Friday, January 17, 2014

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்.! மூலிகைகள் கீரைகள்!

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்.

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பைக் குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*வாழைத்தண்டு பவுடர் :- சிறுநீரகக் கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்ப் புண், தொண்டைப் புண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிர்வதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரணக் கோளாறுகளுக்குச் சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாசக் கோளாறு, ஆஸ்துமாவிற்குச் சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சர்க்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவரச் சூடு குறையும், முகம்
பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைபடுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெருக்கி, நா
வறட்சிக்குச்சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பைச் சரி
செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்குச் சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

No comments: