அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள மேயோ மருத்துவமனையில், இதய நோயாளிகளைக் குணப்படுத்த ஒரு புதிய முயற்சியை அங்குள்ள மருத்துவ விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்த்தனர். அதாவது, நோயாளிகளின் இடுப்பு எலும்பிலிருந்து எடுக்கப்பட்ட குருத்தணுவை(ஸ்டெம்செல்), நேரடியாக ஊசி மூலம் அவர்களின் இதயத்தில் செலுத்தியதில், ஆறு மாதங்களிலேயே அவர்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அவர்கள் உடல் தேறியதுடன், நீண்ட நேரம் அவர்களால் நடக்கவும் முடிந்தது. இந்த புதிய முயற்சி, எளிதான முறையாகவும் இருந்துள்ளது.
சோதனை முயற்சியாக, 45 நோயாளிகளுக்கு இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டது. நோயாளிகளின் இடுப்பின் மேல்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட குருத்தணுவில், புரதம் சேர்த்து, நேரடியாக அவர்களின் இதயத்தில் ஊசி மூலம் செலுத்தப்பட்டது.
இவ்வாறு செலுத்தப்பட்ட அணுக்கள், இதய அணுக்களை ஒத்திருந்தன. மற்ற இதய நோயாளிகளுக்கு எப்போதும் போல் சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டன. ஆனால், குருத்தணு சிகிச்சை பெற்றவர்களின் உடல்நிலை விரைவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல், அவர்களின் இதயம் ஒவ்வொரு துடிப்பிற்கும் 7 சதவிகிதம் அதிகமான ரத்தத்தை வெளியேற்றியது.
மறுஉற்பத்தி மருத்துவம் என்பது இனிமேல் விஞ்ஞானக் கதையாக இருக்காது. ஏனெனில், இந்த முயற்சி ஒரு நல்ல மருத்துவ சான்றாகத் திகழ்கின்றது என்று இந்த ஆராய்ச்சிக்குழுவின் மூத்த விஞ்ஞானியான டாக்டர் ஆண்ட்ரே டெர்சிக் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment