Wednesday, April 24, 2013

கோடை கால சாலட்


தேவையான பொருள்கள்:
  1. முலாம் பழம் = 1
  2. தர்பூசணி = பாதி
  3. ஆரஞ்சு பழச்சாறு = 1 ஸ்பூன்
  4. எலுமிச்சை பழச்சாறு = 2 ஸ்பூன்
  5. மிளகு = கால் ஸ்பூன்
  6. உப்பு = தேவையான அளவு
  7. கொத்தமல்லி இலை = சிறிதளவு
செய்முறை:
  • தர்பூசணி மற்றும் முலாம் பழம் இரண்டையும் தோல் சீவி, விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பழத்துண்டுகளை 5 மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைத்து கொள்ளவும்.
  • மிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும். கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பாத்திரத்தில் எலுமிச்சை பழச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலை அனைத்தையும் ஒன்றாக போட்டு கலந்து வெட்டு வைத்துள்ள பழங்களின் துண்டுகளை போட்டு கலந்து பரிமாறவும்.
கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஆரோக்கியமான சாலட்.
மருத்துவ குணங்கள்:
  • முலாம் பழத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.  இந்த பழத்தை சாப்பிடுவதால் உடலில் அதிக சூடு குறையும்.
  • முலாம் பழத்தில் ஃபைபர் எனப்படும் நார்ச்சத்து உள்ளது. இதனால் மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.
  • மேலும் வைட்டமின் “சி” மற்றும் வைட்டமின் “ஏ” அதிகம் இருப்பதால் புற்று நோய், இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. பக்கவாதம் நோய் வராமல் தடுக்கிறது. செரியாமை, வாய்வு மற்றும் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள்  வராமல் தடுக்கும்.
  • இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அதிக இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிது.
  • மேலும் கர்ப்பமான பெண்கள் சாப்பிட ஏற்ற ஆரோக்கியமான பழமாகும். பெண்கள் அதிகமாக சாப்பிட கூடிய பழமாகும். உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய பழம்.
இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவுளை சாப்பிட்டு நோயின்றி வாழ்வோம்.

No comments: