Sunday, December 29, 2013

மேக் அப் இல்லாமலும் அழகாய் ஜொலிக்க வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க…


அழகை அதிகரிக்க வேண்டுமென்று பலர் நிறைய பணம் செலவழிப்பதுண்டு. ஆனால் அப்படி பணத்தை செலவழித்தும் தற்காலிகமாகத் தான் அழகை அதிகரித்து வெளிப்படுத்த முடிகிறதே தவிர, நிரந்தரமாக அழகானது அதிகரித்து வெளிப்படுவதில்லை. மேலும் இப்படி தற்காலிக அழகானது மேக் அப் மூலம் தான் வருகிறது. இத்தகைய மேக் அப் மட்டும் இல்லாமல் இருந்தால், அவர்களைப் பார்க்கவே பயமாக இருக்கும். ஏனெனில் அந்த அளவில் மேக் அப் போட்டு முகத்தின் இயற்கை அழகையே பலர் கெடுத்து வைத்துள்ளனர். மேலும் மேக் அப் மூலம் சருமத்திற்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளனர். பொதுவாக இந்தியப் பெண்களின் சிறப்பே மேக் அப் இல்லாமலும் அழகாக காணப்படுவது தான். ஆனால் தற்போதோ மேக் அப் இல்லாமல் பார்க்கவே முடிவதில்லை. சரி, உங்கள் இயற்கை அழகை மீண்டும் பெற வேண்டுமா? அப்படியானால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். இதனால் நிச்சயம்
நீங்கள் மேக் அப் மூலம் இழந்த இயற்கை அழகை மீண்டும் பெறலாம். வறட்சியான சருமம் உள்ளவர்களா? அப்படியானால் இந்த ஃபேஸ் மாஸ்க் போடுங்கள். அதற்கு 1/2 கப் ஓட்ஸ் பவுடர், 2 டேபிள் ஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் 1/2 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, பின் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். முகத்தில் உள்ள பிம்பிளைப் போக்க, இரவில் படுக்கும் முன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, பிம்பிள் உள்ள பகுதியில் தடவி, ஒரு சுத்தமான துணியால் மூடி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து கழுவினால், பிம்பிள் நாளடைவில் மறைந்துவிடும். அழகைக் கெடுப்பதில் பருக்களுக்கு பின்னர் கரும்புள்ளிகள் தான் முதன்மையாக உள்ளன. இத்தகைய கரும்புள்ளியைப் போக்க, எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதனை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க கண்ட கண்ட கெமிக்கல் கலந்த மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்ததாமல், தினமும் காய்கறி எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். சருமத்தில் தங்கியுள்ள இறந்த செல்களை நீக்க, பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் தேய்த்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். அழகு என்பது முகத்தில் மட்டுமின்றி, உடல் முழுவதும் தான். ஆகவே வாரம் ஒரு முறை ஸ்பாவில் செய்யக்கூடியவற்றை, வீட்டிலேயே இயற்கையான பொருட்களை பயன்படுத்தி செய்ய வேண்டும். அதற்கு அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 கப் ஓட்ஸ் பவுடர், 1 கப் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் காய்கறி எண்ணெய் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் வென்னிலா எசன்ஸ் ஊற்றி 5 நிமிடம் கழித்து, அதில் 1/2-1 மணிநேரம் வரை உட்கார்ந்து வர வேண்டும். அழகில் சிரிப்பும் முக்கிய பங்கினைப் பெறுவதால், பற்களை நன்கு பளிச்சென்று வைத்துக் கொள்வது இன்றியமையாததாகிறது. எனவே தினமும் இரண்டு முறை பற்களை துலக்க வேண்டும். மேலும் பற்களில் கறையை உண்டாக்கும் பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். சருமம் மென்மையாக வேண்மானால், அதனை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பிரஷ் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்களை சருமத்தில் இருந்து போக்க, விளக்கெண்ணெயைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வரை வேண்டும். அதிலும் இதனை தினமும் தவறாமல் செய்து வந்தால், சரும சுருக்கங்களைப் போக்கலாம். சருமம் ஆரோக்கியமாக காணப்பட வேண்டுமானால், சருமத்திற்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. ஆகவே சருமத்திற்கு அவ்வப்போது புரோட்டீன் மாஸ்க் போட வேண்டும். அதற்கு 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் 5-6 பாதாமை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை மென்மையாக அரைத்து, முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ வேண்டும். உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, அந்த துண்டைக் கொண்டு சருமத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், தழும்புகள் போன்றவை வெளியேறி சருமம் பொலிவோடு பிரகாசமாக காணப்படும். சருமத்தின் நிறம் மாறாமல் இருப்பதற்கு வெள்ளரிக்காய் சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, வெளியே செல்லும் ஒரு மணிநேரத்திற்கு முன் சருமத்தில் தடவி ஊற வைத்து சென்றால், சருமத்தில் சூரியக் கதிர்களால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். தேங்காய் பாலைக் கொண்டு தினமும் சருமம் மற்றும் உதடுகளை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் ஊட்டச்சத்துக்களானது அதிகரிக்கப்பட்டு, சருமம் அழகாகவும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும். அழகாக இருக்க வேண்டுமென்று முகச் சருமத்தை மட்டும் பராமரிக்காமல், உடல் முழுவதும் சரியான பராமரிப்பு கொடுத்தால் தான் உண்மையான அழகு உள்ளது. ஆகவே ஆலிவ் ஆயில் மற்றும் உப்பை ஒன்றாக கலந்து, அதனை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின் குளித்தால், சருமத்தில் தங்கியுள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் அழகாக இருக்கும். கால்களில் வளர்ந்துள்ள தேவையற்ற முடிகளை நீக்க ஷேவிங் க்ரீம் அல்லது சோப்பு பயன்படுத்தாமல், ஷேவிங் செய்யும் முன் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து பின் ஷேவிங் செய்தால், கால்கள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

Saturday, December 28, 2013

ஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன?


பொதுவாகவே பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதலன் இன்பம் அடைவதையே அதிமுக்கியமாக் கருதி ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அதனால் ஆண்கள் அவசரமாக தங்கள் முடித்து விட பார்க்கிறார்கள். உறவில் அவசரத்துக்கு இடமில்லை என்பதை எடுத்துச் செல்ல வேண்டியது பெண்களின் கடமையாகும். நேரடியாக எடுத்துச்சொல்ல முடியாதபட்சத்திலும் ஆண்களை புற விளையாட்டுகளில் ஈடுபடத் தூண்ட வேண்டும்.
Women generally assume their husband or boyfriend atimukkiyama cooperation ataivataiye give pleasure . So men are urgently looking than their finish . There is no hurry to take in relation to the duty of women . Patcattilum etuttuccolla not directly induce men to engage in physical games .












ஆண் உறுப்பை தொடுவது பெண் உறுப்புக்குள் நுழைப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அத்துடன் தங்கள் உடலில் எங்கெல்லாம் இன்பம் இருக்கிறது என்பதைச் சொல்லித் தருவதுடன் ஆண் உடலில் எங்கெல்லாம் தொட்டால் அதிக இன்பம் கிடைக்கிறது என்பதை தெரிந்து அதைச் செயல்பகடுத்த வேண்டும். 
செக்ஸ் என்பதே இன்பம் கொடுத்து இன்பம் வாங்கும் நிலையாகும். அதனால் எந்த வகையில் இன்பம் கேட்டாலும் அதைக் கொடுப்பதில் தவறு இல்லை. அதுபோல் ஆண்கள் தான் முதலில் செக்ஸ் விளையாட்டைத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. விருப்பம் இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கு மிக எளிதில் செக்ஸ் உணர்வை தூண்டிவிட முடியும். 
ஆண்களுக்கு விருப்பமான உடைகளை அணிதல், நெருங்கி வந்து உறுப்புகளை தடடி எழுப்புதல், முத்தம் கொடுத்தல், தன்னுடைய உறுப்புகளை காட்டுதல், போன்றவை மூலம் ஆண்களை அழைத்து ஈடுபட செய்துவிட முடியும். ஆண்கள் அவர்களது அடிமையாகவே சுற்றிச்சுற்றி வருவார்கள். அந்த குடும்பம் என்றென்றும் இன்பத்துடன் வாழும் என்பதில் சந்தேகம் இல்லை.

முகத்தில் ரோம வளர்ச்சி அதிகமாக இருக்கிறதா?


முகத்தில் ரோம வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. ப்ளீச் செய்தும் பலனில்லை. இயற்கையான முறையில் இந்தப் பிரச்னையை சரி செய்ய வழி இருக்கிறதா? வழிகாட்டுகிறார் அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி… டீன் ஏஜ் பிள்ளைகள் அதிகம் சந்திக்கும் பிரச்னை இது. ஹார்மோன் குறைபாடு காரணமாக சிலருக்கு ரோம வளர்ச்சி அதிகம் இருக்கும். உடனடியாக டாக்டரிடம் கன்சல்ட் செய்து கொள்ளுங்கள். ப்ளீச் செய்வதால் முகத்தில் உள்ள ரோமத்தின் நிறம் மாறுமே தவிர, நிரந்தரத் தீர்வு கிடைக்காது. எந்தக் காரணத்துக்காகவும் ரிமூவர் கொண்டு ரோமம் நீக்க முயற்சி செய்ய வேண்டாம். பல மடங்கு அடர்த்தியுடன் முடி வளர்ந்து முகத்தை அசிங்கமாக்கிவிடும். ரோமத்தை எளிதாக நீக்க இயற்கையான வழிமுறை இருக்கிறது. குப்பைமேனி இலை, வசம்பு, வேப்பந்தளிர், விரலி மஞ்சள், கோரைக்கிழங்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து, உலர வைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். இந்தக் கலவையில் 2 டீஸ்பூன் எடுத்து திக் பேஸ்ட்டாக ஆக்கிக் கொள்ளுங்கள். முகத்தில் தடவுங்கள். கொஞ்சம் உலர்ந்த உடன் ப்யூமிஸ் ஸ்டோன் வைத்து மேல் நோக்கி ஸ்க்ரப் செய்வது போல செய்யுங்கள். வாரம் ஒருநாள் செய்து வந்தால் ரோமங்கள் நீங்கி, முகம் பளிச் ஆகிவிடும்!

Thursday, December 26, 2013

தாய்பால் சுரப்பை அதிகரிக்க என்ன செய்யலாம்



குழந்தை பிறந்ததும் குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் உணவாக இருப்பது தாய்பால் தான். தாய்பால் சாப்பிடும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் சக்தி தாய்பாலில் இருக்கிறது… தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் 600 கலோரியை இழக்கக்கூடும். ஆதலால் சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த பொருட்கள் நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்து வந்தால் தாய்பால் சுரப்பில் ஏற்படுகின்ற கலோரி இழப்புகளை ஈடு செய்து விடும். குழந்தையானது நோயிலிருந்து விடுபடுவதற்கான அனைத்து சத்துகளும் தாய்பாலில்
இருக்கிறது ஆதலால் தான் மருத்துவர்கள் தாய்பால் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு பல சந்தேகங்கள் உண்டாகும். அவற்றில் முக்கியமானது தாய்பால் சுரப்பு பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு சுமார் 850மி.லி தாய்பால் தினமும் சுரக்கும். பால் சுரப்பை தூண்டுவதற்கும் அதிகப்படுத்துவதற்கும் நிறைய மூலிகை மருந்துகள் உள்ளன அவை என்னவென்று பார்க்கலாம். ஏலம்-3பங்கு,திப்பிலி-4பங்கு, அதிமதுரம்-6 பங்கு, ஆகியவற்றை எடுத்து இடித்து பொடி செய்து 12 பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து இஞ்சியின் மேல் தோல் நீக்கி உலர்த்திய தூள் 1 பங்கு சேர்த்து பாலுடன் கலந்து தினமும் ஒரு வேளை காலையில் உட்கொள்ளவேண்டும். நிலப்பூசணிச் சாறுடன் மல்லி, வெந்தயம், சீரகம், நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிட பால் அதிகமாக சுரக்கும். 30-60 மி.லி அருகம்புல் சாற்றை தினமும் காலையில் குடித்து வர பால் சுரப்பு அதிகமாகும். அதிகம் பூண்டை சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும். பசுமையாகவுள்ள கீரைகளின் சூப் அருந்தி வந்தால் பால் சுரக்கும். கேழ்வரகை முளைக்கட்டி இடித்து கஞ்சியாக செய்து குடிக்க வேண்டும். இதில் முளைக்கட்டிய வெந்தயப்பொடியை சேர்த்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். கடலில் கிடைக்கும் பால் சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு போல் உண்டால் பால் சுரப்பு அதிகமாகும். ஆலம் விழுதும், ஆலம் விதையும் சம எடை எடுத்து பாலில் காய்ச்சி உண்டால் பால் சுரப்பு நன்றாக இருக்கும். ஒரு தம்ளர் பசும்பாலில் 4பூண்டு பல் சேர்த்து நன்றாக காய்ச்சி தினமும் முன்று வேளை அருந்தி வந்தால் தேவையான பால் சுரக்கும்.

கலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…

கலவியை பொருத்தவரை புணர்ச்சியில் நீடிக்கும் காலமானது ஆரம்பத்தில் பெண்களுக்கு நீண்ட நேரமாகவும், ஆண்களுக்கு குறைந்த காலமாகவும் இருக்கும். பிறகு நாளாக நாளாக அதாவது தொடர்ந்து கலவியில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு விந்து வெளிப்படுதல் தாமதமாகும். பெண்களுக்கு போக காலம் குறைந்து கொண்டே வரும் என்பது அனைவரும் அறிய வேண்டிய முக்கிய விஷயமாகும்.
எவ்வித மருந்தும் இல்லாமல் ஆண்களால் கலவிக் காலத்தில் போகத்தை நீடிக்க எளிதான வழி உண்டு. அதாவது சேரும் நேரத்தில் மனதை முழுமையாக அந்த சுகத்தின் மீது செலுத்தாமல் வேறொன்றின் மீது செலுத்தி அறிவுடன் உணர்வையும் அடக்கி நிதானமாக பெண்ணுடன் சேர வேண்டும். 
விரல்களால் கலவியை மேற்கொள்ளும் போது பெண்களை உச்சத்தின் அருகே வரவழைத்து விட முடியும். இதனால் விரல் விளையாட்டின் மூலமே பெண்ணுக்கு காம இச்சை மிகுந்து காம நீர் பெருகத் தொடங்கும். 
பெண்களுடைய உறுப்பை நான்கு வகையாக பிரிக்கலாம். அதாவது தாமரை மொட்டு போல் குவிந்தது, வளர்பிறை போல் வட்டமானது, மடிப்பாகச் சேர்ந்திருப்பது, எருமை நாக்கு போல் தடித்தது என நான்கு வகையாகும். பெண் உறுப்பின் அருகே ஆண்குறி போன்று ஒரு நாடி இருக்கும். அதை விரலால் சுழற்றினால் பெண்ணுக்கு காம நீர் வெள்ளம் போல் பெருகும். 
ஆண்&பெண் கலவியின் போது எத்தனை வகைகளில் எந்தெந்த புது முயற்சிகளில் எல்லாம் ஈடுபட முடியுமோ அத்தனையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஒவ்வொரு வகையுமே புதுவகையான இன்பத்தை தரக்கூடியவை. பெண் கீழே படுத்துக்கொண்டு ஆண் மேலே இருப்பது ஆரம்ப நிலை என்றாலும் பெண் மேலே இருந்து செயலாற்றுவது அவளுக்கு விரைவில் காம நீர் சுரக்க வழிவகுக்கும். இது தவிர ஆண்&பெண் உறுப்புகளை சுவைத்தல் என்பதும் கலவியில் ஒரு பகுதியே ஆகும். கலவியின் போது பல்வேறு கதைகள் பேசி உச்சத்துக்கு இருவரும் செல்வதே பேரின்பமாகும். 
உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆசை இல்லாதவர்கள், ஊருக்காக வாழ்பவர்கள், கலவிக்கென தன்னைத் தயார்படுத்திக் கொள்ளாதவர்கள், பிறருடன் தொடர்பு கொண்டிருப்பாரோ என்றும் எப்போதும் சந்தேகம் கொண்டிருப்பவர்கள் எல்லாம் காமத்தின் எதிரிகள். இவர்களால் குடும்ப வாழ்வு அழிந்து போகும். 
கலவி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் கிடைத்திருக்கும் அரிய பேறு. இதை மிகச்சரியான வழியில் பயன்படுத்தி இன்பத்துடன் வாழவேண்டியது தான் மனிதனாக பிறந்ததன் பயன். 
இந்த உலகில் எந்தச் செலவும் இல்லாமல் கிடைக்கும் மிகச்சிறந்த ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது கலவி இன்பம்தான். இந்த இன்பத்துக்கு தடைபோடுவது இல்லது தவிர்ப்பது வாழ்நாளில் மனிதர்கள் செய்யும் மாபெரும் தவறு.

மூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்?

Drumstick bark, root mukkarattai, umattan leaf, garlic and add equal amounts, grind on joint swelling parrupமுருங்கைப் பட்டை, மூக்கரட்டை வேர், ஊமத்தன் இலை, பூண்டு ஆகியவற்றை சம அளவில் சேர்த்து, அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப்  போட்டால், மூட்டு வீக்கம் கரையும். மூட்டு வலி குறையும். மூட்டு சம்மந்தப்பட்ட வாயு நோய் குணமாகும்.

வாயு தொல்லை நீங்க? 
முருங்கைக் கீரையை கைப்பிடி அளவு எடுத்து இடித்து, அத்துடன் மிளகு, கொட்டை நீக்கிய கடுக்காய் பாதி, சீரகம், சேர்த்து, ரசம் வைத்து (சூப் போல)  வடிகட்டி, ஒரு டம்ளர் குடித்து வந்தால் பேதி நின்று விடும். மேலும் மலக்கட்டு, வாயு, வயிறு உப்புசம், உடல் பளு, உடல் உஷ்ணம், உடல் அசதி  ஆகிய பிரச்னைகள் நீங்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க?

முருங்கைக் கீரை, முருங்கைக் காய், முருங்கைப்பூ இம்மூன்றையும் உணவில் சேர்த்து, அடிக்கடி உண்டு வந்தால், நரம்பு தளர்ச்சி நோய் குணம்  ஆகும்.

நரித்தலை வாதம் பிரச்னைக்கு தீர்வு? 

நரித்தலை வாதமென்பது கால் மூட்டுகளில் நரித்தலை போன்று வீங்கி வலி எடுக்கும். இந்தநோய்க்கு நரித்தலை வாதம் என்று பெயர் முருங்கைக்  கீரைகளை நீக்கி விட்டு, அதன் ஈர்க்கு மட்டும் எடுத்து கொண்டு, அதில் சிறிது முருங்கைப்பட்டை, மிளகு சேர்த்து அரைத்து, 3 டம்பளர் தண்ணீரில்  கலந்து, அது ஒரு டம்ளராகும் வரை சுண்டக் காய்ச்சி கசாயமாக ஆகும் வரை காய்ச்ச வேண்டும். காலை, மாலை இரு வேலைகளில் 250 மிலி வீதம்  சாப்பிட்டு வந்தால், கால் முட்டுகளில் ஏற்படும், வாதமும், நரித்தலை வாதமும் நீங்கும்.

முழங்கால் வாதம் ?


ஒருசில மனிதர்களுக்கு முழங்காலில் வாதநீர் தங்கியிருந்து தொந்தரவு கொடுக்கும். முழங்கால் வலிக்கிறது என்று கூறுவார்கள். அவர்கள் வாரம்  இருமுறை முருங்கைக்காயைக் சமையல் செய்து, நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், அவர்களின் முழங்காலில் உள்ள, வாதம் நீங்கும். முழங்காலில்  வாத நீர் தங்காது. காலில் தொந்தரவு இருக்காது.

எலுமிச்சை இலையை வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து சுளுக்கு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சுளு வலி குறையும். அத்தி காயை நன்கு  அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி வலி குறையும். கால்கள் மிருதுவாகும்.

மூட்டு வலி குறைய விளக்கு எண்ணெய்யை நன்கு காய்ச்சி, ஒரு கப் ஆரஞ்சி பழச்சாற்றில் கலந்து தினமும் காலை யில் சாப்பிட்டு வந்தால் மூட்டு  வலி மறையும். பாதப்படை குறைய வினிகரை வெது வெதுப்பான நீரில் கலந்து பாதத்தை சுத்தம் செய்த பிறகு வினிகர் நீரை பாதத்தில் ஒத்திரம்  கொடுத்து வந்தால் பாதப்படை வராது.

பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் !

பாம்பு  விஷக் கடிக்கு பாரம்பரிய

சித்த அனுபவ மருந்துகள் 

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன.அதில் -246-வகை 

பாம்புகள் இந்தியாவில் உள்ளன.அயர்லாந்து,நியூசிலாந்து,ஆர்ட்டிக் 

போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் 

காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது 

சில வகைப் பாம்புகளைத் தவிர  பெரும்பான்மையான பாம்புகள் விஷ  

மற்றவையே.இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் 

பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு  - 2.கட்டு வீரியன்- 3.கண்ணாடி வீரியன்,

4.சுருட்டை பாம்பு - 5.கரு நாகம் - 6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் 

பெருமளவு காணப்படுகின்றன.பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து

"சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து 

கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு 

அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ  

முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது .ஒருவருக்கு பாம்பு கடித்து

விஷம் ஏறிய நிலையில்  இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து 

தான்  ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் 

போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும். 

      பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்         

நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :

கடிவாய் எரியும்,வாந்தி வரும், நடை தளரும்,மயக்கம் வரும், மூக்கில் 

நுரை வரும்,உயிர்ப்பு தடை படும்,இறப்பு நேரிடும்,வேப்பிலை கசக்காது,

மிளகு காரம் இருக்காது,ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும்,  இரு 

பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி 

நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200-மி.லி.கொடுக்க 

வேண்டும்.அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம்.நினை 

வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க 

வைக்கவும் ,வாய் திறக்கும் ,வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். 

விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :

இது  கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும்,குருதி தொடர்ந்து 

வரும்,கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும்,வாயில்,மூக்கில் குருதி 

வரும்,சிறு நீரும் குருதியாகும்,ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் 

சிரியா நங்கை,வேம்பு கசக்காது.இது கடித்த அரை மணி நேரத்தில்   

சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி 

வரும் ,10-நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது  

கசக்கும்,மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் 

தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

தீராத இருமலைப் போக்கும் கைமருந்து !

Cough, cold and throat to punakal, barley, rice and boiled in a little water, so if you put him down, freshwater availabilityஇருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புணகளுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால்,  தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று  நாட்கள் தொடர்ந்து சாப்பிட குணம் தெரியும். 

பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும். இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன்  நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில்  உள்ள சளி நீங்கி விடும். 

வால்மிளகு-10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு  நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது.  மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப்  புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும். 

தாங்க முடியாத அடுக்கு இருமலுக்கு முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து உள்ளங் கையில் கசக்கவும். சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில்  தடவினால் இருமல் குறையும். அரிசித்திப்பிலியை கடாயில் போட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும். சதா இருமும் குழந்தைகள், பெரியவர்கள்  யாரும் இதை உட்கொள்ளலாம். ஒரு டீ ஸ்பூன் பொடியில் சிறிது தேன் விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். 

இதை, காம்பு நீக்கிய வெற்றிலையின் நடுவில் அரை ஸ்பூன் வைத்து, வாயில் போட்டு வெற்றிலைச் சாறுடன் சேர்த்து சிறிது சிறிதாக சிறிது நேரம்  வாயில் அடக்கிக் கொண்டு சாப்பிட்டால் இருமல் குறையும். துளசிச் சாறையும் கல்கண்டையும் கலந்து சர்பத் போலக் காய்ச்சி வைத்துக்  கொள்ளுங்கள். வயதுக்குத் தகுந்தபடி இத் துளசிசர்ப்பத்தை சிறிதளவு எடுத்து 2 அல்லது 3 தடவைகள் சாப்பிட இருமல் குணமாகும்.

வறட்டு இருமலால் அவதிப்படுவோர் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது. கண்டங்கத்திரி, தூதுவளை,  ஆடாதொடை, துளசி இவைகளின் இலை வகைக்கு 1 படி, சித்தரத்தை 1 துண்டு, இஞ்சி 1 துண்டு சேர்த்து இடித்துப் பிழிந்த சாறு 10 முதல் 20 துளி  வரையில் வெண்ணையில் கலந்து காலை, மாலை கொடுத்து வர ஓயாத இருமல் நீங்கும். கபக்கட்டு, சிறுபிள்ளைகளுக்குக் காணும் கணைச்சூடு  விலகும்.

தொப்பை குறைய எளிய பயிற்சி! உடற்பயிற்சி!!

தொப்பை குறைய பல பயிற்சிகள் இருந்தாலும் சில பயிற்சிகள் மட்டுமே விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. அந்த வகையில் இந்த பயிற்சி வீட்டில் இருந்தபடியே தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. பெண்களுக்கு பிரசவம் முடிந்த பின்னர் ஏற்படும் தொப்பை குறைய இந்த பயிற்சியை செய்யலாம். தொப்பை குறைய எளிய பயிற்சி

ஆனால் சிசேரியன் செய்தவர்கள் குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு பின்னர் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னர் தான் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்ய விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்து கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். கால்களை தரையில் இருந்து ஒரு அடி மேல் தூக்கவும். 

பின்னர் மெதுவாக முன்னோக்கி எழுந்து வலது காலை மட்டும் முட்டி வரை மடக்கி இடது கையால் வலது கால் முட்டியை தொட வேண்டும். இடது கால் தரையில் இருந்து ஒரு அடிக்கு மேலே (படத்தில் உள்ளபடி) இருக்க வேண்டும். 

இதே போல் கால்களை மாற்றி இடது, வலது என மாறி மாறி செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்யும் போது கால்களை தரையில் ஊன்ற கூடாது. இவ்வாறு 20 முதல் 30 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சி வயிற்று பகுதிக்கும், முதுகுக்கும் நல்ல வலிமை தருகிறது. 

ஒரு மாதம் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலே நல்ல பலன் கிடைப்பதை காணலாம். இந்த பயிற்சி நன்கு பழகிய பின்னர் 40 முறை அல்லது அதற்கு மேலும் செய்யலாம். எந்த அளவுக்கு எண்ணிக்கையின் அளவை அதிகரிக்கிறோமோ அந்த அளவு பலன் தரக்கூடியது இந்த பயிற்சி.

ஆயுளை அதிகரிக்கும் உடற்பயிற்சி!


இந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும் நேரம் உள்ளது. உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. இதனால் பாதிப்படைய போவது உடல் தான். ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆயுளை அதிகரிக்கும் உடற்பயிற்சி

ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவை தான் நல்ல கட்டமைப்போடு இருக்கும் உடல். நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கும் போது உடற்பயிற்சியை மறந்தே விடுவோம். உணவிற்கு தரும் முக்கியத்துவத்தை போல் உடற்பயிற்சிக்கும் தர வேண்டும். 

உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைப்பாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சி உள்ளன. சில உடற்பயிற்சி ஆரோக்கியமான உடல் நலத்துக்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவும். யோகா, தியானம் போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. 

இப்போது அத்தகைய உடற்பயிற்சியினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை இங்கு காண்போம். தினசரி 30–45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன நிலையையும் நன்றாக வைக்க உதவும். 

மேலும் புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. இதனால் அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற மன நோய்களிலிருந்து விடுபடலாம். குறிப்பாக வாழ்க்கையின் பின் நாட்களில் மன நோய் ஏற்பட்டாலும் அதை தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு. 

உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் மனம் அமைதியாய் இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் கவலைகளும் நீங்கும். உடற்பயிற்சி செய்தால் பலவிதமான நோய்களில் இருந்து இதயம் பாதுகாப்பாக இருக்கும். 

பரம்பரையாக இதய நோய் இருந்தால் உடற்பயிற்சி செய்வதால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் இதய நோய்களை விரட்டி விடலாம். ஆரோக்கியமான உடல் எடையோடு இருப்பது தான் அனைவரின் கனவு. இதை அடைவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. 

தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை உட்கொண்டால் உடல் கட்டமைப்போடு அழகாக காட்சியளிக்கும். உடல் எடையை குறைக்க மட்டும் உடற்பயிற்சி உதவுவதில்லை. அதிக எடை உள்ளவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை தடுக்கவும் உதவியாக இருக்கும். 

அதிலும் தினசரி உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை ‘அமைதியான கொலைகாரன்’ என்று அழைப்பர். உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க சீரான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். 

மேலும் தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் ரத்தக்குழாய்கள் ஓய்வெடுக்க உதவுவதால் ரத்த அழுத்தம் வருவதையும் தடுக்கும். அவ்வப்போது உடற்பயிற்சி செய்வதால் அதிகப்படியான வியர்வையானது நம்மை சோர்வடைய செய்யும். ஆனால் தொடர்ச்சியாக செய்தோமானால் உடல் உறுதி அதிகரித்து அயர்ச்சியை குறைக்கும். 

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் நோய் தடுப்பாற்றல் அமைப்பு அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பல வகையான நோய்களில் இருந்தும் விடுபடலாம். உடற்பயிற்சி உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருக்கும். அதிலும் உடல் தடித்தல், சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக்கொதிப்பு மற்றும் வாதம் போன்ற பிரச்சினையில் இருந்து நம்மை பாதுகாக்கும். 

உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை கூட்டி, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும். மேலும் இதயத்தில் உள்ள தமனிகளில் ரத்தம் உறைதல் உருவாக்குவதை தடுக்கும். உடற்பயிற்சி தசைகளின் வலுவை அதிகரிக்க துணை புரியும். இதனால் வயதாகும் போது தசைகளின் இயக்கத்தை நிலை நிறுத்த உதவும். 

மனநிலையை ஊக்குவிக்கும் உணவு முறையை நம்புவதற்கு பதிலாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஏனெனில் உடற்பயிற்சி மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களுக்கு அதிகப்படியான தூண்டு தலை கொடுப்பதால் மனநிலையை சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைத்திருக்கும். 

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும். ஆற்றல் அதிகரிக்கும். மேலும் திசுக்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க உதவிபுரியும். உடற்பயிற்சி செய்தால் கடுமையான வேலைக்கு பின் தூக்கம் வருவது போல தூக்கம் வரும். ஆனால் தூங்குவதற்கு முன் கண்டிபாக உடற்பயிற்சி செய்யக்கூடாது. 

தினசரி உடற்பயிற்சி செய்வது எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும். இதனால் ஆஸ்டியோ போரோசிஸ் மற்றும் ஆர்தரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். உடற்பயிற்சி குடல் புற்று நோய், மார்பக புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் போன்ற பல வகையான புற்று நோய்கள் வருவதை குறைக்க உதவி புரிகிறது. 

அதனால் உடற்பயிற்சி செய்து புற்று நோய் வரும் அபாயத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள். நீண்ட ஆயுள் தினசரி உடற்பயிற்சி செய்வதால் ஆயுள் பல வருடம் கூடும். ஆயுளை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் வயதானாலும் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். 

முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள் வலியை குறைக்க உடலை சிறிது வளைத்து உடற்பயிற்சி செய்யலாம். முதுகு வலியை மருந்துகள் மூலம் குணப்படுத்துவதை விட உடற்பயிற்சி மூலம் குறைப்பதே சிறந்த வழி. படிப்பாற்றல் அதிகரிக்கும் தினசரி உடற்பயிற்சி செய்தால் மூளையின் ரசாயன அளவு அதிகரிக்கும். 

