நவநாகரிக உலகில், பெண்களில் பெரும்பாலானோர் வேலைக்கு செல்கின்றனர்; பொருளாதார ரீதியில், அவர்கள் நல்ல நிலைக்கும் வந்து விடு கின்றனர். ஆனால், பெண்களுக்கே உரித்தான, அரிய பொக் கிஷமாக, போற்றி அனுபவிக்க வேண்டிய, இனிமையான சூழல்களை இழந்து விடுகின்றனர். "பருவத்தே பயிர் செய்’ என்பது பயிர்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் இது பொருந்தும்.
இளவயது பெண்கள், பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்காக, தன்னுடைய திருமண வயதை தள்ளிப்போடுகின்றனர். அப்படியே, 24 – 26 வயதிற்குள் திருமணம் முடிந்தாலும், நல்ல நிலைக்கு வந்தபின், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என, நினைத்து, பெரும்பாலானவர்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
கருத்தடை சாதனங்களை உபயோகித்து, பல ஆண்டுகள் கழித்து, குழந்தை பெற விரும்பும் காலத்தில், அவற்றை நீக்கிக் கொண்டால், உடனடியாக கருத்தரிக்கலாம் என, திட்டம் தீட்டுகின்றனர். அது அவ்வளவு சுலபமல்ல. இவர்கள், இந்த எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

உடலில் மற்ற உறுப்புகளை விட, பெண்ணின் இனப் பெருக்க உறுப்புகள் விரைவாக முதிர்ச்சியடைந்து விடுகின்றன. பெண்ணின் நடுத்தர வயதிலேயே, மாதவிலக்கு முற்றுப் பெறுவதால், கருத்தரிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலேயே போய் விடுகிறது.
பெண்ணின் வயதைப் பொறுத்து, அவளது கரு முட்டைகளும் பாதிக்கப்படுகின்றன. உடல் ரீதியாக, கருப்பை முதிர்ந்து, கருத்தரிப்பதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
முப்பது வயதுக்கு மேற்பட்ட நிலையில், செயற்கை முறையில், கருத்தரிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் பெண்களின் கர்ப்பம் நிலைப்பதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
வயது ஆக ஆக, உடலின் ஆற்றல் குறைகிறது. மேலும், உடலில் ஹார்மோன் மாற்றங்கள் பல நிகழ்கின்றன. உயர் ரத்த அழுத்தம், கருப்பையில் கழலைகள், சினைப்பையின் செயல் திறன் குறைதல், நோய் எதிர்ப்பு திறன் குறைவு, உடல் பருமன், நீரிழிவு, ரத்த சோகை போன்ற பிரச்னைகளை, பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. இதில், பெரும் பங்கு வகிப்பது மாத விலக்கு குறைபாடு. ஹார்மோன் குறைவினால், ஒழுங்கற்ற உதிரப்போக்கு. அதாவது, விட்டு விட்டு வருதல், சினைப்பையால், கருமுட்டைகளை உருவாக்க இயலாத நிலை போன்றவை ஏற்படுகின்றன.

கருத்தடை மாத்திரைகளை சாப்பிடுபவராக இருந்தால், அவற்றை நிறுத்திய மூன்று மாதங்களுக்கு பிறகு, கருத்தரிக்கும் வாய்ப்பை உண்டாக்கிக் கொள்வது நல்லது. ஏனெனில், இந்த மூன்று மாத இடைவெளியில், உடலில் உள்ள ஹார்மோன்களின் நிலை, பழைய நிலைக்கு திரும்பி விடும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும், 30 வயதுக்கு மேல் கருத்தரிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு அதிகளவில் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், பயணம், மனநிலை போன்றவை, இளம்வயதினரை விட, வயது முதிர்ச்சி அடையும் நிலையில், அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால் கருச்சிதைவு தவிர்க்க இயலாததாகி விடுகின்றன.
முதிர் வயது பெண்கள் பிரசவிக்கும்போது, இடுப்புக்கூட்டு பகுதியிலுள்ள, எலும்புகளின் விரிந்து கொடுக்கும் தன்மை, வெகுவாக குறைந்து விடுவதால், சுகப் பிரசவம் நடப்பது அரிதாகிறது. இதனால், சிசேரியன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இவை அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்பதாலேயே, மருத்துவர்கள், உரிய வயதில், குழந்தைப் பேறு அடைய வேண்டும் என்கின்றனர். ஆகவே, தாய்மையை அனுபவிக்க 20 முதல் 30 வயது வரை தான். இதனால்தான், நம் முன்னோர், "பருவத்தே பயிர் செய்’ என்றனர். இதை கருத்தில் கொண்டு, ஏற்ற வயதில் குழந்தைப் பேறை பெற்றால்தான், தானும் ஆரோக்கியமாக இருக்க முடியும். குழந்தையையும் ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.
மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி, பெற்றோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், கூட்டுக் குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலம் இது.

முன்பு, வீட்டில் மாமியார், பாட்டி என்று இருந்தால், குழந்தையின் அசைவை வைத்து, என்ன பாதிப்பு என்பதை கண்டறிவர். ஆனால், இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது, என்பதை புத்தகம், சி.டி. மூலமாக பார்த்து, படித்து தெரிந்து கொள்ளும் நிலையில், உள்ளது.
No comments:
Post a Comment