பார்வை குறைபாட்டை சரி செய்யப் பயன்படும் முக்கிய கண் செல்களை அச்சிட்டு விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
அச்சிட்டு உருவாக்கப்பட்ட செல்கள் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைவதாகவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் எலியின் ரெட்டினாவில் உள்ள இரண்டு முக்கிய செல்களை இன்க் ஜெட் பிரிண்டர் மூலம் அச்சிட்டு தயாரித்துள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது.
மனிதர்களுக்கு பயன்படும் வகையிலான ஆய்வுகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் என்றும் விஞ்ஞானிகள் குழு குறிப்பிட்டுள்ளது. இந்த செல்களே கண்களில் இருந்து மூளைக்கு செய்திகளை அனுப்புபவை. தற்போதைய ஆய்வுகள் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், வரும் காலத்தில் மேலும் சில ரெட்டினா செல்களை அச்சிட்டு தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment