Friday, January 31, 2014

இடுப்பு வலி குறைய உடற்பயிற்சி! உடற்பயிற்சி!!


இடுப்பு வலி குறைய உடற்பயிற்சி



விரிப்பில் 'V' வடிவத்தில் முடிந்த வரையில் கால்களை விரித்து உட்காருங்கள்.  இரண்டு கைகளையும் கோத்து உள்ளங்கைகள் நன்றாக தரையில் பதியச் செய்யுங்கள். இப்போது மூச்சை உள் இழுத்தபடி கைகளைத் தலைக்கு மேல் உயர்த்துங்கள்.  

அப்படியே இடது பக்கமாக உடம்பை சாய்க்க வேண்டும்.  மூச்சை மெல்ல வெளியே விட்டபடி மீண்டும் நேராக உட்கார்ந்து கையை மீண்டும் தரையில் வையுங்கள். இடது பக்கமாகச் செய்த இந்தப் பயிற்சியை இப்போது வலது பக்கமாகச் சாய்ந்து செய்ய வேண்டும். 

இதுபோல இடது வலது என்று மாற்றி மாற்றி 20 முறை இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முறை செய்தால் போதுமானது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 20 அல்லது அதற்கு மேலும் செய்யலாம். 

உள்ளங்கையை உடலில் இருந்து எவ்வளவு தள்ளி வைத்து இதைச் செய்ய முடியுமோ அவ்வளவு தள்ளி வைத்துச் செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்வதால் பெருங்குடல், சிறுகுடல் ஆகியவற்றின் வேலையைச் சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனைகளைக் குறைக்கும். 

இடுப்பு, தொடை பின்பக்கப் பகுதிகளில் உள்ள தசைகளை இறுக்கமடையச் செய்து, இடுப்பு வலியைக் குறைக்கும். மேலும் வயிறு மற்றும் இடுப்பு எலும்புகளைச் சுற்றி இருக்கும் தசைப்பகுதிகள் நன்றாக இழுக்கப்பட்டு அதன் சுருங்கி விரியும் தன்மை அதிகமாகும்.

கால் முட்டிக்கு வலிமை தரும் பயிற்சி! உடற்பயிற்சி!!


கால் முட்டிக்கு வலிமை தரும் பயிற்சி



உடலில் உறுதி அடைய பல்வேறு பயிற்சிகள் உள்ளது. கால் முட்டி வலியால் பலர் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதிலும் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது.

இந்த பயிற்சியை வீட்டில் தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் இந்த பயிற்சி செய்ய 20 நிமிடம் இருந்தால் போதுமானது. இப்போது இந்த பயிற்சியை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

முதலில் சுவற்றின் ஓரமாக தரையில் கால்களை பதித்தபடி நிற்கவும். பின்னர் காலை லேசாக அகட்டி, மூச்சை உள் இழுத்தபடி ஐந்து விநாடிகள் இருக்கவும். பிறகு லேசாக முதுகைப் பின்னால் நகர்த்தவும். இப்போது மூச்சை உள் இழுத்தபடி வலது கையை சுவற்றில் வைத்து இடது காலைப் பின்னால் மடக்கி இடது கையால் காலை பிடிக்கவும்.

மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் காலைப் பழைய நிலைக்கு கொண்டு வரவும். அடுத்து கால் மாற்றி இதேபோல் செய்யவும். இப்படித் தொடர்ந்து பத்து முறை செய்ய வேண்டும்.

பலன்கள் :

இந்த பயிற்சி அடிவயிற்றுப் பகுதிகளுக்கு மிகவும் நல்லது. இந்த பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் உடல் உறுதியாகும். கால் முட்டுகளுக்கு வலிமை தரும்.

Tuesday, January 28, 2014

பெருஞ்சீரக லெமன் டீ ! உணவே மருந்து!!

பெருஞ்சீரக லெமன் டீ

தேவையானவை: 

டீத்தூள் - 2 டீஸ்பூன் 
பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 டீஸ்பூன் 
தேன் - தேவையான அளவு 
எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன் 
இஞ்சி - சிறிய துண்டு 

செய்முறை: 

• இஞ்சியை தோல் சீவி ஒன்றும் பாதியாக தட்டி வைத்துக் கொள்ளவும் . 

• பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்

• ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து, டீத்தூளைப் போட்டு கொதிக்க விடவும். 

• நன்றாக கொதிக்கும்போது, வறுத்த பெருஞ்சீரகம், இஞ்சியை போட்டு, அதுவும் சேர்ந்து நன்கு கொதித்தபிறகு, இறக்கி வடிகட்டவும். 

• வடிகட்டிய டீயில் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகவும். 

பயன்: 

எடை குறைப்பதற்கு அருமையான பானம் இது. மேலும், கை, கால்களில் காணப்படும் தேவையற்ற சதையைக் குறைக்கவும் இந்த டீ உதவும்.

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி! உணவே மருந்து!!


Photo: முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி:-

உணவே மருந்து -- | Read | Like | Share |

செய்முறை விளக்கம் - Siddha medicine 

காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு 
மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் 
கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் 
கோலை வீசி குலாவி நடப்பானே ...

சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

நிலம், நீர் ,நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப்பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்து கின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.

வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு -
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு-
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறையவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் - காற்று - 1, மாத்திரை அளவு --------- சுக்கு 
பித்தம் - நெருப்பு - 1/2, மாத்திரை அளவு--------- இஞ்சி 
கபம் - நீர் - 1/4, மாத்திரை அளவு -------- கடுக்காய்

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் , கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் . இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும். 

கடுக்காய் சுத்தி ; கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும். 

உண்ணும் முறை :

காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்) எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும். 

பழமொழி : 

கடுக்கை உண்டால் மிடுக்காய் வாழலாம்.
ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு
மிஞ்சிய கடவுள் இல்லை. 
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில்
கோலை ஊன்றி குறுகி நடப்பவனும்
கோலை வீசி குலாவி நடப்பானே ...

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் , கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

செய்முறை விளக்கம் 

சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் . இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.

கடுக்காய் சுத்தி ; கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.

உண்ணும் முறை :

காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்) எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.

பழமொழி :

கடுக்கை உண்டால் மிடுக்காய் வாழலாம்.
ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு
மிஞ்சிய கடவுள் இல்லை.

நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள்! காய்கறிகளின் மருத்துவ குணங்கள்!!


Photo: நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள்:-

உணவே மருந்து -- | Read | Like | Share |

உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம்
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.
நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர்,மலர்,கனிகள் பயன்கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம்
மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.

உடல் சூடு தணியும்

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் வலுப்பெற

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.

சுகமான பிரசவம்

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்

நார‌த்த‌ங்கா‌ய் இலைகைளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம். இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம். பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது. சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், ‌‌ஜீரணமாக நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம். இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம். நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்.நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள்:-

உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம்
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். 
 
நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும்.
 
 பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.
நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர்,மலர்,கனிகள் பயன்கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம்
மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. 
 
மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.

உடல் சூடு தணியும்

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் வலுப்பெற

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. 
 
நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.

சுகமான பிரசவம்

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்

நார‌த்த‌ங்கா‌ய் இலைகைளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம். இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம். 
 
பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது. சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், ‌‌ஜீரணமாக நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. 
 
நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம். இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம்.
 
 நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.
 
 நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். 
 
 நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்.

பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ! ஆசனம்!!


பிரணாயாமம் என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. பிரணாயாமம் என்பது 'பிராண' மற்றும் 'அயாமா' என்ற வார்த்தைகளின் கூட்டாகும். 'பிராண' என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். 
அதே போல் 'அயாமா' என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். வேறு எந்த செயல்முறையும் தர முடியாத பல உடல்நல பயன்களை பிரணாயாமம் உங்களுக்கு தருகிறது. பிராணயாமாவால் கிடைக்கும் எண்ணிலடங்கா பயன்களில் உடல் மற்றும் மன ரீதியான பயன்கள் என இரண்டுமே அடங்கும். 
பிரணாயாமம் செய்யும் போது சில முக்கியமான விஷயங்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட வேண்டும். 
அதே போல் அதனை செய்யும் போது சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிரணாயாமம் செய்ய முயற்சிப்பதற்கு முன், ஒரு தேர்ந்தெடுத்த யோகா ஆசிரியரிடம் பயிற்சி பெற பரிந்துரைக்கப்படுகிறது. பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் முக்கியமான உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும். 
பிரணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் உடல்நல பயன்கள், உங்கள் உடலுக்குள் இருக்கும் அங்கங்களின் ஒழுங்காக செயல்பாட்டோடு மட்டும் நிற்பதில்லை. 
உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். பிரணாயாமம் பயிற்சியை தினமும் தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள். உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுப் பொருட்களை நீக்க சிறந்த வழியாக விளங்குகிறது பிரணாயாமம் பயிற்சி. 
உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க யோகாவில் பல வழிகள் உள்ளது. அவைகளில் புகழ்பெற்ற வழிகளில் ஒன்றாக விளங்குகிறது பிரணாயாமம். உங்கள் வாழ்க்கையில் எரிச்சலடைய வைக்கும் பிரச்சனைகளில் ஒன்றான மூக்கடைப்பை ஒரு முறையாவது சந்தித்திருப்பீர்கள். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் பயன்களில் தெளிவான சுவாச குழாய்களும் ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள்.
 
பிரணாயாமம் விளக்கம் - பலன்கள்

பிரணாயாமம் என்பது ஒரு வெறும் மூச்சுப்பயிற்சி மட்டுமே என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பது தவறாகும். இயல்பான சுவாசத்திலிருந்து அது வேறுபடுகிறது என்பதோடு வேறுபடுத்தப்படுகிறது ஒழுங்குபடுத்தப்படுகிறது. 

ஓடுதல்,குதித்தல், தாண்டுதல், நீந்துதல், பளு தூக்குதல், அதிக நிறை உள்ளவற்றை நகர்த்துதல் நீண்ட நேரம் களைப்படையாமல் பணிபுரிதல் போன்றவற்றை எந்தவிதப் பயிற்சியும் இல்லாத சாதாரண ஒரு மனிதனை விட யோகப்பயிற்சி பெற்ற ஒருவரின் மேற்கண்டசெயல்பாடுகளை மிகச்சுலபமாகவும் விரைவாகவும் அதிசயத்தக்க வகையில் செய்யக்கூடியதாகவும் இருக்கும். 

இயல்பான மூச்சை பிரணாயாமத்தின் மூலம் வகைப்படுத்தப்படும்போது மனிதனின் உடல் ஆற்றல் மற்றும் உள்ள ஆற்றல் பல மடங்கு பெருகுகிறது. எனவே பிரணாயாமம் என்பது ஆற்றல்களைப் பெருக்கும் ஒரு வித்தையும் ஆகும். 

இந்த வித்தையினை மூச்சுக்கலை , சரகலை, வாசிக்கலை , என பல பெயர்களை கொண்டதாகும். பிரணாயாமம் என்பதற்கு அடக்குதல் என்பது ஒரு பொதுப்பெயர்,பொதுச்சொல் ஆகும். மூச்சினால் பிராணன் இயக்கப்படுகிறது. பிராணனை அடக்கும்போது மனம் அடங்குகிறது.

அதனால் வாழ்வு சிறக்கிறது. மனதை , புலன்களைக் கட்டுப்படுத்த பிரணாயாமம் முக்கியமாகிறது.  பசி, தாகம், மூச்சு, உடல் இயக்கம் இந்த நான்கும் பிராணனால் நடத்தபடுபவையே. பிராணன் குறையும் போது இந்த நான்கு செயல்களாலும் உடல் துன்பம், உள்ளத்துன்பம், ஏற்படுகிறது. உணவில், நீரில், காற்றில், பிராணன் உலவுகிறது. 

மூச்சு உள் இழுத்தல், உள்நிறுத்துதல், வெளி விடுதல், இந்த மூன்று வகையிலும் உள் நிறுத்துதல் என்பது பிரணாயாம நெறிகளில் தலைமைச் செயல் என கருதப்படுகிறது.

பலன்கள்-

சகிப்புத்தன்மை (பொறுமை) , சமாளித்தல், சுற்றுப்புற துன்பங்களை சகித்தல், உடல் வேதனை (வலி) தாங்குதல் , வாழ்க்கைப்போரட்டங்களை தாங்கி நிற்றல். கவலை, கலக்கம், இவைகள் அனைத்திலும் பாதிப்பின்றி வெற்றியடைய மனபலம் பெற, மனமடங்க, பிராணனை அடக்குவதன் மூலம் இப்பலன்கள் கிடைக்கிறது.

அதிமதுரம்-- மருத்துவக் குணங்கள்! மூலிகைகள் கீரைகள்!!


அதிமதுரம்    அதிமதுரம் அதிமதுரம்
மருத்துவக் குணங்கள்:
  1. ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாம்.
  2. அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.
  3. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.
  4. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்தியாக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
  5. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
  6. அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீ­ரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.
  7. அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.
  8. அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
  9. அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.
  10. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
  11. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
  12. சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்­ணீரில் சாப்பிட்டால் இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
  13. அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 4 வேளை சாப்பிட்டால் வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும். உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
  14. போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.
  15. அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீ­ர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வறட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
  16. அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.
  17. அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்­ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
  18. அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..
  19. அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.
  20. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.
  21. சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
  22. அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.
  23. அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரை தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
  24. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
  25. அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்

பால் கலக்காத டீ பருகிப்பாருங்கள் உடல் எடை கணிசமாக குறையும்! மருத்துவ டிப்ஸ்!!

டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்!

டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு.டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. 

சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும். 

மேலும் டீயில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மண்ணில் இருக்கும் ப்ளோரைடை டீச்செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. 

எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது. பற்களில் காரை படிவதையும் டீ தடுக்கிறது. பல்லை பாதுகாக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. டீ குடித்தாலே போதும். 

வயிற்றுவலி(அசிடிட்டி) ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும் போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்கள். 

டீயில் உள்ள காபின், புளோரைடு போன்ற பொருட்கள் எலும்பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது. 

வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண்களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவில் பெரும்பாலும் இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். 

இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தேவையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் ”ப்ளேவோனாய்ட்ஸ்” தடுப்பதாக நம்பப்படுகிறது,

 இருப்பினும் ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. 

டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம். 

மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது.

 தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது. 

டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும்.

 பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.

இதுபற்றி இந்துஸ்தான யூனிலிவர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில்,“மிகச்சிறந்த இயற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று. ஆரோக்கியமான பானம் டீ. இதில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ், கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும், செரிமான உறுப்புகளுக்கும், சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன. 

உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது. டீ உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது” என்கிறார். 

 உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும்.
உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால், அதில் கலக்கப் படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்து விடுகிறது.

எனவே தான் பால் கலக்காத கடும் டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும்

நம் ஊர் பாட்டி வைத்தியம் ஒன்னு சொல்றேன் கேளுங்க , பால் கலக்காத டீயில் ஒரு ஸ்லைஸ் லெமன் துண்டை நறுக்கிபோட்டு குடியுங்க பித்தம், பேதி, வயிற்று வலி  மறைந்திடும்.

Friday, January 24, 2014

எலுமிச்சை மீது இச்சை கொள்வோம்! பழங்களின் பயன்கள்!!


 எலுமிச்சைச் சாறில் தேன் சேர்த்தோ, எலுமிச்சைச் சாறு கலந்த பச்சைத் தேநீரில் (Green tea) தேன் சேர்த்தோ தங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவத்தோடு கூடுதலாகச் நோயாளிகள் சாப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை!

மன அழுத்தம், மனச்சோர்வு, மனப்பிறழ்வு முதலான பல மன நோய்களுக்கு நெடுங்காலமாகப் பயனளித்த மருத்துவ மூலிகை, எலுமிச்சை. மனச்சோர்வு மன நோயாவது ஒருசிலருக்கு மட்டுமே. சர்க்கரை நோயாக, ரத்தக்கொதிப்பாக, புற்றாக இன்னும் பல வாழ்வியல் நோயாக உருமாறுவதே  அதிகம். எலுமிச்சம் பழச் சாற்றில் லேசான அமிலம் இருந்தால்கூட, அது எளிதில் சீரணித்து, உடலின் காரத்தன்மையை அதிகரிப்பதால், இந்த நோய்களைத் தவிர்க்க உதவிடும்.
ஆகவே, எலுமிச்சை மீது இச்சை கொள்வோம்!

பித்தம் குறைய...! மருத்துவ டிப்ஸ்!!


பித்தம் குறைய....!

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

டயர்டா இருக்குப்பா. ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே..


பணம் சம்பாதிக்கும் ஆசையினால் ஓடிக்கொண்டே இருக்கும் இளைய தலைமுறையினர் தங்களின் சந்தோசமான தாம்பத்ய வாழ்க்கையினை இழந்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வேளைப்பளுதான் மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் முக்கிய அம்சம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது 30 முதல் 40 வயதிற்குட்பட்ட தம்பதியர்தான் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். திருமணமான புதிதில் சுவாரஸ்யமாக தொடங்கும் தாம்பத்ய வாழ்க்கை நாளடைவில் போர் அடிக்க ஆரம்பித்துவிடும். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் ஆண்-பெண் இருவரில் யாருக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம்?’ என்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சுவாரஸ்யமான தகவல்கள்
தெரியவந்தன. தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் காரணிகள் பற்றியும், எந்தெந்த வயதில் என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்படும் என்பது பற்றியும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள், படியுங்களேன். செக்ஸ் ஆர்வம் 30 வயது முதல் 50 வயது வரை உடைய ஆண் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 30 வயதுப் பெண்களில் 85 சதவீதம் பேரிடம் செக்ஸ் ஆர்வம் அதிகமிருப்பதாக தெரியவந்தது. இந்த வயதுடைய ஆண்களில் 75 சதவீதம் பேர்தான் இந்த ஆர்வப் பட்டியலில் இருக்கிறார்கள். பாதிக்கும் வேளைப்பளு கணவரும் நீண்ட நேரம் பணியில் ஈடுபடுவதோடு அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் தங்களின் செக்ஸ் வாழ்க்கையை முழுங்கி வருகிறது’ என்று கணக்கெடுப்பில் பெண்கள் தெரிவித்துள்ளனர். மாதம் ஒருமுறை தாம்பத்ய உறவில் அதிக ஆர்வம் இருந்தாலும் அதிக வேளைப்பளுவினால் சோர்வடைந்து விடுவதாகவும் மாதம் ஒரு முறைதான் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் பெண்கள் கூறியுள்ளனர். பெண்களுக்கு அதிகம் 30 வயதில் இருந்து 40 வயது வரை பெண்களின் செக்ஸ் ஆசைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்கிறார் இந்த ஆய்வு பற்றி கருத்து கூறிய டாக்டர் ஷா. ஆண்களுக்கு குறைவு அதற்கு நேர் எதிராக ஆண்களின் செக்ஸ் ஆசைகள் குறைந்து கொண்டே போகிறது. அதுதான் பெண்களின் வேதனைக்கு காரணம்’ என்கின்றனர் ஆய்வாளர்கள். பணமே பிரதானம் இந்த ஆர்வத்துக்கு இப்போது வேட்டு வைத்துக்கொண்டிருப்பதே ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசை தான். இந்த 30-40 வயதுப் பருவம் வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருப்பதால் தம்பதியினர் கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள். ஆர்வம் குறைகிறது பெற்ற குழந்தை போதுமென்றும், உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்த கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் செக்ஸில் ஆர்வம் குறைந்து விடுகிறது. குடும்ப பொறுப்பு 30 வயதில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். ஆனால் இந்த வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது. குடும்பம், குழந்தை, நிரந்தர வருவாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவலைகள் அதிகரிக்கிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது. செக்ஸ் ஹார்மோன்கள் 40 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் செக்ஸ் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது. வளர்ந்த குழந்தைகள் இளம் வயதில் ஓடி ஆடி திரிந்த பெண்கள் 40 வயதில் அதிக செக்ஸ் ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். ஆனால் கணவர் இந்த உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை’ என்று பெரும்பாலான பெண்கள் கூறியுள்ளனர். உடல் நல பாதிப்பு இதே வயதில் ஆண்கள் பலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள். எனினும் செக்ஸ் உணர்வுகளில் கொஞ்சம் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் 40 வயதில் ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளின் தாக்கம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே விரைப்புத் தன்மையில் தளர்வு ஏற்படுவதால் அவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் குறைகிறது. மெனோபாஸ் பருவம் 50 வயதில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் செக்ஸ் ஆர்வத்தை கெடுக்கிறது இந்தப் பருவம். இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்ய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்

தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!


பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே, இளம் வயதிலே, வயது முதிர்வு பிரச்னை வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அழகு சாதனப் பொருட்களுக்கு அடிமையாவதன் மூலம், முடி நரைத்தல் பிரச்னையும் தோன்றுகின்றது. இதிலிருந்து விடுபடவும், இப்பிரச்னைகளுக்கான காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள். 
இளம் வயதில் வயது முதிர்வு பிரச்னை தோன்றுவதற்கான காரணங்கள்:- உடலில் வாதம், பித்தம் அதிகரிப்பதன் காரணமாக இளம் வயது முதிர்வு பிரச்னை வருகிறதென ஆயுர்வேதம் கூறுகிறது. உலர்ந்து போன உணவு, காரம், உப்பு, புளிப்பு மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள், முளை விட்ட தானியங்கள், புதிய தானியங்கள், சோடியம் பை கார்பனேட் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு, பசியில்லாத போது அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல்
மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களைக் குடித்தல், பகலில் தூங்குதல், முறையற்ற அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் மற்றும் மனரீதியாக மன அழுத்தம், கோபப்படுதல் போன்றவை இந்த தோஷ காரணிகளை அதிகரித்து, இளம் வயது முதிர்வு பிரச்னை ஏற்படுகிறது. 
வயது முதிர்வு தோன்றுவதற்கான அறிகுறிகள்: முடி நரைத்தல் மற்றும் வறண்டுபோன முடி, முடி உதிர்தல், வாடிப்போன முகம், கண்களைச் சுற்றி கரு வளையம், தளர்ச்சியான தசைகள், உடலில் தேவை இல்லாமல் கொழுப்பு சேர்தல், மூட்டு வலி, முறையற்ற மாதவிடாய், சுறுசுறுப்பின்மை, அதிக இதயத் துடிப்பு மற்றும் வேகமாக மூச்சிழுக்கும் பிரச்னை, நினைவுத் திறன் தடைப்படுதல், புரிந்து கொள்ளும் தன்மை குறைதல் மற்றும் கவனக்குறைவு ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகள். 
தினசரி தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: அதிகாலையில் விழித்தல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சிறுநீர் கழித்தலை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். முகம் மிருதுத்தன்மை பெறுவதற்கும், எண்ணெய் வடிதல் மற்றும் அழுக்கு சேர்தலை தவிர்க்கவும், எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். தலை, காது மற்றும் பாதங்களில், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பூசுவதன் மூலம், குளிர்ச்சி தன்மையைப் பெறலாம். இவை முடி கொட்டுதல் மற்றும் நரைத்தலை தடுக்கிறது. 
உணவில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் நடுநிலையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், கோதுமை, கறுப்பு கொள்ளு, தேங்காய், வேர்க் கடலை, வெல்லம், நெய் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது, சருமத்தில் ஈரத் தன்மையை தக்க வைத்து, சருமம் உலர்ந்து போதல் மற்றும் தடிமனாக மாறுவதைத் தடுக்கிறது. பசு நெய், தசை மற்றும் சருமத்திற்கு நல்லது. 
இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்டபின், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்குப் பின், தூங்கச் செல்ல வேண்டும். நள்ளிரவுக்கு பின் தூங்கச் செல்வதால், கண்களுக்கு கீழே கரு வளையம், வீக்கம் உண்டாகிறது. இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். 
சருமம் ஈரத் தன்மையுடன் இருக்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், எண்ணெய் மிகுந்த, காரமான, பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், தினசரி ஒன்றரை மணி நேரம், வேகமாக நடப்பது அவசியம்; இதனால், வியர்வை வெளியேறி நச்சுப் பொருள் நீக்கப்படுகின்றன. 
நெல்லிக்காய், எலும்பு, தசை மற்றும் உடல் உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, மூன்று வகையான தோஷ காரணிகளை நடுநிலையுடன் வைத்து, உடல் உறுப்புகளுக்கு புத்துணர்ச்சியை கொடுக் கிறது. பழங்கள் சாப்பிடுவதும் பலன் அளிக்கும். 
காய்ச்சாத பசும் பாலுடன், ஜாதிக்காய் பவுடர் சேர்த்து, களிம்பு போல செய்து, கண்களுக்கு கீழே தடவி, காய்ந்தவுடன் கழுவினால், கண்களுக்கு கீழே காணப்படும் கரு வளையம் நீங்குவதுடன், முகம் வறண்டு போவதையும் தடுக்கலாம். 
தயிருடன், சுத்தமான மா இலை சேர்த்து, களிம்பாக செய்து முகத்தில் பூசுவதால், கறுப்பு கோடு, முகப்பரு தழும்பு நீங்குகிறது. மா இலைகள் உவர்ப்பு தன்மை கொண்டிருப்பதால், அவை முகத்திலுள்ள நுண் துளைகளை சுருங்கச் செய்து, சருமத்தைச் சுத்தமாக வைக்கிறது.

Wednesday, January 22, 2014

கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரிசெய்யும் சில இயற்கை நிவாரணிகள்!!!


வேகமான வாழ்க்கை முறைகள் மற்றும் சுகாதாராமில்லாத உணவுகள் ஆகியவற்றால் இதுவரையிலும் கண்டிராக மற்றும் கற்பனைக்கும் எட்டாத பிரச்சனைகள் நமது வாழ்க்கைக்கு முன் வருகின்றன. இவற்றில் சில பிரச்சனைகள் இப்போதைக்கு மிகவும் சிறியதாகவே இருந்தாலும், முறையான சிகிச்சைகள் செய்யாமல் விட்டு விட்டால் மிகப்பெரிய சுகாதார சவால்களாக வலிந்து வளரத் தொடங்கி விடுகின்றன. கல்லீரலில்
கொழுப்பு மிகுந்து விடும் பிரச்சனைகளுக்கு எளிதாகவும் மற்றும் மிகவும் திறமையாகவும் வீட்டிலேயே நிவாரணங்களை செய்ய முடியும். இந்த நிவாரணங்கள் பல தலைமுறைகளை கடந்து பயன்படுத்தப்பட்டு மனிதனின் கல்லீரல்களுக்கு உதவி வருகின்றன. கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்!!! கல்லீரல் கொழுப்பு என்ற இந்த பிரச்சனையினால் தேவையில்லாத கொழுப்புகள் கல்லீரலில் சேர்ந்து, அந்த உறுப்பை நிரந்தரமாக பாதித்து விடுகின்றன. இந்த நோயினால் ஏற்படும் எரிச்சலால், கல்லீரலில்தழும்புகள் ஏற்படவும் மற்றும் அதன் தசைகளை கடினப்படவும் செய்து விடுகிறது. நீங்கள் பாதுகாப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பினால், வீட்டிலேயே கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கான சிகிச்சைகளை செய்ய வேண்டியது அவசியமாகும். மோசமான உணவு முறை மட்டுமல்லாமல், தொடர்ந்து ஆல்கஹாலை அதிகமாக குடித்தல், தொப்பை போன்ற விஷயங்களும் கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வர காரணமாக உள்ளன. இந்த பிரச்சனைக்கான காரணம் உணவு முறையை ஒட்டியோ துவங்குவதால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடத் துவங்குவது நல்லது. இதோ இந்த கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரி செய்வதற்கான சில நிவாரணங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். கல்லீரல் பிரச்சனைகளை தவிர்க்க சில யோசனைகள்! க்ரீன் டீ க்ரீன் டீ குடிப்பதன் காரணமாக இந்த கல்லீரல் பிரச்சனையை பெருமளவு பின்னோக்கி தள்ள முடியும். உங்களுடைய தினசரி உணவில் க்ரீன் டீயை சேர்த்துக் கொண்டு, அதிலுள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்களின் உதவியுடன் நல்ல பலன்களைப் பெற முயற்சி செய்யுங்கள். சிட்ரஸ் பழங்கள் கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண விரும்பினால் வைட்டமின் சி நிரம்பிய சிட்ரஸ் பழங்கள் உங்களுக்கு கை கொடுக்க காத்திருக்கின்றன. ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறுகளை வெறும் வயிற்றில் நீங்கள் குடித்துப் பாருங்கள் – விளைவுகள் உங்களை ஆச்சரியப்படுத்தும். பாகாற்காயின் பாதுகாப்பு பாகற்காய் சாப்பிடுவதற்கு கசப்பாக இருந்தாலும், கல்லீரல் கொழுப்புகளைக் குறைக்கும் இனிப்பான வேலைகளை செய்கின்றன. ஒரு கப் அல்லது ½ கப் பாகற்காயை தினமும் உங்களுடைய உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களை நீங்கள் பெற முடியும். மேலும், நீங்கள் இதை சாறாகவும் குடிக்க முடியும். பால் நெருஞ்சில் பால் நெருஞ்சில் என்ற மூலிகை உடலிலுள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை நீக்கி, உடலில் பல்வேறு வகையான ஆச்சரியங்களை ஏற்படுத்தும் குணம் கொண்டதாகும். கல்லீரலில்சேதமடைந்துள்ள செல்களை குணப்படுத்த விரும்பினால் தினமும் இந்த மூலிகையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். முழு தானியங்கள் முழு தானியங்களுக்கு கல்லீரல் கொழுப்பை உடைத்து அவற்றிலுள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை வெளியேற்றும் குணங்கள் உள்ளன. உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால், பதப்படுத்தப்பட்ட தானியங்களுக்குப் பதிலாக முழு தானியங்கள் மற்றும் அவற்றின் பகுதிப் பொருட்களை தினமும் சாப்பிடத் தொடங்குங்கள். தக்காளி தினமும் சமையலுக்காக பயன்படுத்தப்படும் தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் கல்லீரல் கொழுப்பை நீக்க முடியும். மிகவும் எளிதாக கிடைக்கும் தக்காளியை தினமும் சாப்பிட்டு, கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளுக்கு தீர்;வு காணுங்கள். இதர வழிகள் கல்லீரல் கொழுப்பு பிரச்சனையை சமாளிக்க எண்ணற்ற இயற்கையான வழிகள் உள்ளன. ரோஸ்மேரி, அதிமதுரம், டான்டேலியன் மற்றும் அது போன்ற பிற மூலிகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் கொழுப்பினை குறைக்க முடியும். எனினும், இந்த மூலிகைகளை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதை மறந்து விட வேண்டாம். குறிப்பு கல்லீரல் கொழுப்பு பிரச்சனையிலிருந்து விடுபட நினைத்தால், மனம் போன படி உணவு உண்ணுவதை நிறுத்துவதுடன், ஆரோக்கியமான மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிட்ட உடலை வளர்க்க வேண்டும். பட்டினி கிடந்து உடலின் கொழுப்புகளை குறைக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது மிகவும் தவறு. உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதால் கல்லீரல் அபாயத்திற்குள்ளாகி, கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வரச் செய்து விடும் சூழல்களும் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுடன், இயற்கையான பழச்சாறுகள் மற்றும் நிறைய தண்ணீர் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

மருந்தில்லா மருத்துவம் ! இய‌ற்கை வைத்தியம்!!


1.வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.
சளிக் காய்ச்சல்

2.புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

3.இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

4.சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

5.டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

6.வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

7.வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

8.நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

9.தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

10.தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

11.தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

12.வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய்
நாற்றம் போகும்.

13.உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

14.அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

15.குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

16.வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

17.வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

18.மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

19.சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

20.பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

21.மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

22.சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

23.தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

24.மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

25.தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

26.மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

27.வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

சளியை விரட்ட ஐந்து மருந்து பொடி! கை மருந்துகள்!!


இயற்கை முறையில் வைத்தியம் செய்து கொள்வது ஆரோக்கியமான உடலுக்கும் நாம் நோய் இன்றி வாழவும் வழிவகுக்கும்.

இப்பொழுது நோய் வந்தால் டாக்டரிடம் ஓடுவதும், கண்ட மருந்துக்களை மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடுவதும் பெரும்பான்மை மக்களின் வழக்கமாகி போனது. அதை முதலில் ஒழிக்க வேண்டும்.

நமது ஒவ்வொரு வீட்டிலும் பொடி செய்து வைத்திருக்க வேண்டிய அறிய மருந்துதான் ஐந்து மருந்து பொடி. இதை தயாரிக்கும் முறையும், உட்கொள்ளும் முறையும் பற்றி பார்ப்போம். இதை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். 

சளிக்கு ஐந்து மருந்து பொடி: சுக்கு, மிளகு, அக்கரா, திப்பிலி, கடுக்காய் இவற்றை சம எடை வாங்கி உரலில் (மிக்ஸியில் போட்டு அல்ல) போட்டு இடித்து பொடியாக்கி வெள்ளை துணியில் போட்டு பவுடராக அரித்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.

உட்கொள்ளும் முறை: சளி ஏற்ப்பட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை, இரவு என்று மூன்று வேலைக்கும் இதை கால் மேஜை தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிடுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால் கையில் அரை, அல்லது ஒரு சிட்டிகை அளவுக்கு ( சிட்டிகை என்பது நமது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை கொண்டு அந்த பொடியை எடுக்கும் அளவு) எடுத்து தேனில் கலந்து கொடுங்கள்.

ஆங்கில மருத்துவர் நமக்கு கொடுத்திருக்கும் மருந்து ( drug ) சரிதானா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்! உபயோகமான தகவல்கள்!!



என்ன நோய் என்று போனாலும் மருத்துவர் அதிகப்படியான மாத்திரைகளை கொடுக்கிறார் இவர் கொடுக்கும் மாத்திரை மருந்து ( drug ) சரிதானா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

2 ரூபாய் மாத்திரையே போதும் ஆனால் மருத்துவர் 50 ரூபாய்க்கான மாத்திரையை  கொடுத்திருக்கிறாரே இதன் காரணம் என்ன என்பதை உங்களுக்கு மருத்துவர்  விவரிக்காவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். எளிதாக ஆன்லைன் மூலம் நமக்கு கொடுத்திருக்கும் மருந்து சரிதானா என்பதை சோதிக்கவே இத்தளம் வந்துள்ளது.

இணையதள முகவரி : http://www.drugcite.com/
இத்தளத்திற்கு சென்று நாம் நமக்கு கொடுத்திருக்கும் மாத்திரை ( drug )
அல்லது டானிக் சரியானது தானா எந்த வயதில் உள்ளவர்கள் எப்படி சாப்பிட  வேண்டும் இதனால் நமக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பது முதல் ,

இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் அனைத்துவிதமான
தகவல்களையும் துல்லியமாக எடுத்துக்கூறுகிறது. பெரிய நிறுவனங்களின் வேலை பார்க்கும் நபர்கள் தங்களுக்கு நேரம் இல்லாத காரணத்தினால் அவர்கள் கொடுக்கும் மருந்தை அப்படியே சாப்பிடுகின்றனர், ஆனால் இனி அவர்கள் கொடுத்திருக்கும் மருந்தை இத்தளத்தில் இருக்கும் தேடுதல் கட்டத்திற்குள் கொடுத்து தேடினால் மேலும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் உணவு பழக்கங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை!


பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் உணவு பழக்கங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை

மிக மிக முக்கியமான கட்டுரை, அலட்சியமாக இருந்து விடாதீர்கள்

நம்முடைய பணத்தினை கொண்டே நாமே வியாதிகளை சேர்த்துக்கொள்கிறோம் என்ற ரீதியில் தான் போய்க்கொண்டு இருக்கின்றோம். இயற்கையாக விளையும் பழங்களை விட இத்தகைய Fast Food (or) Cheaper junk Food உணவுகள் விலை குறைவாக இருப்பதால் அதிகமான பேர்கள் இதற்கு அடிமையாகி விட்டார்கள். இதனை உட் கொள்வதால் ஆரம்பத்தில் சிறுதாக நோய் கிருமிகள் தாக்கும் பின்னர் அதுவே கொஞ்ச கொஞ்சமாக மாறி உயிரினை மாய்த்து விடும்.

இத்தகைய உணவு பழக்கத்தால் 20 சதவீதமான இளைஞர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்து சமீபத்தில் வெளியாகி உள்ளது. இப்பொருட்கள் ஹாலாலனது மற்றும் ஹராமானாது என்று கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டு சாப்பிட்டால் நல்லது. உடல் நலத்திற்கு நன்மையினை தரும் உணவுகளை விட தற்போது உடலுக்கு கேட்டினை தரும் எத்தனையோ உணவுப்பொருட்கள் சந்தைக்கு வந்து விட்டது.
இன்றைய நாகரீக வாழ்க்கை முறையினாலும் மற்றும் துரித கதி செயல்பாடுகளாலும் Fast Food என்ற கடைகள் அதிகமாக ஆகி விட்டது. இத்தகைய சாலை ஓர கடைகளில் விற்கப்படும் தின்;பண்டங்களாலும் சிறார்களுக்கு நோய்கள் அதிகமாக வர வாய்ப்புண்டு. தின்பண்டங்கள் ருசியாக இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டி அதில் என்ன என்ன சேர்த்து செய்கிறார்கள் என்பதினை நம்மில் பல பேர்கள் சிந்திப்பது இல்லை.]

பெற்றோர்களே கொஞ்சம் நில்லுங்கள் !

ஜுரம், சளி, இருமல் என்று தான் சிறு குழந்தைகளை அடிக்கடி நோய்கள் தாக்கும். ஆனால் நாகரிக உலகில் டென்ஷன், இதய நோய், சர்க்கரை நோய்;, மன பாதிப்பு, மனக்கஷ்டம், மனக்கவலை, ஹைபர் டென்ஷன் என்று இன்னும் பல புதிய நோய்கள் பெயர் குறிப்பிடாமல் குழந்தைகளை தாக்கிக்கொண்டு வருகின்றன.

இத்தகைய நோய்கள் எல்லாம் நாற்பது வயது உடையவர்களுக்கு தான் வரும் என்பது நம்மில் பலர் எண்ணிக்கொண்டு இருந்தோம் அன்று. ஆனால் இன்று இது தவறு என்பது புரிந்து விட்டது.
தற்போது உலகம் நம் கையில் என்ற கணிப்பொறி காலமாக மாறி விட்டதால் குழந்தைகளுக்கு ஏற்படும் வெளி காயங்களை விட, உள் நோய் என்ற காயங்கள் அதிகமாகி விட்டன. சிறு வயதிலேயே சிறார்கள் தெரிந்தோ தெரியாமாலோ வீடியோ சாதனங்கள் என்ற கருவியினால் கரவப்பட்டு தாங்களின் முழு கவனத்தினையும் அதிகளவில் அதில் செலுத்துகிறார்கள். இதனால் அவர்கள் தாங்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதனை மறந்து விடுகிறார்கள்.
இறைவன் கொடுத்த பகுத்தறிவினை சிறந்த மற்றும் நல் அறிவிற்கு பயன் படுத்தாமல் பாழாக்கி விடுகிறார்கள் என்பதனை நினைக்கும் போது ஒவ்வொரு பெற்றோரும் வேதனை பட தான் வேண்டும்.

வீடியோ கேம், சார்டிங், வலையத்தளம், இணையத்தளம் என்று தான் அவர்களின் நேரங்களும், நாள்களும் மற்றும் காலங்களும் போய் கொண்டு இருக்கின்றன.
படித்து அறிவுள்ள சந்ததிகள் வளர வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் நினைப்பதால், அவர்கள் பிள்ளைகளை நல்லா படி, நல்லா படி என்று சொல்வார்கள். ஆனால் அந்த சமயத்தில் பெற்றhர்களை திட்டும் குணங்கொண்டவர்களாக அவர்கள் மாறவும் செய்கிறார்கள். இத்தகைய நிகழ்ச்சிகளை நாம் ஒவ்வொரு இல்லங்களிலும் காண தான் செய்கிறோம். இதற்கு காரணமாக அமைந்து இருப்பது என்னவோ வீடியோ சாதன கருவிகளின் ஆதிக்கம் தான் என்று சொல்லலாம்.

பெற்றோர்கள் தன்னுடைய குழந்தைகளை அன்றாடம் கவனித்து கொண்டே வர வேண்டும். அவர்கள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள், எங்கு போகிறார்கள் எத்தகைய நண்பர்களுடன் பழக்கம் வைத்துகொள்கிறார்கள் என்பதனை அவர்களுக்கே தெரியாமல் கவனித்து வர வேண்டும். கவனிப்பு இல்லாமல்விட்டு விட்டால் அவர்கள் குடி பழக்கம், போதை பொருள்கள் பழக்கம் என்று இனம் புரியாத இன்னும் பல கெட்ட பழக்கங்களுக்கு சிறு வயதிலேயே ஆளாகி விடுவார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
'குழந்தைகளை முறையாக வளர்த்து பாதுகாத்து வரும் பெற்றோர்களுக்கு மறுமை நாள் வரை அல்லாஹ்வின் உதவி கிடைத்துக்கொண்டே இருக்கும்.

எந்த பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் நல்ல விதமாக நடந்து ஒழுக்கத்துடன் வளர்த்து வருவார்களேயானால் அந்த பெற்றோர்களை நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாக அக்குழந்தைகள் இருப்பார்கள்.' (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி)
ஒரு நாளின் 5 மற்றும் 6 மணி நேரங்கள் வரை வீடியோ கேம், மற்றும் கணிப்பொறி விளையாட்டு என்ற ஷைத்தான் முன்பாக உட்கார்ந்து இருக்கும் பல குழந்தைகள் சர்க்கரை நோய் ஐஐ என்ற நோயால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற புள்ளி விவரமானது அறிக்கையாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய மற்றும் கவர்ச்சிகரமான விளையாட்டுகளால் கவரப்பட்ட இவர்கள் அதிகமாக இதனால் பாதிக்கப்பட்டு பல நோய்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மே 06 – 2007 அன்று நீரழிவு நோய் (Diabetes 2007) ஒரு நாள் மருத்துவ கருத்தரங்கமானது நடைபெற்றது. அதில் 250 க்கும் அதிகமான உலக மருத்துவ குழுவானது கலந்துக்கொண்டு மேற் குறிப்பிட்ட ஆய்வு அறிக்கையினை வெளியிட்டார்கள்.

உலகில் அதிகமான அளவில் மக்களை பாதிக்கக்கூடியதும் விரைவில் குணப்படுத்த முடியாத நோய் உண்டு என்றால் அது சர்க்கரை நோய் என்பது தான் என்ற கருத்தினையும் Dr. Maha Taysir Barakat, Consultant Endocrinologist and Medical & Research Director at Imperial College London Diabetes Centre (ICLDC) அவர்கள் கூறி உள்ளார்கள். மற்றும் அந்த மாநாட்டில் இன்னும் சில அதிர்ச்சியான தகவல்களையும் வெளிட்டார்கள்.

அதாவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 65 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 40 சதவீதமான என்றும், நீரழிவு நோய் பாதிக்கபட்ட சிறு குழந்தைகள் என்று பார்த்தோமானால் 20 சதவீதம் என்றும் குறிப்பிடுகிறது. இத்தகைய எண்ணிக்கை இன்னும் வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் சொன்னார்கள். வளை குடா நாட்டில் சராசரியாக 33 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள் அவர்களில் 3.5 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதினை குறிப்பிட்டார்கள்.

இன்றைய நாகரீக வாழ்க்கை முறையினாலும் மற்றும் துரித கதி செயல்பாடுகளாலும் Fast Food என்ற கடைகள் அதிகமாக ஆகி விட்டது. இத்தகைய சாலை ஓர கடைகளில் விற்கப்படும் தின்;பண்டங்களாலும் சிறார்களுக்கு நோய்கள் அதிகமாக வர வாய்ப்புண்டு. தின்பண்டங்கள் ருசியாக இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டி அதில் என்ன என்ன சேர்த்து செய்கிறார்கள் என்பதினை நம்மில் பல பேர்கள் சிந்திப்பது இல்லை.

அதாவது நம்முடைய பணத்தினை கொண்டே நாமே வியாதிகளை சேர்த்துக்கொள்கிறோம் என்ற ரீதியில் தான் போய்க்கொண்டு இருக்கின்றோம். இயற்கையாக விளையும் பழங்களை விட இத்தகைய Fast Food (or) Cheaper junk Food உணவுகள் விலை குறைவாக இருப்பதால் அதிகமான பேர்கள் இதற்கு அடிமையாகி விட்டார்கள். இதனை உட் கொள்வதால் ஆரம்பத்தில் சிறுதாக நோய் கிருமிகள் தாக்கும் பின்னர் அதுவே கொஞ்ச கொஞ்சமாக மாறி உயிரினை மாய்த்து விடும்.

இத்தகைய உணவு பழக்கத்தால் 20 சதவீதமான இளைஞர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்து சமீபத்தில் வெளியாகி உள்ளது. இப்பொருட்கள் ஹாலாலனது மற்றும் ஹராமானாது என்று கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டு சாப்பிட்டால் நல்லது. உடல் நலத்திற்கு நன்மையினை தரும் உணவுகளை விட தற்போது உடலுக்கு கேட்டினை தரும் எத்தனையோ உணவுப்பொருட்கள் சந்தைக்கு வந்து விட்டது.
எனவே, அன்பான பெற்றோர்களே! உங்கள் செல்லக்குழந்தைகளின் எதிர் காலத்தினை பற்றி சிந்தித்து,அவர்களுக்கு எத்தகைய பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதினை தாங்களை முடிவு செய்து கொள்ளவும். குர் ஆன், மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நம்முடைய சந்ததிகள் வளர வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் அவர்களை நல் வழிப்படுத்துங்கள்.

உங்களுடைய காலங்கள் போய் கொண்டு இருக்கிறது. தற்போது தாங்களின் சந்ததிகளின் காலங்கள் எத்தகைய வழியில் இருக்க போகிறது கொஞ்சம் யோசனை செய்யுங்கள்.
'விசுவாசங்கொண்டார்களே அத்தகையோர், அவர்களுடைய சந்ததிகளும் விசுவாசத்தின் மூலம் அவர்களை பின்பற்றினார்கள், (அத்தகைய அந்தச் சந்ததியினரின் படித்தரங்கள் குறைவாக இருப்பினும் அவர்களின்பெற்றோர்கள் இருக்கும் உயர் பதவிக்கு அவர்களுடன் (சுவனபதியில்) அவர்களின் சந்ததியினரை சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய (பெற்றோர்களின் நன்மையான) செயல்களில் எதனையும் அவர்களுக்கு நாம் குறைத்து விடமாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்ததைக் கொண்டு பிணையாக்கப்பட்டிருக்கின்றான்.' (திருக்குர்ஆன் 52: 2)

நம்முடைய பிள்ளைகள் ஆடம்பரத்தினை விரும்பதான் செய்வார்கள். ஆனால் அந்த ஆடம்பரம் ஆபத்தாக போய் விட்டால் என்ன செய்வது..? அழகாய் ஆடை அணிவதையும் அழகை விரும்புவதையும் இஸ்லாம் ஒரு காலும் தடுக்கவில்லை. ஆனால் இதே விருப்பம் வரம்பு மீறிபோகுமானால் மனிதன் தன்னுடைய சொத்து முழவதையும் வீண் விரயம், வெட்டிச்செலவு மற்றும் பெருமை, பகட்டு ஆகியவற்றால் பாழாக்கி விடுகின்றான்.

குழந்தைகளை தொழுக சொல்லுங்கள், 
திருக்குர்ஆனை பற்றி தெரிந்து கொள்ள சொல்லுங்கள், 
தீன் நெறி பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றினை அவர்களுடன் பகிரிந்துக் கொள்ளுங்கள். நபிமார்களின் வாழ்க்கை முறைகளை பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். 
மார்க்க சம்மந்தமான எத்தனையோ பல நூல்கள் அவர்களுக்கு பரிசாக கொடுங்கள். 
 அவர்களின் அன்பினையும் பெற்று கொள்ளுங்கள். நல்லறிவு பெறக்கூடிய சந்ததிகள் உருவாகி கொண்டு இருப்பார்கள் நிச்சயமாக..

''தன்னுடைய பெற்றோர்க்கு நன்மை செய்யுமாறு, மனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம். அவனுடைய தாய்,சிரமத்துடன் அவனைச் சுமந்திருந்து, சிரமத்துடன் அவனைப் பிரசவிக்கின்றாள். (அவள்) கர்ப்பத்தில் அவனைச் சுமப்பதும், அவனுக்கு பால் குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். முடிவாக இவன் வாலிபமாகி,நாற்பது வயதை அடைந்ததும், 'என் இரட்சகனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த உன் அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, நீ எதனைப் பொருந்திக்கொள்வாயோ அந்த நற்செயலைச் செய்யவும் (நல்லறிவை) நீ எனக்கு உதிக்கச் செய்வாயாக! எனக்காக என்னுடைய சந்ததியில் (உள்ளோரை) நீ சீர்திருத்தியும் வைப்பாயாக! நிச்சயமாக நான் தவ்பா செய்து உன் பக்கம் திரும்பி விட்டேன். நிச்சயமாக,நானோ (உனக்கு முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்களில் (ஒருவனாகவும்) இருக்கிறேன்' என்று கூறுவான்.'' (திருக்குர்ஆன் 46: 15)