Sunday, February 23, 2014

வார இறுதியிலாவது சருமத்தை பாதுகாக்க விரும்புறீங்களா? அப்ப இத ட்ரை பண்ணுங்க..

தற்போதைய காலகட்டத்தில் அழகை இயற்கை முறையில் பராமரிப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. அதிலும் அலுவலகம் செல்பவர்களுக்கு அழகைப் பராமரிக்க நேரம் கிடைப்பதே இல்லை. அப்படி சருமத்தை சரியாக பராமரிக்க முடியாததால், பலரது சருமமானது பொலிவிழந்து, சோர்ந்து பார்ப்பதற்கு அசிங்கமாக காணப்படுகிறது. மேலும் அலுவலகம் செல்பவர்களுக்கு நேரம் கிடைப்பது வார இறுதியில் தான். அப்படி வார இறுதி வரும் போது, அவர்கள் சருமத்தை அந்நாட்களில் பராமரித்து வந்தால், சருமத்தில் தங்கியுள்ள நச்சுக்கள், இறந்த செல்கள் போன்றவற்றை நீக்கி, சருமத்தை பொலிவோடும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம். கழுத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு உதவும் பொருட்கள்! குறிப்பாக வாரம் ஒரு முறை சருமத்தை இயற்கை பொருட்கள் கொண்டு ஸ்கரப் செய்வது மிகவும் அருமையான வழி. இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் போன்றவற்றை
நீக்கிவிடுவதோடு, எந்த பக்கவிளைவும் இல்லாமல் சருமமும் பொலிவோடு இருக்கும். சரி, இப்போது இந்த வார இறுதியில் எந்த ஸ்கரப்பை வீட்டிலேயே செய்யலாம் என்று ஒருசில ஸ்கரப் ரெசிபிக்களை கொடுத்துள்ளோம். அவற்றைப் படித்து, அதனை இந்த வாரம் முயற்சித்து, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளுங்கள். காபி ஸ்கரப் 1/2 கப் காபி தூள், 1/2 கப் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, அதனை உடல் முழுவதும் தடவி ஸ்கரப் செய்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடுவதோடு, அதில் உள்ள எண்ணெய்கள் நல்ல மாய்ஸ்சுரைசராகவும் இருக்கும். எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்கரப் 5 கப் சர்க்கரை, 2 கப் ஆலிவ் ஆயில், 2 எலுமிச்சை மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக ஒரு பௌலில் போட்டு நன்கு கிளறி விட்டு, பின் அதனை கைகள், கால்களில் தடவி சிறிது நேரம் மென்மையாக தேய்த்து, நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள கருமையானது நீங்கி, சருமம் அழகாக ஜொலிக்கும். மாதுளை ஸ்கரப் 2 கப் சர்க்கரை, 1/4 கப் தேங்காய் எண்ணெய், சிறு துளிகள் புதினா எண்ணெய் மற்றும் சிறிது மாதுளை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் தங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். வென்னிலா மற்றும் சர்க்கரை ஸ்கரப் இந்த ஸ்கரப்பிற்கு 2 12 கப் சர்க்கரை, 3/4 கப் சர்க்கரை பொடி, 4-5 டேபிள் ஸ்பூன் வென்னிலா எசன்ஸ் மற்றும் 1/4 கப் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, பின் அதனை சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும். சிட்ரஸ் ஸ்கரப் சருமத்தின் கருமையைப் போக்கும் ஸ்கரப்களில் ஒன்று தான் இந்த சிட்ரஸ் ஸ்கரப். இந்த ஸ்கரப் செய்ய 1 கப் உப்பு, 1/2 கப் சர்க்கரை, 1/2 கப் தேங்காய் எண்ணெய், சிறிது எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலந்து, உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பாதாம் மற்றும் ஆரஞ்சு ஸ்கரப் 1 கையளவு பாதாம், 1 ஆரஞ்சு பழத்தின் தோல் மற்றும் 1 கப் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, அதனை உடல் முழுவதும் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் உடலில் உள்ள கருமை நீங்கி, சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சாக்லெட் ஸ்கரப் சாக்லெட் ஸ்கரப் என்று கேட்கும் போதே இனிமையாக உள்ளது தானே! ஆம் சாக்லெட் கொண்டு ஸ்கரப் செய்தால், எப்படி நாவிற்கு சுவையைத் தருகிறதோ, அதேப் போல் இது சருமத்திற்கு அழகைத் தரும். அதற்கு 1/2 கப் சர்க்கரை, 1/2 கப் நாட்டுச்சர்க்கரை மற்றும் 1/2 கப் கொக்கோ சேர்த்து கலந்து, பின் அதில் 1/2 கப் கனோலா ஆயில் சேர்த்து கலந்து, அதனை உடல் முழுவதும் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து நீரில் கழுவ வேண்டும். வென்னிலா மற்றும் தேங்காய் ஸ்கரப் இந்த முறைக்கு 1/2 கப் தேங்காய் எண்ணெய், 1/2 கப் நாட்டுச்சர்க்கரை மற்றும் 1/2 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமமானது நன்கு மென்மையாகவும், அழகாகவும் இருக்கும். இனிப்பு மற்றும் காரம் கலந்த ஸ்கரப் இந்த ஸ்கரப்பை பலர் செய்யலாமா என்று யோசிப்பார்கள். ஏனெனில் இதில் காரம் இருப்பதால், எங்கு இது சருமத்திற்கு அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்திவிடுமோ என்று தான். ஆனால் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீங்குவதில் சிறந்தது. அதற்கு 1 கப் நாட்டுச்சர்க்கரை, 1 கப் சர்க்கரை, 3/4 கப் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய், 2 டீஸ்பூன் பட்டை, 2 டீஸ்பூன் இஞ்சி மற்றும் 2 டீஸ்பூன் ஜாதிக்காய் ஆகியவற்றை பிளெண்டரில் போட்டு நன்கு அடித்து, பின் அதனை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் நீரில் நன்கு அலசி விட வேண்டும். வைட்டமின் ஈ ஸ்கரப் இந்த ஸ்கரப்பிற்கு 1 கப் சர்க்கரை, 1/3 கப் உப்பு, 1/2 கப் விர்ஜின் ஆலிவ் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் வைட்டமின் ஈ ஆயில் மற்றும் சிறு துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து, பின் அதனைக் கொண்டு உடல் முழுவதும் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீங்கி, சருமம் அழகாக இருக்கும். கல் உப்பு ஸ்கரப் கல் உப்பு ஸ்கரப் மிகவும் ஈஸியான, அதே சமயம் நல்ல பலன் தரக்கூடிய ஸ்கரப்பும் கூட. அதற்கு 1 கப் கல் உப்பு மற்றும் 1/2 கப் தேங்காய், ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, அதனை 1 நாள் முழுவதும் ஊற வைத்து, பின் மறுநாள் அதனைக் கொண்டு உடலை மென்மையாக ஸ்கரப் செய்தால், அது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவதுடன், சருமத்தில் போதிய ஈரப்பதத்தையும் தங்க வைக்கும்.

நினைவாற்றலை அதிகரிக்கும் நீண்ட அணைப்பு!



அன்பிற்குரியவர்களை அதிக நேரம் கட்டி அணைப்பதன் மூலம் அன்பு அதிகரிப்பதோடு உடலில் வியக்கத்தக்க மாற்றங்களும், நன்மைகளும் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். குறைந்த பட்சம் 20 செகண்டுகளாவது உடலும் மனமும் ஒன்றி கட்டி அணைக்க வேண்டுமாம். அப்போதுதான் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் சுரக்கும் என்கின்றனர். கட்டி அணைப்பதன் மூலம் உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆகும், ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படும். இதனை உணரச் செய்வது இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோன்தான் என்கின்றனர். படபடப்பு குறையும் மனஅழுத்தமான சூழ்நிலையிலோ, படபடப்பான
சூழ்நிலையிலோ இருந்தால் அன்பிற்குரியவர்களை கட்டி அணைப்பதன் மூலம், படபடப்பினை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள். ரத்தக்கொதிப்பு குறையும் அதுமட்டுமல்லாது அன்பானவர்களை அடிக்கடி கட்டி அணைப்பதன் மூலம், ரத்தக் கொதிப்புகுறைவதோடு, நினைவாற்றல்அதிகரிக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வில் நிரூபணம் ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் உள்ள, வியன்னா பல்கலைகழக விஞ்ஞானிகள் நமது உடலில், பிட்யூட்டரி சுரப்பியால் உருவாக்கப்படும் ஹார்மோனான, ஆக்ஸிடோசினை பரிசோதித்து வந்தனர். அன்பான உறவுகள் அதில், நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், காதலன் அல்லது காதலி, என நம்மை நேசிக்கும்அன்பானவர்களை நாம் கட்டிப்பிடித்தால், ஆக்ஸிடோசின் வெளிப்பட்டு, ரத்தக் கொதிப்பு குறைகிறதுஎன்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், இதன் மூலம், நினைவாற்றல் மேம்படுவதும் தெரியவந்துள்ளது. தம்பதியினர் அணைப்பு இது குறித்து, வியன்னா பல்கலைகழக நரம்பியல் விஞ்ஞானி சாண்ட் குக்லர் கூறியதாவது: பெற்றோர், குழந்தைகளைகட்டிப்பிடிக்கும்போதும், தம்பதியினர் கட்டிப்பிடிக்கும்போதும், ஆக்ஸிடோசின் அதிகளவு சுரப்பது தெரியவந்துள்ளது. ரத்தக்கொதிப்பு குறையும் பரஸ்பரம் நம்பிக்கையுடன் உள்ளவர்களை கட்டிப்பிடிக்கும்போது மட்டும் தான், ரத்தக்கொதிப்பு குறைவதும், நினைவாற்றல் அதிகரிப்பதும் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். எதிர்விளைவுகள் ஆனால், நமக்கு முன்பின்அறிமுகம் இல்லாதவர்கள், நம்மை நேசிக்காதவர்கள் ஆகியோரை,கட்டிப்பிடிக்கும்போது, இந்த ஆக்ஸிடோசின் அதிகம் சுரக்காமல், எதிர் விளைவுகள் ஏற்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. காதல் ஹார்மோன் மூளையின் உட்பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோன்தான் மனிதர்களின் காதல், காம உணர்வுகளை தூண்டுகிறதாம் எனவே இதனை காதல் ஹார்மோன் என்றும் செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர். மன அழுத்தம் போக்கும் இந்த ஹார்மோன் தம்பதியரிடையேயான பிணைப்பை அதிகரிக்கிறது. குழந்தை பிறப்பு, மனஅழுத்தம் போக்குவது, உள்ளிட்ட 11 வகையான நன்மைகளை செய்கிறது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தினமும் அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்பதற்கான காரணங்கள்!

உடற்பயிற்சி என்பது வாழ்வில் இன்றியமையாத ஒரு செயல்பாடாகும். உடலை உறுதியாகவும், நோயின்றியும் வளர்க்க உதவுபவை உடற்பயிற்சிகளே. உடற்பயிற்சியை நீங்கள் ஏன் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என்று விளக்கும் 8 காரணங்களை நாங்கள் இந்த கட்டுரையில் வழங்கியுள்ளோம். நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உடற்பயிற்சி செய்யலாம் என்று சிலர் சொல்லுவார்கள். நீங்கள் காலை 7 மணிக்கு செய்தாலும் அல்லது இரவு 7 மணிக்கு செய்தாலும் பலன் ஒன்றாகவே இருக்கும் என்பது இவர்களின் வாதம். இருந்தாலும், உடற்பயிற்சி வல்லுநர்கள் காலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதையே நன்மை தரும் என பரிந்துரைக்கிறார்கள். தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும் 15 வழிகள்!!! நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி
செய்தல் மற்றும் டம்பெல்ஸ்களை தூக்க நேரம் பார்ப்பது போன்றவை மட்டுமல்லாமல், காலை வேளைகளிலேயே நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை இதோ 8 காரணங்களால் நாங்கள் விளக்குகிறோம். உடலின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தல் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் உறுப்புகள் வேகமாக வேலை செய்யத் துவங்குகின்றன. இதனால் ஊக்கம் பெறும் உடல் உறுப்புகள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்கின்றன. இதன் மூலம் ஓய்வு நேரத்திற்குப் பதிலாக, உடற்பயிற்சியின் போது உடலும் அதிகமான கலோரிகளை எரிக்கச் செய்கின்றது. நீங்கள் நாள் முழுவதும் சீட்டை விட்டு எழுந்திருக்காமல் வேலை செய்பவராக இருந்தால், உங்கள் உடல் சுறுசுறுப்பாக இருக்கச் செய்ய தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். சக்தியூட்டம் பெறுதல் காலை நேரத்தில் உடற்பயற்சி செய்வதால் உங்கள் உடலுக்கு மிகுந்த சக்தி கிடைக்கிறது. எனவே, பருவநிலையும், களைப்பும் உங்களை ஆட்கொள்ளும் முன்னர், காலையிலேயே ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். இவ்வாறு செய்வதன் மூலமாக என்டோர்பின்கள் மற்றும் பிற ஹார்மோன்கள் உடலுக்கு நாள் முழுவதும் தேவையான சக்திகளை வளமாக கொடுக்கத் துவங்குகின்றன. மனதுக்கு புத்துணர்ச்சி உடற்பயிற்சி செய்வதால் மனநலம் மிகவும் மேம்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் நேரமாக உடற்பயிற்சி செய்வதால் நல்ல மனநிலையை உருவாக்கி, மனநலத்தை பாதுகாக்க முடியும். உங்களுடைய நாள் தொடங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்யத் துவங்கினால் ஒவ்வொரு நாளும் இருக்கும் முந்தைய நாளின் மன அழுத்தத்தை களைந்து விட முடியும்.. இதற்காக ஒரு பெஞ்ச்-பிரஸ் அல்லது ட்ரெட்மிலை பயன்படுத்தலாம். இவ்வாறான உடற்பயிற்சிகள் வரும் நாளில் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை வெகுவாக குறைக்கின்றன. பசியை கட்டுப்படுத்துதல் காலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதால் பசி கட்டுக்குள் வருவதை பெரும்பாலானவர்கள் உணர்ந்திருப்பார்கள். இவர்கள் குறைவான உணவுகளை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் (உடற்பயிற்சியின் காரணமாக உருவாகும் என்டோப்பிரின்கள் பசியை கட்டுப்படுத்துகின்றன), அவை சுகாதரமான பலன்களை தரும் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவார்கள். இதன் மூலம் உங்களுடைய உணவு சாப்பிடும் நேரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உணருவீர்கள். பசியையோ அல்லது சக்தி பெருமளவு வடிந்து விட்டதைப் போலவோ இருக்கும் சூழல்களை அனுபவிக்கவும் மாட்டீர்கள். இந்த உணர்வுகள் தான் நொறுக்குத் தீனிகளை சாப்பிட நம்மை தூண்டுகின்றன. விழிப்புணர்வு அதிகரித்தல் ஒரு நல்ல உடற்பயிற்சிக்குப் பின்னர், அந்நாளில் வரும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வண்ணம் மிகவும் விழிப்புணர்வுடன் நீங்கள் இருப்பதை கவனித்திருப்பீர்கள். எனவே, உங்களுடைய நாள் தொடங்குவதற்கும் முன்னர் நீங்கள் உடற்பயிற்சியை முடித்திருந்தால், இது போன்ற சோதனைகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருப்பீர்கள். உண்மையில், நீங்கள் செய்யும் உடற்பயிற்சியின் சுறுசுறுப்பு, அது முடிந்த 4 முதல் 10 மணி நேரங்களிலேயே மிகவும் பலனுள்ளதாக உள்ளது. இதன் காரணமாக, இரத்தம் வழியாக மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவு அதிகமாக இருக்கும். நல்ல தூக்கம் தினமும் நன்றாக உடற்பயிற்சி செய்வதன் காரணமாக நல்ல தூக்கமும், அதன் தரமும் அதிகரிக்கும். உங்களுடைய உடல் இது படுக்கைக்கு செல்வதற்கான நேரம் என்பதை எடுத்துச் சொல்லும். இது போன்ற நேரங்களில் அடுத்த நாள் காலை உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்கு வருமாதலால், குறைந்த பட்ச தூக்கமாவது நீங்கள் தூங்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். நீங்கள் சரியாக தூங்கவோ அல்லது ஓய்வெடுக்கவோ செய்யாமல் இருந்தால் உங்களுடைய உடலை உறுதிப்படுத்தவோ அல்லது இதயத்தையோ பலமாக்குவதோ மிகவும் கடினமாகி விடும்.

Tuesday, February 18, 2014

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?



* குழந்தைகளின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பதோடு அவர்களது உணர்வுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்.
* சிரித்தால் அவர்களுடன் சேர்ந்து சிரிக்க வேண்டும். அழுதால் ஏன் அழுகிறாய்? என்று காரணம் கேட்க வேண்டும். மாறாக குழந்தைகளைத்  திட்டுவதோ, அடிப்பதோ கூடாது.
* குழந்தைகளிடம் அன்பு காட்டுவதால் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்க முடியும். அதைத் தவிர்த்து அவர்களை உதாசீனப்படுத்தினாலோ, மனதைக் காயப்படுத்தினாலோ அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உருவாகக் காரணம் ஆகிவிடும்.
* குழந்தைகளைப் பகட்டாகவோ, ஆடம்பரமாகவோ வாழவிடாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்.
* நாம் குழந்தையாக இருந்தபோது நமக்குக் கிடைக்காத சந்தோஷம் நமது குழந்தைகளுக்குக் கிடைக்கும் போது அதை நாம் பகிர்ந்து கொண்டு ஆனந்தப்பட வேண்டும்.
* குழந்தைகள் தங்களைப் பாராட்டுவதைத்தான் பெரிதும் விரும்புவார்கள். அடுத்தவர் முன் தலைகுனிவதை குழந்தைகள் விரும்புவதில்லை. அதே நேரம் அவர்களிடம் பிழைகள், தவறுகள் இருந்தால் அன்பாக எடுத்துக் கூறி அவற்றைத் திருத்த பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.
* குழந்தைகளுக்குத் தோல்விகளையும் சந்திக்கப் பழக்க வேண்டும். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதோ, சொல்வதையெல்லாம் செய்து கொடுப்பதோ மிகவும் தவறானது. அத்தகைய சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் சின்னச் சின்ன தோல்விகளையும், தாங்க முடியாமல் முடங்கிப் போவார்கள்.
* மற்ற குழந்தைகள் போல் நமது குழந்தைகளும் படிப்பில் முன்னேறவில்லை என்று  அடிப்பதாலோ, திட்டுவதாலோ, பயன் கிடைத்துவிடாது. அதனால் குழந்தைகளுக்கு மன உளைச்சல், பயம், விரக்தி, எரிச்சல்தான் வரும் என்பதைப் புரிந்து கொண்டு பெற்றோர்கள் சாதுரியமாக நடந்து கொள்ளவேண்டும்.
* உங்கள் குழந்தையை அதன் போக்கில் வளரவிடுவது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று அவர்களைக் கட்டுப்படுத்தினால் அச்செயலைச் செய்வதில் எல்லாரையும் விட குழந்தைகள் ஆர்வமாக இருப்பார்கள் என்று மனநலமருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தலைவலி பிரச்னையா? கவனமா இருங்க…!

தூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம். வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும். வலி நிவாரண மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனைஇன்றி சாப்பிட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடுவது, மன நோயாகவும் மாற வாய்ப்புள்ளது
1. தலைவலி ஏன் வருகிறது?
நீண்ட நாள் தலைவலி, குறுகிய கால தலைவலி என, இரண்டு வகைகள் உண்டு. நெற்றியின் இரண்டு பக்கத்திலும், காற்று சிற்றலைகள் உள்ளன. குளிர் தாக்குதலால், இவற்றின் உள்பக்க ஜவ்வு, வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில், சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதால், தலைவலி ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டை நிபுணர் அறிவுரையின்படி, 5 நாட்கள் மாத்திரை உட்கொண்டால், சீராகி விடும்.
2. கண் பார்வை குறைபாடும் ஒரு காரணமா?
மூக்கின் நடுச்சுவர் வளைவு, ஜவ்வு வீக்கம் இருந்தாலும், அடிக்கடி தலைவலி வரும். இதை, அறுவைச் சிகிச்சை மூலமே, சரி செய்ய முடியும். கண் பார்வை குறைபாடு உள்ளோருக்கும், பின்பக்க தலைவலி வரும். கண்ணில் நீர் அழுத்தம் அதிகமானால், தலைவலி வரும்.
3. ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது?
தலையின் ஒரு பக்கத்தில் ஒற்றைத் தலைவலி வரும். நீண்டநேரம் இருக்கும். வாந்தி வந்தால் குறைந்துவிடும். சில பேருக்கு, ஆண்டுக்கணக்கில் பாதிப்பு வரும். வலி நிவாரணிகளை, டாக்டரின் ஆலோசனை இன்றி சாப்பிடுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், ஒற்றைத் தலைவலி வரலாம். நரம்பியல் நிபுணர்களை பார்த்து, சிகிச்சை எடுப்பது அவசியம்.
4. தலைவலி வந்தால் நடக்கும்போது தள்ளாட்டம் வருமா?
இரவில் அதிகம் கண் விழிப் போர், நீண்ட நேரம் புத்தகம் படிப்போர், இரவு ஷிப்டில் தொடர்ந்து வேலை செய்வோர், ‘வெப்சைட்’டில் மூழ்கி கிடப்போர், ‘டிவி’யை நீண்ட நேரம் பார்ப்போருக்கும் தலைவலி வர வாய்ப்பு உள்ளது. தூக்கத்தை தொலைப்பது தான், இதற்கு முக்கிய காரணம். சிலருக்கு முன்பக்க தலை வலிக்கும். நடக்கும்போது தள்ளாட்டம் வரும்; மயக்கம் வரும். இத்தகைய பாதிப்புஉடையோர் நல்ல மனநல நிபுணரை சந்திப்பது நல்லது.
5. விட்டு விட்டு தலைவலி வருவது ஏன்?
தாழ்வான கட்டடங்களுக்கு குனிந்து செல்லும்போதோ, கிரிக்கெட் விளையாட்டாலோ, எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு கவனிக்காமல் விட்டால், உள் காயங்கள் ஏற்படலாம். இவர்களுக்கு, விட்டு விட்டு தலைவலி வரும். தலையில், எக்ஸ்-ரே, ‘ஸ்கேன்’ எடுத்து, பாதிப்பின் காரணம் அறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
6. தீராத தலைவலி, புற்றுநோயின் அறிகுறியா?
இடைவிடாத தலைவலி உள்ளோர், தூக்கத்தில் அடிக்கடி எழுந்து உட்கார்ந்து கொள்வோருக்கு, மூளையில் நீர் கட்டி, புற்றுநோய் கட்டி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கு, நீண்ட கால சிகிச்சை பெற வேண்டிய நிலை வரும். அதற்காக தலைவலி வருவோருக் கெல்லாம், புற்றுநோயாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
7. தலைவலிக்கும், உணவில் சேர்க்கும் உப்புக்கும் தொடர்பு உண்டா?
பெரும்பாலான வைரஸ் காய்ச்சல் களுக்கு, தலைவலி, ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். காரணம் கண்டறிந்து, உரிய முறையில் சிகிச்சை பெறுவது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவு குறைந்தாலும், உப்பின் அளவு கூடி அல்லது குறைந்தாலும், அளவுக்கு அதிகமாக தலைவலி வர வாய்ப்புண்டு.
8. மன அழுத்தம் தலைவலிக்கு காரணமா?
தலைவலி என, கடைகளில் இஷ்டம்போல் வலி நிவாரண மாத்திரை வாங்கிப் போட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடக்கூடாது. அப்படி செய்தால், மனநோயாக மாற வாய்ப்புள்ளது. தொழில் வர்த்தகர்கள், பணிகளை இழுத்துப் போட்டுச் செய்வோர், வங்கி அதிகாரிகளுக்கும் தலைவலி வர வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தாலும் பாதிப்பு வரலாம். வேலையை கண்டபடி இழுத்துப்போட்டு செய்யாமல், பணிகளை முறைப்படுத்தி செய்வதும், இடை இடையே ஓய்வு எடுப்பதும் நல்லது.
9. சரியான நேரத்தில் உணவு கட்டாயம் என்கிறீர்களே?
சாப்பிடாமல் பட்டினி கிடப்போர், உரிய நேரத்திற்கு சாப்பிடாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவோர், முறையாக உணவு பழக்கம் இல்லாதோருக்கும், தலைவலி வரும். சரியான உணவு பழக்கம் அவசியம். இந்தியாவில், பெரும்பாலும் தலைவலியால் பாதிக்கப்படுவதற்கு, ரத்தக் கொதிப்பு காரணமாக உள்ளது. இதற்காக, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பெரிய மருத்துவமனைகளில், தலைவலிக்கென பிரத்யேக பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில், சரியான நேரத்தில் உணவு, சரியான தூக்கம், மன அழுத்தத்தால் பாதிக்காத வகையில் திட்டமிட்டு பணியாற்றுதல் ஆகியவற்றால், தலைவலி பாதிப்பில் இருந்து தப்பலாம்.
டாக்டர் எம்.ஆனந்த் பிரதாப்,
நிலைய மருத்துவ அதிகாரி,
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.

