பொதுவாக, வெந்தயத்தை உளுந்துடன் ஊற வைத்து இட்லி, தோசைக்கு மாவு அரைப்போம். வெந்தயக் குழம்பு செய்வோம். வயிற்றுச் சூடு குறைய வெந்தயத்தை முதல்நாள் இரவு நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவோம். அதிக மருத்துவ குணம் உடைய வெந்தயத்தின் மேலும் சில சிறப்புகளைப் பார்ப்போம்.
* சளி அகல: இரண்டு பல் பூண்டுடன் வெந்தயப் பவுடர் 1 டீஸ்பூன் கலந்து இருவேளை

சாப்பிட சளி அகலும்.
* வெள்ளைப்படுதல்: வெநதயப் பொடியுடன் சிறிது பால் கலந்து குழைத்து சாப்பிட்டு வர குணமாகும்.
* வாயுத் தொல்லைக்கு: வெந்தயக் கீரையைக் கூட்டு வைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.
* நீரிழிவு நோய்க்கு: சிறிது வெந்நீரில் வெந்தயப் பொடி 1 டீஸ்பூன், கறிவேப்பிலைப் பொடி 1 டீஸ்பூன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
* குடல்புண் ஆற: வெந்தயப் பொடியை மோரில் கலந்து சாப்பிடவும். வெந்தயக் கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
* வயிற்றுப்போக்கு: வெந்தயப் பொடியுடன் நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் கலந்து சாப்பிட வேண்டும்.
* தீயக் கொழுப்பு அகல: வெந்தயக் கீரையுடன், வாழைத்தண்டு சேர்த்து சமைத்து உண்ணவும்.
* அம்மைத் தொற்று பரவாமலிருக்க: வெந்தயம், மிளகு சேர்த்து கொதிக்க வைத்த சூப்பாக அருந்த வேண்டும்.
* நாள்பட்ட இருமல் மறைய: வெந்தயத்தோடு திப்பிலி, சுக்கு, தூதுவளை சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.
* வாய்ப்புண் குணமாக: சின்ன வெங்காயம், வெந்தயம், மணத்தக்காளி சேர்த்து வேக வைத்து அந்தச் சாற்றை அருந்த வேண்டும்.
* தாய்ப்பால் சுரக்க: அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சி வைத்து சாப்பிடலாம்.
* உடல் சூட்டைக் குறைக்க: வெந்தயப் பொடியை மோரில் கலந்து அருந்தலாம்.
* மலச்சிக்கல அகல: கோதுமை மாவில் வெந்தயக் கீரை, சீரகம் சேர்த்து அடை செய்து சாப்பிடலாம்.
* தலைமுடி வளர: வெந்தயத்தை முதல் நாளிரவு தயிரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் குளிக்க தலைமுடி பளபளப்பாகும். முடி உதிர்வதும் குறையும்.
* அல்சர் குணமாக: சாம்பார் செய்யும்போது வெந்தயத்தையும், துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைத்துக் கடைந்து சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும்.

No comments:
Post a Comment