இது புதிய மூளை அணுக்களை உருவாக்கி மூளையில் உள்ள அணுக்களின் மத்தியில் இணைப்பை உருவாக்கும். அதனால் புதிய விஷயங்களை படிக்கவும், புரியவும் உதவும். டென்னிஸ், கூடைப்பந்து போன்ற கடின பயிற்சியையும் மேற்கொண்டால் படிப்புத்திறன் மற்றும் மன ஒருமித்தல் திறன் அதிகரிக்கும்.

உட்டியாசனம் -- ஆசனம்!


உட்டியாசனம்

இவ்வாசனம் மூச்சை வெளியில் முழுவதுமாக விட்டு, வயிற்றுப் பகுதியை எக்கிய நிலையில் செய்யும் ஆசனமாதலால் இப்பெயர் வழங்கலாயிற்று.

செய்முறை: 

முதலில் விரிப்பில் கால்களைச் சற்று தளர்த்தி நிற்கவும். இடுப்பிற்கு மேல் உடம்பினைச் சற்று முன்னோக்கும் நிலையில் தாழ்த்த வேண்டும். இருக்கையின் பெருவிரல்களையும் தொடையின் மீது வைத்து, மாற்ற விரல்கள் தொடையின் கீழ்புறம் நோக்குமாறு அமைத்துக் கொள்ளவும்.

இந்த நிலையில் மூச்சினை முழுவதும் வெளியில் தள்ளி வயிற்றை எக்கி ஒட்டிய படி உள்ளிழுக்க வேண்டும். இந்நிலையில் 15 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம்.

பலன்கள்:

1.சிறுகுடல்,பெருங்குடல் நன்கு அழுத்தப் பெற்று புத்துணர்வு பெறுகின்றது.

2.சிறுநீரகம் நன்கு செயல்படுகிறது.

Tuesday, December 24, 2013

மாரடைப்பைத் தடுக்கும் ஆரஞ்சு! பழங்களின் பயன்கள்!!


உலகில் இருதயக் கோளாறு மற்றும் மாரடைப்பு காரணமாக பலர் மரணம் அடைகிறார்கள். ரத்தத்தில் இருவகையான கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. அவை 1. எச்.டி.எல். ( எச்.டி.எல் -ஹை டென்சிட்டி லிப்போ புரொட்டின்ஸ்) 2. எல்.டி.எல். - (லோ டென்சிட்டி லிப்போ புரொட்டின்ஸ்) இதில் எச்.டி.எல் சத்து 40 மில்லி கிராம் சதவீதத்துக்குக் குறையக் கூடாது. அதே போல் எல்.டி.எல் அளவு 100 மில்லி கிராம் சதவீதத்துக்கு குறைவாகவே இருக்க வேண்டும்.

 ரத்தத்தில் கொழுப்பு தேவைக்கு அதிகமாகச் சேருவதையும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்க எச்.டி.எல். சத்து உதவுகிறது. தினமும் 2 அல்லது 3 கிளாஸ் ஆரஞ்சு சாறு குடித்து வந்தால் ரத்தத்தில் எச். டி.எல். அளவு அதிகரிக்கிறது என்று டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஹெஸ்பிரிடின் என்ற சத்து காரணமாக அமைகிறது. எனவே தினமும் ஆரஞ்சு சாறு குடித்து வந்தால் மாரடைப்பு மற்றும் இருதயக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்று டாக்டர்கள் யோசனை கூறியுள்ளனர்.v

பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..?


ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு வரலாற்று ரீதியாக பெண்ணின்  பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80% மேல் இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல்(libidonal energy), பெண்களை மனநோய்க்கு ஆளாக்கி வருவது என்றும் பாலியல் ஆய்வு சொல்கிறது.
மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல், எல்லா வேலைகளையும்  இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் தொடக்கி பிள்ளைகளை அடிப்பது வரை 40 வகைகள் எனச் சொல்கிறது அந்த ஆய்வு. மேலும் பெண்களை உச்சக்கட்டம் அடையவைப்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். கிளைட் மசாஜ் தொடக்கி ஜி ஸ்போட் வரை அது தொடர்கிறது. 
ஆண், பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலும், ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. பெண் தானே அதை அடைவதை தவிர வேறு வழி இல்லை. அதாவது ஒரு பெண் கலவியில் சுதந்திரமாக ஈடுபட்டு தன மன நிலை மற்றும் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அவளது உச்சகட்டத்துக்கு ஆண் உதவுவது தான் ஒரே சாத்தியம் அல்லது ஆண் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும். ஆண்கள் புற விளையாட்டுகளில் (foreplay) அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே பெண்கள் விரும்புகிறார்கள். 
பெண் உடலை ஒரு காமம் துய்க்கும் களமாகக்(erotic site) கருதாமல், ஒரு பாலியல் விளையாட்டாக(sexual act) மாற்ற வேண்டும். பாலியலை நமது தன்மையில் இருந்து(ego)கழற்ற வேண்டும். பசி, தூக்கம் போன்று பாலுறவு என்பது மற்றொரு அடிப்படைச் செயல்(basic instinct) என்பதை புரிந்து கொள்ளவேண்டும். 
பாலுறவில் பெண் உச்சம் என்ற நிலையை அடைய, பாலுறவில் கட்டமைக்கப்பட்டுள்ள அணைத்து ஒழுங்கு விதிமுறைகளையும் உடைக்க வேண்டும். அதவாது பலவகையான செக்ஸ் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பரவலான பயம் அற்ற புரிதல் வேண்டும். ஆண், பெண் இருவரும் செக்ஸ் பற்றிய முழுமையான புரிதலுடன் சந்தோஷமாகச் செயல்படும் நிலையில், பெண் தாமதம் இல்லாமல் ஆணுடன் இணைந்து ஒரே நேரத்தில் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியும்.

உடல் எடையைக் குறைக்க 12 வழிகள்.


உடல் எடையைக் குறைக்க 12 வழிகள்.


 overweight.jpg
ஓவர் வெயிட் உயிருக்கு ஆபத்து. உங்கள் இடுப்புப் பெல்ட் பெருக்கப் பெருக்க உங்கள் ஆயுள் குறைகிறது என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. உடல் எடையைக்குறைக்க 100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள் என்ற நூலில் இருக்கும் தகவல்கள் இதோ !
 
 
 
 
01. உப்பு உடலை உப்ப வைக்கும், உப்பை அளவோடு சாப்பிடுங்கள்.
02. நொறுக்குத் தீனி சாப்பிடுவதை அறவே விட்டுவிடுங்கள்.
03. தினமும் குறைந்தது நாலு கி.மீ. நடவுங்கள்.
04. கொழுப்பு சத்துள்ள உணவை தவிருங்கள்.
05. இனிப்பு, மாவு, மசாலா, எண்ணெய்ப் பொருட்களை சாப்பிட வேண்டாம்.
06. பசிக்காத போது சாப்பிட வேண்டாம்.
07. உணவை அளவோடு சாப்பிடுங்கள். சுவை கருதி உணவை ஒரு பிடி பிடித்துவிடாதீர்கள்.
08. குளிர்ந்த நீர், மோர் என்பவற்றைக் குடியுங்கள்.
09. எடை கூடிவிட்டதே என்று கவலைப்படாதீர்கள்.
10. உங்கள் எடையைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தால் ஆயுளில் 13 சத வீதம் குறையும்.
11. பட்டினி கிடப்பதால் உடல் எடை குறையாது, உடலுக்கு கெடுதலே வரும்.
12. ஒழுங்கு முறையாக தேகப்பயிற்சி செய்யுங்கள்.
உங்கள் உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு. காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது. மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது. இப்பரிசோதனை எளிமையான சித்த மருத்துவமாகும். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும்.
ஆதாரம் : 100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள் என்ற நூலில் இருந்து.

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்


உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்





உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.1 ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.
2 தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.
3 தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.4 அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.
5 வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
6 அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.7 தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.
8 அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.
9 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.
கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு.இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை.
ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்
நேரம் சாப்பிட வேண்டிய உணவு
காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி)
காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.
முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் – 1 (அ) 2 டம்ளர்.
நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)
மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)
மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு
இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ)
காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.
படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.

உடல் எடையைக் குறைக்க 

சாப்பிடும் உணவு சிறிய அளவில் இருந்தால்போதும்,ஆனால் அந்த உணவுகள் தரமான உணவுகளாக இருக்க வேண்டும்! இப்படிச் சாப்பிட்டு வந்தால் சாப்பிட்ட திருப்தியும் அதே நேரத்தில் குறைந்த அளவே உடலில் சேரும் உணவுகளால் உடல் எடையும் பராமரிக்கப்படும்.


தரமான உணவுகளை வேளை தவறாமல் குறைவாகச் சாப்பிட்டாலும் தினமும் உடற்பயிற்சியும் அவசியம் தேவை.

உடல் எடையைக் குறைக்கவும் அதே நேரத்தில் ஒல்லியான கச்சிதமான தோற்றத்தைப் பராமரிக்கவும் கீழ்க்கண்ட பத்து உணவுகள் மிகச்சிறந்த உணவுகளாக சத்துணவு நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.



சேனைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு!


இந்த இரண்டும் மெதுவாக சீரணிக்கப்படுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் வளர்சிதை மாற்றம் மிகச் சரியாக நடக்க இந்த உணவுகள் உதவுவதால் உடல்எடை குறையும்.கொழுப்பு சேமிப்பாகாமல் தடுக்கும்.சேனைக்கிழங்கு ஆண்டு முழுவதும் கிடைக்கும். வள்ளிக்கிழங்கை சீசனில் பயன்படுத்தலாம்.



ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை பழங்களில் மற்ற பழங்களில் உள்ளதைவிட எளிதில் கரையக்கூடிய பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகமுள்ளது நார்ச்சத்து உணவுகள் மெதுவாக ஜீரணமாகும். இதனால் உடலிலுள்ள விஷப் பொருள்களும்,சேமிப்பாக உள்ள அதிகக் கொழுப்பும் கரைக்கப்பட்டு வெளியேற்றப்படும். நார்ச்சத்து அதிகமுள்ள இந்த மூன்று பழங்களும் உணவு நன்றாகச் சாப்பிட்ட திருப்தியையும் எளிதில் வழங்கும்.



நன்மை தரும் சாண்ட்விட்சுகள்


21 வாரங்களில் 40 பவுண்டு (1 பவுண்டு = 650 கிராம்) எடையைக் குறைக்க (அதுவும் உறுதியாய்) தக்காளி, வெள்ளரிக்காய், முளைவிட்ட தானியங்கள், லெட்டூஸ், வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து சாலட் போல தயாரியுங்கள்.உங்களை கவர்ந்த சாண்ட்விட்ச்சுகள் இவை. கோதுமை மாவினால் செய்யப்பட்ட பன்வகைகளுடன் இவற்றைச் சேர்த்து சாப்பிடலாம். இந்த உணவுகளிலும் நார்ச்சத்து அதிகம்.



தானியங்கள்



கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு சம்பா கோதுமை, ரவை போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றை பாசிப்பருப்பு, தேங்காய்ச் சட்னி போன்றவற்றின் மூலம் புரதமும் கிடைக்கும்படி சாப்பிடலாம். எப்போதும் பருப்பு வகைகள் சேர்ந்தே மேற்கண்ட தானிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதனால் சாப்பிடும் அளவும் குறையும்.



காய்கறி சாலட்



இதில் முக்கியப்பங்காக கீரைவகை இருக்க வேண்டும்.அதன் மேல் தயிரை லேசாக ஊற்றி மூடவும். அதன் மேல் உங்களுக்குப் பிடித்தமான காய்கறித் துண்டுகளைப் போடவும். அசைவம் உண்பவர்கள் எனில் இத்துடன் புரதத்திற்காக அவித்த வஞ்சிரமீன் ஒன்றும் சேர்த்துக் கொள்ளலாம். சைவம் எனில் அவித்த மொச்சை நான்கு தேக்கரண்டிகள் சேர்த்துக் கொள்ளவும்.



பாதம் பருப்புக்கள்


ஒமேகா 3 என்ற நன்மை செய்யும் கொழுப்பு அமிலம், புரதம், கார்போஹைடிரேட் போல அவசியம் தேவை. எனவே, தினமும் நல்ல கொழுப்பு அமிலம் கிடைக்க ஏழு பாதாம் பருப்புகளைச் சாப்பிட்டு வாருங்கள். பருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம்.


கொண்டைக்கடலை மசியல்


ஊற வைத்து அவித்த கொண்டைக்கடலையை மிக்சியில் கூழாக்கவும். இதில் எலுமிச்சை சாறு சிறிதளவும்,நல்லெண்ணெயில் வதக்கிய வெள்ளைப்பூண்டுப் பற்களையும் போட்டுக் கலக்கவும். சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிட புரதம் நிறைந்த கூழ் இது.


தக்காளி, வெங்காயம்

இவற்றை சிறிதாக அரிந்து கலந்து வைத்துக் கொண்டு சாப்பிடவும். இல்லையெனில் பீன்ஸ் கூட்டு, முட்டைக்கோஸ் சூப் சாப்பிடவும்.

மேற்கண்ட அனைத்து உணவுகளும் தரமான உணவுகள் என்பதால் உடல் எடை கட்டுப்பாட்டுடன், ஆரோக்கியமாகத் திகழும். குண்டு மனிதர்கள் 21 வாரங்களில் எடை குறைந்து உடல், மனம் லேசாக இருப்பதை எளிதில் உணரலாம்.


யோகார்ட்

காய்கறி சாலட் போல ஒவ்வொரு வேளை உணவின்போதும் ஒரு கப் யோகார்ட் (தயிர்) சாப்பிடவும். கொழுப்புக் குறைவாக உள்ள அதிசய உணவு இது.சுவை கூட்டப்பட்ட யோகார்ட்,தயிரைப்போல நன்மை அளிக்கக் கூடியதே!v

முடியை பாதுகாக்க... ஹெல்த் ஸ்பெஷல்!



  
முடியை பாதுகாக்க...

* உளுத்தம் பருப்பை வேக வைத்து, பசையாக்கி, தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து பின், குளிக்கவும். பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
* எலுமிச்சை சாறை, தேங்காய் எண்ணெய் அல்லது பாலில் கலந்து தேய்த்துக் குளித்தால், பொடுகு நீங்கி, முடி மிருது வாக இருக்கும்.
* வெற்றிலையை அம்மியில் அரைத்து விழுதாக்கி, தலையில் பூசி, அரைமணி நேரம் ஊறிய பின், குளித்தால், உடல் சூடு தணிவதுடன், நரை நீங்கி, முடி மிருதுவாக இருக்கும். மேலும், தலையில் புண் இருந்தாலும் குணப்படுத்தும்; பொடுகு நீங்கும்.
* கறிவேப்பிலையை, தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி, தலையில் தேய்த்து வர, நரைமுடி குறையும்.

"ஜிம்'முக்கு போகாமலே....உடற்பயிற்சி!


   உடற்பயிற்சி செய்தால், தசைகளுக்கு நல்லது என்று எல்லாருக்குமே தெரியும். ஆனால், இதற்கென நேரம் ஒதுக்க முடியாத நிலை பல பெண்களுக்கு. தவிர, இன்னும் கூட, பல குடும்பங்களில், பெண்கள் உடற்பயிற்சி செய்வதை, கிண்டலாகத்தான் பார்க்கின்றனர்.

உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் செலவழிக்கக் கூடாது; நாம் செய்யும் பயிற்சிகள் பிறருக்கு, "பளிச்'சென்று தெரியவும் கூடாது என்று நினைக்கும் பெண்களுக்கு, இதோ சில உடல் மற்றும் மனப் பயிற்சிகள்:
பெரும்பாலான பயிற்சிகள் அனைவராலும் செய்யக் கூடியவை தான் என்றாலும், ரத்தக்கொதிப்பு பிரச்னை உள்ளவர்கள், பயிற்சிகளை செய்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
* வரிசையில், அதிக நேரம் நிற்க நேரும்போது, உடலை அசைக்காமல், கழுத்தை, வலமும் இடமுமாக திருப்புங்கள். கழுத்துக்கு இது நல்ல பயிற்சி. அதே போல், உடலின் கீழ்ப்பகுதியை அசைக்காமல், இடுப்புக்கு மேல் உள்ள பகுதியை, வலதும், இடதுமாகத் திருப்புங்கள். இதனால், தொப்பைப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாகி, கொழுப்பு குறையும்.
* ஒரு முக்கியமான நபரைப் பார்க்கப் போகிறீர்கள்; மனம் படபடப்பாய்இருக்கு. இந்த பதற்றத்தைத் தவிர்க்க, அந்த வி.ஐ.பி.யுடனான அந்த சந்திப்பு எப்படி அமைய வேண்டும் என்று நீங்கள் யூகிக்கிறீர்களோ, அதை, அப்படியே மனதில் காட்சிகளாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த வி.ஐ.பி.க்கு நல்ல குணங்கள் மற்றும் எதிராளியை மதிக்கும் பண்பு இருப்பதாக நம்புங்கள். 
* கடந்த காலத்தில், நீங்கள் செய்த சாதனைகளை, மனதில் கொண்டு வாருங்கள். பிறகென்ன, உங்கள் மனதில் நம்பிக்கை பிறக்கும், நம்பிக்கை வந்தால், நினைத்தது நிச்சயம் நடக்கும்.
* மணிக்கட்டுகளுக்கான பயிற்சி இது: இதை, எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். முஷ்டியை நன்கு இறுக்கி, பின், ஒவ்வொன்றாக எல்லா விரல்களையும் அகலமாக விரித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, மணிக்கட்டைச் சுழற்றுங்கள். மணிக்கட்டை மேலும் கீழுமாக சில முறை உதறுங்கள். பிறகு, மொத்த கையுமே தளர்த்தி, அசைத்துப் பாருங்கள்.
* தொலைபேசி ரிசீவரை இடது கையில் வைத்திருந்தால், நாற்காலியில் அமர்ந்து, வலது கையில், பேப்பர் வெயிட் அல்லது கனமான புத்தகம் போன்ற ஒரு பொருளை கையில் எடுத்து, தலைக்கு மேல் தூக்குங்கள், பிறகு, உங்கள் தலைக்குப் பின்புறம் வழியாக அதை, கீழே கொண்டு வந்து, அப்படியே பக்கவாட்டில் கொண்டு வந்து இங்குமங்குமாக ஆட்டுங்கள். அதாவது, உங்கள் மார்புப் பகுதியை நோக்கி கொண்டு வருவது போலிருக்க வேண்டும். பிறகு மெதுவாகப் பக்கவாட்டில் இறக்குங்கள். தொடர்ந்து சில தடவை, இப்பயிற்சியை அடிக்கடி செய்து வந்தால், கைகள் வலிமை பெறும்.
* கார், பஸ், ரயிலில் உட்கார்ந்து செல்லும் போது, மூக்கின் வழியாக காற்றை நன்கு உள்ளே இழுத்து, சில நொடிகள் சுவாசத்தை உள்ளேயே அடக்கி, நாக்கை வெளிப்புறமாக நீட்டுங்கள். நாக்கினால், முகவாயின் கீழ்ப்பகுதியைத் தொடுவது போன்று இருக்கட்டும். கண்களையும் முடிந்தளவு நன்கு விழித்துப் பாருங்கள். இப்போது, வாயைத் திறந்து காற்றை வெளியேற்றுங்கள். இந்தப் பயிற்சி, உங்கள் முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவதைத் தடுக்கும். ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பை அண்ட விடாது.
* எங்காவது ஒரு ரிசப்ஷன் அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், அங்கு உள்ள பொருட்களை, அரை நிமிடம் உற்றுப் பார்த்து, மனதில், பதிய வைத்துக் கொள்ளுங்கள். பின், கண்களை மூடி, உங்கள் மனதில், நீங்கள் பார்த்த பொருட்களை, பட்டியலிடுங்கள். பின், கண் விழித்து, மீண்டும் அப்பொருட்களை பார்த்து, உங்கள் நினைவில் இருந்து மறந்த விஷயங்களையும் பட்டியலிடுங்கள். இது போன்ற மனப்பயிற்சி, நம் கவனிக்கும் திறமையை அதிகரிக்கும்.
* ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில், நடந்து செல்ல நேரும் போது, உடலை உறுதியாகவும், முகத்தில் தைரியம் வெளிக்காட்டும் விதமாக, கண்கள், வாய், தலையை அசைப்பது எல்லாவற்றிலுமே ஒரு கம்பீரத்தை (தற்காலிகமாவது) கொண்டு வாருங்கள். தோள்களை இறுக்கமின்றியும், அந்தப் பகுதி, உங்களுக்கு பழக்கமானது போன்ற உணர்வோடு நடந்து செல்லுங்கள்.
* மனதில் பல்வேறு கவலைகள் அரித்துக்கொண்டிருக்கிறது எனில், எந்த இடமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கவலையாக நினையுங்கள். அது, கழுகு, வல்லூறு வடிவில், உங்களை விட்டுப் பறந்து போவதாகவும், அப்படி பறந்தவுடன், உங்கள் மனதில் உற்சாகம் பரவுவதாக கற்பனை செய்யுங்கள். மனம் லேசாவதை உணர்வீர்கள்.
என்ன... பயிற்சிகளை செய்ய ஆரம்பித்து விட்டீர்களா?

Wednesday, December 18, 2013

உப்பு, ரொம்ப தப்பு... அயோடின் உப்பு, ரொம்ப ரொம்ப தப்பு! உங்கள் தட்டில் உணவா... விஷமா? ஹெல்த் ஸ்பெஷல்!