Saturday, February 15, 2014

அடர்த்தியான புருவங்களைப் பெற வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்க

புருவங்கள் தான் பெண்களின் கண்களிலேயே அழகை மிகைப்படுத்தி காட்டும் பகுதியாக உள்ளன. இவை முகத்தின் அழகை வெளிப்படுத்தும் பாகமாகவும் உள்ளன. விளையாட்டிற்கு கூட நமது அழகை நாம் பாழ்படுத்த விரும்புவதில்லை. டிரிம் செய்யாத புருவமும் இப்படித்தான், தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ இருந்து நமது அழகை பாழாக்கும். நமது உடல் அமைப்பிற்கேற்ப நமது புருவங்களும் இருப்பது அவசியம். இது நமது அழகையும்
அமைப்பையும் மிகைப்படுத்தும். இதை பெறுவதற்கு ஏதேனும் இரசாயன மருந்துகளையும் சிகிச்சையும் நீங்கள் பெற விரும்பினால் அது தவறு. இதுப்போன்று வேறு: உங்க கை அட்டு கருப்பாக இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி வெள்ளையாக்குங்க… இதை எல்லாம் முயற்சி செய்து நம்மை நாமே பாழாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. எனவே, இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் கொண்டு சரி செய்ய முடியும். இதை வைத்து நாம் அடர்த்தியான புருவங்களை பெற முடியும். கொஞ்சம் கூட இரசாயனம் இல்லாமல் சிறப்பான முறையில் மற்றும் பாதுகாப்பான வழியில் பெறும் வழியாகும். கீழ் வரும் பகுதியில் உள்ள இயற்கையான முறைகளை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் புருவத்தை பெற முடியும். ஆமணக்கு எண்ணெய் குறைந்த செலவில் மிகுந்த பலன் தரக்கூடியது ஆமணக்கு எண்ணெயாகும். தடியான புருவங்களை பெற இதை பலரும் பின்பற்றி வருகின்றனர். ஆமணக்கு எண்ணையை உங்களுடைய புருவங்களில் தொடர்ந்து தடவி வந்தால் புருவங்களின் அடர்த்தி அதிகரிக்கும். இந்த எண்ணெய் நிச்சயம் உங்களுக்கு சிறந்த பலனை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. பெட்ரோலியம் ஜெல்லி: வாசலீன் வாசலீன் பயன்படுத்துவது உலர்ந்த புருவங்களை ஈரப்பதமூட்டி அதில் உள்ள வெடிப்புகளை சரி செய்கின்றது. இதனால் அங்குள்ள தசைகள் ஊட்டம் பெறுகின்றன. இதை நாம் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவ வேண்டும். இதனால் புருவம் நீளமாகவும், உறுதியாகவும் காணப்படும். அது மட்டுமில்லாமல் புருவத்தையும் நன்கு பெருகி வளரச் செய்யும். சுத்தமான தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் நிச்சயம் முடி வளர்ப்பிற்கு உதவும் என்பது நமக்கு மிகவும் தெரிந்த உண்மைகளில் ஒன்று. இதுவும் புருவங்களை வளர்ப்பதற்கு ஏற்ற சிறந்த திரவமாக உள்ளது. இந்த எண்ணைய் முடியை விரைவாக வளரச் செய்வது மட்டுமல்லாமல் புருவத்திற்கு நல்ல வடிவத்தையும் தருகின்றது. வெங்காய சாறு வெங்காயத்தில் அதிக அளவு சல்பர் உள்ளது. இந்த குணத்தால் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியும். இந்த சாற்றை புருவங்களில் தடவும் போது அவை புருவத்தின் அடர்த்தியை அதிகரித்து அழகுபடுத்தலாம். இதில் சிறிய வெங்காய வகையை பயன்படுத்தலாம். ஒரு பஞ்சு உருண்டையை கொண்டு வெங்காய சாற்றை தடவினால் போதும், உறுதியான அழகான புருவங்களை பெற முடியும். தண்ணீர் எந்த ஒரு உடல் சம்மந்த பிரச்சனையாக இருந்தாலும் தண்ணீர் சிறந்த மருந்தாக இருக்கும். நாம் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது உடலின் ஆற்றலை அதிகப்படுத்துகின்றது. ஆலிவ் எண்ணெய் ஆலிவ் எண்ணையும் புருவங்களுக்கு ஏற்ற திரவமாகும். வீட்டிலிருந்தபடி நாம் தடியான புருவங்களை பெற இதுவும் ஒரு வழியாக உள்ளது. இந்த எண்ணெயை முழுமையாக பயன்படுத்தி அழகான புருவங்களை பெறுங்கள். இது புருவங்களை அடர்த்தியாக்குவது மட்டுமல்லாமல் அழகான வடிவத்தையும் அமைத்து தருகின்றது. கற்றாழை உடலில் உள்ள பல பிரச்சனைகளிடமிருந்து நம்மை குணமாக்கும் சக்தி கற்றாழைக்கு உண்டு. இதை கடைகளில் வாங்கி அல்லது வீட்டில் உள்ள செடியிலிருந்து இலையை பறித்து அந்த பசையை புருவத்தில் தடவலாம். இவை புருவங்களை நன்கு வளர செய்கின்றன. இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வித்தியாசத்தை பார்க்க முடியும். முட்டை முட்டையை உடைத்து அதன் மஞ்சள் கருவை எடுத்து அதை நன்கு கலக்குங்கள். பின்னர் ஒரு பஞ்சு உருண்டையை கொண்டு அதை தொட்டு புருவங்களில் தடவி 15-20 நிமிடங்கள் விட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முட்டையில் உள்ள புரதச் சத்துக்கள் முடி வளர பெருமளவு உதவி செய்யும். எலுமிச்சை துண்டுகள் உங்களுடைய புருவங்களின் நீளத்திற்கு எலுமிச்சையை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த எலுமிச்சை துண்டுகளை புருவங்களின் மேல் வைத்து நல்ல அடர்த்தியான புருவங்களை பெற்று மகிழுங்கள்.

Thursday, February 13, 2014

அழகைக் கெடுக்குமாறு பற்களில் படியும் டீ கறைகளைப் போக்க சில டிப்ஸ்…

உலகிலேயே அதிக அளவில் பருகப்படும் இரண்டு பானங்கள் தான் டீ மற்றும் காபி. இந்த இரண்டு பானங்களையும் அதிகம் விரும்பி சாப்பிடும் மக்கள், இதனை நினைத்து கவலைப்படும் ஒரு விஷயம் தான், இதனால் பற்களில் மஞ்சள் கறைகள் ஏற்படும் என்பது தான். மேலும் இந்த கறைகளை எப்படி போக்குவது என்றும் பலர் தெரியாமல் திணறுகின்றனர். இதன் காரணமாக பலர் டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கத்தையே கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்த ஆரம்பிக்கின்றனர். ஏனெனில் இப்படி தொடர்ச்சியாக இவற்றைக் குடிப்பதால் பற்களில் உண்டாகும் கறைகள், ஒரு கட்டத்தில் பற்களில் இருந்து
போகாமல் நிரந்தரமாக தங்கிவிடுகின்றன. இதுப்போன்று வேறு சில: க்யூட்டான சிரிப்பு வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க… அதுமட்டுமல்லாமல், டீயில் உள்ள டானிக் ஆசிட் பற்களில் துளைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் டீயில் தான் காபியை விட அதிக அளவில் டானிக் ஆசிட்டானது உள்ளது. டீ மற்றும் காபியை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது தான், இருப்பினும் டீ மற்றும் காபியில் சிறிது நன்மைகள் நிறைந்திருப்பதால், இவற்றை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குடிப்பது நல்லது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை டீ மற்றும் காபியினால் ஏற்படும் கறைகளைப் போக்க ஒருசில எளிய வழிகளை பரிந்துரைத்துள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், நிச்சயம் பற்களில் படிந்துள்ள டீ மற்றும் காபி கறைகளைப் போக்கலாம். டூத் பேஸ்ட் பற்களில் டீ கறைகள் நிரந்தரமாக படியாமல் இருக்க, டீ அல்லது காபி குடித்த பின்னர், பற்களை வெண்மையாக்க உதவும் டூத் பேஸ்ட்களைக் கொண்டு பற்களை துலக்க வேண்டும். இதனால் பற்களில் கறைகளை படிவதைத் தடுக்கலாம். எலுமிச்சை மற்றும் உப்பு எலுமிச்சை மற்றும் உப்பு கொண்டு பற்களை தேய்த்தாலும், பற்களில் படிந்துள்ள டீ மற்றும் காபி கறைகளைப் போக்கலாம். குறிப்பாக, எவ்வளவு உப்பு சேர்க்கிறோமோ, அந்த அளவில் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவும் ஒரு அற்புதமான பொருள். அதற்கு ஈரமான பிரஷ்ஷை பேக்கிங் சோடாவில் தொட்டு பற்களை துலக்க வேண்டும். இல்லாவிட்டால், பேஸ்ட்டில் சிறிது பேக்கிங் சோடாவை தூவி பற்களை துலக்க வேண்டும். குறிப்பாக அப்படி தேய்க்கும் போது, பற்களின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பேக்கிங் சோடா செல்லுமாறு துலக்க வேண்டும். ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஹைட்ரஜன் பெராக்ஸைடுடன் உப்பு சேர்த்து பற்களை துலக்கினாலும், பற்களில் உள்ள கறைகள் நீங்கும். அதிலும் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 2 துளிகள் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து பற்களை தேய்க்க வேண்டும். வாழைப்பழ தோல் இன்னும் இயற்கையான முறை வேண்டுமானால், வாழைப்பழத்தின் உட்புற தோலைக் கொண்டு பற்களை தேய்த்தாலும், பற்களில் படிந்துள்ள டீ கறைகள் மறையும். சூயிங் கம் சூயிங் கம் கூட ஒரு சூப்பரான பற்களில் தங்கியுள்ள கறைகளைப் போக்கும் பொருள். ஆகவே டீ அல்லது காபி குடித்த பின்னர் சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று வந்தால், பற்களில் டீ கறைகள் நிரந்தரமாக தங்குவதைத் தடுக்கலாம். ஸ்ட்ராபெர்ரி பற்களில் உள்ள டீ கறையைப் போக்க ஸ்ட்ராபெர்ரி கூட உதவும். எனவே வீட்டில் ஸ்ட்ராபெர்ரி இருந்தால், அதனைக் கொண்டு பற்களை தேய்த்து வாருங்கள். ப்ளாஸ் ப்ளாஸ் என்னும் நைலான் கயிற்றை ஒவ்வொரு பற்களின் இடுக்கிலும் விட்டு தேய்க்கலாம். இதனால் பற்களில் இடுக்குகளில் தங்கியுள்ள கறைகளைப் போக்கலாம். குறிப்பு எத்தனை குறிப்புகள் இருந்தாலும், முக்கியமாக டீ அல்லது காபி குடித்தப் பின்னர் நீரால் வாயைக் கொப்பளித்தால், பற்களில் கறை தங்குவதைத் தடுக்கலாம்.

Monday, February 10, 2014

கற்றாழை ஜெல்லின் அழகு நன்மைகள்!



கற்றாழை கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அருமையான மருத்துவ குணம் கொண்ட பொருள். இத்தகைய கற்றாழையானது உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் மருத்துவ குணத்தைக் கொண்டிருப்பதோடு, பல்வேறு அழகு நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. அதனால் தான் நிறைய அழகு பொருட்களில் கற்றாழையின் ஜெல்லானது பயன்படுத்தப்படுகிறது. மேலும் கற்றாழை ஜெல்லானது குளிர்ச்சித் தன்மையைக் கொண்டிருப்பதால், அது சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் போக்கிவிடுகிறது. ஆனால் கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதை விட,
இயற்கையாக செடிகளை பிய்த்து அதன் ஜெல்லைப் பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும். இதுப்போன்று வேறு: ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கான சில இயற்கை வைத்தியங்கள்!!! சரி, இப்போது கற்றாழை ஜெல்லை அழகுப் பராமரிப்பில் பயன்படுத்தினால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம். சருமத்தின் கருமையை போக்கும் வெயிலில் அதிகம் சுற்றி திரியும் போது, சருமமானது கருமை நிறமடையும். எனவே அத்தகைய கருமையை போக்க, தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி மசாஜ் செய்து பாருங்கள். இதன் பலன் நன்கு தெரியும்.முதுமை தோற்றத்தைத் தடுக்கும் தற்போதுள்ள மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், நிறைய பேருக்கு இளம் வயதிலேயே, சரும சுருக்கம் ஏற்பட்டு, முதுமை தோற்றத்தை அடைகின்றனர். எனவே இன்றைய இளம் வயதினர் தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தினால், இத்தகைய பிரச்சனையைத் தடுக்கலாம். பருக்கள் பருக்கள் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் அதிகம். அத்தகையவர்கள் கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு தடவி வந்தால், அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள், முகப்பருவை போக்கிவிடும். நகப் பராமரிப்பு நகங்கள் அடிக்கடி உடைகிறதா? அப்படியானால் கற்றாழை ஜெல்லை நகங்களுக்கு தடவி மசாஜ் செய்து வந்தால், நகங்கள் வலிமையடையும். அருமையான சன் ஸ்க்ரீன் கற்றாழை ஜெல்லானது சிறந்த சன் ஸ்க்ரீன் போன்று செயல்படும். அதற்கு இதனை சருமத்தில் தினமும் தடவி வர வேண்டும். பொலிவான சருமம் சருமத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் கற்றாழை ஜெல்லைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்யுங்கள். உதடு வறட்சியை தடுக்கும் கற்றாழையின் அழகு நன்மைகளில் ஒன்று தான் உதடு வறட்சியைத் தடுப்பது. உதடுகள் வறட்சியடைந்து, உதட்டின் அழகே கெடுகிறதா? அப்படியானால் இரவில் படுக்கும் போது கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி வாருங்கள். இல்லாவிட்டால், கற்றாழை ஜெல்லை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பகல் நேரத்தில் லிப் பாம் போன்றும் பயன்படுத்தலாம். அழகாக கண்கள் கண்களில் உள்ள கருவளையம் மற்றும் வீக்கத்தை போக்கி, அழகான கண்கள் வேண்டுமானால், தினமும் கற்றாழை ஜெல்லை கண்களுக்கு தடவி வாருங்கள். இதனால் நல்ல மாற்றம் தெரியும்.

கழுத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு உதவும் பொருட்கள்



முகத்தின் அழகு அதிகரிக்க வேண்டுமென்று, அதிக அளவு பணம் செலவு செய்து அழகுப்படுத்தி விட்டு, கழுத்தை மட்டும் சரியாக கவனிக்காவிட்டால், அது அழகை பாழ்படுத்தும். ஏனெனில் அழகு என்று வரும் போது அதில் முகம் மட்டுமின்றி, கழுத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆம், முகம் மட்டும் நன்கு பளிச்சென்று இருக்க, கழுத்து கருமையாக இருந்தால், அது பார்ப்போரின் முகத்தை சுளிக்கச் செய்யும். முகத்தில் உள்ள கருமை நீங்கி, பளிச்சென்று மின்ன ஆசையா? அப்ப இத படிங்க… ஆனால் பலர் முகத்திற்கு கீழ் உள்ள கழுத்தை கவனிக்க மறந்து விடுகின்றோம். இருப்பினும் முகத்தை போல
கழுத்தையும் நாம் அழகுப்படுத்த முடியும். இதனால் கழுத்தின் கருமை நீங்கி வளவளப்பான கழுத்தை பெற முடியும். இதற்காக வீட்டிலிருந்த படியே செய்யகூடிய எளிய குறிப்புக்களைப் பற்றி இப்போது பார்ப்போம். எலுமிச்சை சாறு எலுமிச்சை பழத்தின் தன்மையே வெளிர வைப்பது தான். இது சருமத்தின் கருமையை நீக்கும் குணம் கொண்டதாக உள்ளது. ரோஸ் தண்ணீருடன், இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து ஒரு பஞ்சு உருன்டை கொண்டு கழுத்தில் தடவுங்கள். முக்கியமாக கருமை படிந்த இடத்தில் இவ்வாறு தடவ வேண்டும். இரவு முழுதும் நிலைத்திருக்கும் படி விட்டு விட்டு காலையில் கழுவி துடைத்து விடுங்கள். ஒரு மாதம் இதை செய்தால் போதும். நல்ல வித்தியாசத்தைக் காணமுடியும். ஓட்ஸ் கருமையாக படைகளாக உள்ள இடத்தில் இறந்த திசுக்கள் அதிகம் சேர்ந்திருக்கும். இதை உடனடியாக நீக்குவது கடினம் தான். ஓட்ஸ்சை கொண்டு கழுவினால் கழுத்தில் படிந்துள்ள இறந்த திசுக்களை படிப்படியாக நீக்க முடியும். இதனால் கழுத்தின் கருமை நிறம் குறையும். மூன்று அல்லது நான்கு ஸ்பூன் ஓட்ஸை எடுத்துக் கொண்டு அதை நன்கு அரைத்து இதில் தக்காளி விழுதை சேர்த்து கலக்கிக் கொள்ளவும். ஓட்ஸை நன்கு அரைக்கக் கூடாது. அதை கொஞ்சம் சொரசெரப்பாக வைத்தால் தான் ஸ்கரப் போல் பயன்படுத்த முடியும். இந்த கலவையை கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் விட்டு விட வேண்டும். பின்னர் கைகளை நனைத்து கழுத்து பகுதியை நன்கு தேய்க்க வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இதை ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வாழைப்பழம் வாழைப்பழம் மற்றும் ஆலிவ் எண்ணெயை கொண்டு ஒரு பேக்-ஐ செய்து கருப்பாக இருக்கும் இடத்தில் தடவுங்கள். ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதில் இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து ஒரு கலவையாக்கி கழுத்தின் கருப்புத் தன்மை உடைய இடங்களில் தடவ வேண்டும். இதை 15 நிமிடங்கள் உலர விட்டு பின்னர் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரு முறை செய்து வரவும். நல்ல பலன்களை பார்க்க முடியும். பேக்கிங் சோடா அதிக அளவு கருமை நிறத்தையும், அது படர்ந்த தோல் பகுதியையும் தேய்த்து சுத்தம் செய்வதில் பேக்கிங் சோடா மிகவும் சிறந்ததாகும். இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து ஒரு பசை போலாக்கி, அதை கழுத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் விடவும். இவை இறந்த தோல் பகுதிகளை உரிக்க உதவுகின்றன. இதனால் கழுத்தின் கருமை நிற படைகளை நீக்க முடியும். சன் ஸ்கிரீன் போடுங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது உங்கள் சருமம் கருத்து போகாமல் இருக்க சன் ஸ்கிரீன் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இதை முகத்திற்கு மட்டுமல்லாமல் வெயிலில் வெளிப்படும் பாகங்கள் அனைத்திற்கும் போடலாம். இதனால் எந்த பாதிப்பும் வராது.

திராட்சை பழ ஜுஸ் மூலம் கிடைக்கும் அழகு நன்மைகள்!!!



திராட்சை பழம் நல்லவகை மது தயாரிப்பதற்கு மட்டுமல்லாமல் இதற்கு நல்ல மருத்துவ குணங்களும் உண்டு. இப்பழத்தில் உள்ள ரெஸ்வெராட்ரால் அல்லைமர் நோயை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது. இவை உடம்பில் உள்ள கொழுப்பையும் சிறுநீரக உறுப்பில் உள்ள யூரிக் அமிலத்தையும் நீக்க உதவுகின்றது. இதனால் இதயம் மற்றும் சிறுநீரகம் ஆகியவை சீருடன் செயல் பட உதவுகின்றது. சரும அழகை அதிகரிக்க ஆசையா? அப்ப உருளைக்கிழங்கை
யூஸ் பண்ணுங்க… வைட்டமின்கள், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து ஆகியவை அதிக அளவு உள்ள இந்த பழத்தில் சருமத்தை நல்ல நலத்துடன் வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு. இது நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இதை நாம் அவ்வப்போது அருந்தினால் சலி, இருமல், போன்ற வைரஸ் தாக்குதலை தடுக்க முடியும். முகத்தை சுத்தப்படுத்தும் வெளிரென்ற முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும் சுத்தமாகவும் மாற்றுகின்றது. சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பது ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ள இப்பழச் சாற்றின் மூலம் சூரிய வெப்பத்திலிருந்து தாக்கக் சூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் கதிர்களிடமிருந்தும் வெப்பத்தினால் வரும் கட்டியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். திராட்சை சாறு இயற்கையாவே சருமப் பிரச்சனைகளை வர விடாமல் தடுக்கும் சக்தி கொண்டது. பொதுவாக வெயில் காலத்தில் தினமும் ஒரு டம்ளர் திராட்சை சாறு அருந்துவது சிறந்தது. ஒளிரும் சருமம் இந்த சாறை அருந்தும் போது இரத்தத்தை சுத்தம் செய்து அதில் உள்ள அழுக்குகளை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. இந்த பழச் சாற்றில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. தினசரி ஒரு கப் சுத்தமான திராட்சை சாறை அருந்தும் போது சருமம் ஒளிரும் வண்ணம் அமைகின்றது. நல்ல இரத்தம் உற்பத்தியினாலும் அதன் சீரான ஓட்டத்தினாலும் ஒளிரும் சருமம் கிடைக்கின்றது. இது மிக ஆரோக்கியமானதாகும். வயதான தோற்றத்தை எடுக்கின்றது திராட்சை பழச்சாறு இறந்த தோலை நீக்குவதில் உதவக் கூடியதாகும். இதை நீங்கள் சருமத்தில் போட்டால் போதும். உடனடியாக தோல் உரிய ஆரம்பித்து விடும். இவை இறந்த திசுக்களை நீக்கி சுறுக்கங்கள் அற்று இயற்கையாக காணப்படும். நல்ல இரத்த ஓட்டத்தின் காரணமாக சருமத்தின் நீட்சித்தன்மையையும் திராட்சை அதிகரிக்கின்றது. நீர் பதத்தை சருமத்திற்கு கொடுக்கும் போது திராட்சை சாறு ஈரப்பதத்தை சருமத்திற்கு இயற்கையாக அளிக்கின்றது. ஈரப்பதமூட்டுதல் திராட்சையின் நற்குணங்களை காட்டிலும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இவை நமது சருமம் முழுவதும் பாதுகாக்க உதவுகின்றது. ஒரு ஸ்பூன் திராட்சை சாற்றை எடுத்து முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் விட்டு விட வேண்டும். இதனால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும். கண்களுக்கு நல்லது கண்களில் கருவளையங்களை கொன்டவர்கள் பலர் உண்டு. அது மிகவும் அசிங்கமாக இருக்கும். திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவினால் போதும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும். வறண்ட சருமத்தை சீர்செய்கின்றது ஒரு ஸ்பூன் திராட்சை சாற்றை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் முட்டை வெள்ளையை கலந்து முகத்தில் போட்டு 10 நிமிடங்கள் கழித்தப் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் வரண்டு விடாமல் இருக்கும்.

Thursday, February 6, 2014

கொசுக்கடியால் யானைக்கால் நோய் வரலாம்… எச்சரிக்கை!

எந்தவிதமான வேறுபாடுமின்றி, ஏழை, பணக்காரர், சிறியவர்கள், பெரியவர்கள், கிராமம், நகரம், ஆண், பெண் என்ற பேதமின்றி, எல்லா தரப்பு மக்களையும் பாதிக்கும் ஒன்றாகும். குறைந்தது ஆறு மாதம் முதல், ஓர் ஆண்டிற்குப் பின்தான், இதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்
பெரும்பாலானோர், கொசுக்கடியை பற்றி, கவலைப்படாமல் வாழ்ந்து வருகின்றனர். வீட்டைச் சுற்றி, பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பின், அது கொசு பெருக வழிவகுக்கும்.
‘எங்களை, கொசு ஒன்றும் செய்யாது. ரொம்ப நாளாக இப்படித் தான் நாங்கள், கண்டு கொள்ளாமல் வாழ்கிறோம்’ என்பவர்கள், ஒரு முக்கிய உண்மையை
உணராமல் உள்ளனர். ஆம்… கொசு, மலேரியாவை மட்டும் பரப்புவதில்லை; யானைக்கால் நோயையும் உண்டாக்கும்.
அரசுக்கு சவால்: குணப்படுத்த முடியாத நோய்கள் என்ற வரிசையில், யானைக்கால் வியாதியும், மிகவும் முக்கியமான ஒன்று. எனவே தான், இந்திய அரசு, இந்த வியாதியை முற்றிலும் ஒழிக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால், இன்று வரை ஒழிக்க முடிய வில்லை. இந்நோய், இந்திய மருத்துவத் துறைக்கு, ஒரு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
பாகுபாடு இல்லை: இந்நோய், எந்தவிதமான வேறுபாடும் இன்றி, ஏழை, பணக்காரர், உயர்ந்தோர், தாழ்ந்தோர், சிறியவர்கள், பெரியவர்கள், கிராமம், நகரம், ஆண், பெண் என்ற பேதமின்றி, எல்லா தரப்பு மக்களையும் பாதிக்கும் ஒன்றாகும். இந்த நோய், மற்ற நோய்களைப்போல் அன்றி, தொற்று ஏற்பட்ட பின், குறைந்தது ஆறு மாதம் முதல், ஓர் ஆண்டிற்குப் பின், இதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.
அறிகுறிகள்: இந்நோய் தொற்று ஏற்பட்ட ஒருவரின் கால்கள், கைகள், மார்பகங்கள், விதைப்பை மற்றும் ஆண்குறி போன்ற உறுப்புகளைப் படிப்படியாக பாதிப்படையச் செய்யும். மேற்கூறிய பகுதிகளில், இந்நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்குமேயானால்:
* தொற்று ஏற்பட்ட பின், நாளடைவில், நிண நீர் திசுக்களின் நாளங்கள் அடைபட்டு, அப்பகுதியில் ரத்த நாளங்கள் பாதிப்படைந்து, வீக்கம் ஏற்பட்டுவிடும்.
* பின் அந்த குறிப்பிட்ட பகுதி, கெட்டியாகவும், வீக்கத்துடனும் காணப்படும்.
* அந்த பகுதி, நாள்பட்ட பாதிப்பிற்குப் பின், உணர்வின்றி மரத்தும் காணப்படும்.
* வீங்கிய பகுதிகளில், தோலின் நிறம் மாறியும், தோல் உரிந்து இரணம் ஏற்பட்டும் காணப்படும்.
* இறுதியில் வீங்கிய பகுதிகளில், சதையில் இரணம் ஏற்பட்டு, ரத்தம் மற்றும் சீழ் வடியலாம்.
* மேற்கூறிய அறிகுறிகளுடன், காய்ச்சல் அடிக்கடி வரலாம்.
வருவதற்கான காரணங்கள்: இந்நோய் ஒருவகை ஒட்டுண்ணி தொற்று நோயாகும்.
‘உசெரேரியா பாங்க்ரோப்டி’ எனப்படும் ஒட்டுண்ணியால், ‘பைலேரி’ எனப்படும் கொசுவின் மூலமாக பரவுகிறது.
தொற்று ஏற்பட்ட ஒருவரின் ரத்தத்தை, கொசு உறிஞ்சி மற்றொருவரை கடிக்கும் போது கடித்த நபருக்கும், தொற்று ஏற்பட்டுவிடும்.
இவ்வாறு, மனிதன் – கொசு – மனிதன் என, சுழல் முறையில் நோய் தொற்று ஏற்படுகிறது. மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறையும் போது, இந்நோய் தொற்று ஏற்பட்டு, அதற்கே உரித்தான தாக்கத்தை உண்டாக்கும்.
ஒட்டுண்ணி பெருகக் காரணம்:
* சரியாக வெளியேற்றப்படாத, தேங்கிக் கிடக்கும் கழிவுநீர் தேக்கங்கள்.
* சுகாதாரமற்ற, எப்போதும் ஈரப்பதம் அதிகமுள்ள சீதோஷ்ண நிலை போன்ற சூழ்நிலைகளில், இந்த ஒட்டுண்ணி பெருக வாய்ப்பு அதிகம்.
மேற்கூறிய அறிகுறிகள் தெரியுமே யானால், ரத்தப் பரிசோதனை மூலம், இந்நோயை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். நல்ல சுகாதாரத்தைக் கடைபிடிப்பதன் மூலம், இந்நோய்த் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
தடுப்பு வழிகள்:
நோய் நம் உடலில் இருக்கிறதா என்பதை, மேற்சொன்ன தன்மைகளில் இருந்தும், ரத்தப் பரிசோதனை மூலமும், தெரிந்து கொள்ளலாம்.
நல்ல சுகாதாரமான இடத்தில் வசிப்பதன் மூலமும், எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரித்து, ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை உருவாக்கி கொள்வதன் மூலமும், இந்த நோய் வராமல் தடுக்கலாம்.
தேவையான மூலிகைகள்:
வேப்பிலை, வில்வம், துளசி, அருகம்புல், அத்தியிலை, குப்பைமேனி, தும்பை, வாழைத்தண்டு, மிளகு, பூவரசன், நெல்லி, முடக்கத்தான், வல்லாரை, வாதநாராயணன், முருங்கையிலை, வெற்றிலை போன்றவற்றை பறித்து, தனித்தனியாக வெயிலில் உலர்த்தி காயவைத்து, பின்னர் பொடி செய்து, சம அளவில் ஒன்றாக கலந்து, ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின், இவற்றில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக, தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளையும் உட்கொள்ள வேண்டும்.
இந்த மூலிகைகள் ரத்தத்தை சுத்தப்படுத்தும், விஷத்தை முறிக்கும், நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும், வீக்கம், வலி, காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்கும். ரத்த ஓட்டத்தை அதிகமாக்கும். இதனை நோயாளிகள் நோய் குணமாகும் வரை உட்கொள்ளலாம். இந்நோய் வராமல் இருக்க விரும்புபவர்களும், உட்கொள்ளலாம்.
உணவு முறை: தினம் ஒருவேளை, பச்சையாக உட்கொள்ளும் பழங்கள், காய்கள், பழ ஜூஸ்கள், சாலட் போன்றவற்றை, தேவையான அளவு உட்கொள்ள வேண்டும். நீர் உள்ள பழங்கள், காய்கள் நல்லது. தேங்காய், திராட்சை, மாதுளை, தர்பூசணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாம்பழம், இளநீர், வெள்ளரிக்காய், கேரட், வெண்டை, வாழை, பேரீச்சை, கொய்யா, பப்பாளி, நுங்கு போன்றவற்றை சாப்பிடலாம். மற்ற இரண்டு நேரம் வழக்கமான சமைத்த சைவ உணவு உட்கொள்ளலாம். இதில், 60 சதவீதம் உணவு, 40 சதவீதம் அளவு காய்கள், கீரைகளாக உட்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சிகள்: கால்கள் நன்றாக இயங்கும் வகையில் உடற்பயிற்சிகள் செய்தல் நல்லது. நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், நின்ற இடத்தில் குதித்தல், கயிறாட்டம், மெல்லோட்டம், மூச்சுப் பயிற்சி, உட்கார்ந்து எழுதல், நீந்துதல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை, தினம், 30 நிமிடம் காலை, மாலை செய்தால், நல்ல பலன் கிட்டும். உடற்பயிற்சி செய்வதால், உடல் உறுதி அடையும். ரத்த ஓட்டம் அதிகமாகும். உடலில் உள்ள கழிவுகள், எளிதில் வெளியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மன இறுக்கம் குறையும். தொற்று நோய்களால், சாதாரணமாக உடல் பாதிப்பு அடையாது.
மற்ற தகவல்கள்: சுற்றுப் புறத்தையும், வீட்டையும், எப்போதும் துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல காற்றோட்டமான இடங்களில் வசிக்க வேண்டும். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உணவில், உப்பின் அளவை குறைத்து உட்கொள்ள வேண்டும். கால்களுக்கு ஆயில் மசாஜ், வெந்நீர் ஒத்தடம், மண் பற்று போன்றவை செய்யலாம். இதனால், நல்ல பலன் கிட்டுவது உறுதி. எத்தனையோ வியாதிகள் இருந்தாலும், பலரிடம் இருந்து நம்மைப் பிரித்து பார்க்க வைக்கும் அதிபயங்கர யானைக்கால் வியாதி, வந்த பின் வருந்துவதை விட, இன்றே, கொசுக்களை வெகுதுாரம் துரத்துவோம்.

சனிக்கிழமை ஏழரை மணி செக்ஸ்க்கு ஏற்றதாம்!

லண்டன்: தம்பதிகள் தாம்பத்ய உறவுகொள்ள ஏற்ற நாள் சனிக்கிழமைதான் என்று கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. உறவு கொள்வதற்கு கூட நேரம் காலம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? என்று கேட்பவர்கள் மத்தியில் சந்தோசமான தாம்பத்ய உறவுக்கு ஏற்ற நாள் எது என்பது பற்றி தம்பதியரிடையே
ஆய்வு நடைபெற்றது. செக்ஸ் பொம்பை நிறுவனம் ஒன்று தம்பதிகள் செக்ஸ் வைத்து கொள்ள ஏற்ற நாள் எது என ஆய்வு நடத்தியது. இதில் பலசுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன. சனிக்கிழமை சாதகம் இந்த ஆய்வு 3 ஆயிரம் தம்பதிகளிடம் நடத்தத்தபட்டது. இவர்களில் பெரும்பாலோனோர் செக்ஸ் வைத்து கொள்ள சனிக்கிழமையே சாதகமானது என கூறியுள்ளனர். 44 சதவீதம் பேர் இந்த கருத்தை தெரிவித்து உள்ளனர். ஞாயிறு சூப்பர் ஞாயிற்றுக்கிழமையை 24 சதவீதத்தினரும் வெள்ளிக்கிழமையை 22 சதவீதத்தினரும் தேர்வு செய்து உள்ளனர். சனி இரவு 7.30 சனிக்கிழமை இரவு 7.30 மணியே செக்ஸ் வைத்து கொள்ள சாதமகான நாள்-நேரம் என அதிகமான தம்பதிகள் எண்ணுகின்றனர் என ஆய்வில் தெரிவித்துள்ளது. டெய்லி எக்ஸ்பிரஸ் இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. செக்ஸ் ஹார்மோன் அதேசமயம் வியாழக்கிழமைதான் செக்ஸ்க்கு ஏற்ற நாளாம். அதுவும் அன்றைய தினம் காலை நேரத்தில் என்றால் சூப்பர் என்கிறது லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் ஆய்வு ஒன்று. அன்றைய தினம் நமது உடலில் கார்டிசால் இயற்கையிலேயே அதிகமாக சுரக்கும். செக்ஸ் ஹார்மோன்களும் தங்களின் வேலையை சரியாக செய்யுமாம்.

பணப் பற்றாக்குறை காலங்களில் அழகைப் பராமரிக்க சில பட்ஜெட்டிற்குள்ளான அழகு குறிப்புகள்!!!

நிதி நிலைமை என்பது ஒரு கொந்தளிப்பான விஷயம். சில நேரங்களில் நாம் அதை நிகர் செய்ய, பல செலவு குறைப்புகளை செய்து, வாழ்க்கைத் தரத்தை மாற்றிக் கொள்வோம். ஒரு வேளை உங்கள் பட்ஜெட் இறுக்க நிலையில் இருந்தால், நீங்கள் பணத்தை செலவு செய்வதில், சில முக்கிய கண்டிப்பான முடிவுகளை உடனே எடுத்தாக வேண்டும். இது மாதிரியான பணப் பற்றாக்குறை காலங்களில், பெண்கள் அவர்களின் அழகை பராமரிப்பதற்கென செலவிடுவது முடியாத காரியம். வீட்டிலேயே தயாரிக்கப்படும் பட்ஜெட்டுகுள்ளான அழகு பராமரிப்பு டிப்ஸ்கள், இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைக்கு மிகவும் நல்லது. இதுப்போன்று வேறு படிக்க: அழகைக் கெடுக்குமாறு
பற்களில் படியும் டீ கறைகளைப் போக்க சில டிப்ஸ்… நீங்கள் பிராண்டட் வகையை சார்ந்த ஒப்பனை பொருட்கள் மற்றும் சரும பராமரிப்பு தயாரிப்புகளை, உபயோகிக்கும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தால், அது உங்களுக்கு அதிக செலவை இழுத்து விடும். அவை உங்கள் பராமரிப்பு தேவைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் பணப்பற்றாக்குறை காலங்களில் இது மிகவும் கடினமான காரியம். இது போன்ற சூழ்நிலையில், மலிவான அழகு குறிப்புகளை பின்பற்றுவதே சிறந்தது. இவை பின்பற்றுவதற்கு எளிதாக இருப்பதுடன், நம்பத்தகுந்ததாகவும் இருக்கும். அழகுப் பொருட்களில் முதலீடு செய்வதற்கு முன், உங்கள் தேவைக்கு உகந்ததை முதலில் தேர்வு செய்ய வேண்டும். பாட்டி சொல்லும் அழகு குறிப்புகள் வேஸ்ட்ன்னு நினைக்குறவங்களா? முதல்ல இத படிச்சு பாருங்க… இங்கு விலை குறைவான மற்றும் அவசியமான சில அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பேக்கிங் சோடாவை உபயோகித்தல் அனைவரின் சமயலறையிலும் உள்ள பண்டங்களில் பொதுவாக இடம் பெறுவது, இந்த பேக்கிங் சோடா. இது முகத்தினை தூய்மைப்படுத்தி பளபளப்பாக்குவதோடு, அழுக்கை அகற்றும் ஷாம்புவாகவும் பயன்படுகிறது. இது பாதங்களில் உள்ள மாசினையும், துர்நாற்றத்தையும் நீக்க வல்லது. ஸ்ட்ராபெர்ரியைக் கொண்டு பருக்களை குறைக்கலாம் ஸ்ட்ராபெர்ரி பேஸ்ட்டில், சாலிசிலிக் அமிலம் அதிக அளவில் அடங்கி உள்ளது. பருக்களை விரட்டுவதற்கு இது மிகவும் எளிதான அழகுக் குறிப்பு. மேலும் இது மலிவானது. நீங்கள் இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து விட்டால், நல்ல தீர்வைப் பெற முடியும். உருளைக்கிழங்கு சிறந்த கண்களுக்கான கிரீம் கண்களின் வீக்கத்தையும், கண்களுக்கு கீழ் உள்ள கரு வளையத்தையும் உருளைக்கிழங்கை உபயோகிப்பதன் மூலம் குறைக்கலாம். இது பட்ஜெட்டுக்குள்ளான எளிமையான அழகுக் குறிப்பாகும். இதற்கு உருளைக்கிழங்கை சீவலாகவும், மாவு போல அரைத்து பேஸ்ட்டாகவும் பயன்படுத்தலாம். டீ ஒரு தூய்மைப்படுத்தி க்ரீன் டீ சருமத்தை சுத்தப்படுத்துவதற்கும், பொழிவுடன் பராமரிப்பதற்கும் பயன்படுகிறது. இது மிகவும் மலிவானது. மேலும் இதை வீட்டில் சில நொடிகளில் செய்துவிட முடியும். எலுமிச்சையின் திறன் எலுமிச்சை சாற்றில் சிறிது நீர் சேர்த்து, அதில் விரல் நுனிகளை சில நிமிடங்கள் ஊற வைப்பதன் மூலம், நகங்களின் இடுக்குகளில் உள்ள மஞ்சள் நிற அழுக்குகள் எளிதில் நீங்கி விடும். இது தோலில் உள்ள உலர்வை நீக்கி, உங்கள் கைகளுக்கு நீர்ச்சத்தை அளிக்கிறது. சர்க்கரை ஒரு ஸ்க்ரப் சர்க்கரை என்பது பட்ஜெட்டுக்குள்ளான அழகுப் பொருட்களில் மிகவும் இயற்கையானது ஆகும். சர்க்கரையில் உள்ள படிமங்கள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தோல் அடுக்குகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. வாழைப்பழ பேஸ் பேக் வாழைப்பழம், சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான நன்மைகளை ஏற்படுத்துவதோடு, எளிதில் கிடைக்கக்கூடிய மிகவும் மலிவான அழகு சாதனப் பொருள். வாழைப்பழத்தை நன்கு மசித்து முகத்திற்கு தடவுவதன் மூலம், சருமம் நல்ல ஆரோக்கியத்தையும், பொலிவையும் பெறும். இது ஒரு இயற்கையான பேஸ் பேக். தேன் ஒரு கண்டிஷனர் மலிவான அழகுக் குறிப்புகளில், உங்கள் கைகளில் உள்ள எளிதான ஒப்பனை பொருள் தேன். அதனை நீங்கள் உங்கள் முடிக்கான கண்டிஷனராக பயன்படுத்தலாம். அது உங்கள் கூந்தலுக்கான நீர்ச்சத்தை அதிக அளவில் வழங்குகிறது. மாயோ பவுடர் மாயோ பவுடர் முடிக்கு ஊட்டத்தை வழங்குகிறது. மேலும் உங்கள் கூந்தலை மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் திகழச் செய்கிறது. இது குளிர்சாதன பெட்டிக்குள் இருக்கும், பட்ஜெட்டுக்குள்ளான எளிய அழகுப் பொருள். உங்களுடைய ஒப்பனைப் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக மேற்கூறிய பட்ஜெட்டுக்குள்ளான அழகுக் குறிப்புகள் அமையும்.

Monday, February 3, 2014

ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்! ஹெல்த் ஸ்பெஷல்!!


தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், 'இது தப்பு’ என்று தெரிந்தும், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால்? நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய 'தவறுகள்’ என்னென்ன என்பது குறித்து, தமிழகத்தின் பல்வேறு டாக்டர்களிடம் கேட்டோம். சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராஜா, பல் மருத்துவர் ரவிவர்மா, புதுச்சேரியைச் சேர்ந்த பொது நல மருத்துவர் நாகராஜன், திருநெல்வேலியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கவிதா, சாத்தூரைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அறம் ஆகியோரின் பரிந்துரைப்படி முக்கியமான 10 தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
புகைபிடித்தல்  மது அருந்துதல்
சந்தோஷம், சோகம், டென்ஷன்... என, எந்த ஓர் உணர்ச்சிக்கும் உடனே புகைபிடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் பலருக்கும் உள்ளது. ஒரு சிகரெட்டைப் பற்றவைக்காமல், இவர்களால் கொண்டாட்டத்தைத் தொடங்க முடியாது. புகைபிடிப்பது புகைப்பவர் உடலுக்கு மட்டுமல்ல; அந்தப் புகையை சுவாசிப்பவர்களின் உடல்நலத்துக்கும் கேடு. புகை பிடிக்கும்போது ரத்தத்தில் ஆக்சிஜன் குறைந்து கார்பன்டை ஆக்ஸைடு அளவு அதிகரிப்பதால், கடைக்கோடி திசுக்களுக்கும் போதிய ஆக்சிஜன் கிடைக்காது. இதுபோல ஆயிரக்கணக்கான பிரச்னைகள் ஒரு சிகரெட் பிடிப்பதால் ஏற்படுகின்றன. அதேபோல், தினசரிக் கட்டுப்பாடு இன்றி மது அருந்துவதால், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மது அருந்துவதைக் கைவிடுவது நல்லது.

