயத்தை வதக்கி, ஆப்பிள், கோஸ், பீட்ரூட் எல்லாவற்றையும் நறுக்கி தக்காளிச்சாறு, வேகவைத்த காய்கறி தண்ணீர் சேர்த்து மூடி வைத்துக் கொதிக்கவிட வும். கொதித்ததும் பத்து நிமிடங்கள் தீயைக் குறைத்து விடவும்.தேவைப்பட்டால் மிளகுப்பொடி சேர்த்து சூடாகவோ, ஜில்லென்றோ சாப்பிடலாம்.

பீட்ரூட் அல்வா: தேவையான பொருள்கள்: ஒரு பெரிய அளவு பீட்ரூட், கால் டம்ளர் பால், சர்க்கரை 50 கிராம் (ருசிக்கேற்ப சர்க்கரையைக் கூட்டி குறைத்துக் கொள்ளலாம். நெய் 25 கிராம், முந்திரி, உலர்ந்த திராட்சை தலா ஐந்து.
செய்முறை: பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும். அதை பாலில் வேக விடவும். பீட்ரூட் வெந்து பால் ஈர்த்துக் கொண்டதும் அதில் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். பீட்ரூட் அல்வா பதத்துக்கு வெந்ததும் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போடவும். நன்றாகக் கிளறி இறக்கவும்.

சத்துக்கள்

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

"அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணத்தை அருளாமல் இறக்குவதில்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி 5678..

அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் இறக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உஸாமா பின் ஷரீக் (ரரி), நூல் : திர்மிதீ (1961), அபூதாவூத் (3357)

எனது மனமார்ந்த நன்றிகள் : இதனை தொகுத்து பதிவிட உதவிய அனைத்து இணைய தளங்களுக்கும்