''டயட், ஜிம் வொர்க் அவுட்ஸ், நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் என்று உடல் எடைகுறைப்புக்கு ஏராளமான பயிற்சிகளும்... ஏகப்பட்ட வழிகளும் இன்று கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், இவை அனைத்தையும்விட மிகச் சிறந்த வழியாகக் கருதப்படுவது யோகப்பயிற்சிதான். யோகாவில்தான் உடல், மனம், மூச்சு ஒருங்கிணைந்து செயல்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்கிறது.
அதிக உடல் எடையுடன் வந்த ஒரு பெண்மணிக்கு, வெறும் பிராணாயாமத்தால் மட்டுமே கிட்டத்தட்ட 25 கிலோ எடையைக் குறைத்துக்காட்டியிருக்கும் சென்னையைச் சேர்ந்த அக்குபிரஷர் மற்றும் யோகா, ஹோமியோபதி சிகிச்சை நிபுணர் ஜெ.ஜெயலட்சுமியைச் சந்தித்தோம்.
'எல்லா வயதினருக்கும் பிராணாயாமம் ஏற்றது. அதில் ஆசனத்துடன் தியானமும் சேரும்போது, மூச்சும் மனமும் 'ரிலாக்ஸ்’ ஆகும். மனதுக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மூச்சைக் கட்டுப்படுத்தும்போது, மனமும் கட்டுக்குள் வந்துவிடும். பிராணாயாமங்களில் பல வகைகள் உள்ளன. அவரவர் உடல் பிரச்னைக்கு ஏற்ப, பிராணாயாமங்களைச் செய்ய வேண்டும். இதில் மிகவும் எளிமையானது வயிறு வரை செய்யும் பிராணாயாமம் தான்!'' என்றவர், பிராணாயாமம் செய்வதன் மூலம் உடல் எடை குறைவதைப் பற்றி விவரித்தார்.
'தினமும் பிராணாயாமம் செய்து வந்தால், சாதாரணமாக நாம் வெளிவிடும் மூச்சே, ஒருசில மாதங்களில் ஆழமான மூச்சாக மாறிவிடும். அதிக நேரம் மூச்சை உள்ளே இழுக்கும்போது, அதிக அளவு பிராண வாயு கிடைக்கிறது. அதிக நேரம் வெளியே விடும்போது, நம் உடலிலுள்ள மொத்த அசுத்தக் காற்றும் வெளியேறுகிறது. பிராண வாயுவுக்கு எரிக்கும் சக்தி உண்டு. மிக ஆழமாக மூச்சை இழுக்கும்போது ஆக்சிஜன், உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் அதிக அளவில் கிடைக்கிறது. இது திசுக்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தி நச்சுக்களை அப்புறப்படுத்துகிறது. வயிறு உள்ளே போவதால், வயிற்றுப் பகுதி தசைகள் சுருங்கும். இந்தத் தசைப் பயிற்சியை, தினமும் செய்யும்போது வயிற்றுப் பகுதியின் தசை வலுப்பெறும். தொடர்ந்து செய்யும்போது, இவை இரண்டும் சேர்ந்து எடையைக் குறைத்துவிடும்' என்கிறார் ஜெயலெட்சுமி.
'பிராணாயாமம்’ பயிற்சி முறை!
No comments:
Post a Comment