பல் துலக்காமல் தூங்குதல்
காலை, மாலை இருவேளையும் பல் துலக்குவது அவசியம் என்று எவ்வளவுதான் கூறினாலும், ஒருசிலர்தான் இதைப் பின்பற்றுகின்றனர். பல் துலக்கும் நுட்பம் தெரிந்தவர்களால்கூட, 90 சதவிகிதம் அளவுக்குத்தான் கிருமிகளை அகற்ற முடியும். மீதம் உள்ள 10 சதவிகிதம் கிருமி மேலும் பெருக 12 மணி நேரம் போதும். இதைத் தவிர்க்க, இரவு தூங்குவதற்கு முன்பும் பல் துலக்க வேண்டும். ஆனால், தூங்கும் அவசரத்தில், இது என்ன பெரிய விஷயமா என்று நாம் ஒதுக்கித் தள்ளுவதால் ஈறு, சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை நம்மால் தவிர்க்க முடியும்.

வேகமாக உண்ணுதல்
சூடான உணவுகளை, சுவைக்க விரும்புபவர்களும் சரி... பசியில் துடிப்பவர்களும் சரி, சாப்பிடும்போது அவர்களை அறியாமல் வேகமாகச் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த நேரத்துக்கு அது திருப்தியளித்தாலும், அது ஏற்படுத்தும் விளைவுகள் அதிகம். நம் வாயில் உள்ள சுரப்பிகள் நாம் உட்கொள்ளும் உணவை நன்கு அரைத்துச் செரிமானம் செய்வதற்கு எளிதாக 'களி’ போன்று ஆக்கி இரைப்பைக்கு அனுப்புகிறது. ஆனால் ஒருவர் வேகமாக உண்ணும்போது வாயில் மெல்வது தடைபட்டு, நேரடியாக உணவு இரைப்பைக்குள் செல்கிறது. இதனால் உணவை, செரிமானம் செய்வதில் வயிற்றுக்குப் பிரச்னை ஏற்படுகிறது. உணவுக் குழாய்க்குப் பதில் மூச்சுக்குழாயில் உணவு சிக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இது மூச்சுத் திணறலுக்கு வழிவகுத்துவிடும். உணவை மெதுவாக மென்று விழுங்க வேண்டும்.

காலை உணவைத் தவிர்ப்பது
அனைவரும் செய்யும் மிகப் பெரிய தவறு, காலை உணவைத் தவிர்ப்பது. காலையில் வெறும் வயிற்றுடனோ அல்லது ஒரு கப் காபி, பால் குடித்துவிட்டு வேலைக்குச் செல்பவராக இருந்தால், உங்கள் எதிர்கால ஆரோக்கியம் கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை உணரவேண்டும். இந்தப் பழக்கம், உங்கள் செரிமான மண்டலத்தின் பணியைப் பாதிக்கும். காலையில் சாப்பிடாதபோது, உடல் பலவீனம் அடையலாம்.

உடற்பயிற்சியைத் தவிர்ப்பது
நாள் ஒன்றுக்கு குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி, வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு உடலை வலுவாக்கும் பயிற்சிகள் செய்வது அவசியம். பயிற்சிக்கு இடையில் இடைவெளி இருக்கலாம். ஆனால், பயிற்சி செய்வதற்கு நீண்ட இடைவெளி கூடாது. மிக அவசியமான காரணங்களைத் தவிர்த்து வேறு எந்த ஒரு காரணத்துக்காகவும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கக் கூடாது. அலுவலகத்தில் காலார நடக்கப் பழகுங்கள். பேருந்தில் பயணிப்பவர்கள், இறங்குவதற்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பியுங்கள்.

நேரம்கெட்ட நேரத்தில் தூங்குவது
மாணவப் பருவத்தில், தேர்வுக்கு முந்தைய நாள் மட்டும் விடிய விடியப் படிப்போம். மற்றபடி இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவது, காலையில் அவசர அவசரமாக எழுந்திருப்பது என்பது வழக்கமாகிவிட்டது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறையும்போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். மேலும், உடலின் செயல்பாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, சாதாரணக் கிருமித் தொற்றைக்கூட, உடலால் எதிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். போதுமான தூக்கமின்மையால் கண் எரிச்சல், பணியில் ஈடுபாடின்மை போன்றவையும் ஏற்படும்.

டிவியில் மூழ்குவது
மணிக்கணக்கில் கம்ப்யூட்டர், டிவி முன்பு மூழ்கியிருந்தால், இதயம், கண், செரிமான மண்டலம் எனப் பலவற்றையும் பாதிக்கும். மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமனுக்கான வாய்ப்பை அதிகரிக்கச்செய்யும். டி.வி. பார்க்கும்«பாது, நம்மை அறியாமல் அதிகக் கொழுப்புள்ள உணவை எடுத்துக்கொள்கிறோம். உடல் உழைப்பு குறைகிறது. இதனால் கலோரி அதிகரித்து, கொழுப்பு படிந்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைக்கு வழிவகுத்துவிடுகிறது. எனவே, குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி என்று சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால், ஆரோக்கியம் காக்கலாம்.

கலர்ஃபுல் ஜங்க் ஃபுட்
இன்றைய குழந்தைகளுக்கு, பாரம்பரிய இட்லி, தோசை பிடிப்பது இல்லை. கலர்ஃபுல்லான ஜங்க் ஃபுட்ஸ் அவர்களை ஈர்க்கின்றன. அவை பெரும்பாலும் மைதா மாவில் செய்யப்படுவதால், உடலுக்குக் கேடு. இந்த வகை உணவில், 'நார்ச் சத்து’ கொஞ்சமும் இல்லை. இதனால் மலச்சிக்கல் ஏற்படும்.  சில ஜங்க் ஃபுட்களில் இருக்கின்ற மெழுகு போன்ற பொருள் உடலினுள் சென்று குடலின் மேல் படிந்து, கேடு விளைவிக்கின்றன. இத்தகைய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், சின்ன வயதிலேயே பெப்டிக் அல்சர், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அவர்களை ஈர்ப்பது உணவிலுள்ள அந்த நிறங்கள்தான் என்பதால், வீட்டிலேயே குழந்தைகளுக்கு, கலர்ஃபுல் 'ஃப்ரூட் சாலட்’ செய்து தரலாம்.

ஆறு வேளையும் அரிசிக்கு அடிமை
உணவு விரும்பிகள் இன்று ஏராளம். உணவு, அதன் தரத்தையும் சரிபார்த்த பின்னர் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நாம் உண்ணும் அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் போக மீதம் உள்ளவை கொழுப்பாக மாற்றம் அடையும். இதனால் உடல் பருமன், ரத்தக் குழாயில் கொலஸ்ட்ரால் படிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். உணவுகளின் கலோரியை அறிந்துகொண்டு, அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து ஒரு நாளைக்கு ஆறு வேளைகளாகச் சாப்பிடலாம். பருப்பில் புரதச் சத்து, சாதத்தில் கார்போஹைட்ரேட், எண்ணெயில் கொழுப்புச் சத்து இருக்கிறது. காய்கறி, பழங்களில் நார்ச் சத்து, வைட்டமின், மினரல்கள் உள்ளன. எனவே, இவற்றைச் சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவைத் தெரிந்து உட்கொண்டால், ஆரோக்கியம் நம் கையில்.

டீ, காபி தவிர்க்கலாமே!
டீ, காபி போன்ற பானங்களுக்கு அடிப்படையிலேயே மூளையைத் தூண்டிவிடும் சக்தியுள்ளது. ஒரு நாளுக்கு நான்கு முறைக்கும் மேல் டீ, காபி அருந்துபவர்களுக்கு அந்தத் 'தூண்டுதல்’ அதிகமாகி மூளையைத் 'தொந்தரவு’ செய்யும் நிலைமைக்குப் போய்விடுகிறது. இதன் விளைவாக மூளை மந்தமடையலாம். மேலும் சர்க்கரை, பாலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கும். கலோரிகள் அதிகரிக்கும். காபி, தேநீருக்குப் பதில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த கிரீன் டீ அருந்துவது ஆரோக்கியமானது. கிரீன் டீயில் சர்க்கரை, தேன் எதையும் சேர்க்காமல் அப்படியே அருந்துவது முக்கியம்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய! அழகு குறிப்புகள்!!



* சுடுநீரில் வேப்பிலையை போட்டு, முகத்துக்கு ஆவி பிடித்தால், முகத்திலுள்ள பருக்கள் நீங்குவதோடு, சருமமும், நாளடைவில், "பேபி சாப்ட்' ஆகி விடும்.* முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய, சிறிதளவு முருங்கை இலைச் சாறும், எலுமிச்சை மற்றும் தேன் கலந்து பூசினால், நல்ல பலன் கிடைக்கும்.

உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்! ஹெல்த் ஸ்பெஷல்!!

“உப்பு கொஞ்சம் குறைச்சலா இருக்கு. இன்னும் கொஞ்சம் போடுங்க!” என்று அனைவருமே கூறுவார்கள். உப்பு சேர்த்ததும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்!

 காலங்காலமாய் மனிதர்களின் நாக்கில் கம்பீரமாய் அமர்ந்துவிட்ட உப்புதான்… இப்போது, அதே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், தற்போது மக்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. உலக மருத்துவ பத்திரிகைகள் பலவும் உப்புக்கு எதிரான எச்சரிக்கைக் கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளன.

‘உலகம் முழுவதும் மாரடைப்பால் நிகழும் மரண எண்ணிக்கைக்கும், சிறுநீரகப்பழுது, ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதற்கும் முக்கியக் காரணம், உப்புத்தான்’ என்று மருத்துவர்கள் அடித்துச்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ‘‘இந்தியர்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவேயில்லை’’ என்று வருத்தத்தோடு கூறும் பிரபல நெப்ரோலஜிஸ்ட் மருத்துவர் பி.ரவிச்சந்திரன், உப்பு பற்றிய விழிப்புணர்வு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். அவரைச் சந்தித்தோம்.

‘மனித ஆரோக்கியத்திற்கு எதிராக உப்பு எவ்வாறு செயல்படுகிறது’ என்பதை விரிவாகவே விளக்கினார்.

 ‘‘ஆதிகால மனிதர்கள் கடல் உப்பைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள். ஏன், இன்னமும் விலங்குகளுக்குத் தெரியாதது, இந்த உப்பு. உலகத்திலேயே முதன் முதலில் எகிப்தியர்கள்தான் கடல் நீரிலிருந்து சோடியம் உப்பைப் பிரித்தெடுத்தார்கள். அவர்கள் மொழியில் (Natron) நேட்ரான் என்று பெயர் வைத்தார்கள். இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு, அதாவது ‘மம்மி’க்களைப் பாடம் செய்ய உப்பைப் பயன்படுத்தினார்கள். ஆதிகாலத்தில் வேட்டையாடுதல், போர்செய்தல் என்று வாழ்ந்த மனிதர்களுக்கு சோடியம் உப்பின் அறிமுகம், ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. அப்புறம், அது தேவையாகவும் மாறிவிட்டது.

உடல் உழைப்பைப் பிரதானமாகக் கொண்ட அன்றைய வாழ்க்கை முறையால், உடலிலிருந்து நிறைய வியர்வை வெளியேறியது. இதனால் ரத்தத்தில் இருந்த சோடியம் உப்பின் சமநிலை அடிக்கடிக் குறைந்தது. போர்க்களத்தில் உடல் சோர்ந்து விழுவார்கள், வீரர்கள். அந்தச் சமயங்களில் அவர்கள் கையில் உப்புக்கட்டிகள்தான் கொடுக்கப்பட்டன. உப்பை நாக்கில் வைத்த உடனேயே, அவர்கள் பழையபடி உற்சாகம் பெற்று எழுவார்கள். இதனால் அந்தக் காலங்களில் உப்பு, தங்கத்தைவிட உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்படி, பழங்காலத்தில் பிரமாண்டமான வரவேற்போடு மனித வாழ்க்கையில் நுழைந்த சோடியம் உப்புதான்,

இப்போது அதே மனித இனத்திற்கு விஷமாகவும் மாறியிருக்கிறது!’’ என்று நிறுத்தியவர், ‘எப்படி ஏற்பட்டது இந்த மாற்றம்? என்பதை சற்று விரிவாகவே கூற ஆரம்பித்தார்… ‘‘மனித உடலுக்கு மிக அடிப்படையாக, நான்கு வித உப்புகள் தேவை. அவை பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், சோடியம் ஆகும். இதில் பொட்டாசியத்தையோ, மெக்னீசியத்தையோ, கால்சியத்தையோ உப்பு வடிவில் பிரித்தெடுத்து உணவில் சேர்த்துக்கொள்ளாத நாம், சோடியம் உப்பை மட்டும் கடல் நீரிலிருந்து பிரித்துப் பயன்படுத்துகிறோம்.

சுவைக்காகவும், உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் படுவதற்காகவும் அன்றாடச் சாப்பாட்டில் அதிகமாக சேர்க்கப் பழகினோம். விஞ்ஞான வளர்ச்சியால் நாளுக்குநாள் மனித வாழ்க்கையில் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. எப்போதும் உட்கார்ந்த நிலையிலும், ஏ.சி. அறையிலும் வேலை என்பது ஒரு பிரிவினரின் வாழ்க்கையாக மாறியுள்ளது.

ஒரு மனிதனின் ரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பு இருக்க வேண்டும். அதற்குமேல் ரத்தத்தில் சேரும் உப்பு… வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதின் மூலம் உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது சிறுநீரகம்.

உதாரணமாக, பத்து கிராம் உப்பை வெளியேற்ற ஐந்து லிட்டர் சிறுநீர் கழிக்க வேண்டும். (இது தான் ‘உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிப்பான்’ என்ற பழமொழியின் அர்த்தம்) உடலில் குறைபாடு இருக்கும் பட்சத்தில் சிறுநீரகம், சோடியம் உப்பை வெளியேற்றுவதற்குப் பதிலாக, உடல் பலத்தைத் தரும் மெக்னீசியத்தையும், எலும்பு உறுதியைத்தரும் கால்சியத்தையும் வெளியேற்றப் பழகிவிடும்.

உடலில் தேவைக்கு அதிகமாக சோடியம் உப்பு தங்க ஆரம்பித்தால்… உடல் பருமனாகும். கால்சியம் வெளியேறுவதால் மூட்டுவலி, முதுகுவலி வரும். மெக்னீசியம் வெளியேறுவதால் அசதி வரும். முக்கியமாக, சிற்றின்ப உறவு தோல்வியடையும். சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் முக்கிய நரம்புகளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவும் உருவாகலாம். மாரடைப்பு, சிறுநீரகப் பழுது போன்ற உயிர் ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும்.

அதேபோல், சர்க்கரை வியாதிக்கும் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளுக்கும் அதிக உப்புதான் காரணமாக இருக்கிறது!’’ என்கிறார், அவர். கடல் உப்புக்கு மாற்றாக இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் மலை உப்பைப் பயன்படுத்துகிறார்கள். இது மலைப்பிரதேசங்களில் பாறைவடிவில் கிடைக்கக் கூடியது. இதில் சோடியம் மிக மிகக் குறைவாகவும், சல்ஃபர், மெக்னீசியம், கால்சியம் தாதுக்கள் அதிகமாகவும் இருக்கும். இந்த உப்பை வட இந்தியாவில் பணக்காரர்கள்தான் பயன்படுத்துகிறார்கள். காரணம், அத்தனை விலை.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அனைத்து உணவுப் பொருள்கள் மற்றும் பால் இவற்றில் சேர்க்கப்படும் சோடியத்தின் அளவை, அதன் அட்டையில் அச்சிட வேண்டும் என்கிற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. சோடியம் இல்லாத பொட்டாசியம் உப்புத்தூவிய உருளைக்கிழங்கு Chipsம், அங்கே விற்பனையில் இருக்கிறது. அதேபோல் கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைகளில் இருந்து கிடைக்கும் மெக்னீசியம், புரோட்டீன்ஸ் அடங்கிய கோரல் உப்பு (coralsalt) ஜப்பான், அமெரிக்காவில் பிரபலம்.

ஆனால், நம் நாட்டிலோ சில பாக்கெட் பால்களில் கூட 0.3 கிராம் வரை சோடியம் உப்பு சேர்க்கப்படுகிறது. பல வீடுகளில் பாக்கெட் பாலில் போடப்படும் டீ, காபி கூட மெல்லிய கரிப்புச்சுவையோடு இருப்பதற்கு இதுதான் காரணம். கடைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்வீட்ஸ், மற்றும் சாக்லேட்டுகளிலும் சோடியம் சேர்க்கப்படுகிறது. ஆனால், அதன் அளவை வெளிநாடுகளில் உள்ளதுபோல இங்கே நுகர்வோருக்குத் தெரிவிப்பதில்லை.

பிரபலமான குளிர்பானங்கள் அனைத்திலும் சோடியம் சல்பேட் சேருகிறது. கருவாடு, ஊறுகாய், அப்பளம் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் வகைகளில் கொஞ்சம் அதிகமாக சோடியம் இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தும் மனிதனின் உடலுக்குள் ஒவ்வொரு நாளும் பத்திலிருந்து முப்பது கிராம் வரை சோடியம் உப்பு தானாகவே நுழைந்து விடுகிறது, என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம்.

 ஆனால், ‘பெரும் உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதனுக்கு அன்றாடத் தேவைக்காக வெறும் இரண்டு கிராம் உப்பே போதும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், அவன் சுவையாகச் சாப்பிடும் பொருள்களின் மூலம் இரண்டு கிராமைவிட அதிகமாகச் சேருகிறது. இப்படி உப்பின் அளவு கூடுவதினால், ஆண்மை பலம் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்புகள்கூட குறைந்துவிடுகின்றனவாம்.

 இதுதொடர்பாக, பதிலளிக்கும் டாக்டர் ரவிச்சந்திரன் ‘‘சோடியம் உயிர்த்தன்மையை அழிக்கக் கூடியது, மனித விந்தில் மெக்னீசியம், கால்சியம்தான் மிகுதியாக இருக்கிறது. உடலில் சோடியம் கூடும்போது… உயிர் அணுக்களை அது பாதிக்கும் என்பது உண்மையே. அனைத்துத் தாவர விதைகளிலும் மெக்னீசியம் அதிகமாக இருக்கிறது.

முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற தாவர விதைகளை அரைத்துத்தான் ஆண்மை லேகியம் செய்து விற்கிறார்கள். அதன் ரகசியம் மெக்னீசியம்தான். விதைகளில் அதிக சக்தி கொண்டது முருங்கையும், பூசணியும்! வெற்றிலை என்பது மெக்னீசியம். அதில் தடவப்படும் சுண்ணாம்பில் கால்சியம். அதனால்தான் தாம்பூலம் என்பது இல்லற வாழ்க்கையோடு தொடர்புபடுத்தப்பட்டது!’’ என்றார்.

அயோடின் கலந்த உப்பு பற்றிக் கருத்து தெரிவிக்கும் அவர், ‘‘அதிக உப்பு சேர்த்துக்கொண்டால், அதிக அயோடின் சத்துக் கிடைக்கும் என சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அயோடின் என்பது இரண்டு பக்கக் கத்தி போன்றது. அது குறைந்தாலும் பிரச்னை, கூடினாலும் பிரச்னை. சில விதமான கேன்சர், தைராய்டு பிரச்னைகளுக்குக் கூடுதல் அயோடினே காரணமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

அத்துடன், நமது உடலுக்குள் நுழையும் சோடியத்தின் அளவைக் கண்காணிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு நாக்கில் சுவை மொட்டுக்கள் நன்கு செயல்படும் என்பதால்…. சிறுவயது முதலேயே குறைந்த உப்புச் சுவையே அவர்களுக்குப் பழக்க வேண்டும்.

கூடியவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் சோடியத்தின் அளவைக் கவனித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். கசப்புச் சுவை உள்ள காய்கறிகளான பாகற்காய், கோவைக்காய், வாழைத்தண்டு, பச்சை நிறக் கீரைகள், மற்றும் மோர், இளநீர் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மெக்னீசியம், பொட்டாசியம் கால்சியம் போன்ற உப்புக்கள் நம் உடலில் இயற்கையாகவே சேர்ந்து விடும்.

அதோடு, அன்றாடம் சில உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நமது வியர்வைச் சுரப்பிகளுக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கவும் வேண்டும்!’’ என்கிறார்.

இது மட்டுமல்ல, பெரிய பெரிய கம்பெனிகளின் விளம்பரங்களைப் பார்த்து, அந்த உப்புகளை வாங்கிப் பயன்படுத்துவதைவிட, கடைகளில் கிடைக்கும் சாதாரண கல் உப்பை வாங்கிப் பயன்படுத்துவதும் நல்லது. காரணம், பாக்கெட் உப்புகளில் 99 சதவிகிதம் வரை சோடியம் இருக்கிறது.  


கல் உப்பில் 40 சதவிகிதம் வரைதான் சோடியம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆகமொத்தத்தில் ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. ‘உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்’ என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது.

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.! மருத்துவ டிப்ஸ்!!


ஆயில் புல்லிங்  எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து  வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு 
அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த 
வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர 
ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி 
குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.

தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக 
தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு  தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.

நிரூபிக்கப்பட்ட உண்மை

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் 
நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு 
சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள்,  மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற  எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் 
அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.

வலி நிவாரணி

தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது  கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் 
காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம்,  தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.

எப்படி செய்வது ஆயில் புல்லிங்

காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை 
செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி  எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள  வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே  ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல்  20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி 
வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து  விடுங்கள்.

விடியற்காலையே சிறந்தது

உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.

நாளொன்றுக்கு மூன்று முறை

எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த 

ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு  நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய 
வேண்டுமென்பது விதி.

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று 
அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் 
போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.

மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.