Saturday, June 29, 2013

சேத்துப் புண்ணுக்கு

சொறி, சிரங்கு, அரிப்புனு சில பேர் படாத பாடு படுவாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு சில வைத்தியங்களைச் சொல்றேன் கேட்டுக்கோங்க. 
இதைப் படிச்சு முடிச்சதும், 'அட, ஏற்கெனவே இதே நோய்ங்களுக்கு வேற வேற வைத்தியம் சொல்லியிருந்தாங்களே'னு நினைக்கத் தோணும். அது ஒரு வகை வைத்தியம்... இது ஒரு வகை வைத்தியம். அவ்வளவுதான்.

பூவரசு மரம் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அந்த மரத்துல புல்லுருவினு ஒரு கொடி வளரும். அந்தக் கொடியோட இலையை ஒரு கைப்பிடி எடுத்துக்கிடுங்க. அதோட சின்னதா ஒரு மஞ்சள் துண்டு சேர்த்து மையா அரைச்சிக்கோங்க. எந்தெந்த இடத்துல ஊறல், சொறி, சிரங்கு இருக்கோ அங்கெல்லாம் அதைப் பூசணும். மூணு மணி நேரம் கழிச்சு குளிச்சிரலாம்.
பூவரசம் பூ, இல்லைனா... பூவரசம் காய் எடுத்துக்கோங்க (ரெண்டையும் சேர்த்தும் அரைக்கலாம்). அதோட மஞ்சள் துண்டு சேர்த்து அரைச்சு, சிரங்கு உள்ள இடமெல்லாம் பூசிரணும். மூணு மணி நேரம் கழிச்சு, பாசிப்பயறு மாவு தேய்ச்சுக் குளிக்கணும். 
மேலே சொன்ன ரெண்டு வைத்தியத்தையும், ஒரு மண் டலத்துக்குக் கடைபிடிச்சா... நல்ல குணம் கிடைக்கும்.
கொன்றை மலர் கேள்விப்பட்டிருப்பீங்க. அதுல மைக்கொன்றைனு ஒரு வகை இருக்கு. அதோட இலையை கோலிக்குண்டு அளவு எடுத்து அரைச்சு பால்ல கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தா... எந்த மாதிரி தோல் நோயும் விட்டேனா பாருன்னு ஓடிப்போயிரும் போங்க.
மழைக் காலம் வரப்போவுது. அப்ப தண்ணியில அங்க இங்கனு அலையுறதுனால கால் இடுக்குல சேத்துப்புண் வந்து பாடா படுத்தும். இதுக்கு கைகண்ட மருந்து இருக்கு. மருதாணி இலைய பறிச்சு கொஞ்சம் தண்ணி விட்டு மையா அரைச்சு சேத்துப்புண் உள்ள எடத்துல காலையில, சாயங்காலம் ரெண்டு வேளையும் பூசணும். சில மணி நேரம் கழிச்சு கழுவிரணும்.
இதேமாதிரி பீர்க்கன்கொடியோட இலையை ஒரு கைப்பிடி எடுத்து கசக்கி, ஒரு ஸ்பூன் சாறு எடுத்து, புளியங்கொட்டை அளவு கல் சுண்ணாம்புச் சேர்த்து சேத்துப்புண் உள்ள எடத்துல பூசணும். 
மேல சொன்ன ரெண்டு வைத்தியத்தையும் ரெண்டு மூணு நாள் செஞ்சாலே குணம் கிடைக்கும்.

குங்குமப்பூ


குங்குமப்பூ கீறல்-10 எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, இதனுடன் 2 டீஸ்பூன் மில்க் பவுடர் கலந்து, சின்ன அம்மியில் அரைத்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த விழுதை முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். 'பளிச்'சென முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

குங்குமப்பூ ஸ்க்ரப்

ஜாதிக்காய், மாசிக்காய் - தலா 1 எடுத்து, இவற்றை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளுங்கள். இதனுடன் 5 குங்குமப்பூ கீறல், சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்து ரவை போல் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் நன்றாகத் தேய்த்தபடி கழுவுங்கள். கரடுமுரடான முகத்தை கனிந்த பழம்போல் மாற்றிவிடும்.

சந்தனத்தூள், செம்மரத்தூள் தலா அரை டீஸ்பூனுடன், 5 குங்குமப்பூ கீறலை தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் 2 முறை முகம், கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகத்தில் உள்ள கருந்திட்டுக்கள், கண்ணுக்கு கீழ் கருவளையம் மறைந்து முகம் ஒரே மாதிரியான நிறத்தில் மின்னும்.

2 டீஸ்பூன் பாலில், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பைப் போட்டு ஊறவையுங்கள். இதனுடன் 10 குங்குமப்பூ கீறலை சேர்த்து அரைத்து, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொய்ந்த முகத்தை தூக்கி நிறுத்தி, 'டல்'லான முகமும் டாலடிக்கும்.

10 குங்குமப்பூ கீறலுடன் 4 பாதாம்பருப்பை முந்தைய நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் விழுதாக அரைத்து முகத்தில் பூசி 'பேக்' போட்டு பத்து நிமிடம் கழித்து தேய்த்துக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்துவர முகம் பளபளப்புடன் இழந்த அழகை மீட்டுத் தரும்.

கால் கப் குங்குமப்பூவை முந்தைய நாளே வெந்நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் அதை அரைத்து முகத்தில் பத்து போல் போட்டு, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். இரும்புச் சத்து குறைவினால் ஏற்படும் கண்ணின் கீழ் கருமை, கரும்புள்ளிகள், திட்டுக்கள் எல்லாம் மறைந்து, முகம் அன்று மலர்ந்த தாமரையாகப் பூத்துக் குலுங்கும்.

நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளுடன், குங்குமப்பூ கீறல்-15 சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். வாரம் இருமுறை தடவிவர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். மேலும் வராமல் தடுக்கும்.

பூப்பெய்த வைக்கும் குங்குமப்பூ!
கர்ப்பிணி பெண்கள் எட்டாம் மாதத்தில் தினமும் 2 குங்குமப்பூ கீறலை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர, இரும்புச் சத்து உடம்பில் சேர்ந்து குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். 
பிரசவ வலி வந்தும் குழந்தை வெளியில் வராமல் இருக்கும்போது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.

வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். வாயும் மணக்கும்.
குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப்பூவை தண்ணீர் விட்டு அரைத்து, உருண்டையாக செய்து சாப்பிட, வயிற்றில் உள்ள தேவையில்லாத கசடுகள் வெளியேறும்.

உடல் சூட்டினால் சிலருக்கு ஆசனவாய் புண்ணாகியிருக்கும். குங்குமப்பூவை தேன் சேர்த்து அரைத்து தடவினால், குணமாகும்.

சிறிது குங்குமப்பூவில் தாய்ப்பால் விட்டு அரைத்து கண்களில் விட்டால், கண்வலி குணமாகும். 
அல்சரினால் குடல் புண்ணாகி வெந்து போயிருக்கும். காய்ச்சிய பாலில் 4 குங்குமப்பூ கீறலை சேர்த்து ஒரு மண்டலம் குடித்து வர, புண் ஆறிவிடும்.

25 வயதை எட்டியும் பருவம் எய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப்பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைந்துவிடுவர்.

மூல நோயை விரட்ட இளநீர் -வெந்தயம்

மூல நோயை விரட்ட இளநீர் -வெந்தய் மந்திரம்!
வாரம்பூ (பச்சையாகவோ, காய வைத்ததோ) ஒரு ஸ்பூன், மாங்கொழுந்து 8 எண்ணிக்கை எடுத்துக்கோங்க... ரெண்டையும் ஒரு டம்ளர் தண்ணியில போட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கணும். இதை, காலையில வெறும் வயித்துல 10 நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வரணும். 10 நாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் 10 நாள் குடிச்சா... மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாமப் போயிரும்.

இளநீர்ல ஓட்டை போட்டு, ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு மூடி, வீட்டு மொட்டை மாடியில ஒரு ராத்திரி வச்சிரணும். காலையில அந்த இளநீரை குடிச்சிட்டு, வெந்தயத்தையும் சாப்பிடணும். தொடர்ந்து 5 நாள் இதேமாதிரி செய்தா மந்திரத்துக்கு கட்டுப்பட்டது கணக்கா.. மூலம் ஓடிப்போயிரும். அப்படியும் சரியாகலைனா... 5 நாள் கழிச்சி திரும்பவும் சாப்பிட்டா கண்டிப்பா சரியாயிரும்.

வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்லனா.. பனைவெல்லம் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும். தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும் (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாயிரும்.

சோத்துக்கத்தாழை மடல் எடுத்து மேல்தோலை நீக்கி நல்லா கழுவணும். அதுல ரெண்டு அங்குல அளவு துண்டு போட்டு, அப்படியே சாப்பிடணும். தண்ணியில கழுவினாலும் லேசா கசப்பு இருக்கும். அதனால பனைவெல்லத் தையும் சேர்த்துச் சாப்பிடணும். மூலத்தை குணமாக்கற இந்தக் கத்தாழை, கேன்சரைகூட குணமாக்கும். முக்கியமா கர்ப்பப்பை புற்றுநோய்க்கு நல்ல மருந்து இது.

அடுத்ததா, ஒரு கைகண்ட மருந்து சொல்லப்போறேன். குப்பைமேனி செடியைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. சிலர் இதை ஒண்ணுக்கும் ஆகாத செடினு சொல்வாங்க. ஆனா, மூலத்துக்கு இது நல்ல மருந்து. குப்பைமேனி இலையை காய வச்சு நல்லா தூளாக்கி வச்சுக்கிடணும். அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து நெய் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டா, எல்லா வகை மூலமும் சரியாயிரும்.

அருகம்புல் 20 கிராம் அளவு எடுத்து, மை போல அரைச்சு, காய்ச்சின பசும்பால்ல கலந்து சாப்பிட்டு வந்தா... மூலம் மட்டுமில்லாம ரத்த சோகையும் குணமாகும்.

Tuesday, June 25, 2013

இதயம் காக்க 25 வழிகள்!

''நேத்துதான் நல்லாப் பேசிட்டு இருந்தார்... அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே...'' - நெருக்கமான நண்பர்கள் இப்படி வருத்தப்படுவதும், ''ஏற்கெனவே ரெண்டு அட்டாக் வந்திருக்கு. அதைக் கவனிக்காம விட்டிருக்கார். அதான், இப்படியாகிடிச்சு!'' என உறவுக்காரர்கள் விளக்கம் சொல்வதையும் பல இடங்களில் காதுபடக் கேட்டு இருக்கிறோம். திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்புதான். நமது நாட்டில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்படும் மரணங்களில் 25 சதவிகிதம் மாரடைப்பால்தான் நிகழ்கின்றன. இதய நோய் வராமல் தடுக்கவும், வந்துவிட்ட நோயில் இருந்து நம்மை நாமே மீட்டெடுக்கவும் பிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் கார்டியோ தொராசிக் நிபுணருமான டாக்டர் கே.எம்.செரியன் சொல்லும் வழிகள் இதோ...
 மாரடைப்புக்கான காரணம்
உடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது நம் இதயம். 'லப் டப்’ தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்குவதால்தான், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.
மாரடைப்பைத் தவிர்க்க முடியும்!
1உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம், மரபுரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்.... என கொரனரி (இதய ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும்) மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. உங்கள் மருத்துவரை அணுகி உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை - கொழுப்பு அளவினைத் தொடர்ந்து பரிசோதனை செய்து, தேவைக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சை பெற்றாலே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
2குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொண்டால், மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும். ரத்த அழுத்தம் சராசரிக்கும் அதிகமாக இருந்தால், இந்தப் பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வது நல்லது. சராசரி ரத்த அழுத்தம் என்பது (ஐடியல் பிளட் பிரஷர்) 130/80 எம்.எம்.எச்.ஜி-க்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
3கொரனரி இதய நோய் வருவதற்கு சர்க்கரை நோய் ஒரு மிக முக்கியக் காரணம். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை கட்டாயம் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
4உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், உடனடியாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
5குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும். மாரடைப்புக்கான காரணிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் கொழுப்புப் பரிசோதனையை டாக்டரின் ஆலோசனைப்படி அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.
உணவுப் பழக்கம்
6மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்க, இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்கும்.
7குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில் புரதச் சத்து நிறைந்த பீன்ஸ், மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கிறது. அசைவம் சாப்பிடுபவர்கள், 'ரெட் மீட்’ என்று சொல்லக் கூடிய ஆடு - மாடு போன்றவற்றின் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் அதிக அளவு கொழுப்பு உள்ளது.
8தோல் நீக்கிய கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவை ஆரோக்கியமானவை. ஆனாலும், அதிக அளவில் எண்ணெய்விட்டுப் பொரித்துச் சாப்பிடுவது தவறு.  முட்டையின் வெள்ளைப் பகுதியில் அதிகப் புரதச் சத்து உள்ளது. ஆனால், அதன் மஞ்சள் கரு அதிகக் கொழுப்பு மிக்கது. எனவே, முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்ப்பது மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கும்.
9பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் அதிக அளவில் உப்பு உள்ளது. அது உயர்ரத்த அழுத்தத்தைத் தூண்டி விடும்.
10அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடும். இதனால், அதிகப்படியாக உடல் எடையும் கூடும்.
11'ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட்’ மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. மேலும், இது உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். ஆளி விதை (Flax seed) எண்ணெய், வால்நெட் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் இந்த ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட் உள்ளது. சால்மன் போன்ற சில மீன் வகைகளிலும் இந்த ஒமேகா - 3-ஃபேட்டி ஆசிட் நிறைந்து உள்ளது.
12சேச்சுரேட்டட் கொழுப்பு (Saturated fat) மற்றும் டிரான்ஸ் கொழுப்பு (Trans fat) ஆகியவை (ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பதன் மூலம்) கொரனரி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அதனால், இவற்றையும் தவிர்க்க வேண்டும்.  
13இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் ஆகியவற்றில் சேச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. பொரிக்கப்பட்ட துரித உணவுகள், பேக்கரி பொருட்கள், அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் அதிக அளவில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
14அதிக அளவில் மது அருந்துவது உடல்பருமனுக்கு வழிவகுக்கிறது. மேலும், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. எனவே, மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி
15ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. உங்களுக்குரிய ஆரோக்கியமான எடையை சரிவரப் பராமரியுங்கள். இதய நோய்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்; மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடற்பயிற்சி உதவும்.
16தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, நடப்பதும் கூட நல்ல உடற்பயிற்சிதான். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்க வேண்டும் என்று இல்லை. யோகா மற்றும் தியானப் பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மாரடைப்பு அபாயமும் குறையும்.
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல்
17உங்கள் உடல் எடை ஆரோக்கியமானதுதானா என்பதை பாடி மாஸ் இன்டெக்ஸ் மூலம் கணக்கிடலாம். பி.எம்.ஐ. புள்ளிகள் 25 அல்லது அதற்கு மேல் இருந்தால், உஷாராகிவிட வேண்டும்.
18இடுப்பு அளவைக் கணக்கிடுவதால், வயிற்றுப் பகுதியில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆண்களுக்கு சராசரி இடுப்பு அளவு என்பது 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.  
19பெரியவர்களுக்கு உடல் எடை கூடுகிறது என்றால், அது பெரும்பாலும் தசை எடை கூடுதலாக இருக்காது, கொழுப்பு அதிகரிப்பாகத்தான் இருக்கும். அதிக அளவிலான உடல் எடை என்பது உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.
20குறைந்த அளவிலான உடல் எடைக் குறைப்புகூட மிகப் பெரிய பலனை அளிக்கும். உங்கள் எடையை வெறும் 10 சதவீதம் குறையுங்கள், அது உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், ரத்தத்தில் கொழுப்பு அளவையும் குறைத்து, சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
புகை பிடிக்காதீர்கள்
21புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துங்கள். மாரடைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பது புகையிலைப் பழக்கம். சிகரெட் புகையில் உள்ள நிகோடின் என்ற நச்சு ரத்தக் குழாயினை சுருக்கி, இதயத் துடிப்பு எண்ணிக்கை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் ஆக்சிஜனுக்கு மாற்றாகப் போய் உட்கார்ந்து கொள்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்காக (அதிகம் ரத்தம் செலுத்தும்படி) இதயம் கூடுதலாக வேலை செய்யவேண்டி இருக்கிறது. நீங்கள் புகைப்பதை நிறுத்தினால் அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இதய நோய்க்கான வாய்ப்புகளும் குறைந்துவிடும். புகைப்பழக்கம் இல்லாத, ஆனால் ஒருவர் புகைத்துவிட்ட காற்றை சுவாசிப்பவருக்கும் கூட பாதிப்பு ஏற்படும். நீங்கள் புகைப்பதால், புகைப்பழக்கமே இல்லாத உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரும்கூட பாதிப்புக்கு ஆளாகின்றனர்.  
மருந்து-மாத்திரைகள்
22உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிகக் கொழுப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், டாக்டர்கள் பரிந்துரைத்திருக்கும் மருந்து-மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களின் இதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு பைபாஸ் அறுவைச் சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்று டாக்டர் பரிந்துரைத்தால், உடனடியாக அதைச் செய்து கொள்ளுங்கள். பயம் காரணமாகத் தள்ளிப் போடாதீர்கள்.
23மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். மருத்துவமனைக்குச் செல்லும் முன் ஆஸ்பிரின் மாத்திரையைப் பயன்படுத்துங்கள். அது இதயத் தசைப் பாதிப்பைக் குறைக்கும்.
24தொடர் மருத்துவப் பரிசோதனை, ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழ்நிலை, மாரடைப்புக்கான காரணிகளைக் கட்டுப்படுத்துவது போன்றவை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
பரிசோதனைகள்
25எளிய ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் வலி இன்றி ஒருவரின் இதய மின் செயல்பாட்டைக் கண்டறிய முடியும். இது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பதைக் காட்டும். இதயம் எந்தளவு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு உரிய சிகிச்சை அளித்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.
உடலில் எங்கு கொழுப்பு அதிகமாக உள்ளது என்பதைக் கண்டறிவது இப்போது எளிமை. சாதாரண சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாலே, கொழுப்பு தோலுக்கு அடியில் உள்ளதா அல்லது வயிற்றுப் பகுதிகளில் உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும். இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் எவ்வளவு கொழுப்பு உள்ளது? எத்தனை ஆண்டுகளாக உள்ளது என்பதை 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும். எதிர்காலத்தில் ஒருவருக்குக் கொழுப்பு அடைப்பு ஏற்படுமா என்பதையும் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். ரத்தக் குழாயில் 0.5 மி.மீ. அளவுக்குக் கொழுப்பு படிந்திருந்தால் கூட, இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

Friday, June 21, 2013

பீட்ரூட்

,

.  பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். 

•  பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். 

• பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். 

• கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். 

• பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். 

• பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். 

•  புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். 

• தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும். 

• புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பீட்ரூட் மருத்துவக் குணங்கள !!!

பீட்ரூட்யில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும்.

பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.

மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.

மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.

கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். ‌பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும்.

மலச்சிக்கலை நீக்கும்.

புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.

இரத்த சோகை, உடல் எடை சரியாகும்.

முகப்பொலிவு கூடும்.

சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.

தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.
பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.

பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.

பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
 
 

பூசணிக்காய்

பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. இந்த பூசணிக்காயை சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். 

உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது. 

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும், இரத்தசுத்தியாகும். பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல்,நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். 

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும். 

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும்(தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.


வெங்காயம்

• நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். 
• சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
 • வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும். 
•  வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். 
• வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். 
• வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும். 
• வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். 
• பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
 • சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்
முருங்கைக்காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதை விட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியாகமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார்.
 
மிகச்சிறிய குளவியோ, தேனீயோ கொட்டி விட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்து விடுவது உண்டு. தேனீ போன்றவை கொட்டி விட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப்பொருளை சிதைத்து விடுகிறது.
 
விஷத்தையும் முறித்து விடுகிறது. ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைககள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.
 
வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப்பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது. பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவு கள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்து விடுகிறது.
 
பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பார்கள். இவ்வாறு அடக்கி வைப்பதால் அதில் நுண்ணுயிர்களின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் போதும்.
 
வெங்காயம் கழிவுப்பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளி விடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும். யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத்தொல்லை இருந்தால் நிறைய வெங்காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும். முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது.
 
வெங்காயத்தையும், கடுகு எண்ணையையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்து விடும். எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும்.
 
இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மனநிலையில் சமநிலை உண்டாகும். சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும்.
 
இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும் கூட அதை வெங்காயம் குறைத்து விடும். புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப் பொருள் வெங்காயம் புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்தி விடுகிறது. 

மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது. முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன. வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத்தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங்கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக் கொள்ளலாம்.
 
பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவை தான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.

நெல்லிக்காய் ஜூஸ்


நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது.  நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். 

* நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது. 

* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.   

* நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும். 

* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

* நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். 

* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் சிறந்ததாக இருக்கும். 

* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

முட்டைக் கோஸ்


உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்... 

* பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது. 

* பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. 

* தயோசயனேட், கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக செயல்படுகின்றன. மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கும். 

* முக்கியமான நோய் எதிர்ப்பொருளான 'வைட்டமின் சி', முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் 'வைட்டமின் சி' கிடைக்கிறது. தொடர்ச்சியாக 'வைட்டமின் சி' உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

* தீங்கு விளைவிக்கும் 'பிரீ-ரேடிக்கல்'களை சுத்தப்படுத்தும் தன்மை 'வைட்டமின் சி'-க்கு உண்டு. ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை உறிஞ்சி அகற்றும் அளவை கணக்கிட்டால், 100 கிராம் பச்சை முட்டைக்கோசானது, 508 மைக்ரான் ரேடிக்கல்களை விரட்டி அடிக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸில் 2 ஆயிரத்து 252 மைக்ரான் அளவு ரேடிக்கல்களை சுத்தப்படுத்தும் சக்தி கிடைக்கிறது. 

* வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை. 

* பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது. 

* முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு.

நலமாய் வாழ மூச்சுப்பயிற்சி --- உடற்பயிற்சி


 
ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்று விநாடி கழித்து இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்தக் கை மேலே உயருகிறது? அடிவயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதான். இதுதான் உண்மையாக மூச்சை இழுத்துக்கொள்ளும் முறை.

எந்த வயதுக்காரரும் தரையில் தலையணை எதுவுமின்றி படுத்துக் கொண்டு இப்படி வயிற்றிலும் நெஞ்சிலும் கைகளை வைத்துக்கொண்டு சுவாசித்தால், நுரையீரல்களின் கீழ்ப்பகுதிக்கு நன்கு ஆக்சிஜன் கிடைக்கும்.இதனால் எல்லா உறுப்புகளும் வலுப்பெறும்.

ஆனால், 100க்கு 99 பேர் நெஞ்சினால்தான் சுவாசிக்கிறார்கள். குப்பை அள்ளும் லாரி போகும் போதும், வியர்வை நாற்றம், புகைப் பிடிப்பவர் விடும் மூச்சு நாற்றம் முதலியவற்றைக் தடுக்க மூச்சையும் மூக்கையும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறோம் அல்லவா, அப்போது ஆக்ஸிஜன் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்குச் செல்வதே இல்லை. உலகில் இப்படிச் சுவாசிப்பவர்களே அதிகம். நெஞ்சினால் சுவாசிப்பவர்கள் உலகில் 99 சதவிகிதம் பேர்களாம். ஆனால் இவர்கள் நலமுடன் வாழ்கிறார்களே! இது எப்படி? ஆனால் இவர்கள் மூச்சுவிடுதல் தொடர்பான நோய்களைப் பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். சரியாக மூச்சுவிடத் தெரியாதவர்களுக்குத் தான் உடம்பில் அங்கங்கே வலிகளும் காய்ச்சல் வகைகளும் எட்டிப் பார்க்கும்.

பிராணாயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடங்கள் மாலையில் ஐந்து நிமிடங்கள் என தரையில் படுத்துக்கொண்டு ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும். எரிச்சல் வராது. பிறர் மேல் எரிந்து விழமாட்டீர்கள்.

அடுத்து ஆஸ்துமா, இதயநோய், ஒற்றைத்தலை வலி, காக்காய் வலிப்பு போன்ற நோய்கள் கட்டுப்படும். இந்த நான்கு நோய்களும் சரியாக மூச்சு விடத் தெரியாதவர்களுக்குத்தான் வருகின்றன என்கிறது கொலராடோவின் பெளல்டரில் உள்ள சர்வதேச மூச்சுப்பயிற்சி நிலையம்.

தரையில் படுத்துக்கொண்டு இப்படி ஆழ்ந்து சுவாசிக்கக் கற்றுக் கொண்டால் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்கும் நன்கு ஆக்ஸிஜன் கிடைப்பதால் மனமும் உற்சாகமாக இருக்கும். நல்ல இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் கிடைத்து விடுவதால் வாழ்நாளும் நீடிக்கிறது.

ஒரு நிமிடத்திற்கு எட்டு முதல் 14 முறையே சராசரி மனிதன் மூச்சுவிடுகிறான். ஆனால் நுரையீரல்களுக்கு நன்கு காற்று கிடைக்காதவர்கள் 20 தடவைக்கு மேல் சுவாசிக்கிறார்கள். இதேபோல் ஆண்கள் பெல்ட்டுகளை இறுக்கி அணிந்தாலும் பெண்கள் நாடாக்களை இறுக்கிக் கட்டினாலும் நன்கு மூச்சுவிட முடியாது. சேலை, வேட்டி, பேண்ட் என அனைத்தும் வயிற்றை அதிகம் அழுத்தாமல் இருக்குமாறு அணிய வேண்டும்.

மூச்சுவிடும் முறையை நன்கு கற்றுக்கொண்டால் மூளையையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இரத்தத்தில் காடித் தன்மையும், காரத்தன்மையும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். இதற்கு மூச்சுப் பயிற்சி உதவுகிறது.

முதல் பயிற்சி :
நேர்காணலுக்குச் செல்லும் போது இந்த முறையில் 5 நிமிடங்கள் சுவாசித்துவிட்டுப் புறப்பட்டால், நேர்காணலின் போது பதட்டம் ஏற்படாது. திடீர் இரத்தக்கொதிப்பு, ஸ்டிரோக் போன்றவற்றை இப்படி ஆழ்ந்து சுவாசிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இரண்டாவது பயிற்சி :
சம்மணமிட்டு உட்காருங்கள். மூக்கினால் மூச்சை இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு வாயைத் திறந்து அதை வெளியேற்றுங்கள். அடுத்து மூச்சை இழுக்காமல் தொடர்ச்சியாக ஊ…ஊ… என்று காற்றை ஊதுங்கள். இதற்குப் பிறகு முன்பு செய்தது போல மூக்கினால் இழுத்து வாயினால் வெளியேற்றி கடைசியல் ஊ….ஊ…. என்று ஊதுங்கள். மூன்று முறை இது போல் செய்யுங்கள்.

மூன்றாவது பயிற்சி :
நன்கு நிமிர்ந்து நின்று கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தூக்கியபடியே மூச்சை உள்ளுக்குள் இழுங்கள். தலைக்குமேல் கும்பிடுவது போல் கைகளை வைத்ததும் அப்படியே மீண்டும் பழையபடி பக்கவாட்டில் மெதுவாக இறக்கவும். இப்படி கைகளை இறக்கும் போது இழுத்த மூச்சை மெதுவாக வெளியேற்றுங்கள். இந்தப் பயிற்சியை காலை உணவிற்கு முன்பு பத்துமுறை செய்துவிட்டு புறப்பட்டால் அந்த நாள் முழுவதும் படுசுறுசுறுப்பாக இருக்கும். மற்ற இரு மூச்சுப் பயிற்சிகளையும் நீங்கள் செய்திருந்தால் உங்களிடம் ஒற்றைத் தலைவலி, எரிச்சல் முதலியன வாலாட்ட முடியாது. ‘இனிமையாகப் பழகும் அரிய மனிதர்’ என்று பெயர் பெற்றுவிடுவீர்கள்.

ஆழ்ந்து சுவாசிக்கும் இந்த மூச்சுப் பயிற்சியை அமெரிக்க டாக்டர்கள் பலரும் இரு வேளைகள் செய்கிறார்கள். ரெய்கி மருத்துவத்தில் இந்த ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி முக்கியமான குணப்படுத்தும் உத்தியாக இடம் பெற்றுள்ளது.
 
எனவே, எளிமையான இந்த சக்தி வாய்ந்த மூச்சப் பயிற்சியை இன்று முதல் ஆரம்பியுங்கள்.

துளசி

துளசி 


 துளசி
1) வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி
2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)
3) தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)
4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.
5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.
6) பயன்கள்:- தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.
வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது. 

பெண்களுக்கு

துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.

ரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

உடல் எடை குறைய

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.
குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

துளசி இலை – 9 எண்ணிக்கை
கடுக்காய் தோல் – 5 கிராம்
கீழாநெல்லி – 10 கிராம்
ஓமம் -5 கிராம்
மிளகு – 3
எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

தொண்டைக்கம்மல், வலி நீங்க

தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

சிறுநீரகக் கல் நீங்க

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க

கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

குணமாகும் வியாதிகள்.
1. உண்ட விஷத்தை முறிக்க.
2. விஷஜுரம்குணமாக.
3. ஜன்னிவாத ஜுரம் குணமாக.
4. வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
5. காது குத்துவலி குணமாக.
6. காது வலி குணமாக.
7. தலைசுற்றுகுணமாக.
8. பிரசவ வலி குறைய.
9. அம்மை அதிகரிக்காதிருக்க.
10. மூத்திரத் துவாரவலி குணமாக.
11. வண்டுகடி குணமாக.
12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.
14. தோல் சம்பந்தமான நோய் குணமாக.
15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.
16. அஜீரணம் குணமாக.
17. கெட்டரத்தம் சுத்தமாக.
18. குஷ்ட நோய் குணமாக.
19. குளிர் காச்சல் குணமாக.
20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.
21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க.
22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க.
23. காக்காய்வலிப்புக் குணமாக.
24 .ஜலதோசம் குணமாக.
25. ஜீரண சக்தி உண்டாக.
26. தாதுவைக் கட்ட.
27. சொப்பன ஸ்கலிதம் குண்மாக.
28. இடிதாங்கியாகப் பயன்பட
29. தேள் கொட்டு குணமாக.
30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக.
31. கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற.
32. வாதரோகம் குணமாக.
33. காச்சலின் போது தாகம் தணிய.
34. பித்தம் குணமாக.
35. குழந்தைகள் வாந்தியை நிறுத்த.
36. குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த.
37. சகல விதமான வாய்வுகளும் குணமாக.
38. மாலைக்கண் குணமாக.
39. எலிக்கடி விஷம் நீங்க.
40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால்.
41. இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த.
42. வாந்தியை நிறுத்த.
43. தனுர்வாதம் கணமாக.
44. வாதவீக்கம் குணமாக.
45. மலேரியாக் காய்ச்சல் குணமாக.
46. வாய்வுப் பிடிப்பு குணமாக.
47. இருமல் குணமாக.
48. இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக.
49. காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த.
50. இளைப்பு குணமாக.
51. பற்று, படர்தாமரை குணமாக.
52. சிரங்கு குணமாக.
53. கோழை, கபக்கட்டு நீங்க.
54. சகல காய்ச்சல் மாத்திரை.