Thursday, July 11, 2013
தொப்பை கரைய
Sunday, July 7, 2013
பொடுகை விரட்ட வேப்பம்பூ --- இயற்கை மருத்துவம்
பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
10 Amazing Benefits Of Okra/Lady’s Finger

1. High fiber content:
The dietary fiber content of an Okra/lady finger is known to be high and hence many health specialists recommend it for digestive benefits. The fibers aid the process of digestion in the body by facilitating proper bowel movement.
2. Diabetes:
Okra is known to aid in prevention of diabetes. It is rich in Fibre which helps in the prevention of this disease.
3. Good folates content:Folates present in Okra reduce the neural tube defects in a new born baby. So it is highly recommended for
women during pre conception period or pregnancy.
What can high-folate foods do for you?
4. Vitamin K benefits:Vitamin K is a co-factor in blood-clotting process and also plays a major role in strengthening the bones in our body.
10 Important Facts About Vitamin K That You Need to Know
5. Asthma:Asthma can also be treated by including Okra/ lady fingers in your meals. People diagnosed with asthma are strongly suggested to consume Okra.
6. Constipation:Facilitating proper absorption of water, Okra/ lady finger vegetable ensures free motion disposal by the body and hence prevents constipation.
7. Sun stroke:Okra helps prevent sun strokes.
8. Colon cancer:It is believed that all diseases begin in the colon; Adding Okra to your meals ensures prevention of colon cancer and related diseases to a great extent
9. Obesity:With regular usage of Okra, in either raw or cooked form, you can avoid obesity to a great extent. Obesity is not necessarily due to consumption of fatty and calorific foods but also due to lack of nutrients.
10. Cholesterol:This vegetable ensures lesser absorption of cholesterol preventing heart diseases and ailments occurring due to cholesterol in the blood. Cholesterol is a dominant content in the body that triggers obesity and heart diseases.
Read more at http://raw4beauty.blogspot.com/2013/07/10-amazing-benefits-of-okraladys-finger.html#zv4EXUkJi5boduZI.99 - See more at: http://raw4beauty.blogspot.in/2013/07/10-amazing-benefits-of-okraladys-finger.html#sthash.dSW6mIDz.dpuf
Monday, July 1, 2013
வெற்றிலை
பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் எல்லாவிதமான சுக, துக்கங்களிலும் பங்கெடுக்கும் ஒரே மூலிகை... வெற்றிலை! நம் ஊரில் விளையும் கும்பகோணம் வெற்றிலை உலகப் புகழ்பெற்றது. வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு அல்லது சீவல் சேர்த்துச் சுவைப்பதைத் தாம்பூலம் தரித்தல் என்கிறோம்.
கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை; கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை; மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை.
சித்த மருத்துவர்கள் சொர்ணமரியம்மாள், லோகமணியன் ஆகியோரிடம் வெற்றிலையின் மருத்துவக் குணங்கள்பற்றிப் பேசினோம்.
''வெற்றிலையில் உள்ள அத்யாவசிய எண்ணெய் (Essential oil) பசியைத் தூண்டுவதுடன், செரிமானத்தையும் துரிதப்படுத்தும். டைஃபாய்டு, காலரா போன்ற நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும் ஆற்றலும் வெற்றிலைக்கு உண்டு. வெற்றிலையில் உள்ள சப்ரல் (Saprol) என்ற வேதிப்பொருளுக்குப் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் இயல்பு உண்டு என்றாலும், பாக்கு மற்றும் சுண்ணாம்போடு சேரும்போது புற்றுநோயைத் தோற்றுவிக்கும் ஆற்றல் வலுவிழந்துவிடுகிறது. நவீன ஆய்வின்படி, வெற்றிலையில் உள்ள ஹைட்ராக்ஸி சவிகல் (Hydroxychavicol),குளோரோஜெனிக் ஆசிட் (Chlorogenic acid) போன்ற வேதிப் பொருட்கள் புற்றுநோய் எதிர்ப்புப் பொருட்களாகச் செயல்படுவது கண்டறியப்பட்டு உள்ளது'' என்று விளக்கினர்.
வெற்றிலையின் பலன்கள்
தாம்பூலம் தரிக்கும் முறை
அகத்திகீரை
துக்க வீடுகளில் உள்ளவர்களுக்கு அகத்திக் கீரையை ரசம்வைத்துக் கொடுக்கும் வழக்கம் இன்றைக்கும் உண்டு. காரணம், இறப்பின் வருத்தத்தில் சாப்பிடாமல்-கிடப்பவர்களின் உடல் பாதிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதால்!
உடலின் உள் காயங்களை ஆற்றுதல், குடற்புழு நீக்கம், மலச்சிக்கலைப் போக்குவது, விஷ முறிவு போன்ற ஏராளமான மருத்துவக் குணங்களை வேர், இலை, பட்டை, பூ என்று பல பாகங்களிலும் தன்னகத்தே வைத்திருக்கும் உன்னதமான மரம் அகத்தி!
அகத்தி மரம் தை முதல் மாசி மாதம் வரையிலும் பூக்கும் இயல்பு உடையது. தஞ்சாவூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் பி.சரஸ்வதி, அகத்தியின் பலவிதமான மருத்துவக் குணங்களை விவரிக்கிறார்.
''அகத்தி 20 முதல் 30 அடி வரை வளரக்கூடியது. பூவின் நிறத்தைப் பொருத்து செவ்வகத்தி மற்றும் வெள்ளை அகத்தி என்று அகத்தியை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.
இலை: அகத்தி இலையைக் கீரை என்பார்கள். இதன் சாற்றை எடுத்து, ஒன்று அல்லது இரண்டு துளி மூக்கில்விட்டால் காய்ச்சல் குணமாகும். அகத்தி இலையிலும் பூவிலும் அதிக அளவில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. நெய்யை நன்றாகக் காய்ச்சி அதில் அகத்தி இலைகளை இட்டு நன்கு வெந்த பிறகு வடிகட்டிப் பருகச் செய்தால், மாலைக்கண் நோய் குணமாகும். இலையை அரைத்துப் பசைபோல் செய்து காயங்களுக்குக் கட்டலாம். புண்கள் விரைவாக ஆறும். சீழ் பிடிக்காது. வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும் குணம் அகத்திக் கீரைக்கு உண்டு. செவ்வகத்தி இலை குளிர்ச்சியை உண்டாக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் திறன்கொண்டது. தேகம் குளிர்ச்சி அடையும். மலச்சிக்கல் இருக்காது. சிறுநீர் பிரிவது எளிதாக இருக்கும்.
பூ: அகத்திப் பூச்சாற்றைக் கண்ணில் பிழிய, கண் வலி குணமாகும்.
மரப்பட்டை: குடிநீரில் இட்டுக் குடித்துவந்தால், அம்மைக் காய்ச்சல் தீரும்.
வேர்ப் பட்டை: அகத்தி வேர்ப் பட்டையில் சாப்போனின், டானின், ட்ரைடெர்பின் போன்ற பல வேதிப் பொருட்கள் உள்ளன. வேர்ப் பட்டையை நீரில் இட்டுக் குடித்து வந்தால், மேகம், ஆண் குறியில் ஏற்படும் எரிச்சல் மற்றும் ஐம்பொறிகளில் ஏற்படும் அனைத்து வகையான எரிச்சல்களையும் குணமாக்கும்.
அகத்திக் கீரையை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும். இல்லாவிட்டால், வாயுவை உண்டாக்கிவிடும். மேலும் தினசரி அதிக அளவில் உண்டால், வயிற்றுக் கடுப்பையும் ஏற்படுத்திவிடும். இந்தக் கீரைக்கு மருந்துகளின் செயல்பாடுகளைத் தடுக்கும் இயல்பு உண்டு. எனவே, பிற மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் அகத்தியைத் தவிர்ப்பது நல்லது.
Subscribe to:
Posts (Atom)