மனித உடலின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இன்னொரு உணவுப் பொருள், சோடியம் எனப்படும் உப்பு.
ஆதிமனிதன் வேட்டையாடி விலங்குகளின் மாமிசத்தையும் ரத்தத்தையும் உணவாக உண்டான். உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான சோடியம், விலங்குகளின் ரத்தத்தின் மூலமாகவே அவனுக்குக் கிடைத்தது. பிறகு, விவசாயம் செய்து உணவு உண்ண ஆரம்பித்தபோதுதான் உப்பைத் தேடி, சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தான்! இன்றைக்கு, இந்த உப்பே, அவனுக்கு எமனாகும் அளவுக்கு வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டது... சோகம்தான்!
உப்பின் உற்பத்தி ஸ்தானம் கடல் நீர்தான். கடலில் மூழ்கி, பின்னர் உயிர்பெற்று எழுந்த மலைகளிலும், மலையடிவாரங்களிலும் உப்பு கிடைக்கும். பல யுத்தங்கள் உப்புக்காகவே நடந்திருக்கின்றன இந்த உலகில்! சாம்ராஜ்யங்கள் பல, உப்புக்காகவே சரிந்திருக்கின்றன! உலகப் புகழ்வாய்ந்த ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு, அந்த நாட்டு அரசன் விதித்த உப்புவரி, முக்கியக் காரணம்.
1930-ல் இந்தியாவில் நடந்தது என்ன? உப்பு, விலைமதிக்க முடியாத செல்வம் என்று உணர்ந்த ஆங்கிலேயர்கள், உப்பு வணிகத்தை தாங்களே மேற்கொண்டதோடு, உப்புக்கு வரியும் விதித்தனர். 'மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட நம் மக்களின் வாழ்வாதாரம் உப்புதான். அதில் கைவைக்க யாருக்கும் உரிமையில்லை’ என்று கொதித்தெழுந்த மகாத்மா காந்தி, சரித்திர முக்கியத்துவம் பெற்ற தண்டி யாத்திரையை மேற்கொண்டார். இந்த உப்பு சத்தியாகிரகம்தான், அன்றைய ஆங்கிலப் பேரரசின் ஆணிவேரை ஆட்டி வைத்தது என்பது சரித்திரம்.
இவ்வளவு அருமை பெருமையுடைய உப்பு, மனித ஆரோக்கியத்துக்குப் பெரிய வில்லனாக மாறியது மிக சமீபத்தில்தான். வேட்டையாடிய ஆதிமனிதன், விவசாயத்துக்கு மாறியபோது உணவில் சேர்த்தது... வெறும் 2 கிராம் உப்புதான். இப்போது சராசரி அமெரிக்கன் 10 கிராம், சராசரி இந்தியன் 12 கிராம் என உப்பை உட்கொள்கிறான். மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு, சிறுநீரக நோய்கள் தற்போது அதிகரித்ததன் காரணங்களில் இது மிகவும் முக்கியமானது. நாம் உட்கொள்ளும் உப்பை, சிறுநீரகங்கள்தான் வெளியேற்ற வேண்டும். சிறுநீரகங்கள் 5 கிராம் உப்பை மட்டுமே வெளியேற்ற முடியும். அப்படியானால் மீதம் உள்ள 7 கிராம்?
ஒரு பங்கு உப்பை வெளியேற்ற, 23 பங்கு தண்ணீர் தேவை. செல்களின் உள்ளே உள்ள நீர் வெளியேறி, உப்பைக் கரைக்கிறது. ஆகவே, உடலில் நீரின் அளவு மிகுதியாகி வீக்கம், ரத்தக் கொதிப்பு, இதயம் செயல் இழப்பு போன்றவை விளைகின்றன. சோடியம், தன்னோடு கால்சியத்தையும் தக்க வைத்துக்கொள்ளும் - ஆகவே ரத்தக் குழாய் அடைப்புகள், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை உருவாகும். சில புற்றுநோய்களும் வரலாம்.
உடலுக்குத் தேவையான உப்பு, உணவில் இயற்கையாகவே இருக்கிறது. கனிமங்கள், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் போன்ற சுமார் 84 வகை ஊட்டச்சத்துக்கள் தினமும் நமக்குத் தேவை. இவற்றை 84 ஜாடிகளில் அடைத்து, சமையலறையில் வைத்திருக்கிறோமா..? நம் அன்றாட உணவில் இந்த 84 ஊட்டச்சத்துக்களையும் கலந்து வைத்த கடவுள், சோடியத்தை மட்டும் மறந்துவிட்டார் என்று நினைத்து, எப்போது சமையலறையிலும், இன்னும் போதாது என்று சாப்பாட்டு மேஜையிலும் வைத்து உப்பை நாம் உண்ண ஆரம்பித்தோமோ, அன்றுதான் மனிதனின் கெட்ட காலம் ஆரம்பித்தது! 'ரீஃபைனிங்’ என்கிற பெயரில் அரிசி, சர்க்கரை, பால் இதையெல்லாம் எப்படிக் கெடுத்தோமோ... அதேபோலதான் உப்பையும் கெடுக்க ஆரம்பித்தோம்.
கடல் நீரைத் தேங்க வைத்து, காயவைத்துக் கிடைக்கும் உப்பையே பெரும்பாலும் உபயோகித்தோம். இதைச் சுத்தம் பண்ணுகிறேன் பேர்வழி என்று, மனிதன் செய்த வேலைகள் பற்பல. நமக்கு இப்போது கிடைக்கும் உப்பு (Table salt), கெடுதல் விளைவிப்பதில் சர்க்கரைக்குக் கொஞ்சமும் சளைத்த தல்ல. முதலில் உப்புக் கரைசலை 1200oF-க்குக் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உப்பில் கலந்துள்ள 84 வகை தாதுப்பொருட்கள் அறவே வெளியேறி, வெறும் சோடியம் குளோரைடு மட்டுமே மிஞ்சுகிறது. அது வெள்ளையாக ஜொலிக்க வேண்டும் என்றும், கரடுமுரடாக இல்லாமல் சர்க்கரையைப்போல் இருக்க வேண்டும் என்றும், வெகுகாலம் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்றும் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் - டால்க், சிலிகான், அலுமினியம், ஃபுளோரைடு, கொஞ்சம் சர்க்கரைகூட - இவை அனைத்தும் உடலுக்குக் கேடுதான். 84 கனிம தாதுக்களுடன் உள்ள சோடியம் குளோரைடு கெடுதல் அல்ல - உடலுக்கு நல்லதுதான். ஆனால், அந்த 84 சத்துக்களும் நீக்கப்பட்ட சோடியம் குளோரைடு... மிகமிகக் கெடுதலானது (எல்லா சுத்திகரிப்புகளும் இப்படித்தானே..?!)
எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது வந்துள்ள புதிய ஆபத்து... அயோடின் கலந்த உப்பு. உப்பில் இயற்கையாகவே அயோடின் உண்டு. அதைக் காய்ச்சி உறிஞ்சி எடுத்துவிட்டு, இப்போது அயோடின் சேர்க்கிறோம் என்று செயற்கையாகச் சேர்த்து, விலையைப் பத்து மடங்கு உயர்த்தி, கோடீஸ்வரர்களை... மேலும் கோடீஸ்வரர்களாக ஆக்கியதுதான் மிச்சம்.
தைராய்டு சுரப்பியிலிருந்து... தைராக்ஸின் ஹார்மோன் உற்பத்தியாவதற்கு அயோடின் தேவை. அது குறைவாக இருந்தால், உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி குறைவதுடன், கழுத்தில் தைராய்டு சுரப்பியில் வீக்கம் (Goitre) முதலிய குறைபாடுகள் தோன்றும். ஆகவே, அயோடின் மிக மிக அவசியம் - ஆனால், வெறும் 0.15 மி.கி. மட்டுமே. இந்த அளவு அயோடின் எல்லா காய்கறிகளிலும், பால், முட்டை அசைவ உணவிலும் இயற்கையாகக் கிடைக்கிறது. போதாக்குறைக்கு இயற்கையாகக் கிடைக்கும் உப்பிலும் கிடைக்கிறது. இதை மெனக்கெட்டு நீக்கிவிட்டு, நீக்குவதற்கும் காசு, மறுபடியும் சேர்ப்பதற்கும் காசு என்று உயர்த்தியது தேவையா?
இதுதவிர, அயோடின் கலக்கும்போது, கூடவே பொட்டாசியம் குளோரைடு, சல்ஃபர், மெக்னிஷியம், ஃபுளோரைடு, பேரியம், ஸ்ட்ரோன்ஷியம் போன்ற வேதிப்பொருட்களும் கலந்துவிடுகின்றன. இவை தேவையே இல்லை. இயற்கையான அயோடின் நல்லது. செயற்கையான அயோடின்... உடலில் பல அழற்சிகளை உண்டாக்கும்.
நம் நாட்டில் 125 கோடி ஜனத்தொகையில் சுமார் 6 கோடி பேருக்கு மட்டுமே அயோடின் குறைபாடு உள்ளது. இதற்காக மீதமுள்ள 119 கோடி மக்களையும் அயோடின் உப்பு உண்ண வைத்து, பலருக்கு 'தைராய்டு மிகுதி' (Hyper thyroid) எனும் நோயை உண்டாக்கி வருவது உண்மை. இதன் விளைவாக, ரத்தக் கொதிப்பு மற்றும் இதயப் பிரச்னைகள் வருவதும் உண்மை.
மகாத்மா காந்தி இப்போது இருந்திருந்தால், உப்பில் அயோடின் கலந்து, அதை விஷமாக்கி, அதன் மூலமாக கோடீஸ்வரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நம் அரசாங்கத்தை எதிர்த்து இன்னொரு உப்பு சத்தியாகிரகம் செய்து கொண்டிருப்பார்!
நலம் வரும்...
ஒரு உறுதியேற்போம்...!
அமெரிக்க இதய நோய்க் கழகம் தற்போது பரிந்துரைப்பது... 'யாரும் 6 கிராமுக்கு மேல் உப்புச் சேர்க்க வேண்டாம்' என்பது. அப்படியானால் நாம் எல்லோரும் அரை உப்புதான் சாப்பிட வேண்டும். இனி, சமையலில் அரை உப்பு மட்டுமே சேர்ப்போம் - அதுவும் அயோடின் கலப்பில்லாத இயற்கையான உப்பு (கல் உப்பு). சாப்பாட்டு மேஜையில் உப்புக் குப்பி வைக்காதீர்கள். உப்பில் மூழ்க வைத்துத் தயாரிக்கும் துரித உணவுகளை அறவே தவிருங்கள் - ஊறுகாய், சிப்ஸ் உட்பட!